கண்டி வன்செயல் பாதிப்பு : பெண்களுக்கும், சிறுவர்களுக்கும் உளவள ஆலோசணைச் சேவை உடன் வழங்கப்பட வேண்டும். மனித அபிவிருத்தித்தாபனத்தின் தலைவர் பீ.பீ. சிவப்பிரகாசம்.


-ஜே.எம்.ஹபீஸ் -
கண்டி வன்செயலால் பாதிப்புற்றவர்களுக்கு நிவாரணம் வழங்குவதை விட உளப்பாதிப்பிற்கு உள்ளாகியுள்ள
பெண்களையும் சிறுவர்களையும் புனர்வாழ்வளிக்க உடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தமது நிறுவனம் மேற்கொண்ட ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளதாக மனித அபிவிருத்தித்தாபனத்தின் தலைவர் பீ.பீ. சிவப்பிரகாசம் தெரிவித்தார்.


கண்டியில் அமைந்துள்ள சர்வதேச தொண்டு நிறுவனங்களில் ஒன்றான மனித அபிவிருத்தித்தாபனத்தின் தலைமையகத்தில் இடம் பெற்ற பின்னூட்டல் நிகழ்வு ஒன்றிலே அவர் இதனைத் தெரிவித்தார்.


கண்டியை மையமாக வைத்து இயங்குகின்ற சிவில் அமைப்புக்கள்,  மனித உரிமை ஆணைக்குழு அங்கத்தவரகள்;, பொது அமைப்புக்கள், பாதிப்புக்குள்ளனான பெண்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் உற்பட துறை சார்ந்த பலர் கலந்து கொண்ட இந்நிகழ்வில் அவர் மேலும் தெரிவித்ததாவது-


கடந்த 5ம் திகதி முதல் கண்டி மாவட்டத்தில் இடம் பெற்ற வன் செயல்கள் பற்றி ஏறத்தாழ முழுமையான தகவல்களை உடன் ஸ்தலத்திற்குச் சென்று தமது குழுவினர் திரட்டியதாகவும், ஊரடங்கு சட்டத்தைக் கூட பொருட் படுத்தாது களத்தில் இருந்து தகவல்கள் பெற்ற இக்கலந்துரையாடல் இடம் பெறுவதாகத் தெரிவித்தார்.


அத்துடன் போதியளவு முறைப்பாடுகள் பொலீஸ் நிலையங்களுக்குச் சென்றடையாத காரணத்தால் அரசினால் மேற்கொள்ளப்படும் மதிப்பீடுகள் இன்னும் பூரணமாக வில்லை என்றும் தெரிவித்தார்.


தமது குழுவினர் பெற்ற நேரடி ஆய்வுகள், பாதிக்கப்பட்டவர்களது கருத்துக்கள், தாம் கண்ணால் கண்டவை உற்பட பல்வேறு காரணிகளை முன்வைத்து தொகுக்கப்பட்ட முடிவுகளின் படி பாதிப்புக்குள்ளானவர்களில் அனேகர் தமது சொத்துக்கள் பரிபோனதை விட எதிர்கால அச்சம், பல வருடங்களாக பாட்டன் பூட்டன் காலம் முதல் கட்டி எழுப்பப்பட்ட  சகவாழ்வு, இன ஒற்றுமை குழைவு முதலான காரங்களால் அச்சமுற்றுக் காணப்படுவதாகவும், குறிப்பாக பெண்களும் சிறுவர்களும் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை என்பது தெரிய வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.


மேற்படி மோதல் அல்லது வன் தாக்குதல் தொடர்பான பின்னூட்டல்கள் புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் மூலம் இங்கு தெளிவு படுத்தப்பட்டன.


எனவே துறை சார்ந்த பலரது கருத்துக்ளைத் தொகுத்து பெறப்பட்ட முடிவிவுகளின் படி உடனடியாக பாதிக்கப்பட்ட தரப்பிற்கு உளவள ஆலோசணைகள் தேவைப் படுவதாகத் தெரிவித்தார்.


அத்துடன்  தவறான வழியில் மூளை சலவை செய்யப்பட்ட தரப்பினருக்கு படிப்பயாக தமது உள்ளத்திற் பதிந்துள்ள தவறான எண்ணங்களை மாற்றும் முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்கு நீண்டகாலம் எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


பொதுவாக வன்செயல் எனும் போது காடையர்கள் கூட்டம், கொள்ளைக் கோஷ்டிகள் பற்றித்தான் பேசப்படும். ஆனால் கண்டி வன் செயல் காடையர் கூட்டத்தாலோ, அல்லது கொள்ளை கோஷ்டியாலோ மேற்கொள்ளப்பட வில்லை என்றே அதிகமானவர்கள் விபரித்ததாகவும் தெரிவித்தார்.


தொழில் சார் வல்லுனர்கள் உயர் பதவி வகிப்போர், சமூகத்தில் உயர் மட்டத்தில் உன்னவர்கள் போன்ற ஒருசிலர் சொகுசு வானகங்களைப் பயன் படுத்தி வெளியே இருந்து வந்து தாக்குதல் மேற்கொண்டதாகவும் எல்லாத் தாக்குதல்களுக்கும் இடையே ஒற்றுமை காணப்படுவதாகவும் எனவே அவை அனைத்தும் குறிப்பிட்ட ஒரு குழுவால் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுகிறது. இவற்றிற்கு போதிய விளக்க மின்மை, தவறான கருத்து, வதந்தி, பொறாமை போன்ற காரணங்களைக் அவை கொண்டிருப்பதாகவும் கருதப்படுகிறது.


இதற்கு சில உள்ளுர் வாசிகளும் துணை நின்றுள்ளனர். அந்த எடுகோளின் அடிப்படையிலே தற்போது நகர்வுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.  



கண்டி வன்செயல் பாதிப்பு : பெண்களுக்கும், சிறுவர்களுக்கும் உளவள ஆலோசணைச் சேவை உடன் வழங்கப்பட வேண்டும். மனித அபிவிருத்தித்தாபனத்தின் தலைவர் பீ.பீ. சிவப்பிரகாசம். கண்டி வன்செயல் பாதிப்பு :  பெண்களுக்கும், சிறுவர்களுக்கும் உளவள ஆலோசணைச் சேவை உடன் வழங்கப்பட வேண்டும். மனித அபிவிருத்தித்தாபனத்தின் தலைவர் பீ.பீ. சிவப்பிரகாசம். Reviewed by Madawala News on March 15, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.