COSMOS UK அமைப்பு ஏற்பாடு செய்த பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு..



-RIZWAN AB - UK 🇬🇧 CORRESPONDENT-
இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு எதிரான தொடர் இனவாத செயற்பாடுகள்
தொடர்பாக  அறிவூட்டுவதற்கு  ஐக்கிய இராச்சிய மக்கள்  சபையில் - ஹவுஸ் ஒப் கொமன்ஸ்ஸில், (Westminster Parliament - House of Commons) COSMOS UK அமைப்பு ஏற்பாடு செய்த பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு UK யிலுள்ள  26 இலங்கை அமைப்புகள்  பேரவையின் முஸ்லிம்  அமைப்புகளின் ஒன்றிய அமைப்பாகிய  COSMOS UK பிரதிநிதிகள் தூதுக் குழுவொன்று இலண்டன் ஹவுஸ் ஒப் கொமன்ஸ்  இன்  போர்ட்கியூலஸ்  ஹவுஸ் இலுள்ள T  அறையினுள் (Room T, Portcullis House) 24 ஆம் திகதி ஏப்ரல் 2018 அன்று மாலை 5.30 மணி முதல் 7.30 மணி வரை  பிரித்தானியாவின் எல்லா கட்சிகளையும் சார்ந்த பல்வேறுபட்ட பாராளுமன்ற அங்கத்தவர்களுடன் (எதிர்க்கட்சி உட்பட) கலந்துரையாடல் ஒன்றை நடாத்தினர்

பல பராளுமன்ற அங்கத்தவர்களும், அவர்களின் பிரதிநிதிகளும் இதில் கலந்துகொண்டு சமர்ப்பணங்ளைச்  செவிமடுத்ததோடு, இது குறித்த கேள்வி - பதில் அமர்விலும் பங்கேற்றனர்

பிரசன்னமாகியிருந்த  பாராளுமன்ற அங்கத்தவர்களில் ஆசிய மற்றும் பசுபிக் விவகாரங்களுக்குப் பொறுப்பான UK அமைச்சர் திரு மார்க்  பிஎல்து (Mr. Mark Field) அவர்களையும் உள்ளடக்கியிருந்தது.

இலங்கை முஸ்லிம்கள் மீது நடைபெற்றுவரும் தொடர்ச்சியான இனவாத செயற்பாடுகள் பற்றிய தெளிவூட்டல் இக்கலந்துரையாடலின் நோக்கமாக இருந்ததோடு அந்த இனவாத / தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபட்ட இனவாதிகள்  மீது தகுந்த நடவடிக்கை எடுப்பதற்கு சர்வதேச அழுத்தத்தை  பிரயோகிப்பதற்கான ஆதரவைப்பெற்றுக்கொள்ளல், இத்தகைய நடவடிக்கைகள் இனிமேல் நடைபெறாதிருக்க தேவையான நடவடிக்கைகளை ஆராய்தல் , இலங்கையில் சிறுபான்மையினராக வாழும் முஸ்லிம்கள் தமது நாட்டில் நிம்மதியாக தமது மார்க்க விடயங்களை  பின்பற்றி வாழ வழியமைத்தல்  மற்றும் அதனை சர்வதேச சட்ட வரைவுகள் மூலம் உறுதிப்படுத்துதல் என்பனவும் இதர குறிக்கோள்களாக  காணப்பட்டன.

இவ்வொன்றுகூடல் ஹரோ ஈஸ்ட் (Harrow East) இன் பாராளுமன்ற உறுப்பினரான பாப் ப்ளாக்மன் (Mr Bob Blackman) இனால் நடாத்தப்பட்டதுடன், கொஸ்மோஸ் UK அமைப்பின் தலைவரான அஸாஹிம் முஹம்மத்தினால் (Mr Azahim Mohamed) தலைமை தாங்கப்பட்டது

இக்கலந்துரையாடலில் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்களின் பெறுமதியான காலத்தை ஒதுக்கி கேள்வி-பதில் பகுதியிலும் கலந்து சிறப்பித்ததுடன் ஆசிய-பசுபிக் விவகாரங்களுக்கு பொறுப்பான பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினரான மார்க் பீல்ட் (Mr Mark Field) கலந்து சிறப்பித்தது விளக்கங்கள் கேட்டது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

கொஸ்மோஸ் அமைப்பின் பிரதிநிதிகள்:

