நாட்டில் புரட்சிகரமான மாற்றத்தை கொண்டுவர, 10 வருடங்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நாட்டின் தலைமைப் பதவிக்கு நியமிக்க தேவையான ஆதரவையும் வழங்குவோம் என ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் தெரிவிப்பு.



இந்நாட்டின் இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கையை உருவாக்க முடியும் என்ற உறுதியான நம்பிக்கை தனக்கு இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

வீழ்ச்சியடைந்த இலங்கைப் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவது கடினமானது எனப் பலரும் கூறியபோதும் அந்த சவாலை ஏற்றுக்கொண்டு, இரண்டு வருடங்களுக்குள் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரமான நிலைக்குக் கொண்டு வந்ததாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாட்டை முன்னோக்கி நகர்த்துவதற்கு ஒற்றுமை ஒன்றே தேவையெனவும் தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இளம் அரசியல் பிரதிநிதிகளுடன் இன்று (18) நுவரெலியா ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

நுவரெலியா, ஹங்குரங்கெத்த, மஸ்கெலியா, கொத்மலை மற்றும் வலப்பனை ஆகிய தொகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவும் ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி உள்ளிட்ட பல கட்சிகளின் இளைஞர் பிரதிநிதிகள் குழுவும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்ததுடன், நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடினர்.

நுவரெலியா மாவட்டத்தை சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் பிரதேசமாக அபிவிருத்தி செய்வதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை சிலர் விமர்சித்து வருவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, அபிவிருத்தித் திட்டத்திற்கு அனைவரினதும் ஆதரவு கிடைத்தால் அந்த திட்டங்களை நாட்டின் பொருளாதாரத்தில் திருப்புமுனையாக மாற்ற முடியும் எனவும் சுட்டிக்காட்டினார்.

பழமையான அரசியலில் ஈடுபட்டு நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது எனவும், நாட்டுக்கு தேவையான முதலீடுகளை ஈர்த்து நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு அனைவரும் இணக்கமாக செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் சரியான பொருளாதார வேலைத்திட்டத்துடன் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார ஸ்தீரத்தன்மையினால் இந்த வருடம் மக்கள் சிங்கள, தமிழ் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடியதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இன்று சகல துறைகளிலும் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வோடு, மக்களின் வருமான மூலங்களும் அதிகரித்து வருவதாகவும், இந்த பயன் அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே தனது நோக்கம் என்றும் தெரிவித்தார்.

இளம் அரசியல்வாதிகள் என்ற ரீதியில் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியிடம் தெரிவித்த அவர்கள், நாட்டின் அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பான தமது முன்மொழிவுகளையும் முன்வைத்தனர்.

இளைஞர் சமூகத்தை வலுவூட்டுவதற்காக ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் பிராந்திய இளைஞர் நிலையங்களை நிறுவுவதற்கு திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அப்பிரதேச இளைஞர் மையங்கள் மூலம் இளம் தொழில் முனைவோரை வளர்க்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், அதற்காக வங்கிக் கிளைகளின் முதன்மை அலுவலர்கள் மற்றும் வர்த்தக சங்க உறுப்பினர்களை ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய

நுவரெலியா மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற வேட்பாளர் அசோக ஹேரத்,

தாம் வேறொரு கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தினாலும் ஜனாதிபதியின் வேலைத்திட்டத்தை ஏற்றுக்கொள்கின்றேன் எனவும் தான் அந்த வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிப்பதாகவும் தெரிவித்தார்.


ரணில் விக்கிரமசிங்க பிரதமராக 2001ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 2025ஆம் ஆண்டு நிறைவடையவிருந்த “யழி புபுதமு ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்தை வெற்றியடைய அனைவரும் ஆதரித்திருந்தால் இன்று இலங்கை அபிவிருத்தியடைந்த நாடாக மாறியிருக்கும் என சுட்டிக்காட்டிய அவர், அன்று அதனை எதிர்த்த தரப்பினர் தற்போது ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்பட்டு வரும் 2048 அபிவிருத்தியடைந்த நாடு வேலைத்திட்டத்திற்கு குழிபறிப்பதாகவும் தெரிவித்தார்.


அடுத்த 02 வருடங்களில் நாட்டில் புரட்சிகரமான மாற்றத்தை மேற்கொண்டுவர 10 வருடங்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நாட்டின் தலைமைப் பதவிக்கு நியமிக்க தேவையான ஆதரவை வழங்குவோம் என அசோக ஹேரத் மேலும் குறிப்பிட்டார்.


முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.கே. பியதாச மற்றும் நுவரெலியா மகாநகர சபையின் முன்னாள் மேயர் சந்தன லால் கருணாரத்ன மற்றும் முன்னாள் மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச இளம் அரசியல்வாதிகள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
நாட்டில் புரட்சிகரமான மாற்றத்தை கொண்டுவர, 10 வருடங்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நாட்டின் தலைமைப் பதவிக்கு நியமிக்க தேவையான ஆதரவையும் வழங்குவோம் என ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் தெரிவிப்பு. நாட்டில் புரட்சிகரமான மாற்றத்தை கொண்டுவர, 10 வருடங்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நாட்டின் தலைமைப் பதவிக்கு நியமிக்க தேவையான ஆதரவையும் வழங்குவோம் என ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் தெரிவிப்பு. Reviewed by Madawala News on April 19, 2024 Rating: 5

போதைப்பொருள் வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்த குற்றத்தில் 2 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது



போதைப்பொருள் வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்த சந்தேகத்தின் பேரில் 2 பொலிஸ் உத்தியோகத்தர்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று (18) கைது செய்துள்ளனர்.

மாவத்தகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் தொருட்டியாவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய சார்ஜன்ட் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்த குற்றத்தில் 2 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது போதைப்பொருள் வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்த குற்றத்தில் 2 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது Reviewed by Madawala News on April 19, 2024 Rating: 5

காரியாக வேண்டும் என்ற எண்ணத்துடன் பயணித்த மகனை, ஹாபிழாக அல்லாஹ் அழைத்துக் கொண்டான்



காரியாக வேண்டும் என்ற எண்ணத்துடன் பயணித்த எனது மகனை ஹாபிழாக அல்லாஹ் அழைத்துக் கொண்டான்.


கடந்த நோன்பு பெருநாளன்று தொழுகைக்கு அழைத்துச் சென்ற எனது மகனை மறுநாளே அல்லாஹ் அழைத்துக்கொண்டான்.

ஏறாவூர், மக்காமடி குறுக்கு வீதியில், அலிகார் விளையாட்டு மைதானத்திற்கு அருகாமையில் தனது வீட்டோடு சேர்த்து "அல்தாப் பேக்கரி"யையும் நடாத்தி வரும் சலீம், மஜ்மூனா தம்பதியர்களின் மூன்று மகன்களில் இரண்டாவது பிறந்தவர்தான் அல் ஹாபிழ் முஹம்மது அஹ்ஷன்.

இவர் தனது ஆரம்பக் கல்வியை ஏறாவூர் அல் அஸ்ஹர் பாடசாலையில் ஐந்தாம் ஆண்டு வரை கற்று ஆறாம் ஆண்டுக்கு அலிகார் தேசிய பாடசாலைக்கு சென்று.. மூன்று மாதங்களில், தனது தந்தையிடம் அச்சத்துடன் விடயமொன்றை தெரிவித்திருக்கிறார்.

அதாவது, "என்னால் தொடர்ந்து பாடசாலைக் கல்வியை கற்க முடியாது, நான் "குர்ஆனை மனனமிட்டு ஹாபிஸாஹி, காரியாக வரவேண்டும்" என்ற ஆசையே எனக்குள் இருக்கிறது வாப்பா "என்று சொல்லியிருக்கிறார்.

தந்தையும் மகனின் ஆசைக்கு தடைவிதிக்காது ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள (மர்கஸ்) அல் பாக்கியதுஸ் ஸாலிஹாத் அரபுக் கல்லூரியில் மகனின் ஆசைப்படியே 13 வயதில் ஹிப்ழு வகுப்பில் இணைத்து விடுகிறார்.

