வேலை வாய்ப்பு விளம்பரங்களை செய்து பெண்களை வீட்டிற்கு அழைத்து வந்து பலவிதமான பாலியல் செயல்களில் ஈடுபடுத்திய தம்பதியினர் கைது.4 வருடங்களாக வேலை வாய்ப்பு விளம்பரங்களை செய்து பெண்களை வீட்டிற்கு அழைத்து வந்து பலவிதமான பாலியல் செயல்களில் ஈடுபடுத்திய தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு வந்த பெண்ணொருவரை இந்த தம்பதியினர் அடைத்து வைத்து பாலியல் நடவடிக்கையில் ஈடுபடுத்தி வீடியோ எடுத்து பணத்திற்கு விற்றுள்ளதாக கூறப்படுகிறது.

நுகேகொடை சிறுவர் மற்றும் பெண்கள் குற்றத்தடுப்புப் பிரிவினரால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சில தினங்களுக்கு முன்னர், நுகேகொடையில் உள்ள இந்த வீட்டிற்கு வந்த பதுளை மற்றும் வெலேகெதர பிரதேசங்களை சேர்ந்த இரண்டு பெண்கள் அளித்த முறைப்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வேலை வாய்ப்பு விளம்பரங்களை செய்து பெண்களை வீட்டிற்கு அழைத்து வந்து பலவிதமான பாலியல் செயல்களில் ஈடுபடுத்திய தம்பதியினர் கைது. வேலை வாய்ப்பு விளம்பரங்களை செய்து பெண்களை வீட்டிற்கு அழைத்து வந்து பலவிதமான பாலியல் செயல்களில் ஈடுபடுத்திய தம்பதியினர் கைது. Reviewed by Madawala News on June 09, 2024 Rating: 5

சஜித் பிரேமதாசவின் பங்களிப்புடன் கெக்கிராவ முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள்(எம்.எம்.றம்ஸீன்)

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 199 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் அனுராதபுரம், கெக்கிராவ முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.

எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச அவர்களின் பங்களிப்புடன் இடம்பெற்ற மேற்படி நிகழ்வின் போது பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினருக்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது.சஜித் பிரேமதாசவின் பங்களிப்புடன் கெக்கிராவ முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் சஜித் பிரேமதாசவின் பங்களிப்புடன் கெக்கிராவ முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் Reviewed by Madawala News on June 09, 2024 Rating: 5

துடுப்பாட்ட வீரர்கள் தமது கடமையை சரியாக செய்யவில்லை - மிடில் ஓவர்களில் துடுப்பாட்டம் மிக மோசமாக இருந்தது ; அணித்தலைவர் ஹசரங்க கவலையுடன் தெரிவிப்புஅமெரிக்கா கிராண்ட் பிரேரி ஸ்டேடியத்தில் நடந்த டி20 உலகக் கோப்பை குரூப் D மோதலில் பங்களாதேஷ் அணியிடம் இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி தோல்வியடைந்தது தொடர்பில் அணித் தலைவர் ஹசரங்க கருத்து தெரிவித்துள்ளார்.


பத்தும் நிஸ்ஸங்க 47 ரன்களை எடுத்திருந்த போதிலும், மெதுவான ஆடுகளத்தில் இலங்கை 124 ரன்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

நுவான் துஷார 4-28 என்ற கணக்கில் எடுத்தாலும், பங்களாதேஷ் அணியின்
வெற்றியைத் தடுக்க இலங்கையால் முடியவில்லை,

இலங்கை அணியின் சூப்பர் 8 நம்பிக்கை ஆபத்தில் உள்ளது.

“முதல் 8-10 ஓவர்களில் எங்கள் துடிப்பாட்டு வீரர்கள் நன்றாக பேட் துடுப்பாட்டம் . அதன் பிறகு மிடில் ஓவர்களில் நாங்கள் மோசமாக பேட் செய்தோம் என்று நினைக்கிறேன்.

எங்கள் பந்துவீச்சு தாக்குதல் எங்கள் பலம் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

குறிப்பாக பேட்ஸ்மேன்கள் 150-160 ரன்கள் எடுத்தால், எங்கள் பந்துவீச்சு தாக்குதல் ஆட்டங்களில் வெற்றி பெறலாம்.


கடைசி இரண்டு ஆட்டங்களில் பேட்டர்கள் அந்த வேலையைச் செய்யவில்லை.

“முதல் இரண்டு ஆட்டங்களில் நாங்கள் தோற்றது கடினமானது. நான்கு முக்கிய பந்துவீச்சாளர்களுடன் பந்து வீசினோம். எங்கள் நான்கு உண்மையான பந்துவீச்சாளர்கள் தங்கள் வேலையைச் செய்தார்கள் என்று நான் நினைக்கிறேன், ஆனால் துரதிர்ஷ்டவசமாக நாங்கள் எங்கள் ஆல்ரவுண்டர்களுடன் நான்கு ஓவர்களைச் செய்ய வேண்டியிருந்தது, ”என்று போட்டி முடிந்ததும் ஹசரங்க கூறினார்.


“நாங்கள் வட கரோலினாவிலும் மோரிஸ்வில்லே என்ற இடத்திலும் இருந்தோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, மழை பெய்ததாலும், அங்குள்ள பிச்கள் தரமானதாக இல்லாததாலும், முழு காலகட்டத்திலும் எங்களால் பயிற்சி செய்ய முடியவில்லை, அதாவது எங்களுக்கு சற்று கடினமாக இருந்தது.


“இந்த தோல்விக்கு அதுதான் காரணம் என்று நான் சொல்லமாட்டேன், ஆனால் கண்டிப்பாக நீங்கள் அமெரிக்காவில் பிச்சுகளை பார்க்கும்போது, ​​குறைந்த ஸ்கோர்கள் இருப்பதை நீங்கள் காணலாம் என்று நினைக்கிறேன். எனவே, பேட்ஸ்மேன்கள் கண்டிப்பாக நிலைமைகளுக்கு ஏற்றவாறு சரியான ஸ்கோரைப் பெற வேண்டும், இதனால் பந்துவீச்சாளர்கள் ஆட்டத்தை தக்கவைத்து வெற்றிபெற முயற்சிக்க முடியும், ”என்று அவர் கூறினார்.

பயிற்சிக்காக டல்லாஸ் அல்லது புளோரிடா போன்ற வேறொரு நகரத்திற்கு மாற முயற்சித்ததாகவும், ஆனால் அவர்களின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட விஷயங்களால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்றும் ஹாலங்கோடு கூறினார். "நாங்கள் உண்மையில் அதைச் செய்ய முயற்சித்தோம், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த அடிப்படைகள் அனைத்தும் கிடைக்கவில்லை.

"நாங்கள் அமெரிக்க கிரிக்கெட் சங்கத்தை தொடர்பு கொண்டோம், ஏனெனில் அவர்கள்தான் வட கரோலினாவில் ஒரு இடத்தைக் காட்ட உதவினார்கள், ஏனென்றால் மற்ற எல்லா இடங்களும் முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. நாங்களும் அமெரிக்க அணியுடன் தொடரில் விளையாட முயற்சித்தோம். துரதிர்ஷ்டவசமாக, பங்களாதேஷ் அவர்களுக்கு எதிராக விளையாடுவதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளது, அதன் காரணமாக நாங்கள் வட கரோலினாவுக்குச் செல்ல வேண்டியிருந்தது.

போட்டிக்கு வரும்போது, ​​இலங்கை இன்னும் 20 ரன்கள் எடுத்திருந்தால், நிலைமை வேறுவிதமாக இருந்திருக்கும் என்று துஷாரா உணர்ந்தார். “ஆடுகளம் கடினமான ஒன்றாக இருந்தது, அது பேட்டர்களுக்கு கடினமாக இருந்தது. நாங்கள் வெறும் 20 ரன்கள் மட்டுமே எடுத்தோம். அந்த 20 கூடுதல் ரன்களை நாங்கள் எடுத்திருந்தால், இந்தப் போட்டியில் வெற்றி பெற்றிருக்கலாம்.

