நாடளாவிய ரீதியில் 198 அதி கூடிய புள்ளிகளை பெற்ற நான்கு மாணவர்கள் மற்றும் ஒரு மாணவி

2023 ஐசிசி ஒருநாள் உலக கிண்ண தொடரில் ,வெற்றிப்பெறும் அணியின் பரிசுத்தொகையை கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ளது.
உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி எதிர்வரும் 19 திகதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்த போட்டியில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதவுள்ளன.
இதில் வெற்றிப்பெறும் அணிக்கு, 4 மில்லியன் அமெரிக்க டொலர்கள்
(இலங்கை ரூபாவில் சுமார் ரூ. 131 கோடி) பரிசுத்தொகை வழங்கப்படும்
இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் அணிக்கு 2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (இலங்கை ரூபாவில் சுமார் ரூ.65 கோடி) வழங்கப்படும்.
மேலும், உலககிண்ண தொடரில் நடைபெற்ற 48 போட்டிகளுக்குமான பரிசுத் தொகையை கிரிக்கெட் கவுன்சில் முன்னதாகவே அறிவித்திருந்தது.
அரையிறுதியில் தோல்வியடையும் இருவருக்கு ( Newzealand & South africa ) தலா 800,000 டொலர் (இலங்கை ரூபாவில் சுமார் ரூ. 26 கோடி) வழங்கப்படும்.
நாக் அவுட் சுற்றுகளுக்கு தகுதி பெறத் தவறிய மற்ற ஆறு அணிகளுக்கும் தலா 100,000 டொலர் (இலங்கை ரூபாவில் ரூ. 3.3 கோடி) வழங்கப்படும்.
ஒவ்வொரு குழு நிலை ஆட்டத்தில் வெற்றி பெறும் அணிக்கு 40,000 டொலர் (சுமார் ரூ. 1.3 கோடி) ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.
இதன்படி போட்டி முழுவதும் வெற்றிபெறும் அனைத்து அணிகளுக்கும் மொத்தம் 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை (இலங்கை ரூபாவில் ரூ. 329 கோடி) ஐசிசி வழங்கும்.
ஒக்டோபர் 5-ஆம் திகதி தொடங்கிய ஆடவர் உலக கோப்பையின் 13 வது பதிப்பு நவம்பர் 19 வரை இந்தியாவில் நடைபெறுகிறது.
இதில் 10 அணிகள் கலந்து கொண்டதுடன், 10 போட்டிகளிலும் இந்திய அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்தது.
மேலும் இந்திய அணி அரையிறுதிப்போட்டியில் வெற்றிப்பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எரிமலையின் மேல் வாணலியை வைத்து சொசேஜஸ் பொரிக்கும் இனம் நாம் என போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார். எரிமலை வெடித்தால் யாரும் மிச்சமிருக்க மாட்டார்கள் என்றும் குணவர்தன கூறினார்.
பாராளுமன்றத்தில் இன்று (17) நடைபெற்றுக்கொண்டிருக்கும் வரவு-செலவுத் திட்டம் மீதான, நான்காம்நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தற்போதைய கடன் தொகை முப்பத்தாறு பில்லியன் அமெரிக்க டொலர்கள் என தெரிவித்த அமைச்சர், இருபது வருடங்களின் பின்னர் கடன் செலுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
யாராக இருந்தாலும் இந்தக் கடனைச் செலுத்துவதற்கு அரசாங்க சட்டத்திற்குக் கட்டுப்பட்டிருப்பதாகவும், கடனை செலுத்தாவிட்டால், அமெரிக்காவின் ஹாமில்டன் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படும் குணவர்தன கூறினார்.