காலம் உருண்டோடுகிறது.மூன்று வருடமாகிய போதும் மகன் 15 ஜுஸ் களை மாத்திரமே மனப்பாடம் செய்திருந்ததால், அரபுக் கல்லூரி நிர்வாகம் தந்தையை அழைத்து, மூன்று வருடத்துக்குள் உங்க மகன் முழு குர்ஆனையும் மனனமிடாததால், கல்லூரி விதிமுறைகளின் படி உங்கள் மகனை தொடர்ந்து ஹிப்ழு வகுப்பில் வைத்துக்கொள்ளாது, கிதாப் வகுப்பில் சேர்க்கப்போகிறோம் என்று சொன்னதும், மகனிடம் விடயத்தை தெரிவித்தபோது, "என்னால் தற்போதைக்கு கிதாப் வகுப்புக்கு செல்ல முடியாது, எப்படியோ நான் ஹாபிஸாகி காரியாகுவேன் வாப்பா" என்றதும் வாப்பாவுக்கும் மத்ரஸாவுக்குமிடையில் வேதனையுடன் மசூராக்கள் பகிரப்பட்ட வேளை, கல்லூரியின் விதிமுறைகள் அப்படித்தான் இருந்தாலும், இவரது மகன் முஹம்மது அஹ்ஷனை என்னிடம் பாரம் தாருங்கள், குர்ஆனை முழுமையாக மனனமாக்கி கொடுக்க நான் முயற்சிக்கிறேன் என அங்கிருந்த லௌ ஹாபிழ் அப்துல் றஊப் மௌலவி என்பவர் சொல்ல , சபை ஏகமானதாக முடிவெடுத்து அம் மௌலவியிடமே மகனை பாரப்படுத்தியது.

மிகுந்த ஆர்வத்துடன் இருந்த எனது மகனுக்கு இம் மௌலவியின் செயற்பாடு மகிழ்வை கொடுத்ததால் நானும் அவ்வாறே சம்மதித்து, அம் மௌலவியிடம் வாக்குறுதியொன்றும் சொல்லிவிட்டு வீடு திரும்பினேன்.

அதாவது, "எனது மகன் ஹாபிஸானதும் மகனையும் உங்களையும் உம்ராவுக்கு அழைத்துச் செல்வேன் " என்பதே அந்த வாக்குறுதியாகும்.

அல்ஹம்துலில்லாஹ்! நான்காவது வருடத்திலேயே எனது மகன் குர்ஆன் முழுவதும் மனனமிட்டு ஹாபிஸானார்.அப்போதும் எனது மகன், நான் காரியாகுவேன் வாப்பா என்று சொல்லி என்னை மேலும் சந்தோசப்படுத்தினார்.

எனது மகன் பெற்றோர் சொல்லை மதிக்கக் கூடியவராகவே இருந்ததோடு மாத்திரமல்லாமல் பெற்றோர் விரும்பி எடுத்துக் கொடுக்கும் ஆடைகளையே விரும்பி அணிபவராகவும் இருந்தார்.ஒரு நாளும் அவரது விருப்பத்திற்கு பெருநாள் தினங்களில் கூட புத்தாடை வாங்க செல்லமாட்டார்.

மகன் ஹாபிஸான மகிழ்வுடன் நோன்புக்கு முன்பாகவே உம்ராவுக்கு செல்ல ஆயத்தமாகி நானும் ,மகனும் ,மௌலவியுமாக புனித பயணத்தை 13/03/2024 அன்று ஆரம்பித்தோம்.

இங்கிருந்து செல்லும் போது மகனுக்கு சிறிது இருமல் இருந்தது.மக்கா சென்றதும் இருமல் அதிகரித்து தவாப் செய்யும் போதெல்லாம் வேகத்தை குறைத்தே நடந்து செல்வதை அவதானித்து கவலையடைந்தேன்.

இருமலுக்கான மருந்துகளை உபயோகித்தும் இருமல் குறைந்ததாகயில்லை.

இவ்வாறிருக்க மதீனாவுக்கு செல்ல ஆயத்தமான போது ,எனது மகனின் இருமலினால் ஏனையோருக்கு அசௌகரியம் வரக்கூடாது என நினைத்தும், மகனின் உடல்நிலை நலிவுற்று காணப்பட்டதாலும் சவூதியில் தொழில் செய்துவரும் ஏறாவூரை சேர்ந்த சகோதரர் அன்வர் என்பவரது வாகனத்தில் மதீனா சென்றோம்.
மதீனாவில் வைத்து எனது மகன் முதன்முதலில் ஆசைப்பட்டு ஜுப்பாவுக்கான துணியொன்றையும் பெற்றுக்கொண்டு அதனை பெருநாளைக்கு தைத்து போட வேண்டுமென்றும் சொல்லிக்கொண்டார்.

மதீனாவில் நின்ற நாட்களிலெல்லாம் மகனின் உடல் நிலையில் மாற்றம் காணப்படாததால் அல்லாஹ் உதவியால் 26/03/2024 அன்று நாடு திரும்பியதும் ஏறாவூர் கூட்டுறவு வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை பெற்ற பின் மீண்டும் மத்ரஸாவுக்கு சென்றுவிட்டார். மூன்று நோன்பினை மத்ரஸாவில் வைத்து பிடித்த எனது மகனுக்கு, இருமலுடன் உடல் வலி அதிகரிப்பால் தொடர்ந்து நோன்பு நோற்க முடியாமல் வீட்டுக்கு அழைத்து வந்தேன்.

நாளுக்கு நாள் மகனின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்த போது, மகனின் சுவாசப்பைக்கு அருகில் வளர்ந்திருக்கும் கட்டியொன்றை சத்திரசிகிச்சை மூலம் அகற்றி அதனை பகுப்பாய்வுக்கு உட்படுத்தி முடிவினை அறிவிக்கிறோம் என சொன்னதும் சுமார் இருவாரம் கழித்து வீட்டுக்கு வந்தோம்.

நோன்பு பெருநாள் 10/04/2024 புதனன்று வந்ததும், பெருநாள் தொழுகைக்காக மர்கஸுக்கே அழைத்துச் செல்லுங்கள் வாப்பா, என்றதும் அவ்வாறே அழைத்துச் சென்று தொழுகை முடிந்து வீடு திரும்பியிருந்த வேளை, கொழும்பு தனியார் வைத்தியசாலையிலிருந்து எனது மகனின் வைத்திய பரிசீலனையின் முடிவு குறுந்தகவல் மூலம் வந்திருந்ததைப் பார்த்து அதிர்ந்து போனேன்.

அல்லாஹ் விடம் விடயத்தை பாரப்படுத்திவிட்டு ,பெருநாள் கழித்து சிகிச்சைகளை தொடர்வோம் என்றிருக்கையில் மறுநாளே (11/04) எனது மகனை அல்லாஹ் அழைத்துக் கொண்டான்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்.

எனது மகனுக்கு ஏற்பட்டிருப்பது "குருதிப்புற்று நோய் "என அடையாளம் கண்டபின்பு மேலதிக சிகிச்சை பெறும் முன்பே தொடரான வேதனையை வழங்காமல் அல்லாஹ் அழைத்துக்கொண்டான் என விழிநீர் ததும்ப மர்கூம் ஹாபிஸ் அஹ்ஸனின் தந்தை தெரிவித்தார்.

ஜனாசா நல்லடக்கம் அன்றைய தினம் ளுகர் தொழுகையை தொடர்ந்து ஏறாவூர் நூறுஸ்ஸலாம் மஸ்ஜிதில் பெருந்திரளான உலமாக்கள், ஹாபிழ்கள், பொதுமக்கள் பங்கு பற்றுதலுடன் நடைபெற்றது.

13 வயதிலிருந்து மரணிக்கும் வரை நல் அமல்களுடன் மாத்திரமே தனது நேரகாலத்தை கழித்த ,
மர்ஹும் அல் ஹாபிழ் முஹம்மது அஹ்ஷனின் பாவங்களை மன்னித்து மறுமை வாழ்வு சிறப்பாக அமைய அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதோடு , மகனை இழந்து தவிக்கும் பெற்றோருக்கும் உறவுகளுக்கும் மன ஆறுதலை வழங்கவும் பிரார்த்திப்போம்.

(உம்ராவுக்கு செல்லும் போது மாபோளை பள்ளிவாசலில் வைத்து இஹ்ராம் ஆடையுடன் பிடிக்கப்பட்ட படங்களே இவைகள்)

(ஏறாவூர் நஸீர்)
காரியாக வேண்டும் என்ற எண்ணத்துடன் பயணித்த மகனை, ஹாபிழாக அல்லாஹ் அழைத்துக் கொண்டான் காரியாக வேண்டும் என்ற எண்ணத்துடன் பயணித்த மகனை, ஹாபிழாக அல்லாஹ் அழைத்துக் கொண்டான் Reviewed by Madawala News on April 18, 2024 Rating: 5

நாட்டில் சோம்பேறிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு



தொற்று அல்லாத நோய்களில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சமூக வைத்திய நிபுணர் டாக்டர் ஷெரீன் பாலசிங்க இதனைத் தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், இலங்கையில் சும்மா இருப்பவர்களின் சனத்தொகை வீதம் 30% இலிருந்து 35% ஆக அதிகரித்துள்ளதாகவும் இதன் காரணமாக தொற்று நோய்கள் வேகமாக அதிகரித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

உங்கள் மீது
நாட்டில் சோம்பேறிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு நாட்டில் சோம்பேறிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு Reviewed by Madawala News on April 18, 2024 Rating: 5

வெளிநாட்டுப் பிரஜைக்கு 800 ரூபாவுக்கு ‘வடையும், தேநீரும் கொடுத்தவர் கைது.



