கலப்பு தேர்தல் முறை ஆபத்தானது என்று இன்று கருத்துக் கூறும் ஹக்கீம் போன்ற அரசியல் வித்துவான்கள் தேர்தல் முறை மாற்றத்தின் போது எங்கே போனார்கள்



உள்ளாட்சி மன்றத் தேர்தல் நடைபெற்று இரண்டு மாதங்கள் கழிவதற்குள் மீண்டும்
பூதம் புறப்பட்ட கதையாக எல்லை மீள் நிர்ணயம் பற்றிய மசோதா பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட இருப்பதாக செய்திகள்வெ ளிவருகின்றன.


உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் திருத்த சட்ட மூலம், மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் திருத்த சட்ட மூலம் என இரு திருத்த சட்ட மூலங்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நேரத்தில் வாய் பொத்தி வக்கற்றவர்களாக மெளனம் காத்த எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போது புதிய எல்லை மீள் நிர்ணயம் பற்றி வாய் திறக்க ஆரம்பித்துள்ளார்கள்.


மு.கா வின் தலைவர் அமைச்சர் ஹக்கீம் அவர்கள் புதிய தேர்தல் முறையை நீக்க வேண்டும் என்றும்,பழைய விகிதாசார தேர்தல் முறைப்படித்தான் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் பிரதமரிடம் தான் வியாழக் கிழமை கோரிக்கை வைத்ததாக தெரிவித்துள்ளதுடன், புதிய தேர்தல் முறையினால் ஏற்பட்ட பிரச்சினையே முடிவுக்கு வர முன்னால் புதிய எல்லை மீள் நிர்ணயத்தை கொண்டு வருவது இன்னும் சிக்கலை அதிகப்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளதுடன், பழைய முறையில் தேர்தலை நடத்துவதற்கு முன்னால் ஜனாதிபதியின் பொது ஜன பெரமுனவும் தயாராக இருப்பதாக அதன் உறுப்பினர்கள் குறிப்பிட்டதாக தெரிவித்துள்ளார்.


புதிய எல்லை நிர்ணயத்தில் இவர்கள் என்ன செய்து விடப் போகிறார்கள்? இவர்களினால் என்னதான் செய்ய முடியும்? கையெழுத்திட்டு விட்டு வந்த பின் பள்ளிக்கூடத்தில் சக மாணவன் அடித்ததை தன் தாயிடம் கூறி அழும் பிள்ளையைப் போல் இவர்களும் ஒப்பாரி வைக்கத்தான் முடியுமே ஒழிய வேறு ஒன்றும் செய்யவும் முடியாது, செய்யப் போவதுமில்லை.


மாகாண சபைகள் திருத்த சட்ட மூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நேரத்தில் அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பிர்களும் அதற்கு ஆதரவாக கையெழுத்திட்டார்கள்.முஸ்லிம்களுக்கு பெரும் ஆபத்து ஏற்படுத்தும் சட்டம் என்று தெரிந்தும் தான் இவர்கள் கையெழுத்திட்டார்கள்.


SLTJ என்ற இஸ்லாமிய பிரச்சார அமைப்பின் சார்பில் மெளலவி ரஸ்மின் ஆற்றிய ஓர் உரையின் மூலம் தான் மாகாண சபை திருத்த சட்ட மூலத்தினால் முஸ்லிம்களுக்கு என்ன ஆபத்து என்பதே இந்த சமுதாயத்தின் புறக் கண்களுக்கு தென்பட்டது. கையெழுத்திட்ட அனைத்து பா.உ க்களும் கல்லில் ஏதோ செய்த பூனையைப் போல் அமுக்கமாய் தங்களுக்குத் தேவையானதை பெற வேண்டியவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டு அமைதியான நேரத்தில் இலங்கை முஸ்லிம் உம்மாவுக்கு ஏற்படப் போகும் ஆபத்தை அன்றே உணர்த்தியது ரஸ்மின் மெளலவியின் உரை.
அந்த நேரத்தில் கூட சில பாராளுமன்ற உறுப்பினர்கள் அதி மேதாவித் தனமாக 'மார்க்கம் பேசுபவர்களுக்கு ஏன் இந்த அரசியல் வேலை? அவர்கள் அவர்களின் வேலையைப் பார்க்க வேண்டியது தானே? மெளலவிமார்களுக்கு மாகாண சபை திருத்த சட்டம் பற்றி என்ன தெரியும் என்றெல்லாம் சகட்டு மேனிக்கு சப்பையான கருத்துக்களை தெரிவித்து வந்தார்கள்.



உண்மையில் சொல்லப் போனால்,மெளலவிமார்களுக்கு மட்டுமல்ல பழுத்த அரசியல்வாதிகளுக்கே பாடமாய் அமைந்தது SLTJ அமைப்பின் வாழ்வுரிமை விளக்கங்கள்.


