மீண்டும் சாதனை படைத்த அங்குநொச்சிய, அல்மாஸ் மகா வித்தியாலயம்



முஹம்மட் ஹாசில்

அண்மையில் வெளியான 2023ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் படி கெப்பித்திகொள்ளவ கல்வி வலயத்திற்குட்பட்ட அங்குநொச்சிய, அல்மாஸ் மகா வித்தியாலயத்திலிருந்து பரீட்சைக்கு தோற்றியவர்களுள் 11 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளதாக பாடசாலை அதிபர் ஏ.எம் இஷாக் தெரிவித்துள்ளார்.


வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் அல்மாஸ் மஹா வித்தியாலயம் கெப்பித்திகொள்ளாவ கல்வி வலயத்தில் தமிழ் மொழி மூல பாடசாலைகளில் முதலாம் இடத்தையும், அனுராதபுர மாவட்டத்தில் தமிழ் மொழி மூல பாடசாலைகளில் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளதாகவும் பாடசாலையின் அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.


அத்துடன் கடந்த பல ஆண்டுகளாக இப்பாடசாலை மாணவர்கள் பல சாதனையை நிலை நிறுத்தி வருவதாகவும் இம்முறை இச்சாதனைகளுக்காக தம்மை அர்ப்பணித்து செயலாற்றிய பாடசாலையின் முன்னாள் அதிபர் ஏ.ஜ.எம் தௌபீக், பொறுப்பாசிரியர்களான ஏ.ஆர் யாசீர், எம். பெனோரிஷா, பாடசாலை அபிவிருத்திக்குழு, பழைய மாணவர் அமைப்பு மற்றும் நலன் விரும்பிகள், கல்வித்துறை சார் அதிகாரிகள் அனைவருக்கும் பாடசாலை அதிபர் ஏ.எம்.இஷாக் தனது நன்றிகளை தெரிவித்துள்ளார்.


அதனடிப்படையில் சித்தியடைந்த மாணவர்கள் வருமாறு; என்.ஹுஸ்னா (170), ஆர். ரிப்தா (165) எம்.எம்.ஏ முயீஸ் (163) ஏ.எச். அன்ஹா (152), ஆர்.எம் ஹஸ்ஸான் (151), ஏ.எஸ் ஹுசைன் (149), எம்.ஆர் ராசிக் (148), எம்.ஆர் ருகையா (148), எம் .எம் முபீத் (147), எம்.ஜே.எம் ருஸ்தி (146), ஏ.எப் அஸ்ரா (143)

மீண்டும் சாதனை படைத்த அங்குநொச்சிய, அல்மாஸ் மகா வித்தியாலயம்   மீண்டும் சாதனை படைத்த அங்குநொச்சிய, அல்மாஸ் மகா வித்தியாலயம் Reviewed by Madawala News on November 20, 2023 Rating: 5

இந்திய அணியின் தோல்வியைக் கொண்டாடுவது நன்றி கெட்டத்தனம் – இதனை ஏற்றுக் கொள்ள முடியாது ; ராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார் கடும் சீற்றம்



 இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருந்தபோது எமது அண்டை நாடான இந்தியா தான் முதலில் உதவியது. ஆனால் நன்றி கெட்ட தனமாக இந்திய அணியின் தோல்வியை இங்கு சிலர் பட்டாசு கொளுத்தி கொண்டாடுகின்றனர் என்று கல்வி ராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்தார்.


இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு


விளையாட்டுப் போட்டி ஒன்றில் வெற்றி தோல்வி என்பது சாதாரண விடயம். அந்த வகையில் கிரிக்கெட் உலகக் கின்ன போட்டியில் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுள்ளது. 

இதனை அடுத்து இலங்கையில் சில பகுதிகளில் பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். 

ஆஸ்திரேலியா வென்றுவிட்டது என்பதை விடவும் இந்திய அணி தோல்வி அடைந்து விட்டது என்பதையே அவர்கள் கொண்டாடியுள்ளனர். இதனை ஏற்றுக் கொள்ள முடியாது.


பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா உதவியிருக்காவிட்டால் இலங்கை என்று சோமாலியா என்ற நிலையில் தான் இருந்திருக்கும். பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலையும் இருந்திருக்காது. 

ஆகவே நன்றி கெட்டத்தனமாக இந்தியாவின் தோல்வியை கொண்டாடுவது ஏற்புடைய நடவடிக்கை அல்ல. என்றார் கல்வி ராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார்.

இந்திய அணியின் தோல்வியைக் கொண்டாடுவது நன்றி கெட்டத்தனம் – இதனை ஏற்றுக் கொள்ள முடியாது ; ராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார் கடும் சீற்றம் இந்திய அணியின் தோல்வியைக் கொண்டாடுவது நன்றி கெட்டத்தனம் – இதனை ஏற்றுக் கொள்ள முடியாது ;  ராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார் கடும் சீற்றம் Reviewed by Madawala News on November 20, 2023 Rating: 5

இறுதிப்போட்டியில் வெல்ல நாங்கள் எல்லாவற்றையும் முயற்சி செய்தோம். எதுவும் சாதகமாக அமையவில்லை ; ரோஹித் ஷர்மா



 “நாங்கள் முடிந்தவரை முயற்சித்தோம். ஆனால் ஆட்டத்தின் முடிவு நமக்கு சாதகமாக அமையவில்லை"என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்தார்.


உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற இறுதியாட்டத்தில் இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா 6 ஆவது முறையாக கோப்பையை வென்றது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் முழுவதும் வீறுநடை போட்டு வந்த இந்திய அணி, இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் எளிதில் தோல்விய தழுவியது.


இந்நிலையில் இந்திய அணியின் அதிர்ச்சி தோல்விக்கான காரணங்கள் குறித்து அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அளித்த பேட்டியில், “இறுதிப்போட்டி முடிவு எங்களுக்கு சாதகமாக இல்லை. நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை. நாங்கள் எல்லாவற்றையும் முயற்சி செய்தோம். எதுவும் சாதகமாக அமையவில்லை. குறிப்பாக கோலியும் ராகுலும் நன்றாக ஆடினார்கள். மற்ற பேட்ஸ்மேன்கள் ரன் சேர்க்க தவறினர். ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு சிறப்பாக அமைந்தது.” என்றார்.


தொடர்ந்து பேசுகையில்,  “பேட்டிங்கின் போது ரன் குவிக்க தவறினோம். குறிப்பாக, நாங்கள் 270 முதல் 280 ரன்கள் வரை அடிப்போம் என  எதிர்பார்த்தோம். நிச்சயமாக இன்னும் 20-30 ரன்களை அதிகமாக அடித்திருக்க வேண்டும். 240 ரன்கள் மட்டும் எடுத்திருக்கும்போது, விக்கெட்டுகளை வேகமாக எடுக்க வேண்டும். அதை எங்களால் செய்ய முடியவில்லை. அதேபோல இரவு நேரத்தில் மின் ஒளிக்கு கீழ் விளையாடும் போது விக்கெட் பேட் செய்ய சிறப்பானதாக இருந்தது என்பதை உணர்ந்தேன். அதை காரணமாக சொல்லி தப்பிக்க விரும்பவில்லை. ” என்றார்.


“அதேநேரம் ஹெட்டும் லபுஷேனும் சிறப்பாக ஆடினார்கள். எங்களை ஆட்டத்திலிருந்து வெளியேற்றிவிட்டார்கள். பிட்ச்சின் தன்மை காரணமாக இரண்டாம் இன்னிங்ஸில் பேட்டிங் ஆடுவதற்கு சுலபமாக இருந்தது. ஆனால், தோல்விக்கு எந்த காரணத்தையும் சொல்லி தப்பிக்க நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் போதுமான ரன்களை அடிக்கவில்லை. அதுவே தோல்விக்கு முக்கிய காரணம், அவ்வளவுதான்” என்று அவர் தெரிவித்தார்.

இறுதிப்போட்டியில் வெல்ல நாங்கள் எல்லாவற்றையும் முயற்சி செய்தோம். எதுவும் சாதகமாக அமையவில்லை ; ரோஹித் ஷர்மா இறுதிப்போட்டியில் வெல்ல நாங்கள் எல்லாவற்றையும் முயற்சி செய்தோம். எதுவும் சாதகமாக அமையவில்லை ; ரோஹித் ஷர்மா Reviewed by Madawala News on November 20, 2023 Rating: 5

சமூகங்களுக்கு இடையில் பிரிவை உண்டாக்குவோர்களை கண்டிக்க முஸ்லிம் சமூக தலைவர்கள் முன்வரவேண்டும் !



தமிழ் மக்களின் பாரம்பரியமும், கலைநயமும் மிக்க பரதத்தை ஆண்களை மகிழ்விக்கும் விதமாகவே பரதநாட்டியம் ஆடப்படுவதாகவும், விலைமாதுக்கள் ஆடும் நடனமாகவும் கொச்சையான வார்த்தைகளை கொண்டு ஒழுக்கங்கள் இன்றி கடும்போக்காக அப்துல் ஹமீட் ஸராயி மௌலவி அவர்கள் பேசியிருக்கும் அந்த விடயங்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன் என ஜனாதிபதி செயலணியின் முன்னாள் உறுப்பினரும், கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினருமான ஐ.ஏ. கலிலூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். 


அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும், 


இஸ்லாமியர்களினால் பல நூற்றாண்டுகளாக கடைபிடித்துவந்த பாரம்பரியமிக்க கலாச்சார, கலை, இலக்கிய மரபுகளை பிழைகண்டு அவற்றுக்கு எதிராக பேசி ஒழித்துக்கட்டி பாடசாலைகளில் சினிமா திரைப்படங்களின் குத்துப்பாடல்களை ஒலிபரப்பிக்கொண்டு பாடசாலை விசேட தினங்களில் ஆசிரியர்கள் நடனமாட இப்படியான உலமாக்களே கடந்த காலங்களில் காரணமாக அமைத்துள்ளார்கள். இதனால் எது எமது கலாச்சாரம் எது அந்நிய கலாச்சாரம் என்று அடையாளம் தெரியாமல் தமது ரசனைக்கு விருந்தானவற்றை செய்து ஆசிரியர்கள் மாணவர்களை மகிழ்வித்து கொண்டிருக்கிறார்கள். 


ஆசிரியர்களும் மாணவர்களுக்கு ஒழுக்கமான விடயங்களை போதிக்காமல் இப்படி பாடல்களை ஒலிபரப்பிக்கொண்டு ஆடியது கண்டிக்கத்தக்கது. இந்த சினிமா பாடல்களுக்கான நடனங்களை தமிழர்களின் பாரம்பரியமிக்க பாரத நாட்டியமாக விடயம் தெரியாமல் அப்துல் ஹமீட் ஸராயி மௌலவி பேசியிருக்கிறார். எதையோ பற்றி பேசவேண்டி விளைந்து ஹிந்துக்களின் மனதை புண்படுத்தும் விதமாக பரதநாட்டியத்தை ஆண்களுக்கு உணர்வை தூண்டும் நடனமாக பேசியுள்ளார். இந்த விடயமாக இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் முறைப்பாடுகள் செய்யபப்ட்டுள்ளது. இது விடயமாக பொலிஸார் சுயாதீன விசாரணை செய்து குறித்த உலமாவுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். 


இவ்வாறான உலமாக்களை பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், ஊடகங்கள், மதரஸாக்கள் போன்றவற்றில் மார்க்க பிரச்சாரம் செய்ய அல்லது கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபட கல்வி அமைச்சு, புத்தசாசன அமைச்சு, வெகுசன ஊடக அமைச்சு போன்றன நடவடிக்கை எடுக்கவேண்டும். மன்னிப்பு கேட்பதாக அவர் வெளியிட்ட காணொளியில் கூட அவர் தொடர்ந்து அந்த கருத்தை வலியுறுத்தியுள்ளார். தெரியாமல் செய்த குற்றங்களுக்கு மன்னிப்பு வழங்குவதற்கும் விடயமறிந்தவர்கள் செய்யும் தவறுக்கு மன்னிப்பு வழங்குவதற்கும் நிறையவே வித்தியாசம் உண்டு. 


ஏனைய இனங்களின் மதகுருக்கள் எமது மார்க்கம் தொடர்பில் ஏதாவது பிழையான கருத்துக்களை முன்வைத்தால் கொதித்தெழும் இலங்கையின் உலமாக்கள், அரசியல் தலைவர்கள், சிவில் அமைப்புக்களின் தலைவர்கள், மத தலைவர்கள் இந்த விடயத்தில் மௌனம் காத்திருப்பது கவலையளிக்கிறது.


பிற சமூகங்களுடன் நல்லிணக்கமாக வாழ கற்றுத்தந்த மார்க்கத்தை பின்பன்றும் நாம் எமது சமூக உலமாக்கள் பிழை விட்டாலும் அதை சுட்டிக்காட்டவேண்டியது எமது கடமையாகவே உள்ளது. இதனை செய்யாது மௌனம் காப்பது ஏனைய சமூகங்கள் மத்தியில் முஸ்லிம்கள் தொடர்பில் பிழையான விம்பத்தை உருவாக்கும்.


இப்படியான மௌனமான போக்குகள் எதிர்காலத்தில் எமக்கு பாதகமான சூழ்நிலையை உருவாக்கும் இதனை தவிர்க்கும் வகையில் உலமாக்கள், அரசியல் தலைவர்கள், சிவில் அமைப்புக்களின் தலைவர்கள், மத தலைவர்கள் இந்த விடயத்தில் குரலெழுப்ப வேண்டும் என்றார்.

சமூகங்களுக்கு இடையில் பிரிவை உண்டாக்குவோர்களை கண்டிக்க முஸ்லிம் சமூக தலைவர்கள் முன்வரவேண்டும் ! சமூகங்களுக்கு இடையில் பிரிவை உண்டாக்குவோர்களை கண்டிக்க முஸ்லிம் சமூக தலைவர்கள் முன்வரவேண்டும் ! Reviewed by Madawala News on November 20, 2023 Rating: 5

உலகக் கோப்பையில் இந்திய அணியின் தோல்வியை தாங்க முடியாத இளைஞர் உயிரிழப்பு.



உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த அந்த முக்கியமான இறுதிப் போட்டி நேற்று நடந்தது.


இதில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய நிலையில் இந்தியா தோல்வியை தழுவியது.

ஆஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட் மற்றும் மார்னஷ் லபுஷேன் ஆகியோரது அசைக்க முடியாத பார்ட்னர்ஷிப்பால் எளிதில் வெற்றி பெற்று 6ஆவது முறையாக டிராபியை கைப்பற்றியது.


இதன் மூலமாக இந்திய அணி சொந்த மண்ணில் ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை டிராபியை இழந்துள்ளது.

இந்த நிலையில் தான் உலகக் கோப்பையில் இந்திய அணியின் தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாத இளைஞர் மன வேதனையில் இருந்த நிலையில் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.



திருப்பதி அருகிலுள்ள துர்க்க சமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோதி குமார்.


இவர், தனது வீட்டில் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியை பார்த்துக் கொண்டிருந்தார்.

எல்லோரும் போன்று டிராபி நமக்குத் தான் என்று ஜோதி குமாரும் நம்பிக்கை கொண்டிருந்தார். ஆனால், போட்டியில் மாற்றம் ஏற்பட ஏற்பட ஜோதி குமார் மன வேதனை அடைந்துள்ளார். அப்போது திடீரென்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவரை திருப்பதியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாமல் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் மட்டுமின்றி, மைதானத்தில் கிரிக்கெட் போட்டியை நேரில் பார்த்த 1,30,000 ரசிகர்களின் இதயங்களும் நொறுங்கிவிட்டது. இந்தியாவின் தோல்வியை நேரில் காண முடியாத ரசிகர்கள் பாதியிலேயே நடையை கட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி ; Asia Net news

உலகக் கோப்பையில் இந்திய அணியின் தோல்வியை தாங்க முடியாத இளைஞர் உயிரிழப்பு. உலகக் கோப்பையில் இந்திய அணியின் தோல்வியை தாங்க முடியாத இளைஞர் உயிரிழப்பு. Reviewed by Madawala News on November 20, 2023 Rating: 5

நாங்கள் எப்போதும் உங்களோடு நிற்கிறோம் ; தோல்வியடைந்த இந்திய அணிக்கு நரேந்திர மோடி ஆறுதல்.



இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா 6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 10 வெற்றி பெற்று, இறுதிப் போட்டியில் தோல்வியடைந்ததால் இந்திய அணி வீரர்கள் மிகவும் கவலை அடைந்தனர். சிராஜ் உள்ளிட்ட சில வீரர்கள் கண்ணீர் விட்டனர்.

இந்திய பிரதமர் மோடி வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு உலகக் கோப்பையை வழங்கினார். பின்னர், அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் "உலகக் கோப்பை முழுவதும் உங்களுடைய திறமை மற்றும் உறுதி குறிப்பிடத்தகுந்தது. நீங்கள் சிறந்த ஸ்பிரிட் உடன் விளையாடி நாட்டிற்கு மகத்தான பெருமை சேர்த்தீர்கள். நாங்கள் எப்போதும் உங்களோடு நிற்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் எப்போதும் உங்களோடு நிற்கிறோம் ; தோல்வியடைந்த இந்திய அணிக்கு நரேந்திர மோடி ஆறுதல். நாங்கள் எப்போதும் உங்களோடு நிற்கிறோம் ; தோல்வியடைந்த இந்திய அணிக்கு நரேந்திர மோடி ஆறுதல். Reviewed by Madawala News on November 20, 2023 Rating: 5

இந்தியாவை இலகுவாக வென்று உலக சாம்பியன் ஆனது அவுஸ்திரேலியா 🏏🇦🇺



இந்தியாவை இலகுவாக வென்று உலக சாம்பியன் ஆனது அவுஸ்திரேலியா 🏏🇦🇺
மண்ணை கவ்வியது இந்தியா - உலகக் கிண்ணத்தை தட்டித் தூக்கியது அவுஸ்திரேலியா
மண்ணை கவ்வியது இந்தியா - உலகக் கிண்ணத்தை தட்டித் தூக்கியது அவுஸ்திரேலியா.


உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலிய மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இன்றைய இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணி இந்தியாவை வீழ்த்தி உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது.


குறித்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சைத் தெரிவு செய்தது.



இதன்படி ,முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 240 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது



துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் களமிறங்கிய அணித்தலைவர் ரோஹித் சர்மா 31 பந்துகளில் 47 ஓட்டங்களையும், சுப்மன் கில் 7 பந்துகளில் 4 ஓட்டங்களையும், ஷ்ரேயாஸ் ஐயர் 3 பந்துகளில் 4 ஓட்டங்களையும், விராட் கோலி 63 பந்துகளில் 54 ஓட்டங்களையும் ரவீந்திர ஜடேஜா 09 பந்துகளில் 22 ஓட்டங்களையும் கேஎல் ராகுல் 107 பந்துகளில் 66 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.



அணியின் கேஎல் ராகுல் அதிகபட்சமாக 107 பந்துகளில் 66 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.



பந்து வீச்சில் அவுஸ்திரேலிய சார்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுக்களையும் ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் பாட் கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டுக்களையும் கிளென் மேக்ஸ்வெல் மற்றும் ஆடம் ஜாம்பா ஒரு விக்கெட்டையும் பெற்றுக்கொடுத்தனர்.



இதன்படி, 241 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 43 ஓவர்கள் நிறைவில் 04 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்து 2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது.


இந்தியாவை இலகுவாக வென்று உலக சாம்பியன் ஆனது அவுஸ்திரேலியா 🏏🇦🇺 இந்தியாவை இலகுவாக வென்று உலக சாம்பியன் ஆனது அவுஸ்திரேலியா 🏏🇦🇺 Reviewed by Madawala News on November 19, 2023 Rating: 5

இறுதி போட்டியில் இந்தியா உலக கிண்ணத்தை வென்றால் பாவனையாளர்களுக்கு 100 கோடி ரூபாயை வழங்குவதாக அறிவித்த ஜோதிட நிறுவனம்.



உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி அவுஸ்திரேலிய அணிக்கும், இந்தியாவிற்கும் இடையே குஜராத் மாநில அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.


இந்நிலையில், இந்தியாவின் புகழ் பெற்ற இணையவழி ஜோதிட வலைதளமான "அஸ்ட்ரோடாக்" (Astrotalk) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி புனீத் குப்தா (Puneet Gupta), இந்தியர்களையும், இந்திய அணியினரையும் உற்சாகப்படுத்தும் ஒரு செய்தியை தனது அதிகாரபூர்வ சமூக வலைதள கணக்கில் வெளியிட்டுள்ளார்.


2011ல் இந்தியா உலக கிண்ணத்தை வென்ற போது தனது வாழ்வில் நடந்த சம்பவங்களை நினைவுகூர்ந்துள்ள புனீத், இந்த இறுதி போட்டியில் இந்தியா உலக கிண்ணத்தை வென்றால், அஸ்ட்ரோடாக் வலைதள பயனர்கள் அனைவருக்கும் 100 (இந்திய ரூபா) கோடி தொகையை சமமாக பகிர்ந்து வழங்க போவதாகவும், பகிர்மான தொகை பயனர்களின் "எப் வோல்ட்" (app wallet) கணக்கில் சேர்க்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.


இதன் மூலம் போட்டி முடிவதற்குள் பலர் இந்த வலைதளத்தில் பயனர்களாக பதிவு செய்யக்கூடும் என்பதால் இதனை சந்தை வியாபார யுக்தி என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஜோதிட இணையதளமான அஸ்ட்ரோடாக், இன்றைய போட்டியில் யார் வெல்ல போவது என கணித்து தெரிவிக்க வேண்டும் என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இறுதி போட்டியில் இந்தியா உலக கிண்ணத்தை வென்றால் பாவனையாளர்களுக்கு 100 கோடி ரூபாயை வழங்குவதாக அறிவித்த ஜோதிட நிறுவனம். இறுதி போட்டியில் இந்தியா உலக கிண்ணத்தை வென்றால் பாவனையாளர்களுக்கு 100 கோடி ரூபாயை வழங்குவதாக அறிவித்த ஜோதிட நிறுவனம். Reviewed by Madawala News on November 19, 2023 Rating: 5

உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் 240 க்கு All out ஆனது இந்தியா.



உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று (19) இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலிய மற்றும் இந்திய அணிகள் மோதி வருகின்றன.

குறித்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சைத் தெரிவு செய்தது.


இதன்படி ,முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 240 ஓட்டங்களை பெற்றுள்ளது.



துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் களமிறங்கிய அணித்தலைவர்
*ரோஹித் சர்மா  47 ஓட்டங்களையும்,

* சுப்மன் கில்
 4 ஓட்டங்களையும்,

 * ஷ்ரேயாஸ் ஐயர் 3 பந்துகளில் 4 ஓட்டங்களையும்,


விராட் கோலி 63 பந்துகளில் 54 ஓட்டங்களையும்

*ரவீந்திர ஜடேஜா 09 பந்துகளில் 22 ஓட்டங்களையும்

* கே.எல் ராகுல் 107 பந்துகளில் 66 ஓட்டங்களையும்

* சூர்யகுமார் யாதவ் 18 பந்துகளில் 28 ஓட்டங்களையும்

*முகமது ஷமி 10 பந்துகளில் 06 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.



அணியின் அதிகபட்சமாக கேஎல் ராகுல் 107 பந்துகளில் ஒரு நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 66 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.



இதன்படி, அவுஸ்திரேலிய அணிக்கு 241 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது
உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் 240 க்கு All out ஆனது இந்தியா. உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் 240 க்கு All out ஆனது இந்தியா. Reviewed by Madawala News on November 19, 2023 Rating: 5

இலங்கை கிரிக்கெட்டை தடை செய்யுமாறு ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் ICC க்கு அனுப்பிய கடிதங்கள்.

இலங்கை கிரிக்கெட்டை தடை செய்யுமாறு ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம், சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் கோரிக்கை விடுத்து அனுப்பியுள்ள கடிதங்களின் பிரதிகளை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வெளியிட்டுள்ளார்.


6,7 மற்றும் 9 ஆம் திகதிகளில் அனுப்பப்பட்டதாக கூறப்படும் குறித்த கடிதங்களின் பிரதிகளே இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளன.


அதே நேரம் நவம்பர் மாதம் 7 ஆம் திகதி ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் கடிதத்தை மேற்கோள்காட்டி விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவும் தனது கருத்துக்களை முன்வைத்துள்ளார்


இன்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர், இது நாட்டை காட்டிக்கொடுக்கும் முயற்சி எனவும் குறிப்பிட்டார்.






இலங்கை கிரிக்கெட்டை தடை செய்யுமாறு ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் ICC க்கு அனுப்பிய கடிதங்கள். இலங்கை கிரிக்கெட்டை தடை செய்யுமாறு ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் ICC க்கு அனுப்பிய கடிதங்கள். Reviewed by Madawala News on November 19, 2023 Rating: 5

அவுஸ்திரேலிய அணியை போல் இந்திய அணி யாரையும் நம்பி இல்லை - அதனால் இந்திய அணி நிச்சயம் உலகக் கிண்ணத்தை வெல்லும் ; ரவி சாஸ்திரி



2023ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் தற்போது இடம்பெற்று வருகின்றது.

இந்த தொடரின் இரு அரையிறுதி போட்டிகளும் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், நாளை இறுதிப் போட்டி இடம்பெறவுள்ளது.

இந்த போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதவுள்ளன.

இந்தநிலையில், இந்தியா உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரை நிச்சயம் வெல்லும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் கருத்து வெளியிடுகையில், “ இந்திய அணியினர் சொந்த மண்ணில் இறுதிப்போட்டியில் விளையாடுகிறார்கள்.


மிகவும் அனுபவம் வாய்ந்த அணி என்பதால் ஆர்வத்தில் புதிதாக எதையும் செய்ய தேவையில்லை.


உலகக் கிண்ணத்தை வெல்லும் என்ற ரசிகர்களின் நம்பிக்கையுடன் இந்திய அணி விளையாடவுள்ளது. உலகக் கிண்ண இறுதிப் போட்டியை பொறுத்தவரை யார் சிறப்பாக அழுத்தங்களை கையாள்கிறார்களோ அவர்களே வெல்வார்கள்.


என்னைப் பொறுத்தவரை இந்திய அணி ஒரு வீரரையோ அல்லது இரண்டு வீரர்களையோ நம்பி இல்லை.


இந்திய அணியை பொறுத்தவரை ஒவ்வொரு போட்டியிலும் 8 முதல் 9 வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

அதுதான் இந்திய அணியின் சிறப்பு.

அவுஸ்திரேலிய அணியை போல் அல்லாமல் இந்திய அணி யாரையும் நம்பி இல்லை என்று பார்க்கப்படுகிறது.

