பணம் கேட்டு வழங்காத வைத்தியரை கொலை செய்த யாசகர் கைது #இலங்கை




 தலாஹேன பிரதேசத்தில் 54 வயதுடைய வைத்தியர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


தலங்கம பொலிஸ் நிலையத்தில் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் நேற்று (23) கைது செய்யப்பட்டுள்ளார்.


வெல்லப்பல்ல பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய சந்தேகநபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.


சந்தேக நபர் யாசகராக இருந்து வந்த நிலையில், உயிரிழந்தவரிடம் பணம் கேட்ட போது ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக தலவத்துகொட பிரதேசத்தில் வைத்தியரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.


கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (24) கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.


தலங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பணம் கேட்டு வழங்காத வைத்தியரை கொலை செய்த யாசகர் கைது #இலங்கை பணம் கேட்டு வழங்காத வைத்தியரை கொலை செய்த யாசகர் கைது #இலங்கை Reviewed by Madawala News on May 24, 2023 Rating: 5

PHOTOS >> புத்தளம் தில்லையடி ஆசிரியர் தாக்கபட்டதை கண்டித்து அமைதி ஆர்பாட்டம்.



 ஒழுக்கத்துடன் ( தலை  முடி வெட்டி) பாடசாலைக்கு வருமாறு மாணவர்களிடம் வேண்டுகோள் விடுத்ததை அடுத்து  ஆத்திரமடைந்த மாணவர்கள் சிலர்  ,  ஆசிரியரின் வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவம், புத்தளத்தில் இடம்பெற்றது அறிந்ததே..

 புத்தளம் தில்லையடி  முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கல்விப்பொதுத் தராதர சாதாரண தரத்தில் கல்விப்பயிலும் மாணவர்களே இவ்வாறு தாக்குதல் நடத்தினர்.


புத்தளம் தில்லையடி  முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் ஒழுக்கத்துக்குப் பொறுப்பான ஆசிரியர் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்தே ஆசிரியரை மாணவர்கள் தாக்கினர்.

இந்நிலையில் குறிப்பிட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆசிரியருக்கு ஆதரவாகவும் தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராகவும்  அப்பாடசாலை சக ஆசிரியர்கள், அதிபர், நலன் விரும்பிகள் மாணவர்கள், பெற்றோர்கள்  இணைந்து தில்லையடி  முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் முன் அமைதி ஆர்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

இந்த ஆர்பாட்டத்தில் ஆசிரியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யபட வேண்டும் ' ஒழுக்கமற்ற மாணவ சமூகம் எமக்கு வேண்டாம் உட்பட பல கோரிக்கைகள் விடுக்கப்ட்டன.










PHOTOS >> புத்தளம் தில்லையடி ஆசிரியர் தாக்கபட்டதை கண்டித்து அமைதி ஆர்பாட்டம். PHOTOS >>  புத்தளம் தில்லையடி  ஆசிரியர் தாக்கபட்டதை கண்டித்து  அமைதி ஆர்பாட்டம். Reviewed by Madawala News on May 24, 2023 Rating: 5

மதுபான கடைகளை இரவு 9 மணிக்கே மூடி விடுவதால் பில்லியன் ரூபாய் வருமான இழப்பு ஏற்படுகிறது - பாராளுமன்றத்தில் குரல் கொடுத்த டயனா கமகே



மதுபான கடைகளை மதுவரிக்காக குறைந்தது காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையாவது திறந்திருக்கப்பட வேண்டும் என பாராளமன்ற உறுப்பினர் டயனா கமகே நேற்று தெரிவித்தார்.


மதுபான கடைகள் இரவு 9 மணிக்கே மூடப்படுவதால் சில பில்லியன் ரூபாய் வருமான இழப்பு ஏற்படுவதாக அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.


அரசாங்கம் மது வரியை விதித்தாலும் மீண்டும் அதை வசூலிக்க எவ்வித வழிகளும் இல்லை. மதுபானத்தை விற்றால் மட்டுமே அதை மீள வசூலிக்க முடியும். மதுபான கடைகள் மற்றும் உணவகங்கள் இரவு பத்து மணிவரையாவது திறந்திருக்கப்பட வேண்டும்.


அப்படியே 9 மணிக்கு மதுக்கடைகளை மூடினால் கூட, மதுவை வாங்க வேண்டுமென நினைப்பவர்களுக்கு 9 மணிக்குப் பின் அதை எங்கு எப்படி வாங்க வேண்டும் என்பது தெரியும்”, என அவர் மேலும் தெரிவித்தார்.
மதுபான கடைகளை இரவு 9 மணிக்கே மூடி விடுவதால் பில்லியன் ரூபாய் வருமான இழப்பு ஏற்படுகிறது - பாராளுமன்றத்தில் குரல் கொடுத்த டயனா கமகே  மதுபான கடைகளை இரவு 9 மணிக்கே  மூடி விடுவதால் பில்லியன் ரூபாய் வருமான இழப்பு ஏற்படுகிறது - பாராளுமன்றத்தில்  குரல் கொடுத்த டயனா கமகே Reviewed by Madawala News on May 24, 2023 Rating: 5

ஒழுக்கத்துடன் பாடசாலைக்கு வருமாறு மாணவர்களை எச்சரித்த ஆசிரியரின் வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் மாணவர்கள் தாக்குதல். #புத்தளம், தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயம்



 ஒழுக்கத்துடன் பாடசாலைக்கு வருமாறு மாணவர்களை எச்சரித்ததையடுத்து ஆத்திரமடைந்த மாணவர்கள்,  ஆசிரியரின் வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


இந்த சம்பவம், புத்தளத்தில் இடம்பெற்றுள்ளது. புத்தளம் தில்லைடிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கல்விப்பொதுத் தராதர சாதாரண தரத்தில் கல்விப்பயிலும் மாணவர்களே இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளனர் என daily mirror தமிழ் பதிப்பு செய்தி வெளியிட்டுள்ளது.


