ஹிஜாபோடு வந்ததற்காக தீர்ப்பை ஒத்தி வைத்த நீதிபதி! ஹிஜாபுக்கு ஆதரவாக திரண்ட கனடிய மக்கள் .


-அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்
ராணியா எல்லோட் ஒரு கனடிய முஸ்லிம் பெண்மணி. இவரது வாகனத்தை சில பிரச்னைகளால்
பறிமுதல் செய்து விட்டனர். அதனை மீட்க சென்ற பிப்ரவரி 24 அன்று நீதி மன்றத்துக்கு வந்துள்ளார் ராணியா.


வரும்போது இஸ்லாமிய பெண்கள் அணியும் ஸ்கார்ப் அணிந்து வந்துள்ளார். இதனை பார்த்த பெண் நீதிபதியான எலியானா மெரோ 'தலையின் முக்காட்டை நீக்கி விட்டு வழக்கு சம்பந்தமாக கூறவும்' என்றார்.

இதனை சற்றும் எதிர்பாராத ராணியா இதற்கு சம்மதிக்கவில்லை. 'எனக்கு என்ன அபராதமோ அதனை கட்டி எனது வாகனத்தை மீட்க வந்துள்ளேன். இதற்கும் எனது தலையில் உள்ள ஸ்கார்ஃப்க்கும் என்ன சம்மந்தம்?' என்று கேட்டுள்ளார்.

இதனால் கோபமடைந்த நீதிபதி 'வழக்கை ஒத்தி வைக்கிறேன்' என்று கூறியுள்ளார். 'வழக்கை ஒத்தி வைத்தாலும் பரவாயில்லை. நான் பிறகு வந்து மீட்டுக் கொள்கிறேன்' என்று கூறி விட்டு கோர்ட்டை விட்டு வெளியேறி உள்ளார் ராணியா.

இது கனடா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கிறித்தவர்களும் சமூக ஆர்வலர்களும் ராணியாவுக்கு ஆதரவாக களம் இறங்கி உள்ளனர். புதிய கார் ஒன்றை ராணியாவுக்கு வாங்கிக் கொடுக்க நிதி திரட்டப்பட்டது. இதுவரை 44000 டாலர் சேர்ந்துள்ளது. மேலும் பணம் வந்து குவிந்து கொண்டிருக்கிறது. இனி ராணியா புதிய காரிலேயே பயணிக்கலாம். smile emoticon

உடை என்பது அவரவரின் வசதியைப் பொருத்தது. முகத்தை மூடிக் கொண்டு கோர்ட்டுக்கு வந்திருந்தால் நீதிபதி குற்றம் கண்டு பிடிக்கலாம். இஸ்லாம் முகத்தை மூடச் சொல்லவும் கட்டளையிடவில்லை. தனக்கு பாதுகாப்பும் கண்ணியமும் தலையில் போட்டுக் கொள்ளும் ஸ்கார்பால் கிடைக்கிறது என்று ஒரு பெண் நினைத்தால் அதில் தலையிட இவர்கள் யார்? கருத்து சுதந்திரம் என்று வாய் கிழிய பேசுபவர்கள் தற்போது எங்கே சென்று விட்டனர்?

சவுதி அரேபியாவில் ஒரு பெண் ஹிஜாபோடு சென்றால் அது அந்த நாட்டு சட்டத்துக்காக பயந்து கொண்டு செய்வதாக பலர் சொல்கின்றனர். ஆனால் இஸ்லாமிய பெண்கள் தாங்கள் விரும்பியே ஹிஜாபை அணிகின்றனர் என்று சொன்னால் பலரும் நம்புவதில்லை. அமெரிக்கா ஐரோப்பா போன்ற நாடுகளில் ஹிஜாபோடு சென்றால் கேலிக்கும் கிண்டலுக்கும் பலரால் உள்ளாக்கப்படுகின்றனர். ஆனால் அதனையும் மீறி ராணியா போன்ற பெண்கள் ஹிஜாபோடு வலம் வருவது அதன் அவசியத்தை உணர்ந்ததாலும், அதனால் கண்ணியம் கிடைக்கிறது என்பதை அறிந்ததாலுமே என்பதை இனியாவது 'பெண் விடுதலையாளர்கள்' ஒத்துக் கொள்வார்களா?