சமூக ஊடக வீடியோவில் வைரலான,
களுத்துறை உணவகத்தில் வெளிநாட்டுப் பிரஜை ஒருவருக்கு ‘வடையும் ஒரு தேநீரையும் ’ கொடுத்து 800 ரூபா பெற்ற இடைத்தரகர் ஒருவரை சுற்றுலாப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும், உணவகத்தின் உரிமையாளருக்கு எதிராக தனி வழக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

வெளிநாட்டுப் பிரஜைக்கு 800 ரூபாவுக்கு ‘வடையும், தேநீரும் கொடுத்தவர் கைது. வெளிநாட்டுப் பிரஜைக்கு 800 ரூபாவுக்கு ‘வடையும், தேநீரும் கொடுத்தவர் கைது. Reviewed by Madawala News on April 18, 2024 Rating: 5

ஒரு கிலோ தக்காளியின் மொத்த விலை 15 ரூபாவாகவும், போஞ்சி 40 ரூபாவாகவும் குறைந்தது.



தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ தக்காளியின் மொத்த விலை நேற்று (17ஆம் திகதி) 15 ரூபாவாக குறைந்திருந்தது.

மேலும், ஒரு கிலோ போஞ்சி மொத்த விலை 40 ரூபாய் வரையும், முள்ளங்கி ஒரு கிலோ மொத்த விற்பனை விலை 35 ரூபாய் வரையும், ஒரு கிலோ கெக்கிரி மற்றும் வெள்ளரி மொத்த விற்பனை விலை 20 ரூபாய் வரையும், மொத்த விலை ஒரு கிலோ வெண்டைக்காய் 40 ரூபாவாகவும், ஒரு கிலோ வெண்டைக்காய், கானாங்கெளுத்தி, பீக்கங்காய் ஆகியவற்றின் மொத்த விலை 50 ரூபாவாகவும் குறைந்துள்ளது.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு விவசாயிகள் மரக்கறிகளை கொண்டு வந்த போதிலும், வியாபாரிகள் மரக்கறிகளை கொள்வனவு செய்ய வராததால் விலை பெருமளவு குறைந்துள்ளது.


தம்புள்ளையில் ஒரு கிலோ தக்காளி 15 ரூபாவாக குறைந்திருந்த போதிலும், நேற்று (17ம் திகதி) புறக்கோட்டை மரக்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி 100 முதல் 150 ரூபா வரை சில்லறை விலையில் விற்பனை செய்யப்பட்டது.

புறக்கோட்டை காய்கறி மார்க்கெட்டில் பீன்ஸ் கிலோ 120 ரூபாய்க்கும், கேரட் கிலோ 300 ரூபாய்க்கும், கருவேப்பிலை கிலோ 100 ரூபாய்க்கும், கத்தரி கிலோ 180 ரூபாய்க்கும் விற்பனையானது.

ஆனால், நேற்று புறக்கோட்டை சந்தையில் சில்லறை விற்பனை சந்தையில் காய்கறிகளுக்கான தேவை குறைந்துள்ளது
ஒரு கிலோ தக்காளியின் மொத்த விலை 15 ரூபாவாகவும், போஞ்சி 40 ரூபாவாகவும் குறைந்தது. ஒரு கிலோ தக்காளியின் மொத்த விலை 15 ரூபாவாகவும், போஞ்சி 40 ரூபாவாகவும் குறைந்தது. Reviewed by Madawala News on April 18, 2024 Rating: 5

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விரோதமாக செயற்படுபவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த டயானா கமகே.



இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விரோதமாக செயற்படுபவர்களுக்கு எதிராக உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகே எச்சரித்துள்ளார்.

அண்மையில் விற்பனையாளர் ஒருவர் சுற்றுலாப் பயணி ஒருவருக்கு அதிக விலைக்குக் கொத்து ரொட்டியை விற்பனை செய்ய முயன்ற விவகாரம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துரைக்கும்போதே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.



தற்காலத்தில் சுற்றுலாப் பயணிகள் முட்டாள்கள் அல்ல, அவர்களை ஏமாற்ற முடியாது எனக் குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர், விருந்தோம்பல், நட்புறவு மிக்க சுற்றுலாத் தலமாக உள்ள இலங்கையின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தவேண்டாம் என்று கோரியுள்ளார்.

அத்துடன் ஏனைய சக வர்த்தகர்களின் வாழ்வாதாரத்துக்கும் தீங்கு விளைவிக்காமல் இதுபோன்ற நடத்தைகளில் ஈடுபடவேண்டாம் என்றும் அவர் வர்த்தகர்களை வலியுறுத்தியுள்ளார்.
இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விரோதமாக செயற்படுபவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த டயானா கமகே. இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விரோதமாக செயற்படுபவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த டயானா கமகே. Reviewed by Madawala News on April 18, 2024 Rating: 5

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளுக்கும், குற்றவாளிகளுக்கும் எமது அரசாங்கத்தில் தகுந்த தண்டனை வழங்கப்படும் ; தேசிய மக்கள் சக்தி உறுதிமொழி வழங்கியது.



ஈஸ்டர் குண்டுவெடிப்பு என்பது நாடுகளுக்கு இடையே ஒற்றுமையின்மையை உருவாக்கி, இனக் கலவரங்களை ஏற்படுத்தி, மக்களின் உயிருக்கும் உடமைகளுக்கும் பெரும் சேதம் விளைவித்து, குறுகிய அரசியல் நோக்கத்தை அடைவதற்காக நடத்தப்பட்ட சதியே ஆகும் 2019 ஏப்ரல் 21, அன்று ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலில் சூத்திரதாரிகளுக்கும் குற்றவாளிகளுக்கும் எமது ஆட்சியில் தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் என்று ​பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் அறிவித்துள்ளது,


இது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில்,

2019ஏப்ரல் 21, அன்று (ஈஸ்டர் ஞாயிறு) நடந்த பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க தேசிய மக்கள் சக்தியின் உறுதிமொழி.

ஈஸ்டர் ஞாயிறு அன்று கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ யாத்ரீகர்களைக் குறிவைத்து தீவிரவாதிகள் குழு நடத்திய கொடூரமான தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நடந்து இன்றுடன் ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. அந்த மோசமான நாளில், மூன்று தேவாலயங்கள் மற்றும் பல சுற்றுலா ஹோட்டல்கள் மீதான மனிதாபிமானமற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் கிறிஸ்தவ/கத்தோலிக்க யாத்ரீகர்கள் உட்பட இருநூற்று எழுபத்து மூன்று (273) பேர் உயிரிழந்தனர் மற்றும் ஐநூறுக்கும் மேற்பட்டோர் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ ஊனமுற்றுள்ளனர்.

உயிரிழந்த உயிர்கள், தாக்குதலில் ஆதரவற்ற குடும்பத்தினர் மற்றும் தாக்குதலால் அழிந்த உடைமைகளுக்கு அரசாங்கமே பொறுப்பு என்பதை தேசிய மக்கள் சக்தி மக்களின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறது. அந்த பொறுப்பு இதுவரை சரியாக நிறைவேற்றப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு, தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் அந்த விடயங்கள் தொடர்பான சட்டத்தை முறையாக அமுல்படுத்தி, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தாக்குதலை மேற்கொண்டோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமென வலியுறுத்தியுள்ளோம்.


1. ஈஸ்டர் குண்டுவெடிப்பு என்பது நாடுகளுக்கிடையே முரண்பாட்டை உருவாக்கி, இனவெறிக் கலவரங்களைத் தூண்டி, பெரும் உயிரிழப்புகளையும், சொத்துக்களையும் ஏற்படுத்துவதன் மூலம் குறுகிய அரசியல் நோக்கத்தை அடையச் செய்து, குற்றத்தின் மூளையாகச் செயல்பட்டவர்களையும், திட்டமிடுபவர்களையும் நீதியின் முன் நிறுத்துவோம்.


