பாராளுமன்றத் தேர்தல் அல்ல ஜனாதிபதி தேர்தலையும் எதிர்கொள்ளத் தயார் ; மைத்திரிக்கு ரணில் சவால்



பாராளுமன்றத்தில் எந்தநேரத்திலும் பெரும்பான்மையை நிரூபிக்க தயாராக இருகின்றோம்.
ஆனால் மஹிந்த மைத்திரி அணியினர் நாட்டு மக்களை முட்டாளாக்க முயற்சிக்கின்றனர். எமது மக்கள் பலத்தை காட்ட பாராளுமன்ற தேர்தல் அல்ல ஜனாதிபதி தேர்தலையும் எதிர்கொள்ள தயாராகவே இருக்கின்றோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

வெற்றியை உறுதிப்படுத்வோம் என்ற தொனிப்பொருளில் ஐக்கிய தேசிய முன்னணி தற்போது கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் மக்கள் பேரணி ஒன்றை நடத்திவருகின்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
மஹிந்த அணியினர் இன்று பாராளுமன்றில் நடந்துகொண்ட விதம் ஜனநாயகத்துக்கும் தர்மத்துக்கும் விரோதமானதாகும். மீயுர் அதிகாரம் கொண்ட சட்டவாக்க சபையின் சபையின் நம்பிக்கையை காக்க முயன்ற சபாநாயகர் மீது தாக்குதல் நடத்தினர். முறையற்ற விதமாக நடந்துகொண்டவர்கள் இவர்களின் செயற்பாட்டால், காலகாலமாக கடைபிடிக்கப்பட்டு வந்த பாராளுமன்ற சம்பிரதாயங்கள் கொச்சைப்படுத்தப்பட்டுள்ளன.
2015 ஆம் ஆண்டு மக்கள் வழங்கிய ஆணையை மைத்திரிபால சிறினே கைவிட்டுவிட்டார். நாம் எப்போது அரசியலமைப்புக்கு உட்பட்டே செயற்படுவோம். அரசியல் அமைப்புக்கு ஏற்ப தேர்தலை நடத்தினால் அதை எதிர்கொள்ள தயாராக இருக்கின்றோம். உங்கள் வாக்குரிமையின் மூலம் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றார்
பாராளுமன்றத் தேர்தல் அல்ல ஜனாதிபதி தேர்தலையும் எதிர்கொள்ளத் தயார் ; மைத்திரிக்கு ரணில் சவால் பாராளுமன்றத் தேர்தல் அல்ல ஜனாதிபதி தேர்தலையும் எதிர்கொள்ளத் தயார் ; மைத்திரிக்கு ரணில் சவால் Reviewed by Madawala News on November 15, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.