ராணியா எல்லோட்....கனடா நாட்டு சகோதரி ......ஒரு காலம் வரும் தீ கங்கை கையில் பொத்தி வைத்து  கொண்டாலும் இஸ்லாத்தின் வழி முறைய விட்டு விட மாட்டேன் .......இப்படி எல்லாம் வருமா ? வரும் என்பதெர்க்கு தான் இப்படி நிகழ்வுகள் .ஆம் ஜெர்மனியில் எம் சகோதரி கிஜாப் அவமான படுத்த பட்டதெர்க்கு நீதிமன்றத்தில் கத்தி குத்து பட்ட சகீதான மர்வா என்ற சகோதரி .....மூடி இருப்பதை திறப்பதும் ., திறந்து இருப்பது மூடியும் ..எது எப்படி என்று பகுத்தறிவு திறன் இல்லாதவர்கள் நீதி பதியாய் இருந்த இவளிடம் என்ன நீதி கிடைத்து விடும் ?

அது மட்டுமல்ல நாளும் இடங்களில் பள்ளியிலும்., அலுவலங்கள் ., ஆஸ்பத்திரி இன்னும் பிற இடங்களில் அனுமதி இருந்தும் மனிதர்களை சரி செய்வதெர்க்காக தானே தலையிலிருந்து துணி எடுக்கும் எம்மவர்களுக்கு  கனடா பாதிமா எவ்வளவு ஈமானின் உறுதி எம்மை வியக்க வைக்கின்றது.ஈமானின் உறுதி ....தனது வாகனம் போனாலும் கவலை இல்லை என்ற உறுதி புதிய காருக்கு உதவியும் கிடைகிறது ......
ஹிஜாபோடு வந்ததற்காக தீர்ப்பை ஒத்தி வைத்த நீதிபதி! ஹிஜாபுக்கு ஆதரவாக திரண்ட கனடிய மக்கள் . ஹிஜாபோடு வந்ததற்காக தீர்ப்பை ஒத்தி வைத்த நீதிபதி! ஹிஜாபுக்கு ஆதரவாக திரண்ட கனடிய மக்கள் . Reviewed by Madawala News on March 04, 2018 Rating: 5

1 comment:

 1. அந்த பெண் தனது ஹிஜாப் விடையத்தில் உறுதியாக இருந்தது பாராட்டுக்குரியதே.

  அதனை கட்டுரையாக எழுதியுள்ள சகோதரர் அபூஸாலி முஹம்மத் ஸுல்பிகாருக்கு நன்றி.

  எனினும் நீங்கள் ( முஹம்மத் ஸுல்பிகார் ) முகம் மூடுவது சம்பந்தமாக ஒரு கருத்தை சம்பவத்துடன் இணைத்து எழுதி இருந்தீர்கள்.

  அதில் " இஸ்லாம் முகத்தை மூடச் சொல்லவும் கட்டளையிடவில்லை" என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.

  எனக்கு உங்கள் கருத்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. முகத்தை மூடியே ஆடை அணிய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ள உலமாக்கள் முகம் மூடுவது சம்பந்தமாக ஏராளமான ஆதாரங்களை முன்வைத்துள்ளனர். தேவையில்லை என்ற நிலைப்பாட்டில் உள்ள உலமாக்களும் தமது நிலைப்பாட்டுக்குரிய ஆதாரங்களை முன்வைத்துள்ளனர். அது ஒரு கருத்துவேற்றுமைக்குரிய விடையம் என்பது உங்களுக்கு தெரியாதா ? அனைத்து அரபு நாடுகளிலும் வாழும் ஏராளமான பெண்கள் உற்பட உலகளவில் கோடிக்கணக்கான முஸ்லிம் பெண்கள் முகம் மூடி ஆடை அணிகின்றனர்.

  முஸ்லிம்கள் சிறுபான்மையினராகவும் மிக சொற்பமாகவும் வாழ்ந்து வரும் இலங்கையில் கூட பல்லாயிரக் கணக்கான முஸ்லிம் பெண்கள் முகமூடி அணிந்து ஆடை அணிந்து வருகின்றனர். நாம் என்ன நிலைப்பாட்டில் இருக்கின்றோமோ அதனை நாம் சார்ந்தவர்களுடன் பரிமாறிக் கொள்ளலாம். இது ஒரு பொது ஊடகம். இங்கே எமது நிலைப்பாட்டை இஸ்லாத்தின் மொத்த நிலைப்பாடாக எழுதுவது கண்டிக்க தக்கது.

