பொருளாதார நெருக்கடி நிலையால் கொழும்பு மத்தி வீதியோர வியாபாரிகளின் அவல நிலை
-ஹஸ்பர் ஏ ஹலீம்-
கொழும்பில் மிகவும் வண்ணமயமான துடிப்பான காட்சிகளில் ஒன்று பெட்டா சந்தைப் பகுதியின் நிரம்பிய தெருக்கள்
-ஹஸ்பர் ஏ ஹலீம்-
கொழும்பில் மிகவும் வண்ணமயமான துடிப்பான காட்சிகளில் ஒன்று பெட்டா சந்தைப் பகுதியின் நிரம்பிய தெருக்கள்
பௌத்தம் மற்றும் ஏனைய மதங்களை அவமதிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாக
60 வகை மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலையை 16 சதவீதத்தால் குறைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி 15 ம் திகதி வெளியிடப்படும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டார்.
நள்ளிரவில் டொலரின் பொறுமதி குறைந்தால் அதிகாலையில் பொருட்களின் விலைகள் குறையாது என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன குறிப்பிட்டார்.
டொலருக்கு நிகரான இலங்கை நாணய பெறுமதி வலுப்பெற்ற போதும் பொருட்களின் விலைகள் குறையவில்லை ஏன் என கேட்கப்பட்ட போது பதில் அளித்த அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“நள்ளிரவில் டொலரின் பொறுமதி குறைந்தால் அதிகாலையில் பொருட்களின் விலைகள் குறையும் என நாம் எதிர்பார்க்க முடியாது.அதிக விலைகொடுத்து நாட்டிற்கு இறக்குமதி செய்து களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள பொருட்களின் விலைகளை வர்த்தகர்களுக்கு குறைக்க செல்ல முடியாது.அவர்களும் சந்தையில் நீடிக்க வேண்டும்.இன்னும் இரண்டு மாத காலத்திற்குள் ரூபா வலுப்பெற்றமையின் நன்மை மக்களுக்கு கிடைக்கும் “ என அவர் கூறினார்.
இலங்கை மற்றும் டுபாயின் முன்னணி Travel Agency யான Goldfinchs Travel & Tourism நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.
டுபாயில், இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் இயங்கிவரும் முன்னணி Travels நிறுவனமான GOLDFINCHS TRAVELS & TOURISM டுபாய் கிளைக்கு SALES AND MARKETING Staff தேவை
மேற்குறிப்பிட்ட வேலைவாய்ப்புக்கான தகைமைகள்.
1. SALES AND MARKETING யில் 2 வருட கால அனுபவம்.
2. TRAVELS & TOURISM அனுபவம் தேவை.
3. ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
* சிறந்த சம்பளத்துடன் இலங்கை அலுவலகத்தில் 3 கிழமை Training வழங்கபடும்
உங்கள் CV களை +94324351234 என்ற WHATSAPP யிற்கோ அல்லது jobs@goldfinchs.com என்ற Email யிற்கு share செய்யவும்.
முகத்திற்கு மிளகாய் தூள் வீசி தங்க ஆபரணங்களை கொள்ளையிடும், திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழு உறுப்பினர்கள் ஐவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
களுத்துறை - பன்விலஹேன பகுதியைச் சேர்ந்த 30 வயதுக்கும் குறைந்த ஐவரே இவ்வாறு கைதாகியுள்ளனர்.
சந்தேகநபர்கள் இரண்டு முச்சக்கரவண்டிகள் மற்றும் திருடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிளில் சென்று, வீதியில் செல்லும் பெண்களின் முகத்திற்கு மிளகாய் தூள் வீசி அவர்கள் அணிந்திருக்கும் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு செல்வதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
கைதானவர்களிடம் இருந்து தங்க ஆபரணங்கள், தொலைபேசிகள், சிம் அட்டைகள், கொள்ளைச் சம்பவத்துக்கு பயன்படுத்திய முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் , கைக்குண்டு என்பன மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.
சந்தேகநபர்களை களுத்துறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
வாகனம் வழங்குவதாக உறுதியளித்து மாத்தறை பிரதேசத்தில் நபர் ஒருவரிடமிருந்து 80 இலட்சம் ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள திலினி பிரியமாலிக்கு எதிரான வழக்கை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி திரு. ஆதித்ய பட்டபெத்திகே முன்னிலையில் இன்று (05) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அப்போது, குற்றம்சாட்டப்பட்ட திலினி பிரியமாலி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, திலினி சுகயீனம் காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தார்.
அதன்படி, வழக்கை ஆகஸ்ட் 11ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவிட்ட நீதிபதி, அன்றைய தினம் ஏற்றுக்கொள்ளப்பட்ட மருத்துவ அறிக்கையுடன் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.
2010 ஆம் ஆண்டு மாத்தறை பிரதேசத்தில் நபர் ஒருவருக்கு வாகனம் தருவதாக கூறி அந்த நபரிடம் இருந்து 80 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொண்டு அதனை முறைகேடாக பயன்படுத்தியதாக சட்டமா அதிபர் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
பாதுக்க, வல்பிட்ட, திசர தோட்டம் பகுதியில் இன்று (05) காலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இலங்கை கூட்டுறவு காப்புறுதி நிறுவனத்தின் தலைவர் பதவியை பொறுப்பேற்கச் சென்ற நபர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
படுகாயமடைந்த நபர் திசர உயன, படகொட பகுதியைச் சேர்ந்த 62 வயதுடையவர்.
சம்பவம் தொடர்பில் மீகொட பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் ஹெரோயின் போதைப் பொருளை நுகர்ந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் – கரவெட்டி, துன்னாலையைச் சேர்ந்த 10 வயதுச் சிறுவன் ஒருவன் நெல்லியடிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளான்.
கரவெட்டி, துன்னாலையைச் சேர்ந்த பாடசாலையை விட்டு இடைவிலகிய குறித்த சிறுவன், உயிர் கொல்லி ஹெரோயின் பாவனைக்கு அடிமையாகியுள்ளான்.
இந்தச் சிறுவன் தொடர்பில் கிடைத்த இரகசியத் தகவல்களின் அடிப்படையில் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில், அந்தச் சிறுவன் ஊசி மூலம் ஹெரோயினை உடலில் ஏற்றிக் கொள்ளும் வேளையில் பொலிஸாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளான்.
தன்னைப் போலவே வேறு பல சிறுவர்களும் இவ்வாறு ஹெரோயின் நுகர்வில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளின் போது அந்தச் சிறுவன் தெரிவித்துள்ளான்.
டெங்கு ஒழிப்பு உதவியாளர்கள் போன்று பாசாங்கு செய்த மூவர் கெஸ்பேவ, படுவந்தர பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து, அங்கிருந்த 73 வயதுடைய வயோதிப பெண்ணின் கை, கால்களைக் கட்டிய பின்னர், தங்க நகைகளை கொள்ளையிட்டு, தப்பிச் சென்றுள்ளதாக கெஸ்பேவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சுமார் 13 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் மற்றும் கைத்தொலைபேசி என்பனவே கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
குறித்த வீட்டுக்குச் சென்ற கொள்ளையர்கள், வயோதிப பெண்ணிடம் அருந்துவதற்கு தண்ணீர் கேட்டதாகவும், அதனை கொடுப்பதற்காக சமையல் அறைக்குள் நுழைந்தபோது, அவரின் பின்னால் சென்று அவரது கை, கால்களைக் கட்டிவைத்து, பின்னர், அவர் அணிந்திருந்த மற்றும் வீட்டிலிருந்த தங்க நகைகள், கைத்தொலைபேசியை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.