2. ஈஸ்டர் தாக்குதலைத் தடுக்கத் தவறியவர்கள், தாக்குதலை நடத்துவதற்கு முன், அது குறித்த சரியான தகவல்களைப் பெற்று, தாக்குதல் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளைத் திசைதிருப்பியவர்கள், உண்மையான சதிகாரர்களைப் பாதுகாக்க, உண்மையாகப் பொறுப்பான தரப்பினரை அடையாளம் கண்டு, கைது செய்யப்பட்ட பாதுகாப்புப் படை அதிகாரிகள் மற்றும் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவை மற்றும் அதற்குப் பொறுப்பான ஒவ்வேர் அரசியல் அதிகாரம் உட்பட ஏனைய அதிகாரிகளையும் நீதியின் முன் நிறுத்துவதற்கு, அவர்களுக்கு எதிராகத் தாக்குதல் மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


3. மேலும், ஈஸ்டர் பண்டிகையால் பாதிக்கப்பட்டவர்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அடிப்படை உரிமை வழக்குகளில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட அரசியல் அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு,

ii ஏற்கனவே ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளில் உள்ளடக்கப்பட்டுள்ள அரசியல் அதிகாரங்கள் மற்றும் அரச அதிகாரிகள், பதவி வேறுபாடின்றி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

iii எதிர்காலத்தில் ஒரு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் நடத்தப்படும் இந்த கொடூரமான தாக்குதல் தொடர்பாக நியமிக்கப்படும் சிறப்பு விசாரணை ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில், பொறுப்பான அரசியல் அதிகாரிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் மீது குற்றவியல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும்.

4. இத்தாக்குதல் தொடர்பான நிலுவையில் உள்ள வழக்குகளை முன்னுரிமை அடிப்படையில் விரைவில் விசாரித்து முடிக்கவும், அதற்குத் தேவையான வசதிகளை வழங்கவும் சம்பந்தப்பட்ட துறைகளைக் கேட்டுக் கொள்வது.

5. இத்தாக்குதல் தொடர்பாக நாட்டிலிருந்து தப்பிச் சென்ற குற்றவாளிகள் அனைவரையும் அழைத்து வந்து அவர்கள் மூலம் இந்தத் தாக்குதலுக்கு திட்டமிட்டவர்கள் மற்றும் சதிகாரர்கள் யார் என்று விசாரணை நடத்தி, அவ்வாறு கண்டுபிடிக்கப்படும் திட்டமிட்டவர்கள் மற்றும் சதிகாரர்கள் யாராக இருந்தாலும் அவர்களைத் தண்டிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும்.

6. இத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, உயிருக்கும் உடமைக்கும் உரிய இழப்பீட்டு முறையை அறிமுகப்படுத்துவது, அவர்கள் சந்தித்த மனக் குழப்பத்தில் இருந்து அவர்களை விடுவிக்கக்கூடிய உளவியல் திட்டத்தை அறிமுகப்படுத்துவது,

7. இது தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு ஆணைக்குழுக்கள் மற்றும் ஏனைய விசாரணைகளின் மூலம் வெளிப்படுத்திய தகவல்களின் அடிப்படையில் மேலும் பல விடயங்கள் ஆராயப்பட வேண்டியுள்ளதால், இவ்விடயத்தை மேலும் ஆராய்ந்து பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதி வழங்க முழு அதிகார வரம்பைக் கொண்ட விசேட புலனாய்வுக் குழுவொன்று அதன் பரிந்துரைகளின் அடிப்படையில் மிகக் குறுகிய காலத்திற்குள் இந்தத் தாக்குதல்களை நடத்த சதி செய்தவர்கள் மற்றும் அதற்கு காரணமான தரப்பினருக்கு எதிராக பல்வேறு வழிகளில் நீதித்துறை நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதற்கான தண்டனைகள் வழங்கப்படும் என்று இலங்கை மக்கள், எந்த தயக்கமும் இன்றி தேசிய மக்கள் படையின் அரசாங்கத்தால் நாங்கள் உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறோம்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளுக்கும், குற்றவாளிகளுக்கும் எமது அரசாங்கத்தில் தகுந்த தண்டனை வழங்கப்படும் ; தேசிய மக்கள் சக்தி உறுதிமொழி வழங்கியது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளுக்கும்,  குற்றவாளிகளுக்கும் எமது அரசாங்கத்தில் தகுந்த தண்டனை வழங்கப்படும் ; தேசிய மக்கள் சக்தி உறுதிமொழி வழங்கியது. Reviewed by Madawala News on April 18, 2024 Rating: 5

தொழுகைக்கே முக்கியத்துவம் கொடுக்கும் சிறுவன் முஹம்மது மிஷால்.



தொழுகைக்கே முக்கியத்துவம் கொடுக்கும் சிறுவன்.
தொழுகைக்கே முக்கியத்துவம் கொடுக்கும் சிறுவன் முஹம்மது மிஷால். தொழுகைக்கே முக்கியத்துவம் கொடுக்கும் சிறுவன் முஹம்மது மிஷால். Reviewed by Madawala News on April 18, 2024 Rating: 5

உருவகப்படுத்தப்பட்ட செவ்வாய் பயணத்திற்கான குழுவில் இலங்கையை சேர்ந்த பியூமி இணைப்பு.



உருவகப்படுத்தப்பட்ட செவ்வாய் பயணத்திற்கான குழுவில், இலங்கையர் ஒருவரையும் அமெரிக்க விண்வெளி மையமான நாசா இணைத்துள்ளது.

ஹஸ்டனில் உள்ள நாசாவின் ஜோன்சன் விண்வெளி மையத்தில், அமைக்கப்பட்டுள்ள செவ்வாய் கிரகத்திற்கான உருவகத்துக்குள், வாழ்தல் மற்றும் பணிகளில் பங்கேற்க, ஒரு இலங்கையர் உட்பட நான்கு தன்னார்வலர்களைக் கொண்ட புதிய குழுவை நாசா தேர்ந்தெடுத்துள்ளது.

இதன்படி, ஜேசன் லீ, ஸ்டெபானி நவரோ, ஷரீஃப் அல் ரொமைதி மற்றும் இலங்கையரான பியூமி விஜேசேகர ஆகியோர் எதிர்வரும் 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை, நாசாவின் மனித ஆய்வு ஆராய்ச்சி அமைப்பில் நுழையவுள்ளார்கள்.

உள்ளே நுழைந்தவுடன் இந்தக் குழுவினர், 45 நாட்கள் விண்வெளி வீரர்களைப் போல வாழ்ந்து, பணிகளில் ஈடுபட்ட பின்னர், ஜூன் 24ஆம் திகதி பூமிக்கு திரும்பிய வகையில் குறித்த உருவகத்தை விட்டு வெளியேறுவார்கள்.

விண்வெளி வீரர்களை, சந்திரன், செவ்வாய் மற்றும் அதற்கு அப்பால் ஆழமான விண்வெளி பயணங்களுக்கு அனுப்புவதற்கு முன்னர், அவர்களை எவ்வாறு தனிமைப்படுத்தல், அடைப்பு மற்றும் தொலைதூர நிலைமைகளுக்கு மாற்றியமைத்துக்கொள்வது என்பதை ஆய்வு செய்ய நாசா உதவுகிறது.

இந்த நிலையில், குறித்த ஆய்வில் பங்கேற்கும் இலங்கையரான பியூமி விஜேசேகர கலிபோர்னியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கில் உள்ள நாசா அமெஸ் ஆராய்ச்சி மையத்தில் உள்ள கதிர்வீச்சு உயிரியல் இயற்பியல் ஆய்வகத்தில் முதுகலை ஆராய்ச்சி விஞ்ஞானி பட்டம் பெற்றவராவார்.

சென் டியாகோவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உயிர்மருத்துவப் பொறியியலில் தனது இளங்கலைப் பட்டத்தையும், பென்னில் உள்ள பிட்ஸ்பெர்க்கில் உள்ள கார்னகி மெலன் பல்கலைக்கழகத்தில் உயிரியல் மருத்துவப் பொறியியலில் முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களையும் பெற்றுள்ளார்.
உருவகப்படுத்தப்பட்ட செவ்வாய் பயணத்திற்கான குழுவில் இலங்கையை சேர்ந்த பியூமி இணைப்பு. உருவகப்படுத்தப்பட்ட செவ்வாய் பயணத்திற்கான குழுவில் இலங்கையை சேர்ந்த பியூமி இணைப்பு. Reviewed by Madawala News on April 18, 2024 Rating: 5

வளைகுடாவில் மூழ்கிய டேங்கர் கப்பலில் இருந்து 21 இலங்கையர்களை ஈரான் காப்பாற்றியது.



ஓமான் வளைகுடாவில் மூழ்கிய டேங்கர் கப்பலில் இருந்து 21 இலங்கை பணியாளர்களை மீட்டதாக ஈரானிய அதிகாரிகள் கூறியதாக அரச செய்தி நிறுவனமான IRNA புதன்கிழமை தெரிவித்துள்ளது.

பெயரிடப்படாத டேங்கர் புயல் காரணமாக ஈரானின் ஜாஸ்க் கடற்கரையிலிருந்து 30 மைல் (50 கிமீ) தொலைவில் சேதமடைந்ததாக அறிக்கை கூறியது.

