படுபிடி பிரதேச பிரதிநிதிகள் மற்றும் அமைச்சர் ரிசாட் பதியுதீன் அவர்களுக்கிடையிலான சந்திப்பு.


அமைச்சர் ரிசாட் பதியுதீன் தலைமையிலான அ.இ. மக்கள் காங்கிரஸின் எமது பிரதேசத்துக்கான அமைப்பாளர் சகோதரர் M.A.M. பயாஸ்
அவர்களின் தலைமையில் இச்சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது கௌரவ அமைச்சர் அவர்களின் கண்டி மாவட்ட அமைப்பாளர் அல்ஹாஜ் ஹம்ஜாட், மாவட்ட இணைப்பாளர் சகோதரர் ரியாஸ் இஸ்ஸதீன் மற்றும் பிரபல தொழிலதிபர் அல்ஹாஜ் உதுமான் முஹமட் ஆகியோரும் பங்குபற்றினர்.
.
பிரதேசத்தின் முக்கிய அபிவிருத்தி தேவைகளான பாதைகள் மற்றும் பாலர் பாடசாலை புணரமைப்பு மற்றும் கடந்த தேர்தலின் பின்னர் பிரதேச மக்களினால் சகோதரர் பயாஸ் அவர்களிடம் முன்வைக்கப்பட்ட அரச தொழில் வாய்ப்பு, சுய தொழில் உதவிகள், வீடற்றவர்களுக்கான வீடு, கல்வி அபிவிருத்தி மற்றும் வறிய மாணவர்களின் கல்விக்காக மாதாந்த ஊக்குவிப்பு தொகை கோரிக்கைகள் தொடர்பாக கௌரவ அமைச்சருடன் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
.
பிரதேச பிரமுகர்கள் பங்கேற்று சிறப்பித்த இச்சந்திப்பில் பிரதேசத்தின் முக்கிய அபிவிருத்தி தேவைகள் விரிவாக கலந்தாலோசிக்கப்பட்டதோடு, சகோதரர் பயாஸ் அவர்களின் முயற்சியினால் படுபிடியைச் சேர்ந்த ஒரு சகோதரர் உட்பட அயல் பிரதேசங்களைச் சேர்ந்த மாற்று மத சகோதரிகள் இருவர் உள்ளடங்களாக 3 பேருக்கான அரச தொழில் வாய்ப்பு மற்றும் இன்னும் சிலருக்கான சுய தொழில் ஊக்குவிப்பு உதவிகள் வழங்க உதவிய கௌரவ அமைச்சர் அவர்களுக்கும் ஹம்ஜாட் ஹாஜியார் மற்றும் சகோதரர் ரியாஸ் இஸ்ஸதீன் அவர்களுக்கும் நன்றிகளையும் தெறிவித்தனர். இன ஒற்றுமைக்கு முன்மாதிரியான இதுபோன்ற செயற்பாடுகளை பாராட்டியதோடு தற்போது பிரதேச சபையில் அங்கம் வகிக்கக்கூடிய எவராலும் கடந்த 3 மாதங்களில் இதுபோன்ற செயற்பாடுகள்;; எதனையும் செய்ய முடியவில்லை என்பதையும் நினைவுபடுத்தினார்கள்.

.
கௌரவ அமைச்சர் அவர்கள் படுபிடி பிரதேசத்துக்கு வருகை தந்தபோது பிரதேச மக்கள் வழங்கிய மாபெரும் வரவேற்பை நன்றியுடன் நினைவுகூர்ந்ததோடு எமது பிரதேசத்தின் தேவைகளுக்கும் கோரிக்கைகளுக்கும் கூடிய கவனம் செலுத்தப்போவதாக உறுதியளித்தார். இச்சந்திப்பின்போது முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளின் முன்னேற்றங்கள் தொடர்பாக கலந்துரையாட மீண்டும் அடுத்த மாதம் கௌரவ அமைச்சர் அவர்களுடனான சந்திப்பு இடம்பெறவிருக்கின்றது
படுபிடி பிரதேச பிரதிநிதிகள் மற்றும் அமைச்சர் ரிசாட் பதியுதீன் அவர்களுக்கிடையிலான சந்திப்பு. படுபிடி பிரதேச  பிரதிநிதிகள் மற்றும்  அமைச்சர் ரிசாட் பதியுதீன் அவர்களுக்கிடையிலான சந்திப்பு. Reviewed by Madawala News on May 26, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.