அதனால் இந்திய அணி நிச்சயம் உலகக் கிண்ணத்தை வெல்லும்” என தெரிவித்தார்
அவுஸ்திரேலிய அணியை போல் இந்திய அணி யாரையும் நம்பி இல்லை - அதனால் இந்திய அணி நிச்சயம் உலகக் கிண்ணத்தை வெல்லும் ; ரவி சாஸ்திரி அவுஸ்திரேலிய அணியை போல் இந்திய அணி யாரையும் நம்பி இல்லை - அதனால் இந்திய அணி நிச்சயம் உலகக் கிண்ணத்தை வெல்லும் ; ரவி சாஸ்திரி Reviewed by Madawala News on November 19, 2023 Rating: 5

இளம் ஆசிரியர் ஒருவர் சுட்டுக் கொலை.



தனியார் கல்வி நிலையத்தில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் அனுராதபுரம், தலாவை பிரதேசத்தில் நேற்று இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

அதே பிரதேசத்தைச் சேர்ந்த அமலவீர நாணயக்கார என்ற 27 வயது இளைஞரே இவ்வாறு சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இளம் ஆசிரியர் ஒருவர் சுட்டுக் கொலை. இளம் ஆசிரியர் ஒருவர் சுட்டுக் கொலை. Reviewed by Madawala News on November 19, 2023 Rating: 5

UPDATE - பௌத்த பிக்குவின் கத்திக்குத்துக்கு இலக்காகிய பொலிஸ் கான்ஸ்டபிள் உயிரிழப்பு.



மாத்தறை மாவட்டத்தின் தெனியாய பிரதேசத்தில் பௌத்த பிக்கு ஒருவரின் கத்திக்குத்துக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் உயிரிழந்துள்ளார்.


குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,


தெனியாய பிரதேசத்தில் காதல் விவகாரத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை கத்தியால் குத்திய 18 வயதுடைய பிக்குவை கைது சம்பவமொன்று வியாழக்கிழமை (16) பதிவாகியுள்ளது.


காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர், சந்தேக நபரான பிக்குவின் சகோதரியுடன் காதல் தொடர்பில் இருந்துள்ளார்.


குறித்த பெண்ணை சந்திப்பதற்காக அவருடைய வீட்டிற்கு சென்றுள்ள போது பிக்குவின் அழைப்பின் பிரகாரம் பல்லேகம கங்கொட வீதியில் அமைந்துள்ள சம்போதி முதியோர் இல்லத்திற்கு அருகில் சென்றுள்ளதாகவும் ,

அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து மறைத்து வைத்திருந்த கத்தியால் பொலிஸ் உத்தியோகத்தரை குத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்


காயமடைந்த 37 வயதுடைய கான்ஸ்டபிள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக தெனியாய பொலிஸார் தெரிவித்துள்ளனர்
UPDATE - பௌத்த பிக்குவின் கத்திக்குத்துக்கு இலக்காகிய பொலிஸ் கான்ஸ்டபிள் உயிரிழப்பு. UPDATE - பௌத்த பிக்குவின் கத்திக்குத்துக்கு இலக்காகிய பொலிஸ் கான்ஸ்டபிள் உயிரிழப்பு. Reviewed by Madawala News on November 19, 2023 Rating: 5

இறுதிப் போட்டியை அடைந்த உலககிண்ணம் - வெல்லப் போவது மிக வலுவாக உள்ள இந்திய அணியா? அவுஸ்திரேலியாவா?



2023 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று (19) நடைபெறவுள்ளது.


இந்தியாவின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் போட்டியை நடத்தும் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா இடையே இந்த போட்டி இடம்பெறவுள்ளது.


ஆரம்ப சுற்றுப் போட்டிகளின் 09 போட்டிகளிலும் வெற்றிகளைப் பெற்றுள்ள இந்திய அணி, மிகவும் வலுவான மனநிலையுடன் இறுதிப் போட்டிகளுக்குள் பிரவேசித்துள்ளமை விசேட அம்சமாகும்.

அவர்கள் பங்கேற்ற 9 போட்டிகளில், ஒரு போட்டி கூட தோல்வியடையவில்லை.

இந்தியா அனைத்து போட்டிகளிலும் மிக எளிதாக வெற்றி பெற்றது.

ஆரம்ப சுற்றில் இரு பலம் வாய்ந்த அணிகளாக இருந்த தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்கும் என கருதப்பட்டாலும், அந்த இரு நாடுகளும் இந்தியாவுக்கு எதிராக தோல்வியை சந்தித்தன.

இருப்பினும், அரையிறுதியில் நியூசிலாந்து மட்டுமே முழு தொடரிலும் இந்தியாவுக்கு சிறிய அழுத்தத்தை கொடுக்க முடிந்தது.

இன்றைய போட்டியில் இந்திய அணியின் எதிரணியான அவுஸ்திரேலியாவும் ஆரம்ப சுற்றில் இந்தியாவிடம் 06 விக்கெட்டுகளால் தோல்வியடைந்தது.

எது எப்படியோ, இந்த ஆண்டு கிரிக்கெட் உலகக் கிண்ணம் இதுவரை இல்லாத வகையில் செய்திகளை உருவாக்கிய போட்டி என்பதை சந்தேகமில்லாமல் கூறலாம்.

இந்த ஆண்டு எப்படியாவது இந்தியா உலகக் கிண்ணத்தை வெல்லும் என்று சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின.

அதற்காக ஐசிசி விதிகள், தொழில்நுட்பம், ஆடுகளங்களைப் பயன்படுத்துதல் என பல்வேறு உத்திகளை இந்தியா கையாண்டுள்ளதாக சமூக வலைதள செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அவுஸ்திரேலியா
5 முறை உலகக் கிண்ணத்தை வென்றுள்ளது.

அவுஸ்திரேலியாவும் இந்தியாவும் இதற்கு முன்னர் 2003 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் சந்தித்துள்ளன, இதில் இந்திய அணி அவுஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது.

அப்போது உலகின் பலம் வாய்ந்த கிரிக்கெட் அணியாக அவுஸ்திரேலியா காணப்பட்டது.

இந்தியா 3 இறுதிப் போட்டிகளில் விளையாடி இரண்டு முறை பட்டத்தை வென்றுள்ளது.

1983ல் மேற்கிந்திய தீவுகள் அணியையும், 2011ஆம் ஆண்டில் இலங்கையையும் தோற்கடித்து கிண்ணத்தை வென்றது.

இறுதிப் போட்டிக்காக இரு அணி வீரர்களும் ஆயத்தமாகி வரும் நிலையில், நேற்று பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இதில் அவுஸ்திரேலிய அணியின் தலைவர் மற்றும், இந்திய அணியின் தலைவர் ரோகித் சர்மாவும் பேசினர்.

அப்போது பேசிய ரோகித் சர்மா, " இது உண்மையில் தங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய தருணம். இது இறுதி உந்துதலுக்கான நேரம். ராகுல் டிராவிட்க்காக கிண்ணத்தைவெல்லுவோம்" என கூறினார்.

இன்றைய போட்டி உள்ளூர் நேரப்படி பிற்பகல் 02.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இறுதிப் போட்டியை அடைந்த உலககிண்ணம் - வெல்லப் போவது மிக வலுவாக உள்ள இந்திய அணியா? அவுஸ்திரேலியாவா? இறுதிப் போட்டியை அடைந்த உலககிண்ணம் -  வெல்லப் போவது மிக வலுவாக உள்ள இந்திய அணியா?  அவுஸ்திரேலியாவா? Reviewed by Madawala News on November 19, 2023 Rating: 5

கடலுக்குச் சென்ற படகு கவிழ்ந்ததில் ஜப்பானிய பிரஜை உட்பட நால்வர் காணாமல் போயிருந்த நிலையில் பத்திரமாக மீட்பு.



கடலுக்குச் சென்ற படகு கவிழ்ந்ததில் ஜப்பானிய பிரஜை உட்பட நால்வர் காணாமல் போன நிலையில் அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



மாரவில, முகுதுகட்டுவ பிரதேசத்தில் நேற்று 18ஆம் திகதி மாலை 05.30 மணியளவில் ஜப்பானியர் உட்பட 05 பேர் சிறிய டிங்கி படகில் கடலுக்கு மீன்பிடிக்கும்போது மழை பெய்ததால் படகு கடலில் கவிழ்ந்தது.



படகை ஓட்டிச் சென்றவர்கள் இது குறித்து கரையில் இருந்த மற்றொரு மீனவருக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி படகு கவிழ்ந்ததாக கூறப்படும் பகுதிக்கு சென்ற மற்றொரு குழுவினர் படகை ஓட்டி வந்தவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.



எனினும், இதன்போது படகில் இருந்த ஏனைய நான்கு பேரும் காணாமல் போயுள்ளதாக படகின் உரிமையாளர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.