“ஆனால் இந்த போட்டியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று நாங்கள் 120 ரன்களுக்கு எங்களால் முடிந்த அனைத்தையும் செய்தோம். இந்தப் போட்டியில் ஜெயித்துவிடலாம் என்று நினைத்து கடைசி பந்து வரை விளையாடினோம்.
துடுப்பாட்ட வீரர்கள் தமது கடமையை சரியாக செய்யவில்லை - மிடில் ஓவர்களில் துடுப்பாட்டம் மிக மோசமாக இருந்தது ; அணித்தலைவர் ஹசரங்க கவலையுடன் தெரிவிப்பு துடுப்பாட்ட வீரர்கள் தமது கடமையை சரியாக செய்யவில்லை - மிடில் ஓவர்களில் துடுப்பாட்டம் மிக மோசமாக இருந்தது ; அணித்தலைவர் ஹசரங்க கவலையுடன் தெரிவிப்பு Reviewed by Madawala News on June 08, 2024 Rating: 5

சூப்பர் 8 சுற்றுக்கு இலங்கை அணிக்கு செல்ல முடியுமா? அது தென்னாபிரிக்கா / பங்களாதேஷ் கையில்
T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இன்றைய (08) இரண்டாவது போட்டியில் மோசமான துடுப்பாட்டத்தால் இலங்கை அணி தோல்வியடைந்தது.

T20 உலகக் கிண்ணத் தொடரில் பங்களாதேஷுக்கு எதிராக இலங்கை அணி தோல்வியடைந்தது இதுவே முதன்முறையாகும்.

இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு அழைப்பு விடுத்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 124 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் பெத்தும் நிஸ்ஸங்க அதிகப்பட்சமாக 47 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

முஸ்தபிசுர் ரஹ்மான் மற்றும் ரிஷாத் ஹுசைன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

அதேபோல், டஷ்கின் அஹமட் 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

அதன்படி, 125 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 19 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

பங்களாதேஷ் அணி சார்பில் டவ்ஹித் ஹ்ரிடோய் அதிகபட்சமாக 40 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் நுவான் துஷார நான்கு விக்கெட்டுக்களையும் வனிந்து ஹசரங்க 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இன்றைய போட்டியில் இலங்கை அணி தோல்வியை தழுவிய நிலையில் சூப்பர் 8 சுற்றுக்கு நுழைவதற்காக வாய்ப்பு மேலும் குறைந்துள்ளது.

இலங்கை சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால், இலங்கை எஞ்சியிருக்கும் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும் மற்றும் தென்னாபிரிக்கா அல்லது பங்களாதேஷ் அணிகள் எஞ்சியிருக்கும் இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைய வேண்டும்.
சூப்பர் 8 சுற்றுக்கு இலங்கை அணிக்கு செல்ல முடியுமா? அது தென்னாபிரிக்கா / பங்களாதேஷ் கையில் சூப்பர் 8 சுற்றுக்கு இலங்கை அணிக்கு செல்ல முடியுமா? அது தென்னாபிரிக்கா / பங்களாதேஷ் கையில் Reviewed by Madawala News on June 08, 2024 Rating: 5

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராக போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ரணில், பொதுஜன பெரமுனவுக்கு அறிவித்தார்.எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராக போட்டியிடுவதற்கு தான் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ,ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு அறிவித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நடந்த சந்திப்பில் இந்த தகவலை உறுதிபட அறிவித்துள்ளார் ரணில்.எவ்வாறாயினும் ரணிலை ஆதரிப்பதா இல்லையேல் தனி வேட்பாளரை நிறுத்துவதா என்பதுபற்றி பொதுஜன பெரமுன எதிர்வரும் வாரம் இறுதியான தீர்மானத்தை எடுக்கவுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராக போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ரணில், பொதுஜன பெரமுனவுக்கு அறிவித்தார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராக போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ரணில், பொதுஜன பெரமுனவுக்கு அறிவித்தார். Reviewed by Madawala News on June 08, 2024 Rating: 5

ஜனாஸா அறிவித்தல் - குருகம tea factry உரிமையாளர் கண்டி, யஹலதன்ன அல்ஹாஜ் A.R.L.M ராசிக் அவர்கள் காலமானார்கள்குருகம ஸ்டேட் ( Gurugama tea factry ) ( உரிமையாளர் ) கண்டி யஹலதன்ன ஜும்மா பள்ளி தலைவர் மஹல்லாவைச் சேர்ந்த அல்ஹாஜ் A.R.L.M ராசிக் அவர்கள் காலமாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னார் மர்ஹும் *அல்ஹாஜ் அப்துர்* *ரஹ்மான் லெப்பை* அவர்களின் அன்பு மகனும் ஆவார். *அல்ஹாஜ் இஷான் அவர்களின் அன்புத் தந்தைம் மற்றும் மர்ஹும் அல்ஹாஜ் A.R.L.M* *அமீன், அல்ஹாஜ்* *A.R.L.M சருக் , அல்ஹாஜ்* *A.R.L.M* *சுபைர்,*
*அல்ஹாஜ்* *A.R.L.M*
*மவ்ஜுத்* ஆகியோரின் அன்பு சகோதரரும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் பின்னர் அறிவிக்கப்படும்.

குறிப்பு:
அன்னாரின் ஜனாஸா யஹலதன்னை அன்னாரின் வீட்டில் வைக்கப்படும்.

தகவல்: Dehianga flash news N.M.MUNEER
ஜனாஸா அறிவித்தல் - குருகம tea factry உரிமையாளர் கண்டி, யஹலதன்ன அல்ஹாஜ் A.R.L.M ராசிக் அவர்கள் காலமானார்கள் ஜனாஸா அறிவித்தல் - குருகம tea factry  உரிமையாளர்  கண்டி,  யஹலதன்ன அல்ஹாஜ் A.R.L.M ராசிக் அவர்கள் காலமானார்கள் Reviewed by Madawala News on June 08, 2024 Rating: 5

உலகக்கிண்ண சுற்றுத் தொடரில் இரண்டாம் போட்டியிலும் தோற்றது இலங்கை அணிT 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணியுடனான இன்றைய போட்டியில் இலங்கை அணி தோல்வியை தழுவியது.


முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 124 ஓட்டங்களை பெற்றது.பத்தும் நிசங்க 47, தனஞ்சய டி சில்வா 21 ஓட்டங்கள்


125 வெற்றி ஓட்டங்களை பெற பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 2 விக்கட்டுகளால்
 வெற்றியீட்டியது.
உலகக்கிண்ண சுற்றுத் தொடரில் இரண்டாம் போட்டியிலும் தோற்றது இலங்கை அணி உலகக்கிண்ண சுற்றுத் தொடரில் இரண்டாம் போட்டியிலும் தோற்றது இலங்கை அணி Reviewed by Madawala News on June 08, 2024 Rating: 5

வரலாற்றில் முதல் தடவையாக இலங்கை முஸ்லிம் முப்படைஅதிகாரிகளுக்கு இலவச ஹஜ் வாய்ப்புகளை வழங்கியது சவூதி.சவூதி அரசாங்கம் வரலாற்றில் முதல் தடவையாக இலங்கை முஸ்லிம் முப்படை வீரர்களுக்கு இலவச ஹஜ் வாய்ப்புகளை வழங்கியுள்ளது


வரலாற்றில் முதல் தடவையாக, இந்த ஆண்டு (2024) ஹஜ் கடமைகளை மேற்கொள்ள இலங்கை முப்படையைச் சேர்ந்த முஸ்லிம் உறுப்பினர்களுக்கு சவூதி அரசாங்கம் வாய்ப்பு வழங்கியுள்ளது.


பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன், சவூதி அரேபியாவின் தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானிக்கு விடுத்த வேண்டுகோளுக்கமைய இந்த அறிய சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.


இராஜாங்க அமைச்சரின் வேண்டுகோளுக்கு இணங்க, சவூதி அரேபிய தூதுவர் சவூதி அரசாங்கத்திடம் இருந்து அனுசரணை மற்றும் சிறப்பு கோட்டாக்களை பெறுவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்ததை தொடர்ந்து முதன்முறையாக முஸ்லிம் முப்படை வீரர்கள் ஐவருக்கு சிறப்பு கோட்டாக்கள் இந்த ஆண்டு வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தென்னகோன் இன்று (ஜூன் 07) சவூதி அரேபிய தூதுவர் அல்கஹ்தானியை கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்துடன், முப்படை முஸ்லிம் உறுப்பினர்களுக்கு இந்த வாய்ப்பை வழங்கியதற்காக சவூதி தூதுவருக்கும் விசேடமாக சவூதி அரசாங்கத்திற்கும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் நன்றி தெரிவித்தார்.


இராஜாங்க அமைச்சர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தமைக்கு நன்றி தெரிவித்த சவூதி அரேபிய தூதுவர், எதிர்வரும் ஆண்டுகளில் பாதுகாப்புப் துறை பணியாளர்களுக்கான ஒதுக்கீட்டை மேலும் அதிகரிப்பதில் தனது தனிப்பட்ட கவனத்தை செலுத்துவதாக தெரிவித்தார்.


இதற்கு மேலதிகமாக, எதிர்காலத்தில் இலங்கை முஸ்லிம் பாதுகாப்புப் படையினருக்கும் ‘உம்ரா’ புனிதப் பயணத்தை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்தப்படும் என்றும் சவூதி தூதுவர் மேலும் தெரிவித்தார்.


இதேவேளை, இலங்கையிலுள்ள அனைத்து சமூகங்களுக்கும் உதவுவதற்கு சவூதி அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும், இது தொடர்பில் இந்நாட்டு அதிகாரிகளுடன் நெருக்கமாகச் செயற்பட எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.


இலங்கை ஹஜ் குழு உறுப்பினரும் அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமாகிய  மில்பர் கபூர் மற்றும் ஹஜ் யாத்திரை மேட்கொள்ள தெரிவுசெய்யப்பட்டுள்ள பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் இராஜாங்க அமைச்சருடன் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.


வரலாற்றில் முதல் தடவையாக இலங்கை முஸ்லிம் முப்படைஅதிகாரிகளுக்கு இலவச ஹஜ் வாய்ப்புகளை வழங்கியது சவூதி. வரலாற்றில் முதல் தடவையாக இலங்கை முஸ்லிம் முப்படைஅதிகாரிகளுக்கு இலவச ஹஜ் வாய்ப்புகளை வழங்கியது சவூதி. Reviewed by Madawala News on June 07, 2024 Rating: 5

இது வரையிலும் எவராலும் வழங்கப்படாத டிப்லோமா பாடநெறிகளுக்கான 90% புலமைப்பரிசில் வாய்ப்பை WELINGTON COLLEGE வழங்குகிறது.அரியதோர் வாய்ப்பு! தவற விடாதீர்கள்!

இது வரையிலும் எவராலும் வழங்கப்படாத டிப்லோமா பாடநெறிகளுக்கான 90% புலமைப்பரிசிலினை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பினை WELINGTON COLLEGE வழங்குகிறது.


08 வருட கால சேவையினை கொண்டாடுமுகமாக WELINGTON COLLEGE இந்த அரிய வாய்ப்பினை நாடெங்கிலுமுள்ள மாணவர்களுக்கு வழங்குகிறது.

90% புலமைப்பரிசில் டிப்லோமா பாட நெறிகளாவன
- Diploma in Counseling & Psychology
- Diploma in Childcare & Psychology
- Diploma In English (இலவசம்)
- அரச அங்கீகாரம் பெற்ற சான்றிதழ்கள்
- UK சான்றிதழ்கள் (Level 04)
- 06 மாத கால டிப்லொமா
- ஒன்லைன் வகுப்புகள் (Online Live Classes)
- தகுதி பெற்ற பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்
- UK பழ்கலைக்கழகங்களில் அனுமதியினை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு
- எளிதான தவனை முறைக் கட்டண வசதி
- 90% புலமைப்பரிசில் வரையறுக்கப்பட்ட மாணவர்களுக்கு மாத்திரமே வழங்கப்படும்.

மேலதிக விபரங்களுக்கும் உடனடிப் பதிவுகளுக்கும் கீழே உள்ள Link இன் மூலமாக எமது உத்தியோகபூர்வ WhatsApp Group இல் இணையுங்கள்.

Call 📞: 076 566 7895
இது வரையிலும் எவராலும் வழங்கப்படாத டிப்லோமா பாடநெறிகளுக்கான 90% புலமைப்பரிசில் வாய்ப்பை WELINGTON COLLEGE வழங்குகிறது. இது வரையிலும் எவராலும் வழங்கப்படாத டிப்லோமா பாடநெறிகளுக்கான 90% புலமைப்பரிசில் வாய்ப்பை WELINGTON COLLEGE வழங்குகிறது. Reviewed by Madawala News on June 07, 2024 Rating: 5

அமெரிக்காவுக்கு எதிரான நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரவுப் பந்தை வேண்டுமென்றே சேதப்படுத்தியதாக புகார் அளிக்கப்பட்டது.அமெரிக்க அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரவுப் பந்தை வேண்டுமென்றே சேதப்படுத்தியதாக முன்னாள் அமெரிக்க வேகப் பந்துவீச்சாளர் ரஷ்டி தெரான் புகார் அளித்திருக்கிறார்.

2024 டி20 உலகக் கோப்பை தொடரில் குரூப் "ஏ" பிரிவில் பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டியில் இரு அணிகளும் 20 ஓவர்கள் முடிவில் சரிசமமாக 159 ரன்கள் எடுத்தன. இதை அடுத்து சூப்பர் ஓவர் நடந்தது. அதில் அமெரிக்க அணி ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இந்த நிலையில் போட்டிக்கு பின் முன்னாள் அமெரிக்க வீரரும், தென்னாப்பிரிக்க அணிக்காக சர்வதேச போட்டிகளில் பங்கேற்ற அனுபவம் கொண்டவருமான ரஷ்டி தெரான் சமூக ஊடகத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் போட்டியின் போது பாகிஸ்தான் பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரவுஃப் தன் நகத்தைக் கொண்டு பந்தை சேதப்படுத்தியதாகவும், அதன் மூலம் அவர் பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்ததாகவும் குற்றச்சாட்டை முன் வைத்தார்.

இந்தப் போட்டியில் அமெரிக்க அணி துடுப்பெடுத்தாடிய போது பாகிஸ்தான் அணி 12 வது ஓவருக்கு பின் பந்தை மாற்றியே ஆக வேண்டும் என நடுவர்களிடம் வாக்குவாதம் செய்தது. பின்னர் அம்பயர்கள் இரண்டாவது பந்தை எடுக்க ஒப்புக்கொண்டனர். 12வது ஓவரின் முடிவில் பந்து மாற்றப்பட்டது. அதன் பின் 14 வது ஓவரை ஹாரிஸ் ரவுஃப் வீசினார்.

