தென் மாகாணத்தில் பரவும் வைரஸ் காய்ச்சலினால் 15 சிறுவர்கள் உயிரிழப்பு.


தென் மாகாணத்தில் பரவும் வைரஸ் காய்ச்சலினால் கடந்த சில நாட்கள் 15 சிறுவர்கள் உயிரிழந்துள்ளளர்.
கராப்பிற்றிய வைத்தியசாலையில் ஐந்து சிறுவர்கள் மரணமடைந்தமை பற்றி விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மருத்துவப் பரிசோதனை நிறுவனமும் கராப்பிற்றிய வைத்தியசாலையும் இணைந்து இந்த விசாரணையை நடத்துகின்றன என்று தென் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜீ.விஜயசூரிய தெரிவித்துள்ளார்.

சிறுவர்களுக்கு மாத்திரமன்றி வயது வந்தவர்களுக்கும் இந்த நோய் ஏற்படலாம். இதனால் பொதுமக்கள் கூடுதலாக நடமாடும் இடங்களில் இருந்து விலகியிருக்குமாறு தென் மாகாண சுகாதாரப் பணிமனை மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. மாத்தறை, ஹம்பாந்தோட்டை, தங்காலை போன்ற இடங்களில் இருந்து கூடுதலான நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள்.
தென் மாகாணத்தில் பரவும் வைரஸ் காய்ச்சலினால் 15 சிறுவர்கள் உயிரிழப்பு. தென் மாகாணத்தில் பரவும் வைரஸ் காய்ச்சலினால் 15 சிறுவர்கள் உயிரிழப்பு. Reviewed by Madawala News on May 19, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.