  புத்தளம் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் ஒழுக்கத்துக்குப் பொறுப்பான ஆசிரியர் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்தே ஆசிரியரை மாணவர்கள் தாக்கியுள்ளனர்.


இவ்வருடத்திற்கான கல்விப் பொதுத் தராதரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவர்கள் குழுவினால் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஒழுக்கத்துடன் பாடசாலைக்கு வருமாறு மாணவர்களை எச்சரித்த ஆசிரியரின் வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் மாணவர்கள் தாக்குதல். #புத்தளம், தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயம் ஒழுக்கத்துடன் பாடசாலைக்கு வருமாறு மாணவர்களை எச்சரித்த ஆசிரியரின் வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் மாணவர்கள் தாக்குதல். #புத்தளம், தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயம் Reviewed by Madawala News on May 24, 2023 Rating: 5

அபாயா விவகாரத்தில் , சண்முகா வித்தியாலயத அதிபர் தரப்பின் விட்டுக்கொடுப்பு மகிழ்ச்சியளிகிறது.



 எப்.முபாரக்-

திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கு எதிர்காலத்தில் ஹபாயா ஆடை தொடர்பில் எவ்வித பிரச்சினைகளையும் ஏற்படுத்தப்படமாட்டாது என்றும் கூறி நல்லெண்ண அடிப்படையில் வழக்குகளை இணக்கமாக முடித்துக்கொள்ள விரும்புவதாக சண்முகா வித்தியாலயத்தின் அதிபர் தரப்பானது நீதிமன்றில் முன்மொழிந்தமை மகிழ்ச்சியளிப்பதாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.


அத்தோடு, இவ்விடயமானது தமிழ் பேசும் மக்களிடையே நல்லதொரு நல்லிணக்கத்துக்கான சமிஞ்சையாக தென்படுவதாகவும் இரு தரப்பாரும் விட்டுக்கொடுப்போடும் இணங்கியும் செல்வதன் மூலம் பலம் பெற முடியும் என்றும் இம்ரான் எம்.பி. தெரிவித்துள்ளார். 


திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கு தனது கலாசார ஆடையான ஹபாயாவை அணிந்து கொண்டு கடமையேற்கச் சென்ற ஆசிரியை பஹ்மிதா றமீஸை கடமையேற்க விடாமல் தடுத்தமை தொடர்பில் பாடசாலை அதிபர் திருமதி. லிங்கேஸ்வரி ரவிராஜனுக்கு எதிராக  தாக்கல் செய்யப்பட்ட வழக்கு    திருகோணமலை நீதவான் நீதிமன்றின் செவ்வாய்க்கிழமை (23) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே மேற்படி இணக்கம் காணப்பட்டுள்ளது. 


இது விடயமாக பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கருத்து வெளியிடுகையில், கிழக்கு மாகாணத்தை பொறுத்தமட்டில் தமிழ், முஸ்லிம், சிங்களும் வாழ்கின்றனர். இங்கு, பல்சமய கலாசாரம் பின்பற்றப்படுகின்றது. எனவே, வெவ்வேறு இன அடையாளத்தை கொண்டவர்களாக இருந்தாலும் சரி, வெவ்வேறு சமயத்தை பின்பற்றினாலும் சரி, நமக்கிடையே புரிந்துணர்வும் சகிப்புத் தன்மையும் காணப்பட வேண்டும். 


திருமலை. சன்முகா ஹபாயா விவகாரமானது ஆரம்பத்திலேயே பேசி தீர்மானமொன்றிக்கு வந்திருக்கலாம். துரதிஸ்டமான சில நடவடிக்கைகள் பல கசப்பான அனுபவங்களை தந்துவிட்டது. மீண்டும், மீண்டும் இவற்றை பேசிக்கொண்டிருப்பதை விடுத்து, நாம் இணக்கமாக அடுத்த கட்டத்துக்கு செல்வது பற்றி சிந்திக்க வேண்டும். 


அத்தோடு, ஆசிரியை பஹ்மிதா தமது உரிமைக்காக நீண்ட நாட்கள் போராடினார். அவரை பாராட்டமல் இருக்க முடியாது. அத்தோடு, இவர் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணிகள் மற்றும் சட்ட ஆலோசகர்களையும் பாராட்டுவதில் மகிழ்ச்சியடைகிறேன் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் இவ்வாறு தெரிவித்தார்.

அபாயா விவகாரத்தில் , சண்முகா வித்தியாலயத அதிபர் தரப்பின் விட்டுக்கொடுப்பு மகிழ்ச்சியளிகிறது. அபாயா விவகாரத்தில் , சண்முகா வித்தியாலயத அதிபர் தரப்பின் விட்டுக்கொடுப்பு  மகிழ்ச்சியளிகிறது. Reviewed by Madawala News on May 24, 2023 Rating: 5

இலங்கை பௌத்த நாடு என்று நான் இனவாத அடிப்படையில் குறிப்பிடவில்லை.



(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த படையினரையும், விடுதலைப் புலிகளையும் ஒன்றிணைத்து நினைவுகூரும் வகையில் தூபி அமைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை கோழைத்தனமானது.

அரசாங்கத்தின் தீர்மானத்தையிட்டு வெட்கமடைகிறேன். தீர்மானம் திருத்திக் கொள்ளப்பட வேண்டும் என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்ற உற்பத்தி (விசேட ஏற்பாடுகள்) வர்த்தமானி கட்டளைகள் மீதான விவாதத்தின் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

யுத்தத்தில் உயிரிழந்த அனைவரையும் நினைவுகூறும் வகையில் 'நினைவு தூபி'ஒன்றை ஸ்தாபிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அறிய முடிகிறது.இதனை நல்லிணக்கம் என்று குறிப்பிட கூடாது.கோழைத்தனமான செயற்பாடு என்றே குறிப்பிட வேண்டும்.

நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த முப்படையினரையும்,விடுதலை புலிகள் அமைப்பினரையும் எவ்வாறு ஒருமித்து பார்க்க முடியும்.நாட்டில் அரசியலமைப்பினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒருமைப்பாட்டை பாதுகாக்கவே முப்படையினர் போராடினார்கள்.விடுதலை புலிகள் அமைப்பினர் நாட்டு எதிராக செயற்பட்டார்கள்.

முப்படையினரையும்,விடுதலை புலிகளையும் ஒருமித்து பார்க்க அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தையிட்டு வெட்கமடைகிறேன்.ஆகவே நினைவு தூபி அமைக்கும் தீர்மானத்தை அரசாங்கம் திருத்திக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துவேன்.

திருகோணமலை மாவட்டத்தில் சியாம் நிகாய மத வழிபாட்டுக்கு தமிழ் அரசியல்வாதிகள் காரணமின்றி தடையேற்படுத்துவார்களாயின் பாரிய அழிவு ஏற்படும் என்று நான் குறிப்பிட்ட கருத்தின் நோக்கத்தை அறியாமல் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்த கருத்துக்களையிட்டு கவலையடைகிறேன்.

இலங்கை தேரவாத பௌத்த நாடு என்பதை மறுக்க முடியாது.நாடு முழுவதும் பௌத்த சின்னங்கள் உள்ளன.இதன் காரணமாகவே இலங்கை பௌத்த நாடு என்று குறிப்பிடுகிறோம்.அதனை விடுத்து இனவாத அடிப்படையில் இலங்கை பௌத்த நாடு என்று குறிப்பிடவில்லை என்றார்
இலங்கை பௌத்த நாடு என்று நான் இனவாத அடிப்படையில் குறிப்பிடவில்லை.  இலங்கை பௌத்த நாடு என்று நான் இனவாத அடிப்படையில்  குறிப்பிடவில்லை. Reviewed by Madawala News on May 24, 2023 Rating: 5

இன்றைய வானிலை அறிக்கை விபரம்..



கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்தின் சில இடங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.

மேல் மாகாண கரையோரப் பிராந்தியங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கடல் பிராந்தியங்களில்
****************************
கொழும்பு தொடக்கம் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 ‐ 30 km வேகத்தில் தென் மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும்.

புத்தளம் தொடக்கம் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான வரையான அத்துடன் மாத்தறை தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 ‐ 45 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும்.

புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்யக்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

மொஹமட் சாலிஹீன்,
சிரேஸ்ட வானிலை அதிகாரி.
இன்றைய வானிலை அறிக்கை விபரம்.. இன்றைய வானிலை அறிக்கை விபரம்.. Reviewed by Madawala News on May 24, 2023 Rating: 5

அலி சப்ரி ரஹீம் 7.5 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார் - சிக்கிய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.



தங்கம் மற்றும் ஸ்மார்ட் போன்களை கொண்டு வந்த குற்றச்சாட்டில் நேற்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) இலங்கை சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அபராதம் விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு 7.5 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டதாக இலங்கை சுங்கத்துறை தெரிவித்துள்ளது.

பணம் செலுத்தப்பட்டு avarw விடுவிக்கப்பட்ட நிலையில்,
அவர் கொண்டுவந்த தங்கம் மற்றும் மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அலி சப்ரி ரஹீம் 7.5 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார் - சிக்கிய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அலி சப்ரி ரஹீம் 7.5 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார் - சிக்கிய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. Reviewed by Madawala News on May 24, 2023 Rating: 5

அலி சப்ரி ரஹீமிடம் இருந்து மூன்றரை கிலோ தங்கத்துடன் 91 ஸ்மார்ட் போன்களும் சிக்கியது ; சுங்க திணைக்களம் தெரிவிப்பு.



பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் ஸ்மார்ட்போன்களின் பெறுமதி குறித்த அப்டேட் ஒன்றை இலங்கை சுங்க திணைக்களம் வழங்கியுள்ளது.


3 கிலோவுக்கு மேல் எடையுள்ள தங்கத்தின் மதிப்பு ரூ. 74 மில்லியன். மேலும், அவரது பயணப் பையில் இருந்த 91 ஸ்மார்ட் போன்களை சுங்க அதிகாரிகள் மீட்டுள்ளனர், அவற்றின் மதிப்பு ரூ. 4.2 மில்லியன்.


புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், 78 மில்லியன் ரூபா பெறுமதியான அறிவிக்கப்படாத தங்கம் மற்றும் ஸ்மார்ட்ஃபோன்களை எடுத்துச் சென்றமை கண்டுபிடிக்கப் பட்டதையடுத்து, இன்று (23) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) இலங்கை சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
அலி சப்ரி ரஹீமிடம் இருந்து மூன்றரை கிலோ தங்கத்துடன் 91 ஸ்மார்ட் போன்களும் சிக்கியது ; சுங்க திணைக்களம் தெரிவிப்பு. அலி சப்ரி ரஹீமிடம் இருந்து மூன்றரை கிலோ தங்கத்துடன் 91 ஸ்மார்ட் போன்களும் சிக்கியது ;  சுங்க திணைக்களம் தெரிவிப்பு. Reviewed by Madawala News on May 23, 2023 Rating: 5

சமூக வலைதளங்களில் பரவி வரும் சிறுவர் கடத்தல் வீடியோக்களில் உண்மை இல்லை - நாட்டில் எங்கும் சிறுவர் கடத்தல் இடம்பெறவில்லை ; காவல்துறை அறிவிப்பு



பல்வேறு பகுதிகளில் குழந்தை கடத்தல் சம்பவங்கள் தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோக்களில் உண்மை இல்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் எங்கும் இவ்வாறான சிறுவர் கடத்தல் அல்லது காணாமல் போதல் இடம்பெறவில்லை என இன்று (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