அந்த ஓவரில் தான் பாகிஸ்தான் அணி முக்கிய விக்கெட்டான ஆன்ட்ரியாஸ் கவ்ஸின் விக்கெட்டை வீழ்த்தியது. அந்த ஓவரில் ஹாரிஸ் ரவுஃப் பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்தார். பொதுவாக பழைய பந்தில் தான் ரிவர்ஸ் ஸ்விங் செய்ய முடியும். அப்படி என்றால் புதிய பந்தை மாற்றி பின் எவ்வாறு ஹாரிஸ் ரவுஃப் ரிவர்ஸ் ஸ்விங் செய்தார்? என்ற கேள்வி எழுகிறது என ரஷ்டி தெரான் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தான் ஹாரிஸ் பந்தை சேதப்படுத்தியதாக ரஷ்டி தெரான் குற்றம் சுமத்தி இருக்கிறார். ஹாரிஸ் ரவுஃப் பந்து வீசும் முன் தன் நகங்களால் பந்தை சுரண்டி சேதப்படுத்தியதாகவும், அதன் மூலம் பந்து தனது வடிவத்தை இழந்து, பின்னர் ரிவர்ஸ் ஸ்விங் ஆனதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார் தெரான்.

இது குறித்து அவர் சமூக ஊடகத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் முறையிட்டு இருக்கிறார். இந்த விவகாரம் குறித்து ரசிகர்கள் சமூக ஊடகங்களில் விவாதித்து வருகிறார்கள். ஆனால், இது குறித்து வீடியோவாக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ரஷ்டி தெரான் தனது அனுமானத்தின் அடிப்படையில் இப்படி கூறுகிறாரா? அல்லது நேரில் கண்டதை வைத்து சொல்கிறாரா? என்பது தெரியவில்லை. அது குறித்து அவர் விரைவில் விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவுக்கு எதிரான நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரவுப் பந்தை வேண்டுமென்றே சேதப்படுத்தியதாக புகார் அளிக்கப்பட்டது. அமெரிக்காவுக்கு எதிரான நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரவுப் பந்தை வேண்டுமென்றே சேதப்படுத்தியதாக புகார் அளிக்கப்பட்டது. Reviewed by Madawala News on June 07, 2024 Rating: 5

மாண்புமிகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாம் அனைவரும் நன்றி தெரிவிக்க கடமை பட்டுள்ளோம் ; ஆளுனர் ஹாபிஸ் நசீர்எதிர்காலத் தலைமுறையின் கல்விக் கண்களைத் திறக்கும் பாரிய பொறுப்பு ஆசிரியர்களுக்கானது! ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் அவர்கள் வலியுறுத்தல்

எதிர்காலத் தலைமுறையின் கல்விக் கண்களைத் திறக்கும் பாரிய பொறுப்பு ஆசிரியர்களுக்கானது என்று வடமேல் மாகாண ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் அவர்கள் வலியுறுத்தினார்

வடமேல் மாகாணத்தில் 668 பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனம் வழங்கும் இரண்டாம் கட்ட நிகழ்வு இன்று (07) குருநாகல் மலியதேவ ஆண்கள் பாடசாலையில் ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் தலைமையில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே கௌரவ ஆளுனர் அவர்கள் மேற்கண்டவாறு வலியுறுத்தினார்
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் அவர்கள், வடமேல் மாகாணத்தின் கல்வித் துறை மேம்பாட்டிற்கான சகல முயற்சிகளையும் நான் முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றேன். ஆசிரியர் பற்றாக்குறை உள்ளிட்ட அனைத்துக் குறைபாடுகளையும் நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளேன்.

மாகாணத்தின் கல்வி முன்னேற்றம் குறித்த எங்களது கோரிக்கைகளை மாண்புமிகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள், முன்னுரிமை அளித்து பரிசீலித்து வருகின்றார். அதன் அடிப்படையில் இந்தநியமனங்கள் வழங்கப்படுகின்றது. எனினும் இந்த நியமனங்கள் வழங்கப்படுவதில் ஏராளம் சிக்கல்கள் மற்றும் தடங்கல்கள் என்பவற்றைக் கடந்து வரவேண்டியிருந்தது.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்த நாடு இருந்த நிலை உங்களுக்குத் தெரிந்திருக்கும். எல்லாப்பொருட்களுக்கும் தட்டுப்பாடு இருந்தது. எங்கு பார்த்தாலும் மக்கள் வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள். கல்வி நடவடிக்கைகள் முற்றாக சீர்குலைந்து போயிருந்தது. ஆனால் இன்று அந்த நிலை மாறியுள்ளது. அதனை மாற்றி நாட்டை இந்தளவுக்கு இயல்பு நிலைக்குக்கொண்டு வந்ததில் மாண்புமிகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பாரிய பங்கு உண்டு. அதற்காக நாம் அனைவரும் ஜனாதிபதி அவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.

மாகாணத்தின் ஆசிரியர் பற்றாக்குறையை நீக்கும் வகையில் எதிர்வரும் நாட்களிலும் ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட உள்ளது. எம்மால் முடிந்தளவுக்கு அதிகூடிய ஆசிரியர் நியமனங்களை வழங்கி உள்ளோம். அதன் ஊடாக கல்வி மேம்பாட்டிற்கான செயற்பாடுகளை ஊக்குவித்துள்ளோம்

பாடசாலைகளில் இணைக்கப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஆசிரியர் நியமனங்களை வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். அதேபோன்று ஒரு மாவட்டத்தில் கடமையாற்றும் வெளிமாகாண ஆசிரியர் ஒருவர் இடமாற்றம் பெற்றுச் செல்லும்போது ஏற்படும் வெற்றிடத்தை அதே மாவட்டத்தைச் சேர்ந்தவர்களைக் கொண்டே நிரப்புவதற்கும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.
அதே போன்று வடமேல் மாகாணத்தில் பணியாற்றும் வெ ளி மாகாணங்களைச்சேர்ந்த அனைவரையும் சொந்த மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யவும், அதன் பின் ஏற்படும் வெற்றிடங்களுக்கு புதியவர்களை நியமனம் செய்வதற்கும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.


ஆகவே இன்று நியமனம் பெறும் அனைவரும் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். மாகாணத்தின் கல்வி முன்னேற்றம், நம் எதிர்காலச் சந்ததியினரின் கல்விக் கண்களைத் திறக்கும் பாரிய பொறுப்பு உங்கள் மீது சாட்டப்பட்டுள்ளது. அதனை அர்ப்பணிப்பு மற்றும் நேர்மையுடன் மேற்கொள்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு என்றும் ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் அவர்கள் தொடர்ந்தும் கருத்து வெளியிட்டார்.
இந்த நிகழ்வில் மாகாண சபையின் தவிசாளர் டிகிரி அதிகாரி, மாகாண பிரதம செயலாளர் தீபிகா கே. குணரத்தின, பிரதம அமைச்சு மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் நயனா காரியவசம், ஆளுனரின் செயலாளர் இலங்கக்கோன், மாகாண கல்வி பணிப்பாளர் முதிதா ஜயதிலக, உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
மாண்புமிகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாம் அனைவரும் நன்றி தெரிவிக்க கடமை பட்டுள்ளோம் ; ஆளுனர் ஹாபிஸ் நசீர் மாண்புமிகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாம் அனைவரும் நன்றி தெரிவிக்க கடமை பட்டுள்ளோம் ; ஆளுனர் ஹாபிஸ் நசீர் Reviewed by Madawala News on June 07, 2024 Rating: 5

குடும்ப தகராறு தொடர்பாக முறைப்பாடு செய்வதற்காகப் பொலிஸ் நிலையத்துக்குச் சென்ற,கணவனும் மனைவியும் அங்கிருந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிளின் பணப்பையை திருடி கைதாகினர்.குடும்ப தகராறு தொடர்பாக முறைப்பாடு செய்வதற்காகப் பொலிஸ் நிலையத்துக்குச் சென்ற தம்பதியினர் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் பணப்பையை திருடிய சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