ஐந்து பணியாளர்கள் ஜாஸ்க் அவசர சேவையிலிருந்து மருத்துவ உதவியைப் பெற்றனர் மற்றும் நல்ல உடல் நிலையில் உள்ளனர் என்று அறிக்கை மேலும் கூறியது.

மீட்பு எப்போது நடந்தது என்று கூறவில்லை
வளைகுடாவில் மூழ்கிய டேங்கர் கப்பலில் இருந்து 21 இலங்கையர்களை ஈரான் காப்பாற்றியது. வளைகுடாவில் மூழ்கிய டேங்கர் கப்பலில் இருந்து 21 இலங்கையர்களை ஈரான் காப்பாற்றியது. Reviewed by Madawala News on April 17, 2024 Rating: 5

பலத்த மழை காரணமாக அரநாயக்க - மாவனெல்லை பிரதான வீதியில் மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து முற்றாக தடை.



பலத்த மழை காரணமாக பிரதான வீதியில் மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

அரநாயக்க - மாவனெல்லை பிரதான வீதியில் கப்பாகொடை பிரதேசத்தில் இவ்வாறு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

மரம் விழுந்ததில் உயர் அழுத்த மின்கம்பியும் சேதமடைந்துள்ளது.

பிரதான வீதியின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதால் மாவனெல்லையில் இருந்து அரநாயக்க நோக்கி பயணிக்கும் மக்கள் அனைவரும் வெலிகல்ல ஊடாக உஸ்ஸாபிட்டிய வீதியை பயன்படுத்துமாறு மாவனெல்லை பொலிஸார் அறிவித்துள்ளதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.
பலத்த மழை காரணமாக அரநாயக்க - மாவனெல்லை பிரதான வீதியில் மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து முற்றாக தடை. பலத்த மழை காரணமாக அரநாயக்க - மாவனெல்லை பிரதான வீதியில் மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து முற்றாக தடை. Reviewed by Madawala News on April 17, 2024 Rating: 5

பிறைக்குழுவை முன்னிறுத்தி சமூக ஒற்றுமையை சீரழிக்க சில சக்திகள் முயற்சிக்கிறது.



புனித நோன்புப்பெருநாளை கொண்டாடும் விதமாக ஸஹபான் மாத தலைபிறை பார்க்கும் நிகழ்வில் தீர்மானம் எடுப்பதில் இருந்த காலதாமதத்தை வைத்து முஸ்லிம் சமூகத்தினரை மீண்டும் பிளவுபடுத்தும் ஒப்பந்தச் சித்தாந்தங்களை விதைக்கும் ஒப்பந்தச் சிந்தனையாளர்களின் முயற்சிகளை மார்க்க, அரசியல் மற்றும் சிவில் தலைவர்கள் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும் என கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினரும், ஜனாதிபதி செயலணி முன்னாள் உறுப்பினருமான ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,

ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக கொழும்பு பெரிய பள்ளிவாசலை முன்னிறுத்தி பிறை பார்க்கும் பணியை எமது முன்னோர்கள் கடைப்பிடித்து வருகின்றனர். அதில் இஸ்லாமிய மாத சுட்டெண்னையும் மாதாந்தம் அவர்கள் கணித்து வருகிறார்கள். கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறை குழுவில் தற்போது அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை மற்றும் அரசாங்கத்தின் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் அதன் வெளிப்படைத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

உறுதியான மற்றும் நம்பகமான தீர்மானங்களை எடுப்பதில் உள்ள சில காலதாமதங்களை முன்வைத்து சில ஒப்பந்தச் சிந்தனையாளர்கள் முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமையை சிதைத்து பிராந்திய மற்றும் பூகோள அரசியல் சதிகளை செய்ய முயற்சிக்கிறார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சில நாட்களாக சமூக ஊடகங்களில் கிழக்கு மாகாணத்தில் தனியாக பிறை பார்க்கும் குழு அமைக்கப்பட வேண்டும் என்று சிலர் பகிரங்கமாகவே கருத்துத் தெரிவித்து வருவதை பார்க்கும் போது சந்தேகம் வலுப்பெறுகிறது.

கொழும்பு பெரிய பள்ளிவாசலில் கூடியிருந்த தேசிய பிறைக்குழு தனது அறிவிப்பை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் முன் சிலர் தமது சொந்த சமூக வலைத்தளங்களிலும் மற்றும் முக்கியஸ்தர்கள் பலர் ஊடகங்களிலும் விமர்சித்திருந்தனர். சில சமூகவலைத்தள செயற்பாட்டாளர்கள் முந்திக்கொண்டு பிறை தொடர்பில் பிழையான தீர்மானத்தை சமூக ஊடகங்கள் ஊடாக பரப்பி முஸ்லிம் சமூகத்தினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி, கொழும்பில் உள்ள பெரிய பள்ளிவாசல் மீதான பிறைக்குழுவை குற்றம் சாட்டி, முஸ்லிம் சமூகம் மத்தியில் கொழும்பு பெரிய பள்ளிவாசலுக்கும் பிறைக்குழுவுக்கும் எதிரான கருத்தியலை உருவாக்கி வந்தனர். இதனூடாக முஸ்லிம் சமூகத்தினரிடம் பிளவுபடுத்தும் கருத்தியல் மனப்பான்மையை உருவாக்கி முஸ்லிம் சமூகத்திடம் பாகுபாட்டை உருவாக்குவதே அவர்களின் அடிப்படை நோக்கமாகும்.

கிழக்கிலும், தெற்கிலும், வடக்கிலும், மேற்கிலும் உள்ள முஸ்லிம்கள் அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் ஒரு சக்தியாக ஒன்றிணைய வேண்டிய இந்த நேரத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் மதக் கருத்தியல் பிரிவுகள் மூலம் முஸ்லிம் சமூகத்தை பிளவுபடுத்தி, இந்த ஒப்பந்த பிரிவினைவாத சித்தாந்தங்கள் மற்றும் முஸ்லிங்கள் ஒருபோதும் சோரம்போக கூடாது. மட்டுமின்றி இந்த விடயங்களில் மார்க்க, அரசியல் மற்றும் சிவில் தலைவர்கள் ஒன்றிணைந்து ஒரே சமூக கட்டமைப்பாக செயல்பட வேண்டும் என்றார்.
பிறைக்குழுவை முன்னிறுத்தி சமூக ஒற்றுமையை சீரழிக்க சில சக்திகள் முயற்சிக்கிறது.  பிறைக்குழுவை முன்னிறுத்தி சமூக ஒற்றுமையை சீரழிக்க சில சக்திகள் முயற்சிக்கிறது. Reviewed by Madawala News on April 17, 2024 Rating: 5

கோலாகலமாக இடம்பெற்ற, பிரான்ஸ் வாழ் இலங்கையர்களின் விளையாட்டுப் போட்டிகள்.



அஸ்ஸலாமு அலைக்கும்!!!

நோன்புப் பெருநாளை முன்னிட்டு 11 ஆவது முறையாக இம்முறையும்
All blacks கழகம் ஏற்பாடு செய்திருந்த விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சிகள் கடந்த 14/04/2024 ஞாயிறு அன்று பாரிஸ் la Courneuve நகரில் வெகு விமரிசையாக நடைபெற்று முடிந்தன.

குறிப்பாக அணிக்கு 7 பேர் கொண்ட கிரிக்கெட் போட்டியும் சிறுவர்களை உற்சாகப் படுத்தும் விதமாக 15 மற்றும் 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான உதைப்பந்தாட்ட போட்டியும் மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தன.


வெற்றி பெற்ற அணிகளுக்கு வெற்றிக் கோப்பையும் ,பனபார்சீல்,பதக்கங்களும் வழங்கி சிறப்பிக்கப் பட்டது.

இந்த விளையாட்டு நிகழ்ச்சியை பார்த்து மகிழ பாரிஸ் நகரத்தில் வாழும் இலங்கை முஸ்லிம்கள் பெருமளவில் திரண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இப்போட்டி நிகழ்சியில்,
வெற்றிக்கோப்பயை R,R அணி தட்டிச் சென்றது.
இபோட்டில் சிறந்த துடுப்பாட்ட நாயகனாக MOHAMED ZANHAR தேர்ந்தர்ந்தெடுக்கப் பட்டார்.
இறுதிப் போட்டியின் ஆட்டநாயகனாக RISHARD தேர்ந்தர்ந்தெடுக்கப் பட்டார்.

முழுப் போட்டியிலும் சிறந்த ஆட்ட நாயகனாக ABDUL SAKOOR தேர்ந்தெடுக்கப்பட்டார்.




