வரலாறு தனித்தும் என்பன பலராலும் கேள்விக்குப்படுத்துகின்ற சந்தர்ப்பங்களில் அதனை உறுதிப்படுத்துவது தொன்மையான பிரதேச வரலாற்றுக் கலச்சார நிகழ்வுகளாகும்



எம்.என்.எம்.அப்ராஸ்)
வரலாறு தனித்தும் என்பன  பலராலும் கேள்விக்குப்படுத்துகின்ற சந்தர்ப்பங்களில் அதனை

உறுதிப்படுத்துவது தொன்மையான பிரதேச வரலாற்றுக் கலச்சார நிகழ்வுகளாகும் -பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் 

கல்முனை மதீனா மக்தாப் கல்லூரியின் இரண்டாவது வருட நிறைவு விழாவும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இன்று(2018/06/22) மதீனா மக்தாப் கல்லூரியின் தலைவர் மெளலவி ஏ.சி.எம்.முஹைத்தீன்(மன்பயீ) தலைமையில் கல்முனை கடற்கரைப்பள்ளி வளாகத்தில் இடம்பெற்ற

இந் நிகழ்வுக்கு விசேட அதிதியாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித்தலைவரும் ,அரச  தொழில் முயற்சிகள் மற்றும் கண்டி அபிவிருத்தி பிரதி அமைச்சர் எச்.எம்.எம் ஹரீஸ் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்க்கண்டவாறு தெரிவித்தார் .
தொடர்ந்தும் உரையாற்றுகையில்

கல்முனை கடற்கரை பள்ளிவாசல் ஆனது இவ் பிரதேசத்தில் மிகப்பெரும் தொண்மை வாய்ந்த சான்றாகவுள்ளது.

இன்று இஸ்லாமிய வரலாறுகள் குறிப்பாக இவ் கல்முனை பிரதேசத்தில் எமது முஸ்லிம் மக்களின் வரலாறு தனித்தும் என்பன இன்று பலராலும் கேள்விக்குப்படுத்துகின்ற சந்தர்ப்பத்தில் எம்மை நோக்கி இந்த மண்ணில் வந்தேறு குடிகள் இப் பிரதேசத்திக்கு நாங்கள் சொந்தமானவர்கள் அல்ல என மற்றவர்கள் கூறும் பொழுது இந்தப் பிரதேசத்தில் இஸ்லாமிய தொன்மையான பிரதேசம் என்பதற்க்கு மிகப்பெரும் சான்றாக இருப்பது இந்தக் கல்முனை கடற்கரை பள்ளிவாசலும்  அதையொட்டிய எமது வரலாற்றும் கலாச்சார நிகழ்வுகளாகும்.என்பதை யாராலும் மறுக்க முடியாது.

மேலும் நாங்கள் எமது பிள்ளைகளை எமது நாட்டின் சிறந்த ஓர் முன்மாதிரி மிக்கவர்களாக உருவாக்க பெற்றோர்கள் ஒத்துழைக்க வேண்டும். 

இவ் நாட்டில் மிகவும் பிரதானமாக திறமை மிக்க ஆசிரியர்கள் ,கல்லூரிகள் இந்தக்கல்முனை மண்ணில் இருந்து கொண்டிருக்கின்றது. கடந்த கால புலமை,சாதரண,உயர்தர பரீட்சை பெறுபேறுகள் சான்றாகவுள்ளது.கிழக்கு மாகணத்த்தில் முதலாவது கல்வி வலயமாகவும் அகில இலங்கை ரீதியில் 20வது இடத்திலும் உள்ளது .மேலும் எமது பிள்ளைகளின் கல்வி இதர விடயத்தில் பெற்றோர்கள்  அதிக கவனம் எடுக்க வேண்டும். 

இவ் விழாவை சிறப்பாக ஏற்ப்பாடு செயதவர்களும் ஏனையோருக்கும் மனப்பூர்வமான வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.மேலும் இவ் விழாவுக்கு பிரதம பேச்சாளராக கொழும்பு ஜாவா லேன் பள்ளிவாசலின் பிரதம கதீப் மெளவி எம்.ஐ. அப்துல் ஹலீம் (மழாஹிரி) அவர்களும் சிறப்பு அதிதியாக கல்முனை அனைத்துப்பள்ளிவாசல் சம்மேளனத்தின் தலைவர் அல்ஹாஜ் எஸ்.எம்.ஏ .அஸீஸ் அவர்களும் மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.
வரலாறு தனித்தும் என்பன பலராலும் கேள்விக்குப்படுத்துகின்ற சந்தர்ப்பங்களில் அதனை உறுதிப்படுத்துவது தொன்மையான பிரதேச வரலாற்றுக் கலச்சார நிகழ்வுகளாகும் வரலாறு தனித்தும் என்பன பலராலும் கேள்விக்குப்படுத்துகின்ற சந்தர்ப்பங்களில் அதனை உறுதிப்படுத்துவது தொன்மையான பிரதேச வரலாற்றுக் கலச்சார நிகழ்வுகளாகும் Reviewed by Madawala News on June 23, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.