- அப்துல்சலாம் யாசீம்-
இரட்டை குழந்தைகளை பிரசவிக்க தயாராக இருந்த எட்டுமாத கர்பிணித்தாயும், சிசு ஒன்றும் உயிரிழந்துள்ள சம்பவம் திருகோணமலை வைத்தியசாலையில் வௌ்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
மூதூர் இக்பால் வீதியைச் சேர்ந்த எம்.ஏ.பஸ்மினா (33வயது) இரட்டை குழந்தைகளை பிரசவிக்க தயாராக இருந்த எட்டுமாத இளம் கர்பிணித்தாயாவார்.
மாதாந்த மகப்பேற்று பரிசோதனைக்காக திருகோணமலை தனியார் வைத்தியசாலை ஒன்றில் ஸ்கேன் பரிசோதனையை மேற்கொண்டபோது இரண்டு சிசுக்களில் ஒன்று உயிரிழந்துள்ளதாக வைத்தியர் தெரிவித்துள்ளனர்.
அந்த வைத்தியரின் பணிப்புரைக்கு அமைவாக குறித்த தாய் வைத்தியசாலைக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டபோதிலும் உயர் குருதி அழுத்தம் காரணமாக வழியிலேயே மயக்கம் அடைந்துள்ளார்.
பின்னர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சத்திர சிகிச்சை மேற்கொண்டபோதிலும் குறித்த தாயும் உயிரிழந்தார். எனினும், சிசு ஒன்றை மட்டும் காப்பாறிய வைத்தியர்கள் அச்சிசுவை விசேட சிசு பராமரிப்புப்பிரிவில் வைத்துள்ளனர்.
தாய் மற்றும் சிசுவின் ஜனாஸாக்கள் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.
குறித்த மரணங்கள் தொடர்பில் மூதூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Ø கிரிக்கட் நிறுவனம் மற்றும் பொருளாதார நெருக்கடி தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புகள் குறித்து எதிர்க்கட்சிகள் இரண்டு வகையாகப் பேசுகின்றன.
Ø நீதிமன்றத்தில் இருந்து பெறப்பட்ட தீர்ப்புகளை விமர்சிக்க யாருக்கும் உரிமை இல்லை...
Ø புலிகளுக்கு ஆயுதம் கொடுத்ததற்காகவும் 88/89 காலகட்டத்தில் அரச சொத்துக்களுக்கு தீ வைத்ததற்காகவும் வழக்குகள் போடப்பட்டால், பொருளாதாரத்தையும் பாதித்திருக்கும் என்பது நிரூபணமாகும்...
- அமைச்சர் பிரசன்ன ரணதுங்க
கிரிக்கட் நிறுவனம் மற்றும் பொருளாதார நெருக்கடி தொடர்பில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகள் குறித்து எதிர்க்கட்சிகள் இரண்டு வகையாகப் பேசுவதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
தமக்கு பாதகமான தீர்ப்புகள் வரும்போது அதை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள், தனக்கு சாதகமாக தீர்ப்பு வரும்போது அதை முன்னிலைப்படுத்துவதாக அமைச்சர் தெரிவித்தார்.
நீதிமன்றத்தின் தீர்ப்புகளை விமர்சிக்க எவருக்கும் உரிமை இல்லை என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றம் இன்று (17) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கருத்துக்களுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு நடைபெற்ற உரையாடல் பின்வருமாறு:
அனுரகுமார திஸாநாயக்க (ஜே.வி.பி)-
கௌரவ சபாநாயகர் அவர்களே, பொருளாதார சீர்கேடு தொடர்பில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. நான் கிரிக்கட் பிரச்சினை பற்றி பேசுகிறேன். கிரிக்கட் நிர்வாக சபை பெரும் முறைகேடுகளில் ஈடுபட்டது நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாராளுமன்றத்திற்கு ஒதுக்கப்பட்ட பணியின் அடிப்படையில், கோப் குழு சில பகுதிகள் மீது விசாரணை நடத்தலாம், ஆனால் அனைத்து பகுதிகளிலும் அல்ல. தற்போது கோப் குழு தலைவர் விவகாரத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கிரிக்கட் நிர்வாக சபையுடன் தனக்கு ஏதாவது ஒப்பந்தம் இருப்பதாக ஆரம்பத்திலேயே சொல்லியிருக்க வேண்டும். அது செய்யவில்லை. இந்த தலைவரின் எந்த விசாரணையிலும் பாராளுமன்றம் திருப்தி அடையவில்லை. எனவே இந்த விசாரணைக்கு வேறு தலைவரையாவது நியமிக்க உத்தரவிடுங்கள்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன - இதனை விவாதமாக ஆக்க வேண்டாம். சபையின் பணி தொடரட்டும்.
குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார ஜயமஹ (S.J.B) -
கௌரவ சபாநாயகர் அவர்களே, பொருளாதார சீர்கேடு பற்றிப் பேசுவதில் அர்த்தமில்லை. ஏனென்றால், உச்சநீதிமன்றம் அது பற்றிய தீர்ப்பை வழங்கியுள்ளது. அதைப் பற்றி நான் பேச மாட்டேன். கோப் குழு தலைவரின் இருக்கையில் அமர்ந்திருந்து முன்நோக்கி பார்த்தபோது கிரிக்கட் நிறுவனத் தலைவர் நேராக நின்று கொண்டிருந்தார். தலைவர் 80 டிகிரி முதல் 115 டிகிரி வரை கடிகார திசையில் அமர்ந்திருந்தார். கோப் குழுவின் தலைவர் கிரிக்கட் நிறுவனத்தின் தலைவருக்கு கை சமிக்ஞை செய்தார்.
ஆளுங்கட்சியின் பிரதம அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (ஸ்ரீ.பொ. பெ.) - கௌரவ சபாநாயகர் அவர்களே, கிரிக்கட் சபை தொடர்பில் வழங்கப்பட்ட தீர்ப்பு தொடர்பில் எதிர்க்கட்சிகள் ஒரு விதமாகப் பேசினர். பொருளாதார நெருக்கடி பிரச்சினையை இன்னொரு வகையில் பேசினர். எதிர்க்கட்சிகள் இரண்டு தீர்ப்புகளைப் பற்றி இரண்டு விதமாகப் பேசுகின்றனர். இது நாட்டுக்கு தவறான எண்ணத்தை ஏற்படுத்துகிறது. அதே சமயம் நீதித்துறையும் விமர்சிக்கப்படுகிறது. சாதகமான முடிவு கிடைத்தால் அதை வெளியில் காட்ட முயல்கின்றனர்.
ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (ஸ்ரீ.பொ. பெ.) - நீதிமன்றத்தின் தீர்ப்பை தாம் மதிப்பதாக மகிந்த ராஜபக்சவும் தெரிவித்திருந்தார். நீதிமன்ற தீர்ப்பை விமர்சிக்க எங்களுக்கு யாருக்கும் உரிமை இல்லை.
ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (ஸ்ரீ.பொ. பெ.) – நீங்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். சொல்வதைக் கேளுங்கள். கௌரவ சபாநாயகர் அவர்களே, ரணசிங்க பிரேமதாச அவர்கள் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் வழங்கியது நிரூபிக்கப்பட்டது. ஆனால் யாரும் வழக்கு தொடரவில்லை. வழக்கு போட்டால் பொருளாதாரத்தையும் பாதிக்கும் என்று சொல்வார்கள். மேலும், 88/89 இல் அரச சொத்துக்களுக்கு தீ வைக்கப்பட்டது. வீடுகள், வங்கிக் கொள்ளை, கொலைகள் என வழக்குப் பதிவு செய்தால், அவை பொருளாதாரத்தையும் பாதித்ததாகச் சொல்லப்படும். எனவே இதைப் பற்றி தவறாகச் சொல்ல வேண்டாம்.
இலங்கையின் பொருளாதாரத்தை சீர்குலைத்தவர்கள் தொடர்பில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் பிரகாரம் இதற்கு காரணமானவர்களின் குடி உரிமைகள் ரத்து செய்யப்பட வேண்டும் என சமகி ஜன பலவேகய வெலிகம தொகுதியின் பிரதம அமைப்பாளர் ரெஹான் ஜயவிக்ரம தெரிவித்துள்ளார்.