கோலாகலமாக இடம்பெற்ற, பிரான்ஸ் வாழ் இலங்கையர்களின் விளையாட்டுப் போட்டிகள்.  கோலாகலமாக இடம்பெற்ற, பிரான்ஸ் வாழ் இலங்கையர்களின் விளையாட்டுப் போட்டிகள். Reviewed by Madawala News on April 17, 2024 Rating: 5

ஏப்ரல் 10 ஆம் திகதி நோன்பு பெருநாள் தினத்தை விசேட விடுமுறையாக பிரகடனப்படுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை.



ஏப்ரல் 10 நோன்பு பெருநாள் தினத்தை விசேட விடுமுறையாக பிரகடனப்படுத்துமாறு அரசாங்க பொது சேவைகள் சங்கம் கோரிக்கை...!!!

நூருல் ஹுதா உமர்

முஸ்லிம்களின் புனித நோன்பு பெருநாள் தினமான ஏப்ரல் 10 ஆம் திகதியை இலங்கையில் விசேட விடுமுறையாக பிரகடனப்படுத்துமாறு இலங்கை அரசாங்க பொதுச் சேவைகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது


இது தொடர்பாக இலங்கை அரசாங்க பொதுச் சேவைகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஏ புஹாது பொது நிர்வாக உள்நாட்டு அலுவலர்கள் அமைச்சர்க்கு இன்று 2024.04.17 அனுப்பி வைத்துள்ள கடிதத்தில்,


இலங்கை வாழ் முஸ்லிம் மக்கள் அனைவரும் புனித ரமலான் நோன்பு பெருநாளை தமது மத கலாச்சார விழுமியங்களுக்கு அமைவாக ஏப்ரல் 10-ஆம் தேதி கொண்டாடினர்.


இத்தினம் அரச அலுவலக வேலை நாளாக உள்ளமையினால் குறித்த தினம் சொந்த விடுமுறையில் பெரு நாளை கொண்டாட வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்


இந்த நிலையை கருத்திற் கொண்டு இலங்கை முஸ்லிம்களின் புனித நோன்பு பெருநாள் தினமான ஏப்ரல் 10 திகதியை முஸ்லிம் அரச உத்தியோகத்தர்களுக்கு விசேட விடுமுறை தினமாக பிரகடனப்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஏப்ரல் 10 ஆம் திகதி நோன்பு பெருநாள் தினத்தை விசேட விடுமுறையாக பிரகடனப்படுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை. ஏப்ரல் 10 ஆம் திகதி நோன்பு பெருநாள் தினத்தை விசேட விடுமுறையாக பிரகடனப்படுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை. Reviewed by Madawala News on April 17, 2024 Rating: 5

VIDEO > கோட்டாபய ராஜபக்ஷ வைத்திருந்த ரேஞ்ச் ரோவர் வாகனத்தை மொடல் அழகி பியூமி ஹன்சமலி வைத்திருப்பது எப்படி?



முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னர் பயன்படுத்திய ரேஞ்ச் ரோவர் வாகனத்தை மொடல் அழகி பியூமி ஹன்சமலி பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி Mage Rata (எனது நாடு) அமைப்பின் தலைவர் சஞ்சய மஹவத்த சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவில் இன்று (17) முறைப்பாடு செய்துள்ளார்.

"தேர்தல் நெருங்கிவிட்டது என்பது தெளிவாகிறது, அரசியல்வாதிகள் தாம் சேமித்த கருப்புப் பணத்தை வரவிருக்கும் தேர்தல் பிரசாரங்களில் புகுத்த முனைகிறார்கள், மேலும் இது பணமோசடி நடவடிக்கைகளில் ஈடுபடும் மக்களுக்கு நல்ல காலமாக மாறியுள்ளது.

அதன்படி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பயன்படுத்திய ரேஞ்ச் ரோவர் வாகனத்தை (CBH 1949) பியூமி ஹன்சமாலி எவ்வாறு பெற முடிந்தது என்பதில் எங்களுக்கு சில சந்தேகங்கள் உள்ளன.

"ரேஞ்ச் ரோவர் வாகனம் முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டதா அல்லது கோட்டாபயவால் பியூமிக்கு வழங்கப்பட்டதா என்ற கேள்வி எழுகிறது," என்று மஹவத்த மேலும் கூறினார், மேலும் அந்த மொடல் தற்போது ஒரு அதி சொகுசு குடியிருப்பில் வசிப்பதாகவும், பிற சொத்துக்களை வைத்திருப்பதாகவும், மிகவும் ஆடம்பரமான வாழ்க்கை முறையை நடத்துவதாகவும் குற்றம் சாட்டினார்.

எனவே, அரசியல்வாதிகளின் கறுப்புப் பணத்துடன் தொடர்புடைய பணமோசடி நடவடிக்கைகளுக்கு பியூமி ஹன்சமாலி பயன்படுத்தப்படுகிறார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

"எனவே, நாங்கள் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளோம். முதற்கட்ட முறைப்பாடு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் தொடர்புடைய ரேஞ்ச் ரோவர் வாகனம் மற்றும் பியூமி ஹன்சமாலிக்கு மாற்றப்பட்டது.

இந்த வாகனத்தின் பெறுமதி 100 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. பியூமி ஹன்சமாலியின் வசம் இந்த வாகனம் எப்படி வந்தது, அதன் பரிமாற்றத்திற்கான காரணங்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்களை விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த அவரால் எப்படி இவ்வளவு மதிப்புமிக்க சொத்தை வாங்க முடிந்தது என்பது குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன.

"தங்கள் வாழ்வாதாரத்திற்காக அழகுசாதனப் பொருட்களை விற்பனை செய்வதை நம்பியிருக்கும் பல நபர்களை நான் தனிப்பட்ட முறையில் அறிவேன். ஆனால் அவர்கள் தங்கள் அன்றாடச் செலவுகளை அவர்களின் சுமாரான வருமானத்தில் ஈடுகட்டப் போராடுகிறார்கள். இருப்பினும், பியூமி ஹன்சமாலி தினமும் லட்சக்கணக்கான ரூபாய்களை செலவழித்து, ஆடம்பரமான வாழ்க்கை முறையை வழிநடத்துவதாகக் கூறப்படுகிறது.

"தேர்தல் பிரச்சாரங்களின் போது அரசியல்வாதிகளின் ஊதாரித்தனமான செலவுகள் மற்றும் பணமோசடி நடவடிக்கைகளில் அவர்களின் சாத்தியமான ஈடுபாடுகள் குறித்து Mage Rata அமைப்பு விழிப்புடன் உள்ளது," என்று அவர் கூறினார்.

"எனவே, இந்த முறைப்பாடு மீதான உடனடி விசாரணையை நாங்கள் எதிர்பார்க்கிறோம்," என்று அவர் மேலும் கூறினார்.
VIDEO > கோட்டாபய ராஜபக்ஷ வைத்திருந்த ரேஞ்ச் ரோவர் வாகனத்தை மொடல் அழகி பியூமி ஹன்சமலி வைத்திருப்பது எப்படி? VIDEO > கோட்டாபய ராஜபக்ஷ வைத்திருந்த ரேஞ்ச் ரோவர் வாகனத்தை மொடல் அழகி பியூமி ஹன்சமலி வைத்திருப்பது எப்படி? Reviewed by Madawala News on April 17, 2024 Rating: 5

பொலன்னறுவை இசைக்குழுவினர் சென்ற வேன், கால்வாயில் வீழ்ந்து விபத்து.



பொலன்னறுவை எஃபெக்ட் இசைக்குழுவினரை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று கால்வாயில் வீழ்ந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது.


இந்த விபத்தில் இசைக்குழுவினர் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்ற போதிலும், வேன் சேதமடைந்துள்ளது.


பல கச்சேரிகளில் பங்குபற்றியமையால் ஏற்பட்ட அதீத களைப்பு காரணமாக அதே இசைக்குழுவின் கலைஞர் ஒருவர் வேனை ஓட்டிச் சென்ற நிலையில், உறங்கியதாலும் இந்த விபத்து நேர்ந்ததாக பொலன்னறுவை எஃபெக்ட் இசைக்குழுவினர் தெரிவித்தனர்.