வாதுவ குரே மாவத்தையில் வசிக்கும் கணவன், மனைவி இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


இவர்கள் இருவரும் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்யவதற்காக வாதுவ பொலிஸ் நிலையத்தின் முறைப்பாடுகள் பிரிவிற்கு சென்றுள்ளனர்.இதன்போது, இருவரும் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் மேசையிலிருந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் பணப்பையை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மேலும், சந்தேகநபர்கள் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குடும்ப தகராறு தொடர்பாக முறைப்பாடு செய்வதற்காகப் பொலிஸ் நிலையத்துக்குச் சென்ற,கணவனும் மனைவியும் அங்கிருந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிளின் பணப்பையை திருடி கைதாகினர். குடும்ப தகராறு தொடர்பாக முறைப்பாடு செய்வதற்காகப் பொலிஸ் நிலையத்துக்குச் சென்ற,கணவனும் மனைவியும் அங்கிருந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிளின் பணப்பையை திருடி கைதாகினர். Reviewed by Madawala News on June 07, 2024 Rating: 5

ஆடுகளத்தில் கொஞ்சம் ஈரப்பதம் காணப்பட்டது - மேலும் அது இரண்டு வேகத்தில் காணப்பட்டது ; பாபர் அஸாம்நேற்று வியாழன் அன்று டல்லாஸ் கிராண்ட் ப்ரேரி ஸ்டேடியத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான டி20 உலகக் கோப்பை போட்டியில் கடந்த சீசனில் இறுதி போட்டிக்கு சென்று இருந்த பாகிஸ்தாஸ் அணி அமெரிக்காவிடம் தோல்வியடைந்துள்ளது அறிந்ததே 

அமெரிக்காவின் இந்த வெற்றி கிரிக்கெட் உலகை திகைக்க செய்துள்ளது. பாக்கிஸ்தான் செட் செய்த 160 ரன்களை சேஸ் செய்த அமெரிக்கா சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது.

தோல்விக்கு பின் பேசிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் “நாங்கள் முதல் ஆறு ஓவர்களில் பவர் பிளேவில் நல்ல முறையில் விளையாடவில்லை.  தொடர்ந்து விக்கெட்டுகளை விழும் பொழுது  பின்னடைவில்தான் இருப்போம் . ஒரு துடுப்பாட்ட வீரராக   முன்னேறி பார்ட்னர்ஷிப்பை உருவாக்க வேண்டும். மேலும் முதல் ஆறு ஓவர் பந்துவீச்சில் சிறப்பாகவும் செயல்படவில்லை.

 'பவர் பிளே முடிவதற்குள் 3 விக்கெட்களை இழந்தோம். இதுதான் தோல்விக்கு முக்கிய காரணம். அதன்பிறகு, பெரிய பார்ட்னர்ஷிப்பை அமைத்திருக்க வேண்டும். ஆனால், அதனை செய்ய முடியவில்லை.

 இரண்டாவது காரணம் பந்துவீசும்போது, மிடில் ஓவர்களில், ஸ்பின்னர்களால் விக்கெட்டை எடுக்க முடியவில்லை. நாங்கள் எங்கள் பந்துவீச்சை மேம்படுத்த வேண்டும் இதுவும் தோல்விக்கு முக்கிய காரணம்'' எனக் கூறினார்.

அமெரிக்க அணிக்கு அனைத்து பாராட்டுகளும் சேர வேண்டும். அவர்கள் எங்களை விட மூன்று துறைகளிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டார்கள். ஆடுகளத்தில் கொஞ்சம் ஈரப்பதம் மற்றும்  இரண்டு வேகத்தில் காணப்பட்டது / நீங்கள் இங்கு விளையாடும் பொழுது ஒரு நிபுணராக ஆடுகளத்தை மதிப்பீடு செய்வது மிகவும் முக்கியம்” என்று கூறியிருக்கிறார்.

அவர் நம்பிக்கையுடன் தனது பேச்சை முடித்தார், எதிர்கால போட்டிகளில் அணி வலுவான மறுபிரவேசம் செய்ய விரும்புகிறது என்று தெரிவித்தார்

ஆடுகளத்தில் கொஞ்சம் ஈரப்பதம் காணப்பட்டது - மேலும் அது இரண்டு வேகத்தில் காணப்பட்டது ; பாபர் அஸாம் ஆடுகளத்தில் கொஞ்சம் ஈரப்பதம் காணப்பட்டது - மேலும் அது  இரண்டு வேகத்தில் காணப்பட்டது ; பாபர் அஸாம் Reviewed by Madawala News on June 07, 2024 Rating: 5

வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும் 44,000 வாகனங்கள் உள்நாட்டு சந்தைக்கு விடுவிக்கப்பட்டன.வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும் 44,000 வாகனங்கள் உள்ளூர் சந்தைக்கு விடுவிக்கப் ப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.


விடுவிக்கப்பட்ட 44,430 வாகனங்களில் 38,144 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 6,286 கார்கள் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கையில் இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட காலப்பகுதியில் இந்த வாகனங்கள் உள்ளூர் சந்தைக்கு வெளியிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அண்மையில் நிதியமைச்சில் உள்ளூர் வாகன உற்பத்தியாளர்கள் குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே நிதி இராஜாங்க அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார்.

இச்சந்திப்பின் போது வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்குவது தொடர்பிலும் முக்கிய கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

உள்நாட்டு வாகன உற்பத்தி நிறுவனங்களின் பிரதிநிதிகள், இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்கும் அதே வேளையில், உள்ளூர் வாகனங்களை இணைக்கும் வணிகங்களிலும் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்று சுட்டிக்காட்டினர்.
வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும் 44,000 வாகனங்கள் உள்நாட்டு சந்தைக்கு விடுவிக்கப்பட்டன. வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும் 44,000 வாகனங்கள் உள்நாட்டு சந்தைக்கு விடுவிக்கப்பட்டன. Reviewed by Madawala News on June 07, 2024 Rating: 5

எம்மை பிரிக்க முடியாதுஎம்மை பிரிக்க முடியாது. நாம் இருவரும் ஒரே வீட்டில் தான் ஒன்றாக வாழ்வோம்...’’ என கூறியத்துடன் பிள்ளைகள் மற்றும் கணவரிடம் செல்ல மறுத்த இரண்டு பெண்கள் குறித்த செய்தியை கண்டி பொலிஸார் தெரிவித்தனர்


இருபத்தி ஒன்பது வயது மற்றும் முப்பத்தைந்து வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய்மார்களே இவ்வாறு கதறி அழுது தம்மை பிரிக்க வேண்டாம் என கோரியுள்ளனர்.


இந்த இரண்டு பெண்களுக்கும் தலா பதினைந்து வயதுக்குட்பட்ட இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும், கணவர்கள் மற்றும் குழந்தைகள் வந்து பெண்களை ஒருவரின் வீட்டிற்கு அழைத்துச் செல்ல முயன்றதாகவும் போலீசார் தெரிவித்தனர்.


அப்போது, ​​வீட்டுக்கு செல்ல மறுத்த இந்த பெண்கள், தனித்தனியாக செல்ல முடியாது என போலீசாரிடம் கதறி அழுதுள்ளனர்.

29 வயதுடைய பெண் ஒரு ஆசிரியை என்பதுடன் 35 வயதுடைய தாய் ஒருவருடன் ஓரின உறவில் பழகி உள்ளார்.

குறிப்பிட்ட தாய் தனது குழந்தையுடன் பாடசாலைக்கு செல்லும் போது ஆசிரியை உடன் காதல் உறவு கொண்டுள்ளார் .

