மாதம்பை இஸ்லாஹிய்யா அரபுக்கல்லூரி புதிய மாணவர் அனுமதிக்கான நேர்முகப்பரீட்சை –2018




மாதம்பை இஸ்லாஹிய்யா கலாபீடத்துக்கு புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப்பரீட்சை
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
மேற்படி நேர்முகப் பரீட்சை கல்லூரி வளாகத்தில் காலை 09:30 மணி முதல் நடைபெறவுள்ளது.


இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரிக்கு கல்விப் பொதுத் தராதர உயர்தர கலைப் பிரிவுடன் அரபு மற்றும் இஸ்லாமிய கற்கைகளில் லைசன்ஷியேட் மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தர வர்த்தக பிரிவுடன் அரபு மற்றும் இஸ்லாமிய கற்கைகளில் டிப்ளோமா பயிற்சிக்கும் மாணவர்கள் உள்வாங்கிக்கொள்ளப்படவுள்ளனர்.


6 வருடங்களைக் கொண்ட கல்விப் பொதுத் தராதர உயர்தர கலைப் பிரிவுடன் அரபு மற்றும் இஸ்லாமிய கற்கைகளில் லைசன்ஷியேட் பயிற்சிக்கு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் மூன்று பாடங்களில் C சித்தியுடன் தமிழ், கணிதம் உட்பட மொத்தம் 6 பாடங்களில் சித்தியடைந்திருத்தல் அல்லது கணித பாடம் தவிர்ந்த ஏனைய 5 பாடங்களில் C தரச்சித்திபெற்றவர்கள் தகுதிபெறுகின்றனர்.


அதேபோன்று, 3 வருட கற்கை காலத்தைக் கொண்ட கல்விப் பொதுத் தராதர உயர்தர வர்த்தக பிரிவுடன் அரபு மற்றும் இஸ்லாமிய கற்கைகளில் டிப்ளோமா பயிற்சிக்கு கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் கணிதம் அல்லது வர்த்தகம் உட்பட 5 பாடங்களில் C தரச்சித்தியுடன் தமிழ் உட்பட குறைந்தது 6 பாடங்களில் சித்தியடைந்தவர்கள் தகுதிபெறுகின்றனர்.
2000-01-01ஆம்திகதிக்குப் பின்னர் பிறந்த மாணவர்கள் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் மூலப் பிரதி, பிறப்புச் சான்றிதழின் மூலப்பிரதி, தேசிய அடையாள அட்டை மற்றும் ஏனைய சான்றிதழ்களுடன் நேர்முகப் பரீட்சைக்கு தோற்றலாம்.


மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான துறைகளில் உயர்கல்வியைத் தொடர்வதற்காக கல்லூரி நிர்வாகம் மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்திற் கொண்டு உயர்தர பரீட்சைக்குத் தோற்றியதன் பின்னர் மாணவர்கள் தாம் விரும்பும் உயர்கல்வியை சனி, ஞாயிறு தினங்களில் வெளி நிறுவனமொன்றில் தொடர்வதற்கான சலுகையும் வழங்கப்பட்டுள்ளது.


உயர்தர பரீட்சைக்கு வணிக துறையில் தோற்றிய மாணவர்களும் டிப்ளோமா கற்கை நெறியை முடித்து விட்டு வெளிநிறுவனமொன்றில் உயர் கல்வியை தொடரும் அதேவேளை இஸ்லாஹிய்யாவில் லைசன்ஷியேட் கற்கை நெறியைத் தொடர்வதற்கான வாய்ப்பும், உயர்தர பரீட்சையில் சித்தியடைந்து கல்லூரியில் ஐந்தாம் வருடத்தில் பல்கலைக்கழகம் செல்லும்  மாணவர்கள்  இஸ்லாஹிய்யாவின் லைசன்ஷியேட் இறுதிப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான வாய்ப்பும் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றது.
இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரியின் நேர்முகப் பரீட்சை தொடர்பான மேலதிக விபரங்களை 0776878989, 0773687604, 0777345367,
0767015013 ஆகிய தொலைபேசி இலக்கங்களை தொடர்பு கொள்வதன் ஊடாக பெற்றுக் கொள்ளலாம்.

Aadhil Ali Sabry
மாதம்பை இஸ்லாஹிய்யா அரபுக்கல்லூரி புதிய மாணவர் அனுமதிக்கான நேர்முகப்பரீட்சை –2018 மாதம்பை இஸ்லாஹிய்யா அரபுக்கல்லூரி  புதிய மாணவர் அனுமதிக்கான நேர்முகப்பரீட்சை –2018 Reviewed by Madawala News on March 24, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.