இந்நிலையில் கடற்படையினரின் உதவியுடன் காணாமல் போனவர்களை தேடும் நடவடிக்கையை முன்னெடுத்திருந்த நிலையில் குறித்த நால்வரும் தற்போது மீட்கப்பட்டு கரைக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலுக்குச் சென்ற படகு கவிழ்ந்ததில் ஜப்பானிய பிரஜை உட்பட நால்வர் காணாமல் போயிருந்த நிலையில் பத்திரமாக மீட்பு. கடலுக்குச் சென்ற படகு கவிழ்ந்ததில் ஜப்பானிய பிரஜை உட்பட நால்வர் காணாமல் போயிருந்த நிலையில் பத்திரமாக மீட்பு. Reviewed by Madawala News on November 19, 2023 Rating: 5

நாட்டை வங்குரோத்தாக்கியவர்களிடம் நஷ்ட ஈடு பெற நீதிமன்றத்திற்கு செல்லுங்கள்.சட்ட ஆதரவை நாம் வழங்குகிறோம்




*நாட்டு மக்கள் நிம்மதியிழந்து இருக்கும் வேளையில் நாட்டை வங்குரோத்தடையச் செய்த ராஜபக்சக்களுடன் சேர்ந்து தற்போதைய ஜனாதிபதி கேக் வெட்டி கொண்டாடுகிறார்*.


எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச


நாட்டு மக்கள் பட்டினியால் வாடும் நிலையில்,நாட்டின் தற்போதைய தலைவரும் முன்னாள் அரச தலைவரும் பெரிய கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர் என்றும்,நாட்டு மக்களின் வாழ்க்கையை வெட்டித் தீர்த்த தலைவர்கள், தற்போதைய தலைவரின் உதவியால் சுகமான வாழ்க்கை வாழ்கிறார்கள் என்றும்,இது 2019 இல் எடுக்கப்பட்ட தவறான தீர்மானங்களின் விளைவு என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


அரசியல் நண்பர்கள் ஒன்று கூடி தங்கள் குடும்பங்களின் குறைகளை நிவர்த்தி செய்து சுகபோக வாழ்க்கை வாழ்ந்தாலும்,நாட்டில் 220 இலட்சம் பேர் ஒரு நாளைக்கு 3 வேளை கூட சாப்பிட முடியாத நிலையில் உள்ளனர் என்றும்,

நாட்டு மக்கள் படும் துன்பங்கள் குறித்து இந்த

ஆட்சியாளர்களுக்கு அக்கறை இல்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.


பதுவத்துகொடை ஸ்ரீ சுனந்தாராம விகாரையில் இன்று(18) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


*நாட்டை வங்குரோத்தாக்கியவர்களிடம் நஷ்ட ஈடு பெற நீதிமன்றத்திற்கு செல்லுங்கள்.சட்ட ஆதரவை நாம் வழங்குகிறோம்*.


இந்நாட்டை வங்குரோத்தாக்கிய பொருளாதாரக் கொலையாளிகள் உயர்  நீதிமன்றத்தின் முன் அம்பலமானார்கள் என்றும், நாட்டை வங்குரோத்தாக்கிய தரப்பினருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் புத்திஜீவுகள் பேரவையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் திறந்த பல்கலைக்கழகத்தின் மூன்று பேராசிரியர்கள் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் பரிசீலித்து மனுதாரர்களின் அடிப்படை உரிமைகள் கடந்த அரசாங்கத்தின் ஆட்சியாளர்களால் மீறப்பட்டுள்ளன என்று தீர்ப்பளித்துள்ளதாகவும்,இந்த தீர்மானத்தின் மூலம் நாட்டில் உள்ள 220 இலட்சம் மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


இந்தச் சட்ட நடைமுறையால், நாட்டின் 220 இலட்சம் மக்கள், நாடு வங்குரோத்தானதால் ஏற்பட்ட இழப்பு மற்றும் சேதங்களுக்கு இழப்பீடு கோரி சட்டத்தின் முன் செல்ல வழி திறக்கப்பட்டுள்ளதாகவும் ,இதற்குத் தேவையான சட்ட ஆதரவை வழங்கும் வேலைத்திட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் கூட்டணியும் முன்னெடுக்கும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.


இந்த மனு மூலம் இழப்பீடு கிடைக்காவிட்டாலும்,நாட்டிலுள்ள 220 இலட்சம் பேருக்கு இழப்பீடு கிடைக்க ஐக்கிய மக்கள் சக்திக்கு உறுதுணையாக இருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.















நாட்டை வங்குரோத்தாக்கியவர்களிடம் நஷ்ட ஈடு பெற நீதிமன்றத்திற்கு செல்லுங்கள்.சட்ட ஆதரவை நாம் வழங்குகிறோம் நாட்டை வங்குரோத்தாக்கியவர்களிடம் நஷ்ட ஈடு பெற நீதிமன்றத்திற்கு செல்லுங்கள்.சட்ட ஆதரவை நாம் வழங்குகிறோம் Reviewed by Madawala News on November 18, 2023 Rating: 5

ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தின் பதிவாளர் பிரிவு சேவைகள் முடக்கம்: பிரதமர் தினேஷ் குணவர்த்தவிடம் முன்னாள் அமைச்சர் சுபைர் முறையீடு



ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தின் பதிவாளர் பிரிவு சேவைகள் முற்றாக முடங்கியுள்ளதாகவும், இது குறித்து பிரதமரும் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தனவுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்...


இலங்கையில் உள்ள சகல பிரதேசங்களிலும் உள்ள பதிவாளர் பிரிவுகளில் பிறப்பு இறப்பு மற்றும் விவாக விவாகரத்து சான்றுதழ்களை விரைவாகவும் Online ஊடாகவும் வழங்கும் முறைமை ஏற்படுத்தப்பட்டு அந்த சேவை சிறந்த முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.


இருந்த போதிலும் ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தில் சுமார் ஐந்து மாத காலமாக Local Government Wifi (LGN Wifi) செயலிழந்துள்ளதனால் பதிவாளர் பிரிவு சேவைகள் முற்றாக முடங்கியுள்ளது. இதே பிரச்சினை செங்கலடி பிரதேச செயலகத்திலும் ஏற்பட்டுள்ளதாக அறியக்கிடைத்துள்ளது. இதனால் அந்தப்பகுதி மக்கள் தங்களுக்கு தேவையான பிறப்பு, இறப்பு, விவாக, விவாகரத்து சான்றுதழ்களை பெற்றுக்கொள்வதில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதுடன் அங்கு சேவையினை பெறுவதற்காக செல்லும் மக்கள் தினமும் ஏமாற்றத்துடனே திரும்பிச் செல்கின்றனர்.


நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக நாட்டு மக்கள் பல்வேறு கஷ்டங்களை எதிர்நோக்கி வரும் நிலையில் வேலையற்ற இளைஞர்கள் தொழிலுக்காக வெளிநாடு செல்லுகின்ற நிலை அதிகரித்து வரும் இக்காலகட்டத்திலும் தங்களுக்கு தேவையான கடவுச்சீட்டு மற்றும் அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்வதற்காக பிறப்பு அத்தாட்சி பத்திரங்கள் பெற்றுக்கொள்வதில் காலதாமதம் ஏற்படுவதாகவும் பல்வேறு கஷ்டங்களை எதிர்நோக்கி வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.


இவ்வாறான நிலையில் குறித்த பிரதேச மக்கள் மட்டக்களப்பு கச்சேரிக்கு சென்று தங்களது பதிவு பிரதிகளை எடுக்க வேண்டியதொரு துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதுடன் இதற்காக அதிகமான நிதிகளை செலவழித்து வருவதுடன் நீண்ட நேரம் காத்திருந்து குறித்த சேவையினை பெற்றுக்கொள்ள வேண்டியதொரு நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.


இந்த விடயமாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு சென்ற போதும் இதுவரையில் எவ்விதமான முன்னேற்றகரமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.


எனவே பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளேன். குறித்த பிரதேச மக்களின் நலன் கருதி அந்த பிரதேச செயலகங்களில் வளமை போன்று பதிவாளர் பிரிவு இயங்க வேண்டும் என்பதுவே எமது எதிர்பார்ப்பாகும். அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றேன் என்றார்.

ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தின் பதிவாளர் பிரிவு சேவைகள் முடக்கம்: பிரதமர் தினேஷ் குணவர்த்தவிடம் முன்னாள் அமைச்சர் சுபைர் முறையீடு ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தின் பதிவாளர் பிரிவு சேவைகள் முடக்கம்: பிரதமர் தினேஷ் குணவர்த்தவிடம் முன்னாள் அமைச்சர் சுபைர் முறையீடு Reviewed by Madawala News on November 18, 2023 Rating: 5

பாலியல் கல்விக்கான புதிய பாடத்திட்டம் விரைவில்



குழந்தைகள் துஷ்பிரயோகம் அதிகரித்து வரும் நிலையில், அதனை தடுக்கும் வகையில் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, பாடசாலைகளில் பாலியல் கல்விக்கான புதிய பாடத்திட்டத்தை அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.