“குறிப்பாக இத்தினங்களில் சமூக வலைத்தளங்களில் நாடளாவிய ரீதியில் சிறுவர் கடத்தல் சம்பவங்கள் இடம்பெறுவதாக பரவி வருகின்றது. மேலும், நாட்டின் சில பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. குறிப்பாக மன்னார், தலை மன்னார், திருகோணமலை, கிளிநொச்சி என பல்வேறு முறைப்பாடுகள் குழந்தைகள் கடத்தல் தொடர்பாக கிடைத்துள்ளன. ஆனால் இது தொடர்பான விசாரணைகளில் இதுவரை சந்தேகநபர்கள் அடையாளம் காணப்படவில்லை, மேலும் விசாரணையின் போது சில சந்தேகத்திற்குரிய விடயங்கள் தெரியவந்துள்ளன.. உண்மையில் வேன்களில் வந்து குழந்தைகள் கடத்தப்பட்ட சம்பவங்கள் குறித்து எங்கும் பதிவாகவில்லை. ஆனால் சில இடங்களில் பதற்றமான சம்பவங்கள் நடந்தன. மேலும் பல்வேறு பகுதிகளில் வதந்திகள் பரவின. மேலும் இவர்தான் குழந்தைகளை கடத்துவதாக சமூக வலைதளங்களில் பல்வேறு புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் அப்படிப்பட்ட நபர் குறித்து இலங்கை பொலிஸ் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. மேலும், குழந்தை கடத்தலுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கு குறிப்பிட்ட ஒருவரை அடையாளம் காண்பதற்கு ஊடகங்களின் உதவியை நாங்கள் கோரவில்லை. மேலும், பல்வேறு குழந்தைகள் கடத்தப்பட்டு காட்டுக்குள் மறைத்து வைக்கப்படும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அவை தொடர்பில் ஆய்வு செய்தபோது, ​​இவை பல்வேறு தேவைகளுக்காக வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. மேலும், வேறு நாடுகளில் இடம்பெறும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வெளியிடப்படுவதை அவதானிக்க முடிகிறது. எனவே, தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் என பொதுமக்களிடம் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோக்கள் போலியானது என தெரியவந்துள்ளது. இவ்வாறான குழந்தைகள் கடத்தப்பட்டதாகவோ அல்லது காணாமல் போனதாகவோ நாட்டில் எங்கும் பதிவாகவில்லை. அது போலியான தகவல். மேலும் வெளிநாடுகளில் உள்ள வீடியோக்கள்தான் பிரச்சாரம் செய்யப்படுகின்றன.
சமூக வலைதளங்களில் பரவி வரும் சிறுவர் கடத்தல் வீடியோக்களில் உண்மை இல்லை - நாட்டில் எங்கும் சிறுவர் கடத்தல் இடம்பெறவில்லை ; காவல்துறை அறிவிப்பு சமூக வலைதளங்களில் பரவி வரும் சிறுவர் கடத்தல் வீடியோக்களில் உண்மை இல்லை - நாட்டில் எங்கும் சிறுவர் கடத்தல் இடம்பெறவில்லை ; காவல்துறை அறிவிப்பு Reviewed by Madawala News on May 23, 2023 Rating: 5

ஆயுர்வேத மசாஜ் நிலையம் சுற்றி வளைப்பு.


பாணந்துறை, வாழைத்தோட்டம் பிரதேசத்தில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில், நடத்திச் செல்லப்பட்ட விபசார விடுதியை சுற்றி​வளைத்த பொலிஸார், பெண்கள் இருவர் உட்பட் நால்வரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் அந்த நிலையத்தின் உரிமையாளர், வைத்தியர் எனக் கூறப்படும் நபர், விபசாரத்தில் ஈடுபடுத்த இருந்த பெண்கள் இருவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

அவ்விரு பெண்களின் கைப்பைகளை சோதனைக்கு உட்படுத்திய போது, அவற்றில் இருந்து சுமார் 20 ஆணுறைகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.


பெண்கள் இருவரும் அகலவத்த மற்றும் பண்டாரகம பிரதேசங்களை வசிப்பிடமாகக் கொண்டவர்கள் ஆவர். அவர்களின் கைப்பைகளை சோதனைக்கு உட்படுத்திய போது, ​​அந்த பைகளில் சுமார் 20க்கும் மேற்பட்ட ஆணுறைகள் இருந்தன என்றும் பொலிஸார் ​தெரிவித்தனர்.


இன்றைக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னரே இந்த ஆயுர்வேத மசாஜ் நிலையம் திறக்கப்பட்டது.

.வாடிக்கையாளர் போல் ஒருவரை பயன்படுத்தி ஒரு மணிநேரத்துக்கு 2,000 ரூபாய்க்கு பெண்ணொருவரை விலைக்கு பெற்றுக்கொள்ளும் நோக்கில், மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே, இந்த நால்வரும் கைது செய்யப்பட்டனர்.
ஆயுர்வேத மசாஜ் நிலையம் சுற்றி வளைப்பு. ஆயுர்வேத மசாஜ் நிலையம்  சுற்றி வளைப்பு. Reviewed by Madawala News on May 23, 2023 Rating: 5

அலி சப்ரி ரஹீமிடமிருந்து மீட்கப்பட்ட தங்கத்தை அரசுடமை ஆக்குவோம் ; நிதி இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு



புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமிடமிருந்து மீட்கப்பட்ட தங்கம் அரசுடமை ஆக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.


இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.


வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்தடைந்த போது அறிவிக்கப்படாத மூன்றரை கிலோ தங்கத்தை வைத்திருந்த நிலையில் அலி சப்ரி ரஹீம் எம்.பி இலங்கை சுங்க பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அலி சப்ரி ரஹீமிடமிருந்து மீட்கப்பட்ட தங்கத்தை அரசுடமை ஆக்குவோம் ; நிதி இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு  அலி சப்ரி ரஹீமிடமிருந்து மீட்கப்பட்ட தங்கத்தை அரசுடமை ஆக்குவோம் ; நிதி இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு Reviewed by Madawala News on May 23, 2023 Rating: 5

திருகோணமலை சண்முகாவில் முஸ்லிம் ஆசிரியைகள் அபாயா அணிய தடையில்லை. நீதிமன்றில் அதிபர் தரப்பு உத்தரவாதம்.



திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கு தனது கலாச்சார ஆடையான ஹபாயாவை அணிந்து கொண்டு கடமையேற்கச் சென்ற ஆசிரியை பஹ்மிதா றமீஸ் அவர்களை கடமையேற்க விடாமல் தடுத்தமை தொடர்பில் பாடாசலை அதிபர் திருமதி. லிங்கேஸ்வரி ரவிராஜன் அவர்களுக்கெதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று (22) திருகோணமலை நீதவான் நீதிமன்றின் முன் அழைக்கப்பட்டிருந்தது.

எதிர்காலத்தில் ஹபாயா ஆடை தொடர்பில் எவ்வித பிரச்சினைகளையும் ஏற்படுத்தப்படமாட்டாது என்று கூறி நல்லெண்ண அடிப்படையில் வழக்குகளை இணக்கமாக முடித்துக்கொள்ள விரும்புவதாக சண்முகா வித்தியாலயத்தின் அதிபர் தரப்பானது திறந்த நீதிமன்றில் முன்மொழிந்திருந்தது. இது தொடர்பில் பாதிக்கப்பட்ட ஆசிரியையோடு கலந்தாலோசித்த ஆசிரியையின் சட்டத்தரணிகள் பின்வரும் நிபந்தனைகளை அதிபரும் பாடசாலை சமூகமும் ஏற்பின் இணக்கமொன்றுக்கு வர சாத்தியமிருப்பதாக கூறி அதனை நீதிமன்ற வழக்கேட்டிலும் பதிவு செய்திருந்தனர்.

1) இனி எக்காலத்திலும் சண்முகா கல்லூரிக்கு கற்பிக்க செல்கின்ற முஸ்லிம் ஆசிரியைகள் தமது ஆடையாக அபாயாவை அணிவதற்கு தன்னாலோ தனது பாடாசாலை சமூகத்தாலே எவ்வித தடங்கல்களும்; ஏற்படுத்தப்பட மாட்டாது என்று பாடசாலை அதிபர் வெளிப்படையாக உத்தவராதமளிக்க வேண்டும்.

2) 05 வருடங்களாக ஆசிரியை பஹ்மிதா றமீஸ் அவர்களுக்கு வழங்கப்படாமல் தடுக்கப்பட்டிருக்கின்ற சம்பள உயர்வு, பதவி உயர்வு என்பவற்றை பெறுவதற்கான வருடாந்த மீளாய்வு படிவம் உட்பட அனைத்து ஆவணங்களையும் சண்முகா வித்தியாலய அதிபர் உடனே கையெழுத்திட்டு வழங்க வேண்டும்.

3) ஆசிரியை பஹ்மிதா அவர்கள் சண்முகா வித்தியாலயத்திற்கு மீளவும் முறையாக நியமனம் பெறுகின்ற விடத்து அபாயா ஆடையுடன் தனது ஆசிரிய கடமைகளை மேற்கொள்ள எவ்வித ஆட்சேபனைகளையும் தனக்கு இல்லையென்ற உத்தரவாதத்தினை இந்நீதிமன்றில் அளிக்க வேண்டும்.

4) ஆசிரிய பஹ்மிதா அவர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட தீங்குகள் தொடர்பில் தமது மனவருத்தத்தினை மன்றில் வெளிப்படையாக பதிவு செய்ய வேண்டும்.

பாடசாலை அதிபர் சார்பில் தோன்றிய ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் இந்நிபந்தனைகளை உள்வாங்கி தனது சமர்ப்பணத்தினை செய்ததுடன் அதில் விசேடமாக இலங்கையில் முஸ்லிம் ஆசிரியைகள் தங்களது கலாச்சார ஆடையாக ஹபாயாவை அணிவதற்கு சட்டரீதியாக அவர்களுக்கு உரிமையுள்ளது என்பதனை ஏற்றுக்கொண்டிருந்தார்.

அவர் தனது சமர்ப்பணத்தில் 'இன்றிருக்கின்ற சட்டதிட்டங்களுக்கு அமைவாக எவரும் ஹபாயா அணிந்து வருவதற்கான உரிமை உண்டு என்பதையும் நாங்கள் உறுதிப்படுத்துகின்றோம். அதில் எந்தவிதமான தயக்கமோ, பின்வாங்கலோ கிடையாது' என்று கூறி அதனை வழக்கேட்டிலும் பதிவு செய்திருந்தார்.

மேலும் அன்றைய சம்பவம் கல்லூரி வளாகத்தில் நடந்திருப்பது வருந்தத்தக்க விடயம் என்றும் இவ்வழக்கு இணக்கமாக தீர்க்கப்படுமிடத்து பஹ்மிதா ஆசிரியை தனது சம்பள உயர்வுக்கான ஆவணங்களை சமர்ப்பிக்குமிடத்து அவற்றிற்கு உடனடியாக சிபாரிசு கொடுக்கப்படும் என்ற உறுதிமொழியையும் அதிபர் சார்பாக வழங்கியிருந்தார். இவ்விரு சமர்ப்பணங்களையும் பதிவுசெய்த நீதிமன்றம் அவற்றையேற்று தனது கட்டளையினை ஆக்கியதுடன் அவற்றினடிப்படையில் இச்சம்பவத்தோடு தொடர்புபட்ட 03 வழக்குகளும் முடிவுக்கு கொண்டு வரப்பட்டன.

இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட ஆசிரியை பஹ்மிதா சார்பில் சட்டத்தரணி ஏ.எம்.சாதிர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் குரல்கள் இயக்க சட்டத்தரணிகளான ஹஸ்ஸான் றுஷ்தி, றதீப் அகமட் மற்றும் எம்.எம்.ஏ. சுபாயிர் ஆகியோர் ஆஜராயிருந்ததுடன் தவிசாளர் சட்டமாணி றாஸி முகம்மத் அவர்களும் மன்றில் பிரசன்னமாயிருந்தார்.  

