வரி செலுத்துதாது விடப்படுமானால் மாநகரசபையின் சேவைகளையும் இழக்க நேரிடும்!!! கல்முனை முதல்வர் ரக்கீப்-


-எம்.வை.அமீர்-
மாநகரசபையின் பணிகளை சீராக மேற்கொள்வதற்கு குடியிருப்பாளர்கள் கிராமமாக
சோலைவரியை செலுத்த வேண்டியது பிரதானமான ஒன்றாகும்.குடியிருப்பாளர்களால் வரி செலுத்தப்படாது விடப்படுமானால் கழிவுகளை அகற்றுதல்,வடிகான்களை சுத்தம் செய்தல்,வீதி விளக்குகளை போடுதல் போன்ற மாநகரசபையினூடாக மக்கள் பெறும் சேவைகளை இழக்க நேரிடும் என்று கல்முனை மாநகரசபையின் முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி .எம்.ரக்கீப் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்களுடானான விஷேட சந்திப்பு சந்திப்பு ஒன்று கல்முனை மாநகரசபையின் முன்னாள் வேட்பாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் சமூச சேவையாளருமான .சி.யஹ்யாகானுடைய தலைமையில் அவரது இல்லத்தில் 2018-06-13 ஆம் திகதி இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே முதல்வர் மேற்கண்டவாறு  தெரிவித்தார்.

திரண்டிருந்த ஆதரவாளர்கள் மத்தியில் தொடர்ந்து உரையாற்றிய முதல்வர், கல்முனைக்குடி, மருதமுனை மற்றும் தமிழ் பிரதேச மக்களில் பெரும்பான்மையோர் மாநகரசபைக்கான வரியை கிராமமாக செலுத்தி வருகின்றபோதிலும் சாய்ந்தமருது மக்களில் பெரும்பான்மையோர் வரியை செலுத்துவதில்லை என்றும் வரியை அறவிட வருபவர்களிடம் செலுத்த முடியாது என தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.

அரசு நிரந்தர ஊழியர்களுக்கான சம்பளத்தை மட்டுமே செலுத்துவதாகவும் தற்காலிக ஊழியர்கள் மற்றும் தேவைகளுக்கு மக்களின் வரிப்பணத்தில் இருந்தே செலவிட வேண்டியுள்ளதாகவும் மக்கள் வரியை செலுத்தாது விடுவார்களானால் ஒட்டுமொத்த குடியிருப்பாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதைவிட கழிவுகளை அள்ள முடியாத நிலை தோன்றும் என்றும் எச்சரிக்கை விடுத்தார். எனவே நிலுவையில் உள்ள வரிகள் உள்ளிட்ட அனைத்தையும் செலுத்தி முடிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

கல்முனை மாநகரசபை முடியுமானவரை தன்னால் முடிந்த அனைத்து பணிகளையும் செய்துவருவதாகவும் பணிகளை இன்னும் இலகுவாக்க மாநகரசபைக்காக கட்டிடத்தொகுதியை அமைப்பதற்கான  பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

கல்முனை முதல்வரை எந்த நேரத்திலும் சந்தித்து அல்லது தொடர்புகொண்டு தேவைகளை அடைந்து கொள்ள முடியும் என்று தெரிவித்த ரக்கீப், யஹ்யாக்கான் உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள் ஊடாகவும் தங்களது தேவைகளை நிவர்த்திக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

இங்கு கருத்துத்தெரிவித்த உயர்பீட உறுப்பினர் யஹ்யாக்கான் கட்சியின் செயற்பாடுகளை பரந்த அளவில் செயற்படுத்தபோவதாகவும் கட்சியூடாகவும் கட்சியில் உள்ள அமைச்சர்கள் பிரதி அமைச்சர்கள் ஊடாகவும் மக்கள் பெறக்கூடிய உதவிகளை பெற்றுக்கொடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

பிரதி அமைச்சர் மற்றும் முதல்வரின் பணிகளை இலகுபடுத்த தனது வீட்டில் அலுவலகம் ஒன்றை அமைத்து செயற்ப்பட தன்னால் உதவ முடியும் என்றும் தெரிவித்தார்.

குறித்த மக்கள் சந்திப்பின்போது கண்டி நகர அபிவிருத்தி மற்றும் அரச தொழில் முயற்சிகள் பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின்  பிரத்தியோக செயலாளர் நௌபர் . பாவா,முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் .எல்.எம்.றசீட் (புர்க்கான்ஸ்), யஹ்யாக்கான் அவர்களின் சகோதரர் அப்ரார் குரூப்பின் தவிசாளர் .சி.ஜின்னா மற்றும் சாய்ந்தமருது சமூக அபிவிருத்தி அமைப்பின் தவிசாளர் எம்.வை.பைசர் உள்ளிட்ட பிரமுகர்களும் கட்சியின் ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர்.

வரி செலுத்துதாது விடப்படுமானால் மாநகரசபையின் சேவைகளையும் இழக்க நேரிடும்!!! கல்முனை முதல்வர் ரக்கீப்- வரி செலுத்துதாது விடப்படுமானால் மாநகரசபையின் சேவைகளையும் இழக்க நேரிடும்!!! கல்முனை முதல்வர் ரக்கீப்- Reviewed by Madawala News on June 14, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.