இது தொடர்பான ஆரம்ப கலந்துரையாடல்கள் சிறுவர்களுக்கான பாராளுமன்றக் குழுவில் இடம்பெற்றதாக பாராளுமன்றத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


அதிகாரியின் கூற்றுப்படி, பாலர் பாடசாலை முதல் வெவ்வேறு வயதினருக்கான பாடத்திட்டம் குறிப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது, இது குழந்தைகளுக்கு சரியான அறிவு மற்றும் முக்கியமான தலைப்புகளைப் பற்றிய புரிதலை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


விரிவான பாலியல் கல்வியின் அவசரத் தேவையை எடுத்துரைத்த பாராளுமன்ற சிறுவர் பேரவையின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன, இந்தப் பிரதேசத்தில் சரியான கல்வியின்மையால் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக வலியுறுத்தினார்.


புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம், குழந்தைகளுக்கு அவர்களின் சொந்த பாலியல் ஆரோக்கியம் மற்றும் விழிப்புணர்வை வழங்குவதற்கு அதிகாரிகள் நம்புகின்றனர்.


புதிய பாலினக் கல்வி பாடத்திட்டத்தின் அறிமுகம் குழந்தைகளைப் பாதுகாப்பதிலும் அவர்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதிலும் ஒரு கூட்டு அர்ப்பணிப்பை நிரூபிக்கிறது. சிறுவர் பாதுகாப்புக்கு இலங்கை தொடர்ந்து முன்னுரிமை அளித்து வரும் நிலையில், இந்த முயற்சிகள் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான அழுத்தமான பிரச்சினையை கையாள்வதில் குறிப்பிடத்தக்க முன்னோக்கினைக் குறிக்கின்றன.

பாலியல் கல்விக்கான புதிய பாடத்திட்டம் விரைவில் பாலியல் கல்விக்கான புதிய பாடத்திட்டம் விரைவில் Reviewed by Madawala News on November 18, 2023 Rating: 5

மனைவியை பயங்காட்ட தூக்கில் தொங்குவது போன்று பாசாங்கு செய்தவர் மரக்கிளை முறிந்ததால் உயிரிழப்பு.



யாழ்ப்பாணம் - நெடுந்தீவில் தூக்கில் தொங்குவது போன்று மனைவிக்குப் பாசாங்கு செய்தவர் மரக்கிளை முறிந்தமையால் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.



இரு பிள்ளைகளின் தந்தையான 26 வயதுடைய நபரே நேற்றுமுன்தினம் (16) இவ்வாறு உயிரிழந்துள்ளார்.



நெடுந்தீவுப் பகுதியில் வசிக்கும் இளம் குடும்பஸ்தர் ஒருவர் மனைவியுடன் பேசியவாறு தான் தற்கொலை செய்வேன் என வேப்பமரத்தில் தூக்கிட்டு பாசாங்கு செய்துள்ளார்.



இதன்போது அந்தக் குடும்பஸ்தர் தூக்கை மாட்டியவாறு மரத்தில் இருந்து கீழே இறங்க முற்பட்டவேளை வேப்ப மரக் கிளை முறிந்து விழுந்த நிலையில் தூக்கில் அகப்பட்டுள்ளார்.



இந்நிலையில், குடும்பஸ்தர் அந்த இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.



மேலும் அவரது சடலம் உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டது.


பு.கஜிந்தன்
மனைவியை பயங்காட்ட தூக்கில் தொங்குவது போன்று பாசாங்கு செய்தவர் மரக்கிளை முறிந்ததால் உயிரிழப்பு. மனைவியை பயங்காட்ட தூக்கில் தொங்குவது போன்று பாசாங்கு செய்தவர் மரக்கிளை முறிந்ததால் உயிரிழப்பு. Reviewed by Madawala News on November 18, 2023 Rating: 5

App மூலம் முச்சக்கர வண்டி ஓடும் சாரதிக்கு, தரிப்பிட முச்சக்கரவண்டி சாரதிகள் ஒன்றுகூடி தாக்குதல்.



யாழ்ப்பாணம் - திருநெல்வேலி பகுதியில் செயலி மூலம் ஓடும் சாரதி ஒருவர் மீது தரிப்பிட முச்சக்கரவண்டி சாரதிகள் ஒன்றுகூடி அச்சுறுத்தல் விடுத்ததுடன் தாக்குதலும் நடத்தியுள்ளனர்.

குறித்த சம்பவம் பலாலி வீதியில், திருநெல்வேலி பழம் வீதி அருகில் நேற்று (17) இடம்பெற்றுள்ளது.

தாக்குதல் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய சென்றபோதும் பொலிஸாரும் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் நடந்ததாக பாதிக்கப்பட்ட சாரதி கவலை வெளியிட்டார்.

முச்சக்கரவண்டி சாரதிகள் அதிக கட்டணம் அறவிட்ட நிலையில் செயலி வழியான முச்சக்கரவண்டி சேவை மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில் செயலி வழியான முச்சக்கரவண்டி சாரதிகள் அச்சுறுத்தலுக்கும் தாக்குதலுக்கும் உள்ளாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது
App மூலம் முச்சக்கர வண்டி ஓடும் சாரதிக்கு, தரிப்பிட முச்சக்கரவண்டி சாரதிகள் ஒன்றுகூடி தாக்குதல். App மூலம் முச்சக்கர வண்டி ஓடும் சாரதிக்கு, தரிப்பிட முச்சக்கரவண்டி சாரதிகள் ஒன்றுகூடி தாக்குதல். Reviewed by Madawala News on November 18, 2023 Rating: 5

6 வாரங்களுக்கு மூடப்பட்டது களனிதிஸ்ஸ அனல்மின் நிலையம் - மின்சார விநியோகத்தில் எவ்வித இடையூறும் ஏற்படாது என அறிவிப்பு



எரிவாயு மற்றும் நீராவி விசையாழியின் பராமரிப்பு பணிகள் காரணமாக களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தின் செயற்பாடுகள் நேற்று முதல் 6 வாரங்களுக்கு மூடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொறியியல் பிரிவு தெரிவித்துள்ளது.



பணிநிறுத்தம் காரணமாக தேசிய மின்கட்டமைப்பு 165 மெகாவாட் மின்சாரத்தை இழக்கும்.



இதேவேளை, தொழிநுட்பக் கோளாறு காரணமாக இயங்காத நுரைச்சோலை லக் விஜய அனல் மின் நிலையத்தின் இரண்டாவது மின் உற்பத்தி இயந்திரத்தை தேசிய மின்னழுத்தத்துடன் இணைக்க சுமார் 05 நாட்கள் ஆகும் என மின்சார சபை எதிர்பார்க்கிறது.



உயர் அழுத்த ஹீட்டர் அமைப்பில் திடீரென கோளாறு ஏற்பட்டதால், ஆலையின் இரண்டாவது ஜெனரேட்டரை மூட வேண்டிய நிலை ஏற்பட்டதாக நேற்று சபை அறிவித்தது.



தேசிய மின்கட்டமைப்பு நிறுத்தப்படுவதால் 300 மெகாவாட் மின்சாரத்தை இழக்கும்.



அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கை காரணமாக நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் மூன்றாவது மின் உற்பத்தி இயந்திரமும் தற்போது இயங்கவில்லை.



இதனால் 300 மெகாவாட் மின்சாரத்தை மின்சார சபை இழக்கும்.



எவ்வாறாயினும், தொடர்ந்து மின்சார விநியோகத்தில் எவ்வித இடையூறும் ஏற்படாது என மின்சார சபை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.



தொடர்ந்து நீர்மின்சாரம் உற்பத்தி செய்து மின்சாரம் வழங்குவதாகவும் மின்சார சபை அறிவித்துள்ளது.


தற்போது, நீர்மின் நிலையங்களுடன் தொடர்புடைய நீர் கொள்ளளவு 88 சதவீதமாக அதிகரித்துள்ளது.

6 வாரங்களுக்கு மூடப்பட்டது களனிதிஸ்ஸ அனல்மின் நிலையம் - மின்சார விநியோகத்தில் எவ்வித இடையூறும் ஏற்படாது என அறிவிப்பு 6 வாரங்களுக்கு மூடப்பட்டது களனிதிஸ்ஸ அனல்மின் நிலையம் - மின்சார விநியோகத்தில் எவ்வித இடையூறும் ஏற்படாது என அறிவிப்பு Reviewed by Madawala News on November 18, 2023 Rating: 5

நாட்டு மக்கள் அனைவருக்கும் ஜனாதிபதி TIN ஒன்றை வழங்க போகிறார்.



அடுத்த வருடம் முதல் அரசாங்கம் மக்களுக்கு விசேட பரிசு ஒன்றை வழங்கியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஊடாக 'TIN' ஒன்றை வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்ட விவாதத்தில் இன்று (17) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

'அடுத்த வருடம் அனைவருக்கும் அரசாங்கம் என்ன கொடுக்க போகிறது. TIN ஒன்றை கொடுக்க போகிறது. Tax Identification Number (TIN). ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி 2024 ஆம் ஆண்டில் அனைவருக்கும் டின் ஒன்றை கொடுத்திருக்கிறார். அந்த டின் இல்லாவிட்டால் வங்கி கணக்கு ஒன்றை கூட திறக்க முடியாது. காணி ஒன்றை வாங்க கூட முடியாது. இதுதான் இவரின் பங்களிப்பு.
நாட்டு மக்கள் அனைவருக்கும் ஜனாதிபதி TIN ஒன்றை வழங்க போகிறார். நாட்டு மக்கள் அனைவருக்கும் ஜனாதிபதி TIN ஒன்றை வழங்க போகிறார். Reviewed by Madawala News on November 17, 2023 Rating: 5

நிந்தவூர் - மாட்டுப்பளை மோட்டார் சைக்கிள் - பஸ் விபத்த்தில் மருதமுனை பிரதேச இளைஞர்கள் இருவர் உயிரிழப்பு.