கடந்த ஒரு மாத காலமாக அவர்கள் காணாமல் போயுள்ளதாக கணவர்கள் வத்தளை பொலிஸாரிலும் கந்தானை பொலிஸாரிலும் முறைப்பாடு செய்துள்ளனர்.


கடந்த வாரம் முதலாம் திகதி இந்த இரண்டு பெண்களும் கண்டி தலதா மாளிகையில் பிரசன்னமாகியிருந்த போது, ​​இரு பெண்களின் நடத்தையில் கடும் வித்தியாசம் காணப்பட்டதை அவதானித்த தலதா மாளிகை பொலிஸார் அவர்களை கைது செய்து கண்டி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதனையடுத்து பொலிஸாரின் விசாரணைகளின் அடிப்படையில் வத்தளை மற்றும் கந்தானையில் காணாமல் போன பெண்களை இனங்கண்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

இரு பெண்களும் எச்சரிக்கப்பட்டு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கண்டி பொலிஸார் தெரிவித்தனர்.
எம்மை பிரிக்க முடியாது எம்மை பிரிக்க முடியாது Reviewed by Madawala News on June 06, 2024 Rating: 5

இந்தியர்கள் தான் இந்த உலகத்தையே ஆள்கிறார்கள் ; ஹர்திக் பாண்டியாடி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தங்களுடைய முதல் லீக் ஆட்டத்தில் அயர்லாந்தை எதிர்கொண்டது. நியூயார்க் புறநகர் பகுதியில் நடைபெற்ற இந்த போட்டியை பார்க்க ஏராளமான இந்திய ரசிகர்கள் குவிந்தார்கள். பந்து வீச்சுக்கு சாதகமான இந்த மைதானத்தில் டாஸ் வென்ற கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

இப்போட்டியில் இந்திய அணி இலகு வெற்றியை பெற்றது.

இந்த நிலையில் தனது பந்துவீச்சு குறித்து கருத்து தெரிவித்த ஹர்திக் பாண்டியா, நாட்டுக்காக எப்போதுமே விளையாடுவது மிகவும் ஸ்பெஷலான விஷயம் என்று கூறினார். இதை தொடர்ந்து பேசிய அவர் உலகக் கோப்பை தொடரில் என்னுடைய பங்களிப்பு நிச்சயம் இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.

நான் பந்து வீசியதில் என்னுடைய முதல் விக்கெட் பிடித்திருந்தது. எப்போதுமே நான் வீசும் பந்து ஸ்டெம்பை நோக்கி இருக்காது. கொஞ்சம் லென்த் பந்தை தான் வீசுவேன். ஆனால் இன்று கொஞ்சம் ஃபுல் லென்த் பந்தை வீசினேன். ஏனென்றால் இந்த ஆடுகளத்தில் ஷார்ட் பாலை வீசினால் பந்து எகிறி பறக்கிறது. நியூயார்க்கில் எங்களுக்கு இவ்வளவு பெரிய ரசிகர்கள் வந்து ஆதரவு கொடுப்பதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

இந்தியர்கள் உலகின் பல பகுதிகளில் இருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் இந்தியர்கள் தான் உலகத்தையே ஆள்கிறார்கள். இவ்வளவு ஆதரவு கிடைத்திருப்பதை நினைத்து மகிழ்ச்சி கொள்கின்றேன். எங்களுக்காக ஆதரவு அளித்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி என்று ஹர்திக் பாண்டியா கூறினார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஹர்திக் பாண்டியா விளையாடிய போது ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது அதே ரசிகர்கள் அவருக்கு ஆதரவு அளித்த வருவது குறிப்பிடத்தக்கது.
இந்தியர்கள் தான் இந்த உலகத்தையே ஆள்கிறார்கள் ; ஹர்திக் பாண்டியா இந்தியர்கள் தான் இந்த உலகத்தையே ஆள்கிறார்கள் ; ஹர்திக் பாண்டியா Reviewed by Madawala News on June 06, 2024 Rating: 5

நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டிருந்த கவிஞர் அஹ்னாப் ஜசீமின் பெயர் இறுதியில் பயங்கரவாதப் பட்டியலில் இருந்தும் நீக்கப்பட்டது.தமிழ் வாசகர்கள் மத்தியில் மன்னாரமுது அஹ்னாஃப் என நன்கு அறியப்பட்ட கவிஞரும் ஆசிரியருமான அஹ்னாப் ஜசீமின் பெயரை, பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய நபர்கள் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.


சுமார் இரண்டு ஆண்டுகளாக அந்தப் பட்டியலில் அவரது பெயரை அரசாங்கம் சேர்த்திருந்தது.


பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்னவினால் 2024 மே 25ஆம் திகதி வெளியிடப்பட்ட 2387/02 இலக்கம் கொண்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் 210 நபர்கள் மற்றும் 15 நிறுவனங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.


“காலத்துக்குக்காலம் திருத்தப்பட்டதும் 2023ஆம் ஆண்டு ஜுன் 8 ஆம் திகதி 2335/16 ஆம் இலக்க, அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பட்டியலுக்கான திருத்தத்தினால் இறுதியாகத் திருத்தப்பட்டதுமான 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 ஆம் திகதி1854/41 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பெயர் குறிக்கப்பட்ட ஆட்களின், குழுக்களின் மற்றும் உருவகங்களின் பட்டியலானது அதற்கான அட்டவணைகளை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக பின்வருவதனை இடுவதன் மூலம் இத்தால் மேலும் திருத்தப்படுகின்றது.” என குறித்த அதிவிசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


ஜூன் 8, 2023 அன்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்னவினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி இலக்கம் 2335/16 மூலம் 301 தனிநபர்கள் மற்றும் 15 நிறுவனங்கள் பெயரிடப்பட்டிருந்தன.


இதற்கமைய, கடந்த வருடம் பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக நியமிக்கப்பட்ட நபர்களின் பட்டியலில் அஹ்னாப் ஜசீம் உட்பட 91 பேரின் பெயர்களை நீக்க பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது.


ஓகஸ்ட் 1, 2022 அன்று பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்னவினால் வெளியிடப்பட்ட இலக்கம் 2291/02 என்ற விசேட வர்த்தமானி அறிவித்தலில் 316 தனிநபர்கள் மற்றும் 15 அமைப்புக்கள் பெயரிடப்பட்டு, அஹ்னாப் ஜசீமின் பெயர் முதன்முறையாக அதில் சேர்க்கப்பட்டுள்ளது.


எந்த காரணமும் கூறாமல் பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக நியமிக்கப்பட்ட நபர்களின் பட்டியலில் அஹ்னாப் ஜசீமின் பெயரைச் சேர்த்தமையால், தொழில் ஒன்றைக்கூட பெற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலையால் அவர் வாழ்க்கையை கொண்டு நடத்துவதற்காக விவசாயத்தில் ஈடுபட்டுள்ளார்.


2017ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட 'நவரசம்" என்ற கவிதைத் தொகுப்பின் ஊடாக அடிப்படைவாதத்தை போதனை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு, 2020 மே 16 அன்று பண்டாரவேலியில் உள்ள தனது வீட்டில் கைது செய்யப்பட்ட அஹ்னாப் ஜசீம், சர்வதேச மனித உரிமைக் குழுக்களின் ஆட்சேபனைகள் இருந்தபோதிலும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 579 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.


நீதிமன்றத்தால் அவர் குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்ட பின்னரும், பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர் என இலங்கை அரசாங்கத்தால் பட்டியலிடப்பட்டிருந்தார்.

நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டிருந்த கவிஞர் அஹ்னாப் ஜசீமின் பெயர் இறுதியில் பயங்கரவாதப் பட்டியலில் இருந்தும் நீக்கப்பட்டது. நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டிருந்த கவிஞர் அஹ்னாப் ஜசீமின் பெயர் இறுதியில் பயங்கரவாதப் பட்டியலில் இருந்தும் நீக்கப்பட்டது. Reviewed by Madawala News on June 06, 2024 Rating: 5

ஜூலை முதலாம் திகதி முதல் மின்சார கட்டணத்தை குறைக்க முன்மொழியப்பட்டுள்ளது - குறைந்த பட்ச அலகு பாவனைக்கு 2 ரூபாவும் - அதிக பட்ச அலகு பாவனைக்கு 20 ரூபா வரையும் குறைக்கப்படும்.ஜூலை முதலாம் திகதி முதல் மின்சார கட்டணத்தை குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று (06) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.


இதன்படி, வீட்டு பாவனை நுகர்வோருக்கு மேலும் நிவாரணம் வழங்கப்படும் என்றும், இந்த முன்மொழிவுக்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் அங்கீகாரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.


இதன்படி, 0-30 இற்கு உட்பட்ட அலகு ஒன்றின் கட்டணம் 8 ரூபாயிலிருந்து 6 ரூபாயாகவும்,


30-60 அலகுகளுக்கு இடைப்பட்ட அலகு ஒன்றின் கட்டணம் 20 ரூபாயிலிருந்து 9 ரூபாவாகவும்,


60-90 இற்கு இடைப்பட்ட அலகு ஒன்றின் கட்டணம் 30 ரூபாயிலிருந்து 18 ரூபாவாகவும்,


90-180 அலகுக்கு உட்பட்ட அலகு ஒன்றின் கட்டணம் 50 ரூபாவிலிருந்து 30 ரூபாவாகவும் குறைக்கப்படும் எனம் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஜூலை முதலாம் திகதி முதல் மின்சார கட்டணத்தை குறைக்க முன்மொழியப்பட்டுள்ளது - குறைந்த பட்ச அலகு பாவனைக்கு 2 ரூபாவும் - அதிக பட்ச அலகு பாவனைக்கு 20 ரூபா வரையும் குறைக்கப்படும். ஜூலை முதலாம் திகதி முதல் மின்சார கட்டணத்தை குறைக்க முன்மொழியப்பட்டுள்ளது - குறைந்த பட்ச அலகு பாவனைக்கு 2 ரூபாவும் - அதிக பட்ச அலகு பாவனைக்கு 20 ரூபா வரையும் குறைக்கப்படும். Reviewed by Madawala News on June 06, 2024 Rating: 5

"சிறுபான்மை இன நலன் ஆணைக்குழு" ஒன்றை நிறுவ பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் முன்வர வேண்டும் ; பாராளுமன்றில் ஹரீஸ் M Pகோரிக்கைதமிழ், முஸ்லிம், மலையக மக்களின் நலன் கருதி "சிறுபான்மை இன நலன் ஆணைக்குழு" ஒன்றை நிறுவ அரசியலமைப்பு ரீதியாக ஏற்பாட்டை செய்ய வேண்டும் : பாராளுமன்றில் ஹரீஸ் கோரிக்கை !


நூருல் ஹுதா உமர்


கல்விசார் நியமனங்களிலும், கல்வி அதிகாரிகள் நியமனங்களிலும் பல பாரபட்சங்கள் நடைபெறுவதாக அறிகிறோம். இது போன்று பல இடங்களிலும் பல்வேறு அசௌகரியங்கள், பாரபட்சங்கள் நடைபெறுகிறது. எமது நாட்டிலுள்ள தமிழ் பேசும் மக்கள் அவற்றை மேன்முறையீடு செய்யவும், விரைவான தீர்வுகளை பெறவும் "சிறுபான்மை இன நலன் ஆணைக்குழு" ஒன்றை நிறுவ அரசியலமைப்பு ரீதியாக ஏற்பாட்டை செய்ய வேண்டும் என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் சபையில் கேட்டுக்கொண்டார்.


நேற்று (05) பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்திய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் உரை நிகழ்த்திய அவர்,


இப்படியான ஏற்பாடுகள் இந்தியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருக்கிறது. எமது நாட்டில் வாழும் தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் நலன் கருதி "சிறுபான்மை இன நலன் ஆணைக்குழு" ஒன்றை நிறுவ பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும், மிக நீண்ட கால கோரிக்கையாக இருந்து வரும் பொத்துவிலுக்கான தனியான கல்வி வலயத்தை உருவாக்கித் தருமாறும் கேட்டுக்கொண்டார்.


அமைச்சரவை அனுமதியுடன் மாகாண சபைகளினூடாக ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்து வரும் கல்வி அமைச்சு கிழக்கு மாகாணத்தில் கஷ்டப்பிரதேசங்களில் உள்ள ஆசிரிய வெற்றிடங்களையும் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த தேவையை பூர்த்தி செய்ய அண்மையில் கிழக்கு மாகாண சபை நடவடிக்கை எடுத்திருந்ததும் துரதிஷ்டமாக அந்த நியமனம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. கூடுதலான ஆசிரியர்களை கிழக்கு மாகாண பாடசாலைகளில் நியமிக்க விரைவாக நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

"சிறுபான்மை இன நலன் ஆணைக்குழு" ஒன்றை நிறுவ பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் முன்வர வேண்டும் ; பாராளுமன்றில் ஹரீஸ் M Pகோரிக்கை "சிறுபான்மை இன நலன் ஆணைக்குழு" ஒன்றை நிறுவ பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் முன்வர வேண்டும் ; பாராளுமன்றில் ஹரீஸ் M Pகோரிக்கை Reviewed by Madawala News on June 06, 2024 Rating: 5

சில பிரதேசங்களில் இடைக்கிடையே மழை பெய்ய வாய்ப்பு i

 

சப்ரகமுவ, மேல்,வடமேல் மற்றும் தென்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரேலியா மாவட்டங்களிலும்  இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். 


வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். 


கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது. 


வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு 40 ‐ 50 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக் கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 


கடல் பிராந்தியங்களில் 

****************************


காங்கேசன்துறை   தொடக்கம் புத்தளம்,  கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில்  மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 


நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது. 


கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 ‐ 35 km வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும். 


ஹம்பாந்தோட்டை  தொடக்கம் பொத்துவில் வரையான அத்துடன் முல்லைத்தீவு  தொடக்கம் காங்கேசன்துறை,  மன்னார் ஊடாக புத்தளம்  வரையான   கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 ‐ 60 km இலும் கூடிய  வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும் . இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும். 


ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்யகின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும். 


ஆகையினால்  கடலுக்கு செல்லும் மீனவர்களும் கடல் சார் ஊழியர்களும் அவதானத்துடன் கடற்றொழில் நடவடிக்கைளில் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றனர். 


மொஹமட் சாலிஹீன்,  

சிரேஸ்ட  வானிலை அதிகாரி.


சில பிரதேசங்களில் இடைக்கிடையே மழை பெய்ய வாய்ப்பு i சில பிரதேசங்களில் இடைக்கிடையே மழை பெய்ய வாய்ப்பு i Reviewed by Madawala News on June 06, 2024 Rating: 5

மகளிர் தொழில் முனைவோருக்காக Wise ways academy வழங்கும் பல சலுகைகள்

மகளிர் தொழில் முனைவோருக்காக Wise ways academy வழங்கும் பல சலுகைகள்


உங்கள் கனவுகளை நனவாக்க பாடநெறிகள் 

மகளிர் தொழில் முனைவோருக்கான சான்றளிக்கப்பட்ட படிப்புகள் மற்றும் ஒரு நாள் பயிற்சி பட்டறைகள்.

தற்போது கிடைக்கும் பாட நெறிகளின் விபரங்களை மேலுள்ள பிரசுரத்தில் காணலாம்.

