மலேசியாவில் நடைபெற்ற 40 வயதின் மேல், உலகளாவிய உயரம் பாய்தல் போட்டியில் இலங்கையை சேர்ந்த ஆசிரியர் ஹுமாயூன் தங்கப் பதக்கம் வென்றார்.

2023.09.14ஆம் திகதி, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தரப்பில் விடுக்கப்பட்ட வேண்டுகோளின் அடிப்படையில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரதிநிதிகளுக்கும் அந்நாட்டு தூதுவர் ஜூலி சங் இற்குமிடையில் சிநேகபூர்வ சந்திப்பொன்று ஜம்இய்யாவின் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்றது.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொள்கைகள், குறிக்கோள்கள்; சமூகம் தொடர்பிலான பணிகள்; தேசியம் மற்றும் சர்வதேசம் சார்ந்த முன்னெடுப்புக்கள், நல்லுறவுகள் பற்றிய அறிமுகங்கள் இந்த சந்திப்பின்போது அமெரிக்க தூதுவருக்கு வழங்கப்பட்டன.
குறித்த நிகழ்வில் ஜம்இய்யாவின் தலைவர் அஷ்ஷைக் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி கடந்த காலங்களில் சமூகம் மற்றும் தேசியம் சார்ந்து ஜம்இய்யா எவ்வாறான பணிகளை, செயற்பாடுகளை செய்திருக்கிறது என்பது பற்றிய தெளிவுகளை வழங்கியதோடு கலந்துகொண்டிருந்த நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களும் தெளிவுகளை வழங்கினர்.
இந்த சந்திப்பின்போது கருத்துத் தெரிவித்த அமெரிக்க தூதுவர் ஜூலி சங் அகில ஜம்இய்யத்துல் உலமா சமூகம் தொடர்பில் மேற்கொள்ளும் முன்னெடுப்புக்கள், பணிகளை தான் மதிப்பதாக தெரிவித்ததோடு மனித நேயப்பணி, நல்லிணக்கம் ஆகியவற்றிற்காக ஒன்றாக செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.
இந்நிகழ்வில் அமெரிக்க தூதரகம் சார்பில் அந்நாட்டு தூதுவர் ஜூலி சங் மற்றும் அவரது பிரதிநிதிகளான நஸ்ரின் மரிக்கார், ரூபி வூட்சைட் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சார்பில் தலைவர் அஷ்ஷைக் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி, பொதுச்செயலாளர் அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித், பொருளாளர் கலாநிதி அஹ்மத் அஸ்வர், உபதலைவர்களுள் ஒருவரான அஷ்ஷைக் ஏ.எம்.எம். கலீல் ஆகியோர் கலந்துகொண்டதுடன் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களான அஷ்ஷைக் எம்.எம்.எம். முர்ஷித், அஷ்ஷைக் எம்.எச்.எம். புர்ஹான், அஷ்ஷைக் எஸ்.எல். நவ்பர், அஷ்ஷைக் எம்.எப்.எம். பாழில், அஷ்ஷைக் எம்.ரிபாஹ் ஹஸன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
பு.கஜிந்தன்
பேத்தியின் எதிர்காலம் குறித்த கவலையில் பேத்திக்கு விஷ ஊசி செலுத்தி நானே கொலை செய்தேன். கொலை செய்த பின்னர் நானும் உயிர்மாய்த்துக்கொள்ள ஊசியை செலுத்திக்கொண்டேன் என, 12 வயது சிறுமியின் பாட்டி,பொலிஸாருக்கு வாக்குமூலம் அளித்துள்ளார்.
யாழ் . திருநெல்வேலி பகுதியில் உள்ள தனியார் விடுதி அறையில் இருந்து 12 வயது சிறுமி சடலமாகவும் 55 வயதான பெண்ணொருவர் சுயநினைவற்ற நிலையிலும் செவ்வாய்க்கிழமை (12) மீட்கப்பட்டனர்.
சுயநினைவற்ற நிலையில் மீட்கப்பட்ட பெண், யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையின் பின் உடல்நலம் தேறிய நிலையில் அவரை கோப்பாய் பொலிஸார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்,
பொலிஸ் விசாரணையின் போது,
தனது பெயர் நாகபூசணி (வயது 55) எனவும் தான் ஒரு மருத்துவ தாதியாக கடமையாற்றியவர் எனவும் கூறியுள்ளார். அத்துடன் தனது பேத்தியின் பெயர் பார்த்திமா ஹீமா (வயது 12) என தெரிவித்துள்ளார்.
" நான் மருத்துவ தாதியாக பணியாற்றியுள்ளேன். எனது மகள் முஸ்லிம் இளைஞன் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டாள். அவர்களுக்கு பிறந்த குழந்தைதான் பார்த்திமா ஹீமா (வயது 12) அவர்களுக்குள் பிணக்கு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். அதன் போது அவர்களது பிள்ளை என்னுடன் வளர்ந்து வந்தேன்.