இன்று அதிகாலை பொலன்னறுவை ஓனேகம மெதமலுவ பிரதேசத்தில் இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
பொலன்னறுவை இசைக்குழுவினர் சென்ற வேன், கால்வாயில் வீழ்ந்து விபத்து. பொலன்னறுவை இசைக்குழுவினர் சென்ற வேன், கால்வாயில் வீழ்ந்து விபத்து. Reviewed by Madawala News on April 17, 2024 Rating: 5

தெஹிவளை Zoo வில் திரளும் மக்கள் - 52 மில்லியன் ரூபாய் வருமானம்



தெஹிவளை விலங்கியல் பூங்கா சாதனை வருமானத்தை ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இந்த வருடத்தில் அதிக பார்வையாளர்கள் வருகை தந்துள்ளதாகவும், இதன் மூலம் 52 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பார்வையாளர்களுக்கான வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் அதிகளவிலான பார்வையாளர்கள் தெஹிவளை விலங்கியல் பூக்காவிற்கு வருகை தந்துள்ளதாகவும் அதன் செயற்பாட்டு பணிப்பாளர் அனோமா பிரியதர்ஷனி குறிப்பிட்டுள்ளார்
தெஹிவளை Zoo வில் திரளும் மக்கள் - 52 மில்லியன் ரூபாய் வருமானம் தெஹிவளை Zoo வில் திரளும் மக்கள் - 52 மில்லியன் ரூபாய் வருமானம் Reviewed by Madawala News on April 17, 2024 Rating: 5

1,900 ரூபாவுக்கு கொத்துரொட்டி விற்பனை செய்து கைதானவர் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் விடுதலை.



கொழும்பு புதுக்கடை பிரதேசத்தில் உள்ள வீதி உணவுப் பகுதியில் உணவு வாங்க வந்த வெளிநாட்டவரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் செவ்வாய்க்கிழமை (16) கைது செய்யப்பட்ட உணவக உரிமையாளரைப் பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் புதன்கிழமை (17) உத்தரவிட்டது.

இதன்படி சந்தேக நபர் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பிணையிலும் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

முந்திய செய்தி

கொழும்பு, புதுக்கடை பிரதேசத்தின் வீதி உணவுப் பகுதியில் உணவு வாங்க வந்த வெளிநாட்டவரை தகாத வார்த்தைகளால் திட்டிய சம்பவம் தொடர்பில் கடை உரிமையாளர் ஒருவர் வாழைத்தோட்ட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டவர் ஒரு கொத்து ரொட்டியின் விலையைக் கேட்டபோது, ​​ கடைக்காரர் 1900 ரூபாய் என்று கூறினார். வெளிநாட்டவர் அதை வாங்க மறுத்துவிட்டார்.

இச்சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று சமூகவலைத்தளங்களில் வலுவாகப் பரவி வருகிறது. காணொளியின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்த 51 வயதுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது
1,900 ரூபாவுக்கு கொத்துரொட்டி விற்பனை செய்து கைதானவர் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் விடுதலை. 1,900 ரூபாவுக்கு கொத்துரொட்டி விற்பனை செய்து கைதானவர் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் விடுதலை. Reviewed by Madawala News on April 17, 2024 Rating: 5

'சூரிய மாங்கல்ய’ புத்தாண்டுப் பாடலை திரித்து சமூக வலைகளில் பகிர்ந்த கலால் திணைக்கள அதிகாரி கைது.



'சூரிய மாங்கல்ய’ புத்தாண்டுப் பாடலை சமூக வலைதளங்களில் திரித்து பகிர்ந்த குற்றச்சாட்டின் பேரில் வாரியபொலவில் கலால் திணைக்கள அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மூத்த கலைஞர் ரோஹன பெத்தகே ரன்வல படையினருடன் இணைந்து பாடிய இந்த பாரம்பரிய புத்தாண்டு பாடலை சிதைத்தமை தொடர்பில் பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து குற்றப் புலனாய்வுப் பிரிவின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

தலத்துஓயாவைச் சேர்ந்த 31 வயதுடைய கலால் அதிகாரி ஒருவரைக் கைது செய்யும் நோக்கில் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் வடமேற்கு மாகாணப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.

சந்தேக நபர் வாரியபொல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதுடன், இன்று குளியாப்பிட்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்


'சூரிய மாங்கல்ய’ புத்தாண்டுப் பாடலை திரித்து சமூக வலைகளில் பகிர்ந்த கலால் திணைக்கள அதிகாரி கைது. 'சூரிய மாங்கல்ய’ புத்தாண்டுப் பாடலை திரித்து சமூக வலைகளில் பகிர்ந்த கலால் திணைக்கள அதிகாரி கைது. Reviewed by Madawala News on April 17, 2024 Rating: 5

எலான் மஸ்க் இன் Tesla நிறுவனம் உருவாக்கி உள்ள மேம்படுத்தப்பட்ட மனித உருவ Optimus ரோபோ



உங்களில் எத்தனை பேருக்கு இதனைப் பற்றித் தெரியும்?

உங்களில் எத்தனை பேர் இதனைப் பற்றி சமூக வலைத்தளங்களில் கண்டு வாசித்து இருப்பீர்கள்?

எத்தனை பேர் இதனைப் பற்றி விமர்சித்து இருப்பீர்கள்?

எத்தனை பேர் ஏசிப், பேசி இருப்பீர்கள்?

எத்தனை பேர் ஏளனமாக சிரித்து, நையாண்டி பண்ணி காலத்தை, நேரத்தை வீண் அடித்திருப்பீர்கள்?

எத்தனை பேர் இது ஆதாரபூர்வமானதா அல்லது எவ்வித ஆதாரமும் அற்றதா என தேடி இருப்பீர்கள்?

ஆம் , 'Tesla' நிறுவனம் வடிவமைத்துள்ள இந்த 'Optimus robot' ஒரு மனித உருவ ரோபோ(Humanoid) ஆகும்,

அதாவது மனிதனைப் போன்று இரண்டு கால்களால் நடக்கவும், இரண்டு கைகளால் அன்றாட செயற்பாடுகளில் ஈடுபடவும் முடியுமான ஒரு ரோபோ ஆகும். டெஸ்லா நிறுவனம் ஆப்டிமஸை தமது நிறுவனத்தின் கார்களுடன் ஒப்பிட்டுள்ளது. சக்கரங்களில் ரோபோக்களை உருவாக்குவதிலிருந்து மாறி கால்கள் கொண்ட ரோபோக்களை உருவாக்குவதற்கு நிறுவனம் மாறிவிட்டதாகக் கூறியுள்ளது.

Optimus Gen-2 ஏனைய ரோபோக்கள் போன்று வெறுமனே நடக்கவும், பேசவும் முடியுமான சாதாரண ரோபோ என்ற நிலையைத் தாண்டி மேம்படுத்தப்பட்ட நடை வேகம், கை அசைவுகள், கால் அசைவுகள், விரல்களின் தொட்டுணரக்கூடிய உணர்திறன் உடைய பல வகையான மிகவும் நுட்பமான பணிகளைச் செய்ய முடியுமான ஒரு பயனுள்ள ரோபோவாக இருக்கும் என Elon Musk கூறியுள்ளார்.

கடந்த கால ரோபோக்கள் ஒரு குறிப்பிட்ட வேலையை மாத்திரமே செய்யக்கூடியதாக இருந்தது. ஆனால் Optimus, மனிதர்கள் ஏற்கனவே செய்யக்கூடிய வேலைகளை கற்றுக்கொண்டு, பிற இயந்திரங்களைப் பயன்படுத்துவதற்கும், மேசையில் உட்காருவதற்கும், பலருக்கும் பயிற்சியளிக்கப்படுவதற்கும் இன்னும் பல வேலைகளை மிகவும் நுணுக்கமாக செய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

2025 இல் வெளிவர இருக்கும் 'Tesla Bot Optimus Gen 3' இன்னும் எவ்வளவோ மேம்பட்டதாகவும் ஒரு காரை விடவும் விலை குறைந்ததாகவும் இருக்கும் என மஸ்க் அறிவித்துள்ளார். இவ்வளவு காலமும் மனிதர்களுடன் போட்டி போட்டுக்கொண்டும், வேலை செய்து கொண்டும் வந்த எமக்கு புதிய Challenge காத்திருக்கிறது! ரோபோக்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கப் போகுது! எங்களுக்கு ?

Tesla, SpaceX, X , The Boring Company, Neuralink, xAI ஆகிய நிறுவனங்களின் சொந்தக்காரனாக இருக்கும் Elon Musk
உலகின் நம்பர் 1 பணக்காரர் லிஸ்ட் இல் இருந்து கொண்டு தமது பணத்தை, அறிவை, நேரத்தை , காலத்தை அதி நவீன தொழிநுட்ப கண்டுபிடிப்புக்களில் முதலீடு செய்து வருகிறார். முழு உலகமும் சேர்ந்து செய்ய முடியாத வேலைகளை தனியாக இருந்து செய்து வருகிறார்.

ஒரு தனி மனிதனால் எவ்வளவு சாதிக்க முடியும்?