அதேவேளை 
 Wise ways academy ஏற்பாட்டில் எதிர்வரும் ஜூன் 8 ஆம் திகதி சனிக்கிழமை ஒருநாள் Desert Workshop பயிற்சிப் பட்டறை ஒன்று மடவளை பஸார் தெல்தெனிய வீதியில் அமைந்துள்ள  Wise ways academy இல் இடம்பெற உள்ளது .


மகளிர் தொழில் முனைவோருக்காக Wise ways academy வழங்கும் பல சலுகைகள்  மகளிர் தொழில் முனைவோருக்காக Wise ways academy வழங்கும் பல சலுகைகள் Reviewed by Madawala News on June 06, 2024 Rating: 5

இரு பாடசாலை மாணவர்கள் அடித்துக் கொண்டதில் ஒரு மாணவன் பரிதாபமாக பலிபாடசாலை மாணவர்கள் இருவருக்கு இடையில் நேற்று மாலை (05) ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்த மாணவன் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.


ஹம்பாந்தோட்டை, பெத்தேவெல பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


ஹம்பாந்தோட்டை நகரிலுள்ள பாடசாலையொன்றில் 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் இவர், நேற்று மேலதிக வகுப்பில் கலந்துகொள்வதற்காக சிப்பிக்குளம் பகுதிக்கு சென்றுள்ளார்.


இதன்போது ஹம்பாந்தோட்டையில் உள்ள மற்றுமொரு பாடசாலையைச் சேர்ந்த மாணவர் ஒருவர் குறித்த மேலதிக வகுப்புக்கு அருகில் சென்று 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவனை தாக்கியுள்ளார்.


இரு மாணவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறே மோதலுக்குக் காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.


இந்நிலையில், மாணவனின் மரணம் தொடர்பில் 17 வயதுடைய பாடசாலை மாணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இரு பாடசாலை மாணவர்கள் அடித்துக் கொண்டதில் ஒரு மாணவன் பரிதாபமாக பலி இரு பாடசாலை மாணவர்கள் அடித்துக் கொண்டதில் ஒரு மாணவன் பரிதாபமாக பலி Reviewed by Madawala News on June 06, 2024 Rating: 5

அவசரமாக பைபாஸ் சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டியுள்ள பேருவளை முகம்மது ரியால் (முன்னாள் முஅத்தின்) அவர்களுக்கு எம்மால் முடியுமான நிதி உதவிகளை செய்வோம்.அஸ்ஸலாமு அலைக்கும்,

பேருவளை மஹகொடை ஸாவியா வீதியைச் சேர்ந்த முகம்மது ரியால் (60) (முன்னாள் முஅத்தின்) அவர்கள் நீண்ட காலமாக இருதய நோயினால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறார். இவருக்கு அவசரமாக 💔 பைபாஸ் சத்திர சிகிச்சை மேற்கொள்ளுமாறு வைத்தியர்கள் 🩺 ஆலோசனை வழங்கி சில வருடங்களாகின்றன. அரச வைத்தியசாலைகளில் 🗓️ சில வருடங்கள் தாண்டியும் இவருடைய பைபாஸ் சத்திர சிகிச்சைக்கான ஏற்பாடுகள் இதுவரை செய்து கொடுக்கப்படவில்லை.
தற்பொழுது காலதாமதமின்றி உடனடியாக 🚨 சத்திர சிகிச்சை செய்து கொள்ளுமாறு வைத்தியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அரச வைத்தியசாலைகளில் தனது சத்திர சிகிச்சையினை மேற்கொள்வதற்காக பல வருடங்கள் காத்திருந்தும் கைகூடாத நிலையில் தற்பொழுது வேறு வழியின்றி நவலோக்க 🏥 தனியார் வைத்தியசாலையில் சத்திர சிகிச்சையினை மேற்கொள்வதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

தனியார் வைத்தியசாலையில் இவருடைய பைபாஸ் சத்திர சிகிச்சைக்காக 16 இலட்சங்கள் 💰 செலவாகும் என உத்தேசிக்கப்பட்டுள்ளது. இருதய நோயாளியாக இருந்த போதும் அன்றாடம் கூலித் தொழில் செய்து உழைத்து வரும் முகமது ரியாலினாலோ அல்லது அவரது வறிய குடும்பத்தினராலோ இப்பாரிய தொகையினை சுமந்து கொள்ள முடியாத நிலையில் நல்லுள்ளம் படைத்த நன்கொடையாளிகளிடமிருந்து இதற்கான நிதியினை 💰 திரட்டிக் கொள்வதற்கு முஹம்மது ரியால் திட்டமிட்டுள்ளார்.


"சிறுதுளி பெருவெள்ளம்" என்பதை மறந்து விடாதீர்கள். எம்மால் முடியுமான தொகையினை ரியால் அவர்களின் பைபாஸ் சத்திர சிகிச்சைக்காக வழங்குவோம். உயிர் காக்கும் இம்மனிதாபிமான பணியில் எம்மாலான நிதியுதவிகளை வழங்குவதோடு 🤝 மட்டுமல்லாது இப்பதிவினை எமது குடும்பத்தினர், நண்பர்கள் மத்தியிலும் பகிர்ந்து கொள்வோம் 🙏

இறைவன் என்னையும், உங்களையும் இது போன்ற கொடிய நோய்களிலிருந்து பாதுகாப்பானாக 🤲 ஆமீன்.

ஜஸாக்குமுல்லாஹு ஹைரா 💞

Bank Account Details (Son):
M. R. M Rifas
Bank : Commercial Bank
Beruwala Branch
Acc no: 8220904239

Contact Number:
M. R. M Rifas 📞 0777295007

தகவல்:
ரூமி ஹாரிஸ்.
சமூக செயற்பாட்டாளர்.
பேருவளை.
📞 071 666 6699 / 076 781 0699

2024/06/06


அவசரமாக பைபாஸ் சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டியுள்ள பேருவளை முகம்மது ரியால் (முன்னாள் முஅத்தின்) அவர்களுக்கு எம்மால் முடியுமான நிதி உதவிகளை செய்வோம். அவசரமாக பைபாஸ் சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டியுள்ள பேருவளை முகம்மது ரியால் (முன்னாள் முஅத்தின்) அவர்களுக்கு எம்மால் முடியுமான நிதி உதவிகளை செய்வோம். Reviewed by Madawala News on June 06, 2024 Rating: 5

குழந்தைகள், சிறுவர் ,சிறுமியருக்கான ஆடைகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ள அக்குறனையில் அமைந்துள்ள Baby Shopz -அக்குறனை welcome பதாகை அருகில்   (AKURANA ANCHOR

 WELCOME BOARD)  புதிதாக திறந்து வைக்கபட்டுள்ள Baby Shopz  எராளமான பொருட்களின் தெரிவுடன்  விற்பனையை ஆரம்பித்தது.

உங்கள் குழந்தைகளுக்கு தேவையான அனைத்துவிதமான பொருட்கள் மற்றும் Mothecare பொருட்கள் பாரிய அளவிலான தெரிவில் நீங்கள்  பெற்றுக்கொள்ள முடியும் .

( 12 வாகனங்கள் வரை Park செய்யக்கூடிய Customer Parking வசதியும் உண்டு)

☎️Contact : 074 377 2188

Visiti Us Today!

📍Location 

240, Matale Road, Kudugale, Akurana

insta id  : https://www.instagram.com/baby_shopzak/

குழந்தைகள், சிறுவர் ,சிறுமியருக்கான ஆடைகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ள அக்குறனையில் அமைந்துள்ள Baby Shopz - குழந்தைகள், சிறுவர் ,சிறுமியருக்கான ஆடைகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும்  ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ள அக்குறனையில் அமைந்துள்ள  Baby Shopz - Reviewed by Madawala News on June 06, 2024 Rating: 5
Powered by Blogger.