1. ஜனாப் அஸாஹிம் முஹம்மத்-தலைவர் - COSMOS UK

2. ஜனாப் லியாஸ் அப்துல் வாஹித் - நிறைவேற்றுக்குழு அங்கத்தவர்  

3. ஜனாப் லுக்மான் ஹாரிஸ் - தலைவர்- ஊடகப்பிரிவு , நிறைவேற்றுக்குழு அங்கத்தவர்  

4. ஜனாப் முக்சித் ஸவாஹிர் - பொருளாளர்

5. ஜனாப் அக்ரம் அஸீஸ் - நிறைவேற்றுக்குழு அங்கத்தவர்  

6. ஜனாப் உபைத் ஆப்தீன்- ஊடகப்பிரிவு நிறைவேற்றுக்குழு அங்கத்தவர்  

7. ஜனாப். ரியாஸ் அலவி -  நிறைவேற்றுக்குழு அங்கத்தவர்

8. ஜனாப். றஹ்மதுல்லாஹ்  ராஷித் -  நிறைவேற்றுக்குழு அங்கத்தவர்  

9. ஜனாப். சாகிர் நவாஸ் - ஊடகப் பிரிவு

10. ஜனாப் மொகமட்  மர்சூக்

11. ஜனாப் ஹூசைன் பயாஸ் பஸ்ஸி -நிறைவேற்றுக்குழு   அங்கத்தவர்

12. ஜனாப் அப்துல் பஸாஸிர் கலிலூர் ரஹ்மான் - செயலாளர், ASLAM

13. ஜனாப் மொகமட் அஸியான்  பைஸல் - ஊடக ஆதரவு

இவ்வொன்றுகூடலில் கலந்துக்கொண்ட பாராளுமன்ற பிரதிநிதிகளுக்கு பிரித்தானியாவில் வாழும் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் உறவினர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு தொடர்பான கரிசனை முன்வைக்கப்பட்டது

மேலும், இலங்கை ஜனாதிபதியின் அண்மைய ஐக்கிய இராச்சியத்திற்கான விஜயத்தின் போது COSMOS UK அமைப்பினரால் கையளிக்கப்பட்ட அண்மைய கலவரம் தொடர்பான  பரிந்துரைகள் அடங்கிய விரிவான அறிக்கையும் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டோரிடம் கையளிக்கப்பட்டது. அத்துடன் இவ்வினக்கலவரம் தொடர்பான காணொளி ஒன்றும் காண்பிக்கப்பட்டது.

இலங்கை முஸ்லிம் சமூகத்தின் நன்மை கருதி அனைத்து கட்சிகளும் உள்ளடங்கிய அரசியல் குழு (APPG) ஒன்றை ஸ்தாபிப்பதற்கான முயற்சிகள் பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன் கெளரவ பாப் ப்ளாக்மென் (Mr Bob Blackman) அவர்கள் APPG குழுவை ஸ்தாபிப்பதற்கான பூரண ஒத்துழைப்பை கொஸ்மோஸ் UK அமைப்பிற்கு வழங்க முன்னிற்பதாகவும் உறுதியளித்தார்.

இறுதியாக, இவ்விடயங்களை பிரித்தானிய அரசிடம் கொண்டு செல்வதற்கான விடயங்களை கலந்துக்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பொறுப்பேற்றதுடன், பல்லின மக்கள் வாழும் இலங்கை நாட்டில் அனைத்து சமூகத்தினரும் சமத்துவத்துடன் வாழவும் சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படுவது உறுதிப்படுத்தப்படவும் இலங்கை அரசுடன் உள்ள சுமுகமான உறவை பயன்படுத்தி ஆக்கபூர்வமான முன்னெடுப்புகள் எடுப்பதற்கும் உறுதி செய்யப்பட்டது.

COSMOS அமைப்பு இவ்விடயம் தொடர்பான முன்னேற்றங்களை பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ ப்ளாக்மென்னின் (Mr Bob Blackman) உதவியுடன் கண்காணிப்பதன் மூலமும்  ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இது தொடர்பாக தொடரான செயற்பாடுகள்  மூலமும்  இலங்கையில் சமாதான சகவாழ்வை உறுதி செய்யும் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

லியாஸ் அப்துல் வாஹித் 
பொதுச்செயலாளர்
secretarycosmosuk@gmail.com
COSMOS UK அமைப்பு ஏற்பாடு செய்த பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு..  COSMOS UK அமைப்பு ஏற்பாடு செய்த பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு.. Reviewed by Madawala News on April 29, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.