நாட்டில் அவசரகாலச் சட்டத்தை நீடிக்கவும். பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கோரிக்கை.


சமீபத்தில், கண்டியின் சில பாகங்களில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பான விசாரணைகள்
இன்னும் நிறைவடையாத நிலையில், அவசரகாலச்சட்டத்தை, மேலும் சில நாட்களுக்கு நீடிப்பதற்கு, பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில், நேற்று (16) நடைபெற்ற வாராந்த பாதுகாப்புச் சபைக் கூட்டத்தின் போதே, இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக தெரியவருகின்றது.

இது தொடர்புடைய 70 சதவீதமான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதெனவும் மிகுதியாகவுள்ள 30 சதவீத விசாரணை முடிவடையும் வரை, அவசரகாலச் சட்டத்தை நீடிக்குமாறு கோரியுள்ளனர் எனத் ​தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது ஜப்பானுக்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலங்கைக்கு வந்ததும், அவருடன் பிரதமர் இது தொடர்பாக கலந்துரையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டில் அவசரகாலச் சட்டத்தை நீடிக்கவும். பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கோரிக்கை. நாட்டில் அவசரகாலச் சட்டத்தை நீடிக்கவும். பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கோரிக்கை. Reviewed by Madawala News on March 17, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.