தனது X சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை வைத்துள்ள அவர், அனைத்து கட்சிகளும் எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து இந்த நடவடிக்கைகளுக்காக பாராளுமன்றத்தில் ஒரு பிரேரணையை கொண்டு வர வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் பொருளாதார திவால் நிலை குறித்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை பரிசீலித்த உச்ச நீதிமன்றம், முன்னாள் ஜனாதிபதிகள் மகிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச உள்ளிட்ட 7 பேரை பொறுப்பேற்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது அறிந்ததே.
(சர்ஜுன் லாபீர்)
கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட கல்முனை அஸ் ஸுஹறா வித்தியாலயத்தின் வரலாற்றிலேயே இம்முறை 09 மாணவர்கள் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்று பாடசாலைக்கு பெருமை ஈட்டிக் கொடுத்ததோடு, வரலாற்று சாதனையையும் படைத்துள்ளனர்.
இதுவரை காலமும்
இப்பாடசாலையில் 4 மாணவர்கள் மட்டுமே பாடசாலை வரலாற்றில் அதிகூடிய சித்தியடைந்த மாணவர்களாக காணப்பட்டனர்.
இப் பாடசாலைக்கு மாணவர்களின் புதிய அனுமதியின்மை குறைபாடு,கற்றல் செயற்பாடுகளில் மாணவர்களின் ஆர்வமின்மை போன்ற பல காரணங்களினால் மூடுவிழா காண இருந்த இப்பாடசாலை கடந்த 2020ம் ஆண்டு புதிய அதிபராக கடமையேற்ற எம்.எஸ்.எச்.ஆர் மஜிதியாவின் ஆளுமையினாளும், திறமையினாலும் பாடசாலை ஆசிரியர்களின் அயராத உழைப்பினாலும், பாடசாலை அபிவிருத்தி சங்கம், பழைய மாணவர்களின் ஒத்துழைப்புக்களினாலும் குறுகிய காலத்திற்குள் கடந்த வருடம்(2022) 06 மாணவர்களையும் இம்முறை(2023) 09 மாணவர்களையும் புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் சித்தி பெற வைத்து வெற்றபெற வைத்தமை பாராட்டத்தக்க வரலாற்று நிகழ்வாகும்.
கல்முனை முஸ்லிம் கல்விக் கோட்டத்தில் முன்னணி ஆரம்பக் கல்வி பாடசாலையாக திகழும் இப்பாடசாலையின் அதிபர் எம்.எச்.எஸ்.ஆர் மஜிதியாவின் வழிகாட்டலினாலும், பெற்றோர் ,ஆசிரியர் மாணவர்களின் அயராத முயற்சியினாலும் பெறப்பட்டுள்ள இந்த வெற்றிக்கு காரணமாக அமைந்த அனைவருக்கும் பாடசாலை சமூகத்தினர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
மேலும் இப் பாடசாலையில் பெளதீக வள தேவைகள் அதிகமாக காணப்படுவதனால் பாடசாலை அபிவிருத்தி குழு ,பழைய மாணவர் சங்கம்,மற்றும் நலன் விரும்பிகள் கடும் கஷ்டங்களுக்கு மத்தியில் தனவந்தர்கள் மற்றும் பெற்றோர்களை கொண்டு பல்வேறுபட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.
எனவே அதற்கான ஒத்துழைப்புக்களையும் உதவிகளையும் ஊர் நலன் விரும்பிகள் முன்வந்து தந்துதவுமாறு பாடசாலை சமூகம் வேண்டுகோள் விடுக்கின்றது.
2023 ஆம் ஆண்டுக்கான பரீட்சை பெறுபேறுகள் நேற்று (16) இரவு வௌியாகி இருந்தன.
www.doenets.lk என்ற இணையத்தளத்திற்கு சென்று பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு பரீட்சைக்கு 332,949 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர், அவர்களில் 50,664 பேர் வெட்டுப்புள்ளிகளில் சித்தியடைந்துள்ளனர்.