ஹரீஸ் ஸாலிஹ்
17.04.2024

எலான் மஸ்க் இன் Tesla நிறுவனம் உருவாக்கி உள்ள மேம்படுத்தப்பட்ட மனித உருவ Optimus ரோபோ எலான் மஸ்க் இன் Tesla நிறுவனம் உருவாக்கி உள்ள மேம்படுத்தப்பட்ட மனித உருவ Optimus ரோபோ Reviewed by Madawala News on April 17, 2024 Rating: 5

டேஸ்ட் கடைகளில் புற்றுநோயை உண்டாக்கும் தன்மை கொண்ட சுவையூட்டிகள் கூட கண்டுபிடிப்பு #சாய்ந்தமருது



சாய்ந்தமருது மாலை நேர கடைகளில் சோதனை : டேஸ்ட் கடைகளில் புற்றுநோயை உண்டாக்கும் தன்மை கொண்ட சுவையூட்டிகள் கூட கண்டுபிடிப்பு !

நூருல் ஹுதா உமர்

சாய்ந்தமருது பிரதேச உணவகங்கள் மீது கடந்த சில தினங்களாக திடீர் சோதனை நடவடிக்கையை சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஜே.கே.எம். அர்ஷாத் காரியப்பரின் தலைமையிலான சுகாதார குழுவினர் முன்னெடுத்து வருகின்றனர்.


சுகாதாரமற்ற உணவுகள் பொதுமக்களுக்கு விற்கப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவல்களை அடுத்து உணவுப் பாதுகாப்பு மற்றும் சுத்தமான உணவை பொதுமக்களுக்கு உறுதிப்படுத்தல் என்ற நோக்கில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஸஹீலா இஸ்ஸதீன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் சாய்ந்தமருது பிரதேச இரவு நேர உணவகங்கள், டேஸ்ட் கடைகள், கோழி பதப்படுத்தி விற்கும் இடங்கள் போன்றவற்றில் செவ்வாய்க்கிழமை (16) இரவு திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

கடந்த காலங்களில் சாய்ந்தமருது பிரதேச உணவகங்கள், சந்தை, சில்லறை கடைகள், மொத்த விற்பனை நிலையங்கள், சிறிய சூப்பர் மார்க்கட்கள் போன்றவற்றை பார்வையிட்ட அவர் உரிமையாளர்களுக்கும், உணவு தயாரிப்பவர்களுக்கும் சுகாதார நடைமுறைகளை பேணி உணவுகளை தயாரிக்குமாறும் உணவங்கள் சுத்தமில்லாது இருத்தல், உணவு கையாளுகையில் முறையான ஒழுங்கீன்மை, நீண்ட நாட்களுக்கு பொருத்தமில்லாதவாறு உணவுகளை தேக்கி வைத்தல், சமையல் பாத்திரங்கள் மற்றும் சமையல் பொருட்களின் தரம் போன்றவற்றை சுகாதார முறைப்படி பேணுமாறும் ஆலோசனை வழங்கியதுடன் அறிவித்தல்களை பேணி நடக்காத உணவகங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்திருந்தார்.

அதனை ஒட்டியதாக சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர் ஏ.எல்.எம். ஜெரின் உட்பட காரியாலய உத்தியோகத்தர்கள் சகிதம் சாய்ந்தமருது பிரதேச உணவு தயாரிக்கும், விற்பனை செய்யும் நிலையங்கள் மீது திடீர் பரிசோதனையும், முற்றுகையும் இடம்பெற்று மாலை நேர உணவகங்களில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவுகள், கழிவு எண்ணெய்கள் மற்றும் புற்றுநோயை உண்டாக்கும் தன்மை கொண்ட சுவையூட்டிகள், கலப்படம் செய்யப்பட்ட சுவையூட்டிகள் போன்ற பொருட்கள் கைப்பற்றப்பட்டது.

மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற, முறையான களஞ்சிய வசதி இல்லாத மற்றும் பழுதடைந்த உணவுகளை வைத்திருந்தோர் மீது எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற மற்றும் பழுதடைந்த உணவுகள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது. அதே போன்று சில உணவகங்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்க தேவையான மேலதிக ஒழுங்குகளை சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் மேற்கொண்டுள்ளது.


டேஸ்ட் கடைகளில் புற்றுநோயை உண்டாக்கும் தன்மை கொண்ட சுவையூட்டிகள் கூட கண்டுபிடிப்பு #சாய்ந்தமருது டேஸ்ட் கடைகளில் புற்றுநோயை உண்டாக்கும் தன்மை கொண்ட சுவையூட்டிகள் கூட கண்டுபிடிப்பு #சாய்ந்தமருது Reviewed by Madawala News on April 17, 2024 Rating: 5

கணிசமான முதலீடுகள் நாட்டிற்குள் மிக அசுர வேகத்துடன் வந்து கொண்டிருக்கின்றன ; இராஜாங்க அமைச்சர் திலும்



இந்த ஆண்டு 4 முதல் 4.5 பில்லியன் டொலர் வரையிலான முதலீட்டை நாட்டுக்கு கொண்டு வருவதற்கான அனைத்து திட்டங்களும் தயார் செய்யப்பட்டுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு 1.5 பில்லியன் டொலர் முதலீட்டுக்கான இலக்கு எதிர்பார்க்கப்பட்ட போதிலும், நாடு 1.8 பில்லியன் டொலர் முதலீடுகளைப் பெற முடிந்தது என்றும் அவர் கூறினார்.

கண்டியில் செவ்வாய்க்கிழமை (16) ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் தெரிவித்ததாவது :

சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் பின்னர், முதலீடுகள் கணிசமான அளவில் நாட்டிற்குள் மிக அசுர வேகத்துடன் வருவதாகவும் அவர் கூறினார்.

கடந்த போராட்டத்தால் ஏற்பட்ட எதிர்மறை விளைவுகளால், கடந்த ஆண்டு முதல் பகுதியில் எதிர்பார்த்த அளவுக்கு முதலீடுகள் வரவில்லை எனவும் ஆனால், பிற்பகுதியில், எதிர்பார்த்த அளவை விட முதலீடுகள் நாட்டிற்குள் வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் இந்த ஆண்டு 4.5 பில்லியன் டொலர் முதலீட்டு இலக்கை நெருங்க வாய்ப்பு உள்ளது என்றும் அமைச்சர் அமுனுகம மேலும் தெரிவித்தார்.
கணிசமான முதலீடுகள் நாட்டிற்குள் மிக அசுர வேகத்துடன் வந்து கொண்டிருக்கின்றன ; இராஜாங்க அமைச்சர் திலும் கணிசமான முதலீடுகள் நாட்டிற்குள் மிக அசுர வேகத்துடன் வந்து கொண்டிருக்கின்றன ; இராஜாங்க அமைச்சர் திலும் Reviewed by Madawala News on April 17, 2024 Rating: 5

பாலித்த தெவரப்பெருமவின் மரணத்திற்கான காரணம் வௌியானது!



முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும இன்று (16) பிற்பகல் காலமானதாக அன்னாரின் குடும்ப உறவினர்கள் தெரிவித்தனர்.

அவர் தனது தனியார் தோட்டத்தில் வேலை ஒன்றில் ஈடுபட்டிருந்த போது மின்சாரம் தாக்கியதில் இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இறக்கும் போது அவருக்கு வயது 64.

அவரது சடலம் களுத்துறை போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

பாலித தெவரப்பெருமவின் மூத்த சகோதரரின் மகன் அருண் தெவரப்பெரும சம்பவம் தொடர்பில் பின்வருமாறு விளக்கமளித்தார்.

"அவரின் தனியார் தோட்டத்தில் உரமிடும் வேலை செய்து கொண்டிருந்தார். அந்த தோட்டத்தில் மின்விளக்குகளுக்காக பல இடங்களில் மின்சாரம் எடுக்கப்பட்டுள்ளது. தெரியாமல் தரையில் கிடந்த மின் வடத்தை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்தார். அங்கிருந்த தொழிலாளர்கள் உடனே அவரை வைத்தியசாலைக்கு அழைத்து சென்றனர். அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல சுமார் 40 நிமிடங்கள் ஆனது. எவ்வாறாயினும் அவரை காப்பாற்ற வைத்தியர்கள் கடுமையாக முயற்சித்த போதும், அவரை காப்பாற்ற முடியவில்லை. என்றார்.
பாலித்த தெவரப்பெருமவின் மரணத்திற்கான காரணம் வௌியானது! பாலித்த தெவரப்பெருமவின் மரணத்திற்கான காரணம் வௌியானது! Reviewed by Madawala News on April 16, 2024 Rating: 5

இலங்கையர்கள் பலருக்கும் பிடித்த அரசியல்வாதி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும காலமானார்.



ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும தனது 64வது வயதில் காலமானார்.

மின்சாரம் தாக்கியதில் அவர் உயிரிழந்து உள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன


இலங்கையர்கள் பலருக்கும் பிடித்த அரசியல்வாதி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும காலமானார். இலங்கையர்கள் பலருக்கும் பிடித்த அரசியல்வாதி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும காலமானார். Reviewed by Madawala News on April 16, 2024 Rating: 5
Powered by Blogger.