நிந்தவூர் மாட்டுப்பளை பஸ் விபத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்வு....!!

எஸ் ஜே புஹாது

நிந்தவூர் மாட்டுப்பளை பிரதான வீதியில் இன்று 2023.11.17 மாலை இடம் பெற்று மோட்டார் சைக்கிள் - பஸ் வண்டி விபத்தில் காயமடைந்த மற்றொருவரும் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன


நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாட்டுப்பளை பிரதான வீதியில் இன்று மாலை மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் பஸ் வண்டி மோதி விபத்துக்குள்ளாகியதில் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்தார்


மற்றும் ஒருவர் பலத்த காயங்களுடன் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி சற்று முன்னர் உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது


உயிரிழந்த இருவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் என தெரிய வந்துள்ளதுடன் இவர்கள் இருவரும் கல்முனை பிரதேச செயலாளர் பிரிவு உட்பட்ட மருதமுனை பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவத்தை நேரில் கண்ட தென் கிழக்கு பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஷிப்லி அஹ்மட் தெரிவித்ததாவது..

நான் வேலை முடிந்து திரும்பிக் கொண்டிருந்தபோது கண்ட காட்சிகள் அதிர்ச்சி மிக்கவை.

ஒருவர் உயிரிழந்த நிலையிலும் மற்றவர் குற்றுயிராய் கிடந்த நிலையும் நீண்ட காலங்கள் என்னை தொல்லை செய்யும்.


தயவு செய்து வேகமாக மோட்டார் வாகனம் ஓட வேண்டாம் என்று உரக்கக் கூவ வேண்டும்.


இந்தக் காட்சிகளைப் பார்த்திருந்தால் வேகமாக மோட்டார் வண்டி ஓடும் பல இளைஞர்கள் பல உண்மைகளை உணர்ந்திருப்பர்.
நிந்தவூர் - மாட்டுப்பளை மோட்டார் சைக்கிள் - பஸ் விபத்த்தில் மருதமுனை பிரதேச இளைஞர்கள் இருவர் உயிரிழப்பு. நிந்தவூர் -  மாட்டுப்பளை மோட்டார் சைக்கிள் - பஸ் விபத்த்தில் மருதமுனை பிரதேச இளைஞர்கள் இருவர் உயிரிழப்பு. Reviewed by Madawala News on November 17, 2023 Rating: 5

ரிஷாத் பதியுத்தீன் முன்வைத்த குற்றச்சாட்டிற்கு நயீமுல்லாஹ் விளக்கம் ..



புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் மீதான ஒழுக்காற்று நடவடிக்கை சம்பந்தமாக விளக்கமளிக்கும் நோக்கில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நேற்று மாலை (16) ஊடக சந்திப்பொன்றை நடத்தியிருந்தது. அதன்போது அக்கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுத்தீன் அவர்களால் முன்வைக்கப்பட்ட சில கருத்துக்கள் தொடர்பில் விளக்கமளிக்க ஐக்கிய தேசிய கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் என்ற வகையில் நான் நிர்பந்திக்கப்பட்டுள்ளேன். 


2020ம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது புத்தளம் மாவட்டத்துக்கான முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை பெற்றுக் கொள்ளும் நோக்கில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் எமது கட்சியான முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் (தற்போதைய ஐக்கிய தேசிய கூட்டமைப்பு) தராசு சின்னத்தில் வேட்பாளர்களை நிறுத்தி ஒரு கூட்டணியாக போட்டியிட்டது. அம் முயற்சியின் பயனாக மூன்;று தசாப்தங்களுக்கும் மேலாக புத்தளம் மாவட்டம் இழந்திருந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வென்று கொள்ள முடிந்தமையும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அலி சப்ரி ரஹீம் அதிகூடிய விருப்பு வாக்குகiளை பெற்று பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருதார் என்பதும்  அனைவரும் அறிந்ததே. 


தேர்தல் முடிந்து இரண்டு மாதங்களுக்குள் அன்றைய ஆட்சியாளர்களால் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பின் 20வது திருத்தச் சட்டமூலத்துக்கான வாக்கெடுப்பு நடைபெற்றது. கோவிட்19 நோய்த் தொற்றின் காரணமாக உயிரிழந்த முஸ்லிம் ஜனாசாக்களை தயவு தாட்சண்யம் இன்றி தகனம் செய்யப்படுவதற்கு எதிராக நாட்டில் வாழும் அனைத்து முஸ்லிம்களும் அன்றைய அரசாங்கத்துக்கு பலத்த கண்டனங்களை தெரிவித்துக் கொண்டிருந்த வேளையிலும் அவர்களால் கொண்டுவரப்பட்ட சர்ச்சைக்குரிய 20வது திருத்தத்துக்கு ஆதரவாகவும் தனது கட்சியின் தீர்மானத்துக்கு எதிராகவும் குறித்த பாராளுமன்ற உறுப்பினர் வாக்களித்திருந்தார். அவ்வாறு செயற்பட்ட அப் பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என முழு முஸ்லிம் சமூகமும் பலத்த எதிரபார்ப்புடன் இருந்தது. 


ஆனால், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனது கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக மேற்கொண்டதை போன்ற முறையான ஒழுக்காற்று நடவடிக்கைகள் எதனையும் தமது புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மீது மேற்கொள்ள தவறியிருந்தது.. அவ்வாறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்து விட்டால் இரண்டாவது அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்றிருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் புத்தளம் நகர பிதா மர்ஹூம் கே.ஏ. பாயிஸ் பாராளுமன்ற உறுப்பினராக வந்து விடலாம் என்ற காரணத்தினால் அவர் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படாது தட்டிக் கழிக்க பட்டிருக்கலாம். ஆனால் இன்று தங்கம் கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் அவரை கட்சியிலிருந்து நீக்க அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தீர்மானம் மேற்கொண்டுள்ளது. 


மேற்படி ஒழுக்காற்று நடவடிக்கைகளில் எந்த விதத்திலும் தொடர்பு படாத ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமையும் அவர் சாடியுள்ளது மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடும் முயற்சியாகும். இதன்மூலம் தனது தனிப்பட்ட அரசியல் கோபதாபங்களையும் தீர்த்துக்கொள்ள முனைகிறார் என்பதனையே அவரது கருத்துக்களிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது. 


2020 பொதுத் தேர்தலக்கான நியமனப் பத்திரங்கள் தாக்கல் செய்யும் இறுதி நாளுக்கு இரண்டொரு தினங்களுக்கு முன்னதாகத்தான் எமது கட்சியின் தராசு சின்னத்தின் கீழ் கூட்டணியாக போட்டியிடும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. நியமனப் பத்திரத்தினை தாக்கல் செய்வதற்காக புத்தளம் செல்வதற்கு முன்தினம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் என்னை தொடர்பு கொண்டு எமது கட்சியுடன் ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கையை கைச்சாத்திட்டுக் கொள்ள வேண்டும் என கூறினார். அதன்படி அவர்களினாலேயே அவ்வுடன்படிக்கையும் தயாரிக்கப்பட்டிருந்தது. நான் அவர்களது காரியாலயத்துக்கு சென்று அதில் கையொப்பமிட்டேன். வெறுமனே இரண்டு பக்கங்களை கொண்டதும், வேட்பாளர்களது பெயர்கள் குறிப்பிடப்படாததுமான ஒரு உடன்படிக்கையையே அவர்கள் எனது கையொப்பத்துக்காக சமர்ப்பித்தார்கள். அந்த புரிந்துணர்வு உடன்படிக்கையை சரியான முறையில் தாயரித்து மீண்டும் அதில் கையொப்பமிட ஏற்பாடு செய்யுமாறு இரு வேறு சந்தர்ப்பங்களில் அக் கட்சியின் தலைவர் மற்றும் தவிசாளர் ஆகியோரிடம் நான் கேட்டுக்கொண்டேன். ஆனால் இன்றுவரை அவர்கள் அதனை பொருட்படுத்தாது காலம் கடத்திவிட்டு அவ் உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டிராத சில விடயங்களை அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாக கூறி அவற்றை நான் மீறிவிட்டதாக நேற்றைய தினம் (16) என் மீது அபாண்டமாக குற்றம் சாட்டியுள்ளனர். 