அத்துடன் புலமைப்பரிசில் பரீட்சையின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தொடர்பிலான சிங்கள, தமிழ் மொழிமூல வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் கூறுகிறது.
இதன்படி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, குருநாகல் மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கான சிங்கள மொழி மூல வெட்டுப் புள்ளி 154 ஆகும்.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் வெட்டுப்புள்ளி வரம்பு 150 ஆகவும், பொலன்னறுவை, பதுளை, மொனராகலை மாவட்டங்களில் 149 ஆகவும் உள்ளது.
அம்பாறை, புத்தளம், அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் சிங்கள மொழி மூல வெட்டுப்புள்ளி 148 ஆகவும், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களில் 145 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் தமிழ் மொழி மூல வெட்டுப்புள்ளி 145 ஆகவும் கிளிநொச்சி மாவட்டத்தில் வெட்டுப்புள்ளி 144 ஆகவும் உள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, குருநாகல் மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கான தமிழ் மொழி மூல வெட்டுப் புள்ளி 147 என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், மாணவர்களின் மதிப்பெண்களை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருந்தால், நவம்பர் 27 முதல் டிசம்பர் 4 வரை இணையவழியில் மேல்முறையீடு செய்ய முடியும் என்று திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
பெறுபேறுகளுடன் District Rank அல்லது Island Rank வெளியிடப்பட மாட்டாது என்றும் பரீட்சை திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
சென்னை பாரிமுனையில் பணத் தகராறில் இலங்கை வியாபாரியை கடத்திய சந்தேகத்தின் பேரில் 4 பேரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்தனா்.
இலங்கையைச் சோ்ந்தவா் வியாபாரியான முகம்மது ஷியாம் என்பவர், தொழில் நிமித்தமாக அண்மையில் சென்னை சென்றிருந்தார்.
பாரிமுனையில் உள்ள விடுதியில் தங்கியிருந்த அவரை, ஒரு கும்பல் கடத்தியது. மேலும், அந்தக் கும்பல் இலங்கையில் இருக்கும் அவரது மகளை கைப்பேசி மூலம் தொடா்பு கொண்டு முகம்மது ஷியாமை விடுவிக்க 15 லட்சம் ரூபாய் தருமாறு மிரட்டியுள்ளது.
இது குறித்து அவா், வடக்கு கடற்கரை பொலிஸ் நிலையத்தில் இணையம் மூலமாக முறைப்பாடளித்தாா். அதன்பேரில் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்தனா்.
அதில், சம்பவத்தில் ஈடுபட்டது அண்ணா நகா் 10-ஆவது பிரதான சாலை பகுதியைச் சோ்ந்த கி.சித்ரா (43), மு.ரியாஸ் அஸ்கா் (47), மேற்கு கே.கே.நகா் வன்னியா் தெருவைச் சோ்ந்த கோ.வேல்முருகன் (41), கா.தினேஷ் (31) என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவா்கள் 4 பேரையும் பொலிஸார் வியாழக்கிழமை கைது செய்து, முகம்மது ஷியாமை மீட்டனா்.
விசாரணையில், கைது செய்யப்பட்ட சித்ராவிடம் முகம்மது ஷியாம் கடன் வாங்கியிருப்பதும், வாங்கிய கடனைத் திருப்பி அளிக்காததால் சித்ரா கடத்தலில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இது தொடா்பாக பொலிஸார் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா். R
அப்பாவி மக்களை இஸ்ரேல் குறிவைக்கவில்லை எனவும் ஹமாஸ் ஆயுதக்குழுவே அப்பாவி
மத்திய அரசின் அனுமதி இன்றி மாகாண சபைகளின் அதிகாரங்களின் வாயிலாக பல்கலைகழகங்கள் ஆரம்பிக்க அனுமதி வழங்கப்படுவது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என முன்னாள் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் வைஸ் அட்மிரால் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.