உள்ளாட்சி மன்றம் என்றால் என்ன? மாகாண சபை என்றால் என்ன? பாராளுமன்றம் என்றால் என்ன? 21ம் அரசியல் சீர் திருத்தம் என்றால் என்ன? என்பதைப் பற்றியெல்லாம் தெளஹீத் ஜமாஅத் அமைப்பினர் செய்த பிரச்சாரம் இலங்கை முஸ்லிம்களின் கிராமங்கள் தோறும் அரசியல் பாடம் நடத்தியதாக அமைந்தது.
மார்க்க விடயத்தில் மாற்றுக் கருத்துக் கொண்டோர் கூட அவர்களின் அரசியல் பாடத்தை காது கொடுத்து கேட்டார்கள்.


இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றை ஒவ்வொரு இலங்கை முஸ்லிமுக்கு கல்விப் பாடம் எடுத்ததைப் போல் கற்றுக் கொடுத்தார்கள்.


வாழ்வதற்கு உரிமை வேண்டி அவர்கள் நடத்திய கொழும்பு மாநாடு இலங்கை வரலாற்றின் முத்தாகவே மாறியது எனலாம். சிங்களத்திலும் தமிழிலும் ஓர் புதுமையான அரசியல் பாடத்தை நடத்தி முடித்தார்கள் அந்த மாநாட்டின் மூலம்.
அரசியலில் கலந்து விட்டதால் அனைத்தையும் அரசியலாய் பார்க்கும் ஹக்கீம், ரிஷாத், அதாவுல்லா,ஹிஸ்புல்லா, கபீர் ஹாஷிம், முஜிபுர் ரஹ்மான், ஹரீஸ் என 21 பாராளுமன்ற உறுப்பிர்களினதும் சுயரூபமும் அன்றே வெளிப்பட்டு விட்டது.
மாகாண சபைகள் திருத்த சட்ட மூலத்திற்கும்,உள்ளாட்சி மன்றங்கள் திருத்த சட்ட மூலத்திற்கும் கையெழுத்திட்டு முழு சமுதாயத்தின் முழுகிலும் வரலாற்று பாரத்தை சுத்தியவர்கள் தான் இன்று எல்லை மீள் நிர்ணயம் தொடர்பில் முதலைக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள்.


அரசியல் வாதிகளின் ஏமாற்றுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டுமானால் பொது மக்கள் அரசியலையும் அரசியல்வாதிகளையும் புரிய வேண்டும். 


ஆன்மீக இயக்கங்கள் அரசியல் வழிகாட்டுவது காலத்தின் கடமை. அதிலும் இந்த எல்லை மீள் நிர்ணயம் மாகாண சபை, உள்ளாட்சி சபைகளுக்கான திருத்தங்கள் தொடர்பாக மட்டுமல்லாமல் அரசியல் சீர் திருத்தம் உள்ளிட்டவை பற்றியும் இன்னும் அதிக விளக்கங்கள் அனைத்துத் தரப்பினலாளும் பொது மக்களுக்கு கொண்டு போய் சேர்கப்பட வேண்டும்.


சமுதாயத்தின் தலைமை நிறுவனங்கள் புனர் நிர்மாணம் செய்யப்பட வேண்டும்.புதிய சிந்தனைகள் உருவாக்கப்பட வேண்டும்.சமுதாயத்தை பற்றி சிந்திக்கும் உலமாக்கள் சமுதாயத்தை வழிநடத்த முன்வர வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக துருக்கியின் அரசியலைப் பற்றியும், லிப்யாவின் பிரச்சினை பற்றியும்,வெளிநாட்டு அறபு அறிஞர்களின் இலங்கை சிந்தனை பற்றியும் உலமாக்கள் தேடிக் கொண்டிருக்காமல் சொந்த சிந்தனைகளை சீராக்க கற்றுக் கொள்ள வேண்டும்.


இலங்கை அரசியலைப் படிக்கும், படித்துக் கொடுக்கும் அறிஞர்கள் தோன்ற வேண்டும். இன்று வரை அரசியல் விஞ்ஞானம் புத்தகத்தை படித்து விட்டு அரபு, இஸ்லாம், அரசியல் விஞ்ஞானம் என்று 03 பாடங்களை பரீட்சை எழுதி பாஸாகி விட்டு புத்தகத்தில் படித்தவற்றையே அரசியல் என்று நம்பிக் கொண்டிருக்கும் அரசியல் மூட நம்பிக்கையை விட்டும் விலகி பத்திரிக்கை அரசியலையும் நடைமுறை அரசியலையும் நாம் நன்றாக புரிந்து கொள்ள முன்வர வேண்டும்.


-உவைசுல் கர்னீ பலாஹி BA. Hon-
கலப்பு தேர்தல் முறை ஆபத்தானது என்று இன்று கருத்துக் கூறும் ஹக்கீம் போன்ற அரசியல் வித்துவான்கள் தேர்தல் முறை மாற்றத்தின் போது எங்கே போனார்கள்  கலப்பு தேர்தல் முறை ஆபத்தானது என்று இன்று கருத்துக் கூறும் ஹக்கீம் போன்ற அரசியல் வித்துவான்கள் தேர்தல் முறை மாற்றத்தின் போது எங்கே போனார்கள் Reviewed by Madawala News on March 24, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.