கடந்த 05 வருடங்களுக்கும் மேலாக இழுபறியில் இருந்த வந்த இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஆசிரியை சார்பாக குரல்கள் இயக்கம் தொடர்ந்தும் செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

சண்முகா ஹபாயா விவகாரம் என்பது ஒரு தனிப்பட்ட ஆசிரியைக்கு நடந்த அநீதி என்பதனை விட இது முஸ்லிம் பெண் அரச ஊழியர்களின் கலாச்சார ஆடை உரிமையினை உத்தரவாதப்படுத்துவற்கான போராட்டமாகும். சண்முகா இந்து மகளிர் கல்லூரி சமூகமானது முஸ்லிம் பெண் ஆசிரியைகள் தங்களது கலாச்சார ஆடையான ஹபாயாவை அணிந்து வருவதற்கு எந்த தடையுமில்லை என்று ஏற்றுக்கொண்டிருப்பது இச்சட்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.

இது 'துருக்கி தொப்பியினை நீதிமன்றில் அணிவதற்கான போராட்டத்திற்கு" நிகரான சட்ட போராட்டமாகும். இந்த வெற்றி ஆசிரியை பஹ்மிதா அவர்களுக்கு மட்டுமானதல்ல. மாறாக தங்களது கலாச்சார ஆடையாக ஹபாயாவை அணிந்து அரச அலுவலகங்களுக்கு பணிபுரியச் செல்கின்ற அனைத்து முஸ்லிம் பெண்களுக்கும் கிடைத்த வெற்றியாகும். 

நன்றி: தோழர் ராஸி முஹம்மத் Raazi Mohamed
திருகோணமலை சண்முகாவில் முஸ்லிம் ஆசிரியைகள் அபாயா அணிய தடையில்லை. நீதிமன்றில் அதிபர் தரப்பு உத்தரவாதம். திருகோணமலை சண்முகாவில் முஸ்லிம் ஆசிரியைகள் அபாயா அணிய தடையில்லை. நீதிமன்றில் அதிபர் தரப்பு உத்தரவாதம். Reviewed by Madawala News on May 23, 2023 Rating: 5

VIDEO - இரு மாணவர் குழுக்கள் தங்களுக்கு இடையில் கொ*லைவெ**றித் தாக்குதல்


பண்டாரவளை பிரதேசத்தில் இரு பாடசாலை மாணவர் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய பாடசாலை மாணவர்கள் 05 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

சமூக ஊடகங்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் பரவிய தாக்குதலின் காணொளிக் காட்சிகள் தொடர்பில் பண்டாரவளை பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்தே மாணவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

 

இரு மாணவர்களை கொடூரமாக தாக்கி கூரிய ஆயுதத்தால் காயப்படுத்த முயன்ற மூன்று பாடசாலை மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

இது தவிர அந்த இடத்தில் சண்டையிட்ட மேலும் இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

 

சந்தேகத்திற்குரிய மாணவர்கள் இன்று (23) பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Full video in fb  :

 https://fb.watch/kIg2KM7PO9/

VIDEO - இரு மாணவர் குழுக்கள் தங்களுக்கு இடையில் கொ*லைவெ**றித் தாக்குதல் VIDEO -  இரு மாணவர் குழுக்கள் தங்களுக்கு இடையில் கொ*லைவெ**றித் தாக்குதல் Reviewed by Madawala News on May 23, 2023 Rating: 5

பாராளுமன்ற உறுப்பினரை அலேக்காக தூக்கி சென்ற பொலீசார் ..



 யாழ். வலிகாமம் - தையிட்டி விகாரை திறப்பு விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் எதிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்து வந்த நிலையிலேயே செவ்வாய்க்கிழமை (23) காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.


“தையிட்டி பகுதியில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்ட விகாரையை அகற்றக் கோரி, திங்கட்கட்கிழமை (22) மதியம் 3 மணியளவில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் செயலாரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரன் உட்பட அக்கட்சியின் உறுப்பினர்கள் போராட்டத்தை ஆரம்பித்தனர்.


இந்த நிலையில்,  புதிய நீதிமன்ற உத்தரவொன்றை காண்பித்து போராட்டக்காரர்களை விலகும் படி பொலிஸார் கோரியிருந்தனர்.   


இதனை மறுத்த போராட்டக்காரர்கள் இன்று (23) காலை மீண்டும் எதிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்தனர்.


இதனை தொடர்ந்தே, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினரை அலேக்காக தூக்கி சென்ற பொலீசார் .. பாராளுமன்ற உறுப்பினரை அலேக்காக தூக்கி சென்ற பொலீசார் .. Reviewed by Madawala News on May 23, 2023 Rating: 5

வெளிநாட்டில் இருந்து மூன்றரை கிலோ தங்கத்தை கொண்டுவந்த குற்றத்தில், புத்தளம் M. P அலி சப்ரி ரஹீம் சுங்கப்பிரிவினரால் தடுத்து வைப்பு.




புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்த்தில் சுங்கப்பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.


வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்தடைந்த போது அறிவிக்கப்படாத மூன்றரை கிலோ தங்கத்தை வைத்திருந்த நிலையில் அலி சப்ரி ரஹீம் எம்.பி இலங்கை சுங்க பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்
வெளிநாட்டில் இருந்து மூன்றரை கிலோ தங்கத்தை கொண்டுவந்த குற்றத்தில், புத்தளம் M. P அலி சப்ரி ரஹீம் சுங்கப்பிரிவினரால் தடுத்து வைப்பு. வெளிநாட்டில் இருந்து  மூன்றரை கிலோ தங்கத்தை கொண்டுவந்த  குற்றத்தில், புத்தளம் M. P அலி சப்ரி ரஹீம் சுங்கப்பிரிவினரால் தடுத்து வைப்பு. Reviewed by Madawala News on May 23, 2023 Rating: 5

மும் மொழிகளிலும் வீதிக்கு பெயர் பிரகடனம் செய்யப்பட்டது. - இனிமேல் மூன்று மொழிகளிலும் 'கொம்பஞ்ஞ' வீதிய'என அழைக்கபடும் - தமிழில் 'ஸ்லேவ் ஐலன்ட்' கிராம உத்தியோகத்தர் பிரிவு.