மாகாண சபைகளுக்கு இவ்வாறு அனுமதி வழங்குவதால் கிழக்கு மாகாணத்தில் மத்திய கிழக்கு நாடுகளின் அனுசரனையில் வவஹாப்வாத, ஷரீயா பல்கலைக்கழகங்கள் உருவாக வாய்ப்பிருக்கிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கனடாவின் ஒண்டோரியோ மாகாணத்தின் பாடசாலை பாடதிட்டத்தில் தமிழ் மக்கள் இன அழிப்பு செய்யப்பட்டார்கள் என்பதை சேர்த்தது போல் வடக்கில் உள்ள மாணவர்களை மூளை சலவை செய்ய புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தலாம் என அவர் கூறினார்.
இந்த வரவு செலவு திட்டத்தில் கூறப்பட்டுள்ள இதுபோன்ற விடயங்களை தான் எதிர்ப்பதாக அவர் கூறினார்.
மீண்டும் இஸ்ரேலியர்களை தாக்க ஹமாஸ் திட்டமிட்டுள்ளது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.
ஹமாஸுக்கு எதிரான போரின் காலம் குறித்த ஜெருசலேமின் நிலைப்பாட்டுடன் புதன்கிழமை பிற்பகுதியில் அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் மீண்டும் உறுதியாக தன்னை இணைத்துக் கொண்டார்,இஸ்ரேலியர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் காசா- ஹமாஸ் குழுவின் திறனை அகற்றும் இலக்கை அடையும் வரை இஸ்ரேல் தொடரலாம் என்று கூறினார்.
இஸ்ரேலின் இராணுவம் "தங்கள் இலக்குகளைப் பின்தொடர்வதில் தங்களால் முடிந்த அளவு எச்சரிக்கையைப் பயன்படுத்த வேண்டிய கடமை உள்ளது" என்று பிடன் மேலும் கூறினார். ஹமாஸ் அவர்கள் மீண்டும் இஸ்ரேலியர்களை தாக்க திட்டமிட்டுள்ளதாகவும், இது ஒரு பயங்கரமான இக்கட்டான நிலை என்றும் கூறினார்.
பல ஆய்வக அறிக்கைகள் மூலம் தரக்குறைவான எரிபொருள் என உறுதிப்படுத்தப்பட்ட எரிபொருள் கையிருப்பு குறித்து தான் அண்மையில் பாராளுமன்றத்தில் வெளிப்படுத்திய போதும், குறித்த எரிபொருள் ஏலவே சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும்,அமைச்சர் என்ன சொன்னாலும் அது நடந்துள்ளதால் இது தொடர்பில் சரியான தகவல்களை முன்வைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (16) பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
இந்த தரக்குறைவான எரிபொருள் நல்ல எரிபொருளுடன் கலந்து சந்தையில் பயன்பாட்டில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது என்றும்,இங்கு ஊழல் மோசடி இடம்பெற்றுள்ளதால் இதற்கு பொறுப்பான அமைச்சர் விளக்கமளிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இதற்கு முன்னர் பாராளுமன்றத்தில் இது குறித்து வெளிப்படுத்திய போது,பத்திரிகை செய்தி ஒன்றை மேற்கோள் காட்டி வெளிப்படுத்தியதாக தன் மீது குற்றம் சுமத்தியதாகவும்,
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதிப்படுத்திய தகவலின் அடிப்படையிலேயே தாம் இந்த தகவலை அன்று சமர்ப்பித்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
பிக்கு ஒருவரின் கத்திக்குத்துக்கு இலக்காகி காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தெனியாய பொலிஸில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார்.
குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் 37 வயதுடைய திருமணமானவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கத்திக்குத்துக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகத்தர், பிக்குவின சகோதரியுடன் தொடர்பு வைத்திருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் பல்லேகம, கங்கொட வீதியில் அமைந்துள்ள சம்போதி முதியோர் இல்லத்திற்கு அருகில் நடைபெற்றுள்ளது.
