இதுவரை 7 பெண்கள் இரை... மந்திரவாதியின் லீலைகள் வெளியானதில் மடக்கிப்பிடிப்பு. #அம்பாறை


எனது மந்திரத்தின் மூலம் செய்யும் தியாகத்தால் நல்வாழ்வு கிட்டி மிகக் கூடிய விரைவில் செல்வந்தராகி
நீடித்த ஆயுளுடன் வாழ முடியும்", எனக் கூறி ஏமாற்றி தன்னுடன் அமைதி தியானத்தில் இருந்த 7 பெண்கள் மீது பாலியல் வல்லுறவை மேற்கொண்ட மந்திரவாதி ஒருவரை பிரதேச மக்களுடன் பொலிஸாரும் இணைந்து மடக்கிப் பிடித்துள்ளனர்.


இச் சம்பவம் அம்பாறை இங்கினியா கல பொலிஸ் பிரிவிலுள்ள மொரகஹபல்லம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.


தென் மாகாணத்தின் வலஸ்முல்லையைச் சேர்ந்த 40 வயது நிறைந்த மந் திரவாதி ஒருவர் மொரகஹபல்லம் பகுதியில் உறவினர் வீடொன்றுக்கு வருகை தந்துள்ளார்.

 இப்பிரதேச மக்களுக்கு நோய்நொடிகள் நீங்கி வாழவும் மிகக்கூ டிய விரைவில் சமூகத்தில் செல்வந்தராகவும் முடியுமென, தனது மந்திரச் செயற் பாட்டை வெளிப்படுத்தி கணவனை இழந்த பெண்களை ஏமாற்றியுள்ளார்.


இவரின் மந்திரச் செயற்பாட்டால் மயங்கிய பெண்கள் தினமும் மந்திர சிகிச்சைக்காக சென்றதும் இவருடன் 6 மணிநேரம் தனித்தனியாக இருட்டில் மஞ்சள், குங் குமம், ஊதுபத்தி மற்றும் பல்வேறு மணம் வீசும் பொருட்களுடன் மலர்ச்செண்டு களை ஏந்தியிருந்த வேளையிலேயே இவர் ஒவ்வொருவர் மீதும் பாலியல் வல் லுறவை மேற்கொண்டுள்ளார்.

இவருடன் தனியாக தியானத்திலிருந்த எவரும் இந்த விடயத்தை வெளியில் கூறவில்லை. எனினும் தொடர்ந்தும் அவர் வீடு வீடாகச் சென்று தனது செயற்பாட்டை தொடர்ந்து செய்து வந்துள்ளார்.

 அப்போது ஒரு குழந்தையின் தாயொருவருடன் (வயது 18) இவரது தியான செயற்பாட்டை முன்னெடுத்த வேளையில் இந்தப் பெண் மீது பாலியல் பலாத்காரம் மேற்கொள்ள முயற்சித்த போதே அவர் கூக்குரலிட்டு அயலவரை அழைத்து விடயத்தை அம்ப லப்படுத்தியுள்ளார்.


இதனையடுத்து மந்திரவாதி வீட் டைவிட்டு அவசரமாக வெளியேறி தலைமறைவாகி விட்டதாக தெரிய வருகிறது.

இதன் பின்னரே ஒரு வார காலத்தில் 25 தொடக்கம் 40 வயது மிக்க பல பெண்கள் மீது இவர் பாலியல் பலாத்காரம் மேற்கொண்ட விடயம் தெரியவந்தது.

இதனையடுத்து இங்கினி யாகல பொலிஸாருக்கு இதில் பாதிக்கப் பட்ட பெண்ணொருவர் மேற்கொண்ட முறைப்பாட்டையடுத்து மற்றுமொரு பெண்ணுடன் இருட்டில் தியானித்துக் கொண்டிருந்த வேளையில் பொலிஸாரும் பொதுமக்களுடன் இணைந்து மந்திரவா தியை மடக்கிப் பிடித்தனர்.


சந்தேகநபர் அம்பாறை மாவட்ட மேலதிக நீதிமன்றத்தில் கடந்த வியா ழக்கிழமை ஆஜர் செய்யப்பட்டபோது எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கம் றியலில் வைக்குமாறு மேலதிக நீதிவான் லக்மினி விதானகமகே உத்தரவிட்டார். இங்கினியாகல பொலிஸ் நிலைய பொறுப் பதிகாரி பேட்டி உடுகும்புர, பெண்கள் பிரிவு பொறுப்பதிகாரி தயானி கமகே ஆகியோர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுவரை 7 பெண்கள் இரை... மந்திரவாதியின் லீலைகள் வெளியானதில் மடக்கிப்பிடிப்பு. #அம்பாறை இதுவரை  7 பெண்கள் இரை... மந்திரவாதியின் லீலைகள் வெளியானதில் மடக்கிப்பிடிப்பு. #அம்பாறை Reviewed by Madawala News on May 19, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.