 கொம்பனி வீதி கிராம உத்தியோகத்தர் (GN) பிரிவை மூன்று மொழிகளிலும் குறிப்பிடும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.


அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று காலை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த கூட்டத்தின் போதே இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.


கொழும்பு பிரதேச செயலகப் பிரிவில் 'கொம்பஞ்ஞ வீதிய' கிராம உத்தியோகத்தர் பிரிவு சிங்கள மொழியில் 'கொம்பஞ்ஞ வீதிய' எனவும் தமிழ் மொழியில் 'ஸ்லேவ்  ஐலன்ட்' எனவும், ஆங்கில மொழியில் “Slave Island” எனவும்  பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.


குறித்த கிராம உத்தியோகத்தர் பிரிவின் பெயர் மும்மொழிகளிலும் 'கொம்பஞ்ஞ வீதிய' என அறிமுகப்படுத்துவது மிகப் பொருத்தமானது என முன்மொழியப்பட்டுள்ளது.


அதற்கமைய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை திருத்தம் செய்து புதிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதன் மூலம் 'கொம்பஞ்ஞ வீதிய' என்பதை அவ்வாறே மும்மொழிகளிலும் வெளியிடுவதற்காக பொது நிருவாக, உள்நாட்டலுவலகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சராக  பிரதமர் தினேஸ் குணவர்தன சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை உடன்பாடு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.

மும் மொழிகளிலும் வீதிக்கு பெயர் பிரகடனம் செய்யப்பட்டது. - இனிமேல் மூன்று மொழிகளிலும் 'கொம்பஞ்ஞ' வீதிய'என அழைக்கபடும் - தமிழில் 'ஸ்லேவ் ஐலன்ட்' கிராம உத்தியோகத்தர் பிரிவு. மும் மொழிகளிலும் வீதிக்கு பெயர் பிரகடனம் செய்யப்பட்டது. -  இனிமேல் மூன்று மொழிகளிலும் 'கொம்பஞ்ஞ' வீதிய'என அழைக்கபடும் - தமிழில் 'ஸ்லேவ்  ஐலன்ட்'  கிராம உத்தியோகத்தர் பிரிவு. Reviewed by Madawala News on May 23, 2023 Rating: 5

ஜனவரி மாதம் முதல் தற்போது வரையான காலத்தில் பல தடவை பாடசாலை மாணவிகளை துஷ்பிரயோகம் செய்துவந்த ஆசிரியர் சிக்கினார்.



 பாடசாலை மாணவிகளை பாலியல் ரீதியில் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில்

ஜனவரி மாதம் முதல் தற்போது வரையான காலத்தில் பல தடவை பாடசாலை மாணவிகளை துஷ்பிரயோகம் செய்துவந்த ஆசிரியர் சிக்கினார்.  ஜனவரி மாதம் முதல் தற்போது வரையான காலத்தில் பல தடவை பாடசாலை மாணவிகளை துஷ்பிரயோகம் செய்துவந்த ஆசிரியர் சிக்கினார். Reviewed by Madawala News on May 23, 2023 Rating: 5

பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நாடளாவிய ரீதியில் ஆயுதம் தரித்த இராணுவ வீரர்களை களமிறக்கிய ஜனாதிபதி.



பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நாடளாவிய ரீதியில் ஆயுதம் தரித்த இராணுவ வீரர்களை களமிறக்குவதற்கான கட்டளையை ஜனாதிபதி அறிவித்துள்ளார் என சபா நாயகர் மஹிந்த யாபா அபேவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நாடளாவிய ரீதியில் ஆயுதம் தரித்த இராணுவ வீரர்களை களமிறக்கிய ஜனாதிபதி.  பொதுமக்களின் பாதுகாப்பிற்காக  நாடளாவிய ரீதியில் ஆயுதம் தரித்த இராணுவ வீரர்களை களமிறக்கிய  ஜனாதிபதி. Reviewed by Madawala News on May 23, 2023 Rating: 5

வீதியில் கண்டெடுத்த நான்கு இலட்சம் உரியவர்களிடம் ஒப்படைப்பு.



வீதியில் கண்டெடுத்த நான்கு இலட்சம் ரூபாய் பணத்தை, பொலிஸார் மூலம் உரியவரிடம் ஒப்படைத்த சம்பவம் நேற்று (22) மதியம் காத்தான்குடியில் இடம்பெற்றுள்ளது.


காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதான வீதி, இரும்புத் தைக்கா பள்ளிவாயலுக்கு முன்னால், கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட பணத்தை, காத்தான்குடியைச் சேர்ந்த எம்.எம் மொய்னுல்ஹக் மற்றும் கொக்கட்டிச்சோலையைச் சேர்ந்த தெய்வதீபன் என்ற ஓட்டோ சாரதியும் கண்டெடுத்து இருந்தனர்.


குறித்த பணத்தை

காத்தான்குடி பொலிஸ் நிலைய போதை ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி எச்.எம் சியாமிடம் ஒப்படைத்ததைத் தொடர்ந்து, குற்றத்தடுப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயனசிறி பணத்தை உரியவரிடம் ஒப்படைத்தார்.

கடைக்காரர் ஒருவர் சீனி கொள்வனவுக்காகக் கொடுத்த மேற்படி பணத்தை, லொறிச்
சாரதியான நபர் கொண்டு
வரும்போதே காணாமல்
போயுள்ளது.

பணத்தைத்
தொலைத்த நபர், மிகுந்த
நன்றி உணர்வுடன்
பணத்தைப் பெற்றுக்
கொண்டார்.