இருவருக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து, மறைத்து வைத்திருந்த கத்தியால் பொலிஸ் உத்தியோகத்தரிக் கழுத்து பகுதியில் பிக்கு சரமாரியாக தாக்கியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் 18 வயதுடைய பிக்குவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெனியாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
எச்.எம்.எம்.பர்ஸான்
வாழைச்சேனை பொலிஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன.
அண்மைக்காலமாக மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் உட்பட பல திருட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதனைக் கருத்தில் கொண்டு வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மக்களை அவதானத்துடன் இருந்து கொள்ளுமாறு அறிவுறுத்துதல் விடுத்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள வறுமை காரணமாக பரவலாக திருட்டுச் சம்பவங்கள் நடைபெறுகின்றன.
திருடர்கள் தொலைவில் இல்லை உங்களுக்கு நன்கு தெரிந்தவர்களாகவும் ஏன் உங்களது உறவினர்களாகவும் இருக்கலாம் எனவே எப்போதும் அவதானமாக இருங்கள் என்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துண்டுப் பிரசுரங்கள் மூலமாகவும், ஒலிபெருக்கி அறிவிப்பு ஊடாகவும் பொதுமக்களிடம் அறிவுறுத்தியுள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தவறாக கையாண்டமைக்கு தானும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பலருமே பொறுப்பு என்ற உயர் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
புதன்கிழமை (15) இரவு கண்டிக்கு விஜயம் செய்த முன்னாள் ஜனாதிபதி, பிறந்த நாளான இன்று பகல் தூபிக்கு அஞ்சலி செலுத்தினார்.
இதன்போது, நிதி முறைகேடுகள் மற்றும் பொருளாதாரத்தின் முறைகேடுகளுக்கு காரணமானவர்களுக்கு எதிரான அடிப்படை உரிமை மனுக்களில் உயர் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறீர்களா? என்று ஊடகவியலாளர்கள் கேள்வி கேட்டனர்.
அந்தக் கேள்விக்கு பதிலளித்த மஹிந்த ராஜபக்ஷ, தீர்ப்பை ஏற்கப் போவதில்லை என்றும், அதற்கான காரணங்களைத் தெரிவிக்க நீதிமன்றம் வாய்ப்பு அளிக்கும் போது விளக்கமளிப்பேன் என்றும் கூறினார்.
தனது காதலியை வரவழைப்பதற்காக அவளுடைய சகோதரனின் ஏழு வயது மகளை கடத்திச் சென்ற இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவமொன்று மொரகஹஹேன பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
குறித்த இளைஞன் சிறுமியை கடத்திச்சென்று சிறுமியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை காதலிக்கு அனுப்பியுள்ளதுடன் வரவில்லை என்றால் அச் சிறுமியை கொலை செய்து விடுவதாக மிரட்டி காதலியை வரவழைத்துள்ளார். பின்னர், காதலியின் உறவினர் ஒருவரின் வீட்டில் சிறுமியை விட்டு காதலியை கடத்திச்சென்றுள்ளார்.
இந்நிலையில் கடத்தப்பட்ட யுவதியை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளை ஆரம்பித்த மொரகஹஹேன பொலிஸார், கோனாபினுவல பிரதேசத்தில் வைத்து குறித்த இளைஞனையும் கடத்தலுக்கு உதவிய அவரது மைத்துனரையும் செவ்வாய்க்கிழமை (14) கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்த தகவலின்படி, கோனாபினுவல பிரதேசத்தில் உள்ள சந்தேக நபரின் வீட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த யுவதியை கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்
மேலும், கடத்தலுக்கு சந்தேகநபர்கள் பயன்படுத்திய காரையும் பொலிஸார் மீட்டுள்ளதுடன், அது வாடகை அடிப்படையில் எடுக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.