சில காலத்தில் இருவரும் வெவ்வேறு திருமணம் செய்து வாழ சென்று விட்டனர். பேத்தி என்னுடன் வளர்த்து வந்தார். இந்நிலையில் , பேத்தியின் தகப்பன், தனது பிள்ளையை தன்னுடன் , அனுப்புங்கள் , நான் வளர்க்கிறேன் என கூறி எனது பேத்தியை அழைத்து சென்று விட்டார்.
பேத்தி என்னை விட்டு பிரிந்ததும், அவளின் பிரிவு துயரம், அவளின் எதிர்காலம் எப்படி இருக்க போகுதோ என்ற கவலையும் எனக்கு ஏற்பட்டது. அதனால் நான் சில மாதங்கள் மனஉளைச்சலுக்கு உள்ளாகி இருந்தேன்,
கடந்த சில தினங்களுக்கு முன்னர் , திருகோணமலைக்கு சென்று , எனது பேத்தியின் தந்தையிடம் , சில நாட்கள் பேத்தி என்னுடன் இருக்கட்டும், வீட்டுக்கு கூட்டி போய் சில நாட்களில் மீண்டும் அழைத்து வந்து விடுகிறேன் என கூறி பேத்தியை அழைத்துக்கொண்டு, யாழ்ப்பாணம் வந்தேன்.
யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவ மனையில் பேத்திக்கு மருத்துவம் செய்ய வந்துள்ளோம் என கூறி அந்த மருத்துவ மனைக்கு அருகில் உள்ள தங்குமிடத்தில் அறையை வாடகைக்கு பெற்று, தங்கி இருந்தோம்.
அப்போது, பேத்தியின் எதிர்காலம் எப்படி இருக்க போகுதோ என்ற கவலையில் பேத்தியை கொலை செய்து விட்டு , நானும் உயிரை மாய்த்துக்கொள்வோம் என முடிவெடுத்தேன்.
அறையில் பேத்தியை விட்டு விட்டு , அருகில் உள்ள மருந்தகத்திற்கு சென்று தூக்க மாத்திரை உள்ளிட்ட மாத்திரைகளையும் ஊசியையும் (சிறிஞ்) வாங்கினேன். என்னிடம் மருத்துவ தாதி என்பதற்கான அடையாள அட்டை இருந்தமையால் , அதனை காட்டி மருந்துகளை வாங்கினேன்.
அறைக்கு வந்து பேத்திக்கு தூக்க மாத்திரைகளை போட கொடுத்து , அவள் தூங்கிய பின்னர் மருந்துகளை கலந்து ஊசி மூலம் அவளின் உடலில் செலுத்தினேன்.
பின்னர் நானும் அதனை எனக்கு செலுத்திக்கொண்டேன். ஊசி ஏற்றியதில் அவள் இறந்து விட்டாள் , நான் காப்பாற்றப்பட்டு விட்டேன்" என தெரிவித்துள்ளார்.
அதனை தொடர்ந்து மேலதிக விசாரணைகளின் பின்னர் உயிரிழந்த சிறுமியின் பாட்டியை யாழ்.நீதவான் நீதிமன்றில் வியாழக்கிழமை (14) பொலிஸார் முற்படுத்திய போது , அவரை எதிர்வரும் 27ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
அதேவேளை , " எங்கள் இறப்பிற்கு யாரும் காரணம் இல்லை. எங்களை வீட்டுக்கு எடுத்து செல்ல வேண்டாம்" என சிறுமியின் பாட்டி பொலிஸாருக்கு எழுதிய கடிதமும் பொலிஸாரினால் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
கஞ்சா எமது கலாசாரத்துடன் பின்னிப்பிணைந்தது ஒன்று என சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் டயனா கமகே குறிப்பிட்டார்.
இலங்கையில் மருத்துவ தேவைக்காக கஞ்சா பயிரிடுவதை சட்டமாக்க தானே முன்னின்று செயற்பட்டதாக கூறிய அவர் அதற்காக தான் பெருமை அடைவதாகவும் கூறினார்.இன்று பலரும் தாங்கள் தான் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விடயத்தை செய்ததாக கூற முற்படுவதாகவும் அவர் கூறினார்.
எனது குழந்தைக்கு பல தந்தைகள் உள்ளனர் ஆனால் குழந்தையின் தாய் நான் மாத்திரமே என அவர் குறிப்பிட்டார்.
எதிர்வரும் வாரம் மருத்துவத்த தேவைக்காக ஏற்றுமதி செய்வதற்கு கஞ்சா பயிரிடுவதற்கு அனுமதி வழங்கப்படும் என கூறிய அவர் அது இலங்கை வரலாற்றில் முக்கியமான நாள் என அவர் கூறினார்.