அலி சப்ரி ரஹீம் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்படும் பட்சத்தில் அவ்வெற்றிடத்தை நிறப்புவதற்காக அடுத்த நிலையிலுள்ள வேட்பாளர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சாராத நேரடி ஐக்கிய தேசிய கூட்டமைப்பு  உறுப்பினராகவே கருதப்பட வேண்டியவராக இருந்தார். ஆனால், இவ்வருட ஆரம்பத்தில் உள்ளுராட்சி மன்ற தேர்தல்களுக்கான நியமனப்பத்திரங்கள் கோரப்பட்டபோது அவர் பிறிதொரு கட்சியில் இணைந்து கல்பிட்டி பிரதேச சபைக்கான வேட்பாளராக போட்டியிட அக்கட்சியின் நியமனப் பத்திரத்தில் கையொப்பமிட்டுளளதாக எமது கட்சிக்கு தகவல் கிடைத்தது. தேர்தல் ஆணையகத்தில் அதனை உறுதிப்படுத்திக் கொண்டதன் பின்னர் அவரிடமிருந்து அதற்கான விளக்கமொன்றை பெற்றுக் கொள்ள எமது கட்சி தீர்மானித்து அதற்கான விளக்கத்தினை 14 நாட்களுக்குள்ளாக எமக்கு அனுப்பி வைக்கும்படி கடிதம் அனுப்பப்பட்டது. அதேவேளை அந்த வேட்பாளர் மீண்டும் கட்சி மாறி அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைத்துக் கொள்ளப்பட்டதாக மற்றொரு தகவலும் கிடைக்கப்பெற்றிருந்தது. 


ஒரே கூட்டணியில் இருந்து கொண்டு தமது கட்சியைச் சாராத அடுத்த நிலையிலுள்ள  வேட்பாளர்களை தன்னிச்சையாக தமது கட்சிக்குள் இணைத்துக் கொள்வதும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் சொல்வதைப்போல புரிந்துணர்வை மீறும் செயல்தான் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். 


அவ்வாறு கட்சி மாறிய வேட்பாளருக்கு நாம் அனுப்பியிருந்த விளக்கம் கோரலுக்கான பதில் கடிதத்தில், அவர் கூட்டணியிலுள்ள எந்தக் கட்சியையும் சாராதவர் எனவும் தான் ஒருபோதும் எமது கட்சியில் அங்கத்தராக இணைந்து கொள்ளவில்லை எனவும் கூறியுள்ளதோடு எனவே, அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ள எமது கட்சிக்கு எந்தவிதமான அதிகாரமும் இல்லை எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் அவர் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக நியமனம் பெறும் பட்சத்தில் எந்தவொரு கட்சிக்கும் கட்டுப்படாத தன்னிச்சையாக செயற்படும் ஒரு உறுப்பினராகவே இருப்பார். ஆகவே, அவ் வேட்பாளருடனும் அவரை எமது கூட்டணிக்குள் இணைப்பதற்கு காரணமாக இருந்த புத்தளம் சிவில் சமூக செயற்பாட்டாளர்களுடனும் கலந்தாலோசித்து அவரை எமது கட்சியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும் தீர்மானித்திருந்தோம். 


எனவே, எமது கட்சி முகம் கொடுக்கவுள்ள சில பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளும் பொருட்டு அலி சப்ரி ரஹீம் எம்.பி. தொடர்பிலான விசாரனைகளின் முடிவினை இரண்டு வாரங்களுக்கு தாமதிக்குமாறும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது. எமது வேண்டுகோளை புறந்தள்ளிவிட்டு அடுத்த நாளே அவரை கட்சியிலிருந்து விளக்கும் தீர்மானத்தினை நிறைவேற்றி, ஒரு முக்கிய அலுவல் காரணமாக கொழும்புக்கு வெளியில் சென்றிருந்த என்னை உடனடியாக கொழும்புக்கு அழைத்து கடந்த நவம்பர் 5ம் திகதி இரவு அக்கடிதம் என்னிடம் கையளிக்கப்பட்டது. அக்கடிதத்தின் பிரதி அலி சப்ரி ரஹீம் ரஹீம் எம்.பி.க்கு அனுப்பப்பட்டதாகவம் கூறப்பட்டதோடு அவரை பாராளுமன்ற பதவியில் இருந்து நீக்குவதற்கான எமது கடிதத்தை உடனடியாகவே அகில இலங்கை மக்கள் காங்கிரஸிடம் ஒப்படைக்குமாறும் வலியுறுத்தப்பட்டது. 


ஒரு கட்சியின் செயலாளர் என்ற வகையில் எனது கட்சியின் உயர்பீட உறுப்பினர்களது அங்கீகாரத்தை பெற வேண்டியுள்ளதன் அவசியத்தை அவர்களுக்கு தெளிவுபடுத்திய போதும் அதற்கு அவர்கள் உடன்படவில்லை. ஏற்கனவே கட்சியின் உயர்பீடம் மூலம் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளும்  இருக்கின்ற போது நான் தனியாளாக எந்தத் தீர்மானத்தையும் மேற்கொள்ள முடியாத நிலையிலிருந்தேன். எனவே அதற்கான கால அவகாசம் எனக்கு வழங்கப்பட வேண்டும் என அறிவித்து விட்டு வந்தேன். என்றாலும் அவர்களோ தமது கட்சிக்கு புதிதாக சேர்த்துக் கொள்ளப்பட்ட வேட்பாளரை தம்முடன் தக்கவைத்துக் கொள்வதிலேயே குறியாக இருந்ததாக ஊகிக்க முடிந்தது. எமது வேண்டுகோளுக்கிணங்க கால அவகாசம் வழங்குவதை அவர்கள் வேண்டுமென்றே தவிர்த்துக் கொண்டதாகவே நாம் கருதுகிறோம். 


அதே தினம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மூலம் தமது தீர்மானம் ஊடகங்களுக்கும் பகிரங்கப் படுத்தப்பட்டிருந்தது. பல்வேறு ஊடகங்களும் என்னைத் தொடர்பு கொண்டு மேற்படி ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பில் எனது கருத்தை அறிய முற்பட்டன. இரண்டு கட்சிகளுக்கு இடையே ஏற்பட்ட உள்ளக முரண்பாட்டை சந்திக்கு கொண்டு வந்து அதன் மூலம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரையோ ஏனைய அங்கத்தவர்களையோ விமர்சிப்பதை நான் நாகரீகமாக கருதவில்லை. எனவே நான் அலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிப்பதை சில நாட்களாக தவிர்த்து வந்தேன். 


இதற்கிடையில்தான் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த திங்கட்கிழமை (13) அலி சப்ரி ரஹீம் எம்.பி. யினால் இடைக்கால தடை உத்தரவு பெறப்பட்டுள்ளதாக எனக்கு அறிவிக்கப்பட்டது. 


நேற்று முன்தினம் (15) என்னை தொடர்பு கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதி செயலாளர் நாயகம் இந்த வழங்கு விடயத்தில் நாம் அவர்களது கட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அது விடயமாக எமது ஒத்துழைப்பை வழங்க நாம் தயாராக உள்ளதாகவும், நேற்று காலை (16) நாம் சந்தித்து அது பற்றி கதைப்போம் எனவும் உறுதியளித்திருந்தேன். அதனை அவரது கட்சித் தலைவருக்கு எத்தி வைத்ததாகவும் அவர் எனக்கு தெரிவித்தார்.  


இவ்வாறான தொலைபேசி உரையாடல்கள் நடந்தும் நேரில் சந்திப்பதற்கான காலமும் குறிக்கப்பட்டிருந்த நிலையிலும் நேற்றைய தினம் மாலைவரை நான் தொலைபேசிக்கு பதிலளிக்காது தவிர்ந்து வருவதாகவும் அதன்மூலம்  அலி சப்ரி ரஹீம் எம்.பி. மாவட்ட நீதிமன்றம் செல்வதற்காக நான் உதவி செய்ததாகவும் என்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 


தான் செய்த தகடுதத்தங்களை மறைப்பதிலும் கூட சிறு பிள்ளளைதனமாக அரசியல் ஆதாயம் தேடுகின்ற முயற்சியாகவே நான் இதனை கருதுகிறேன். ஒழுக்காற்று நடவடிக்கைகள் சம்பந்தமான வழக்குகளில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையிலும் அவர் இவ்வாறு நடந்து கொள்வதையிட்டு வருந்துகிறேன். 


அடுத்த கட்சிகளிலிருந்து உறுப்பினர்களை காவுகொண்டு தனது கட்சியை வளர்க்கும் முயற்சியையும் கட்சிகளுக்கு இடையிலான சில்லறை பிரச்சினைகளை பாரியதொரு சமூகப் பிரச்சினையாக மக்கள் மயப்படுத்த முனையும் வழமையையும் இனியாவது அவர் தவிர்ந்து கொள்வதே நல்லது. 


மஸீஹுதீன் நயீமுல்லாஹ் 

செயலாளர் நாயகம் 

ஐக்கிய தேசிய கூட்டமைப்பு

ரிஷாத் பதியுத்தீன் முன்வைத்த குற்றச்சாட்டிற்கு நயீமுல்லாஹ் விளக்கம் .. ரிஷாத் பதியுத்தீன் முன்வைத்த குற்றச்சாட்டிற்கு நயீமுல்லாஹ் விளக்கம் .. Reviewed by Madawala News on November 17, 2023 Rating: 5
Powered by Blogger.