  அண்மையில் ஒரு முஸ்லிம் சகோதரர் பௌத்த இன ஊடகம் ஒன்றின் நிகழ்ச்சிக்காக சென்றபோதும் இதே போன்று முகம் மூடும் விடையத்தில் அவரது சொந்த நிலைப்பாட்டை ( முகம் மூடுவது இஸ்லாத்தில் இல்லாத ஒன்று என்று கூறி ) அதனை இஸ்லாத்தின் மொத்த நிலைப்பாடாக சித்தரிக்க முயன்று அது சில தினங்களில் நாடளாவிய ரீதில்யில் முஸ்லிம் அல்லாதோரிடமும் குறிப்பாக முகம் மூடி ஆடை அணியும் நிலைப்பாட்டில் உள்ள முஸ்லிம்களிடமும் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்ததையும் பின்பு குறிப்பிட்ட சகோதரர் மன்னிப்பு கோரி இருந்ததையும் அனைவரும் அறிவோம்.

  முகம் மூடுவது ஹராமா, கூடுமா, அனுமதிக்க பட்டதா, கட்டாயமாக்க பட்டதா என்பதில் என்னிடமும் ஒரு நிலைப்பாடு உண்டு. நான் ஒரு ஆலிமாக இருக்கின்ற போதும் மீடியாக்கள், பலதரப்பட்ட நிலைப்பாடுகளையும் கொண்ட மக்கள் அமர்ந்திருக்கும் ஜுமுஆ, பொது பயான் நிகழ்ச்சி போன்ற இடங்களில் போய் ஒரு போதும் எனது நிலைப்பாட்டை இஸ்லாத்தின் மொத்த நிலைப்பாடாக சொன்னதும் இல்லை. சொல்ல போவதும் இல்லை. நாட்டில் தீர்க்கப் பட வேண்டிய ஆயிரம் பிரச்சினைகள் உள்ளன. தற்போது கூட திகனை பகுதியில் நிலைமை மிகவும் பதட்டமாக உள்ளது. அம்பாறை பிரச்சினை இன்னும் தணிய வில்லை. ஆகவே அடிப்படை கொள்கைகளுடன் சாராத, சமூகத்தில் கருத்துவேற்றுமைகளுடன் தொடரும் மஸ்அலாக்கள் விடையங்களை பொது இடங்களில் எழுதி, பேசி பிரச்சினையாக்காதிருப்பது அவசியமாகும்.

  முகம் மூடுதல் சம்பந்தமான பிரச்சினை ஒரு அமர்வில் பேசி உலக முஸ்லிம்கள் அனைவரும் ஒரே கருத்தின் கீழ் வர முடியுமான ஒரு மஸ்அலாவாக இருந்திருப்பின் இப்போது உலகில் உள்ள அனைவரும் ஹிஜாப் விடையத்தில் ஒரே கருத்தின் கீழ் வந்திருப்பார்கள்.

  கனடாவில் குறித்த பெண் எதிர் கொண்ட பிரச்சினை முகம் மூடுவதுடன் அறவே சம்பந்தம் அற்ற ஒரு பிரச்சினை தானே. அப் பெண் முகம் திறந்து ஹிஜாப் அணிந்து வந்தபோது ஏற்பட்ட பிரச்சினை தானே அது. அவ்வாறிருக்கையில் சம்பந்தப்படாத முகமூடலை இங்கு ( பொது தளத்தில்) எதற்காக கொண்டு வந்தீர்கள் ? நீங்கள் முகம் மூடுவது சம்பந்தமாக கட்டுரையில் குறிப்பிட்டிருப்பது வெறும் ஒரு வரி தான். எனினும் இதை ஒருவர் இங்கே விவாத பொருளாக்கினால் பல நாற்களுக்கு பலநூறு பேர் வந்து Comments என்ற பெயரில் எழுத்து சண்டைகளால் தரக்குறைவாக ஏசிப்பேசிக் கொள்ளலாம்.

  சிந்தித்து செயற்படுவோம். அள்ளாஹ் எம் அனைவரையும் கபூல் செய்து கொள்வானாக.

  ReplyDelete

adsns