சனல் – 04 தொலைக்காட்சி தனது கருத்துக்களை திரிபுபடுத்தி வெளியிட்டுள்ளதாக சுவிட்சர்லாந்துக்கான முன்னாள் இலங்கை தூதுவர் சரத்கோன்கஹகே தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தொடர்பான ஆவணப்படம் தொடர்பில், தான் தெரிவித்த கருத்துக்களையே சனல் -04 திரிபுபடுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில், கடந்த வருடம் அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுக் கொண்டிருந்தவேளை,
இலங்கையின் ஊடகவியாலாளரும் பிரிட்டிஸ் பிரஜையுமான பராஸ் சவுகெட்டாலி தன்னிடம் பேட்டி வழங்குமாறு கேட்டிருந்தார்.
பிரிட்டனை தளமாக கொண்டு இயங்கும் ஐ,டி,என், தொலைக்காட்சிக்கு பேட்டி வழங்குமாறு அவர் கோரியிருந்தார்.
எனினும், தான் வழங்கிய பேட்டியின் குரல் பதிவு முற்றிலும் திரிபுபடுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், இந்த தாக்குதல் முற்றுமுழுதாக ஐ,எஸ்,ஐ,எஸ், தீவிரவாதிகளின் நடவடிக்கையென்றே தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2005 மற்றும் 2010 காலத்தில் மஹிந்த ராஜபக்க்ஷ எப்படி தேர்தலில் வெற்றிபெற்றாரென அவர்கள் என்னை கேட்டனர். அவர் அந்த தருணத்தில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான தலைவராக காணப்பட்டாரென நான் தெரிவித்திருந்தேன்.
அவர்கள் இந்த இரண்டு பகுதிகளை மாத்திரம் பேட்டிக்கு பயன்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ள முன்னாள் தூதுவர், இலங்கை ஊடகங்களின் கோப்பு படங்களிலிருந்து சில படங்களை சனல் 04 பயன்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர்கள் இங்கு வந்து அந்த படம் பிடிக்கவில்லை உள்ளுர் ஊடகமொன்றே அதனை வழங்கியதாகவும் சரத்கோன்கஹகே தெரிவித்துள்ளார்.
2019 உயிர்த்த ஞாயிறுதாக்குதல்களை மையமாக கொண்டு இலங்கையின் அரசியல் நிலை குறித்து உரையாடும் விதத்தில் பிரிட்டனின் ஐ,டி,என், என்னை ஏமாற்றியுள்ளது.
2022,12, 22 ஆம் திகதி மாதிவெலயிலுள்ள எனது வீட்டில் வைத்து, நான் தெரிவித்த விடயங்கள் சனல் 4 இல் வெளியாகவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனை தளமாக கொண்ட ஐடிஎன் ஊடக நிறுவனமே அந்த பேட்டியை எடுத்துள்ளதாக நான் நினைத்தேன். சனல் 04 அதனை ஒளிப்பரப்பும் வரை அவர்கள்தான், அந்த பேட்டியை எடுத்துள்ளனர் என்பது எனக்கு தெரியாதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் பல்கலைக்கழகங்களில், உயர்கல்வி நிறுவனங்களில் இடம்பெறும் பகிடி வதை சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கு பொலிஸ் விஷேட தொலைபேசி இலக்கத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது தொடர்பான தகவல்களை 076 545 3454 என்ற கையடக்க தொலைபேசி இலக்கத்திற்கு தெரிவிக்க முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் புத்தளம், கண்டி, நுவரேலியா,காலி மற்றும்
மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும்.காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் 50 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹமபாந்தோட்டை மற்றும் குருநாகல் மாவட்டங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.
ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாரை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.
மத்திய மலைப்பிராந்தியங்களின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மற்றும் ஹமபாந்தோட்டை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 40 - 45 km வேகத்தில் அடிக்கடி ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பாடு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
கடல் பிராந்தியங்களில்
****************************
புத்தளம் தொடக்கம் கொழும்பு,காலி, மாத்தறை ஊடாக ஹமபாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 - 40 km வேகத்தில் தென் மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும்.
சிலாபம் தொடக்கம் மன்னார், காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான அத்துடன் ஹமபாந்தோட்டை தொடக்கம் பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 - 60 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும்.
புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி, ஹமபாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் கடல் அலையானது 2.0 ‐ 2.5 m உயரத்திற்கு மேலெளக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மொஹமட் சாலிஹீன்,
சிரேஸ்ட வானிலை அதிகாரி.
சட்டத்தரணியாவது உங்கள் கனவா?
ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்திற்கு சர்வதேச விசாரணை கோருவோர் தீவிரவாதிகளுக்கு ஆதரவானவர்கள் என பிவிதுரு ஹெல உருமய தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர் ..
ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்திற்கு சர்வதேச விசாரணை கோருகிறார்கள்.இது மிகவும் ஆபத்தான் விடயம்.ஈஸடர் தாக்குதலுடன் தொடர்புடைய தற்போது 45 பேர் சிறையில் உள்ளனர்.சர்வதேச விசாரணைக்கு சென்றால் உள்நாட்டு விசாரணைகளில் நம்பகம் இல்லை என கூறி தற்போது சிறையில் உள்ளவர்கள் பிணையில் வெளியே வர வாய்ப்புள்ளது என அவர் குறிப்பிட்டார்.