பொலிஸ்
நிலைய குற்றத்தடுப்பு
பொறுப்பதிகாரி எம்.
எஸ்.ஏ.எம் றஹீம் உட்பட
பொலிஸ் அதிகாரிகளும்
இந்த நிகழ்வில் கலந்து
கொண்டனர
வீதியில் கண்டெடுத்த நான்கு இலட்சம் உரியவர்களிடம் ஒப்படைப்பு. வீதியில் கண்டெடுத்த நான்கு இலட்சம்  உரியவர்களிடம் ஒப்படைப்பு. Reviewed by Madawala News on May 23, 2023 Rating: 5

கல்வி உட்பட கிழக்கு மாகாணத்தின் முன்னேற்றங்கள் குறித்து அதிகாரிகளுக்கு ஆளுனர் விடுத்த பணிப்புரைகள்



ஹஸ்பர்_

கிழக்கு மாகாணத்தின் கல்வி முன்னேற்றம் குறித்து கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் மாகாண பிரதம செயலாளர், மாகாண கல்வியமைச்சின் செயலாளர், மாகாண கல்வி பணிப்பாளர், கல்வி வலய பணிப்பாளர்கள் மற்றும் பிரதேச கல்வி அதிகாரி ஆகியோருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.குறித்த கலந்துரையாடலானது திருகோணமலையில் உள்ள ஆளுனர் செயலகத்தில் (22) இடம் பெற்றது.

இதில் கிழக்கு மாகாணத்தில் குறைந்த மதிப்பெண்ணாக 52% இற்கும் குறைந்த மதிப்பெண்களைகளைக் கொண்ட கல்வி வலயங்களின் கல்வி தரத்தை உயர்த்துவதற்கான முன்மொழிவுகளை 7 நாட்களுக்குள் சமர்ப்பிக்கவும்.

,.நிலுவையில் உள்ள அனைத்து குற்றச்சாட்டுகள் மீதான விசாரணைகளை 30 நாட்களுக்குள் மேற்கொள்ளவும், நிதிக் குற்றங்கள், பாலியல் வன்கொடுமைகள் போன்ற பிற அங்கீகரிக்கப்படாத நடைமுறைகள் குறித்த அறிக்கைகளை ஒப்படைத்து கடுமையான நடவடிக்கை எடுத்தல்
,பாடசாலைகளில் மேலதிகமாக உள்ள ஆசிரியர்களை பற்றாக்குறை காணப்படும் பாடசாலைக்கு இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுதல்,
.உட்கட்டமைப்பு வசதிகள் பற்றாக்குறை உள்ள பாடசாலைகளின் பட்டியல்களை தயாரித்தல்,
பாடசாலையை அண்மித்த இடங்களைக் போதைப்பொருள் பாவனையை முற்றாக ஒழிப்பதற்காக விசேட கவனம் செலுத்துவதற்காக விசேட குழு நியமனம்,
மாணவர்களின் இடைவிலகள்களை தவிர்ப்பதற்காக விசேட செயற்திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் ,

பின்தங்கிய பிரதேசங்களில் காணப்படும் பாடசாலைகளில் உள்ள மாணவர்களின் கல்வி திறனை விருத்தி செய்வதற்கு தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை பெற்று கொள்ளுதல்,

.தூர பிரதேசங்களில் சேவையை மேற்கொள்ளும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு அருகில் இருக்கும் பாடசாலைகளில் சேவையை மேற்கொள்ள இடமாற்றம் செய்வதற்கான வசதிகளை உருவாக்குதல் போன்ற வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது குறித்து கலந்துரையாடப்பட்டதுடன் உரிய அதிகாரிகளிடத்தில் பணிப்புரை விடுத்தார்.
கல்வி உட்பட கிழக்கு மாகாணத்தின் முன்னேற்றங்கள் குறித்து அதிகாரிகளுக்கு ஆளுனர் விடுத்த பணிப்புரைகள்  கல்வி உட்பட கிழக்கு மாகாணத்தின் முன்னேற்றங்கள் குறித்து அதிகாரிகளுக்கு ஆளுனர் விடுத்த பணிப்புரைகள் Reviewed by Madawala News on May 23, 2023 Rating: 5

கல்கிஸை பிரதேசத்தில் கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்த ஹபுகஸ்தலாவை பாயிஸ் முகம்மத் நாஸிர்.



ஹபுகஸ்தலாவை அஹஸ்வெவ வீதியில் பைத்துல் முகர்ரம் மஹல்லாவைச் சேர்ந்த காலம் சென்ற M L M பதுர்தீன் அவர்களின் பேரனும்,

காலம் சென்ற பாயிஸ் அவர்களின் அன்புப் புதல்வருமாகிய நாஸிர் அவர்கள் காலம் சென்று விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னார் நஸ்மீர்,நாஸிக்,ஷிஹாரா,ஜெமீனா,நஸ்மிலா,நஸீஹா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.


ஜனாஸா தெஹிவளையில்.

நல்லடக்கம் பற்றிய விபரம் இன்ஷா அல்லாஹ் பின்னர் அறிவிக்கப்படும்.

*தகவல் -தாஜுதீன் PC*

மேலதிக விபரம் 👇
கல்கிஸை பகுதியில் உள்ள உணவகமொன்றின் உரிமையாளர் (பாயிஸ் முகம்மத் நாஸிர் ) கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபருக்கும், உணவக உரிமையாளருக்குமிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதில் இந்த சம்பவம் நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் தப்பிச்சென்றுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவரின் ஜனாசா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

கல்கிஸை பிரதேசத்தில் கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்த ஹபுகஸ்தலாவை பாயிஸ் முகம்மத் நாஸிர். கல்கிஸை பிரதேசத்தில் கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்த ஹபுகஸ்தலாவை பாயிஸ் முகம்மத் நாஸிர். Reviewed by Madawala News on May 23, 2023 Rating: 5

இரத்மலானையில் பேக்கரி உரிமையாளர் ( முகம்மட் நாஸிர் 29 வயது ) குத்திக் கொலை.



இரத்மலானையில் பேக்கரி உரிமையாளர் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு , கொலையாளி தப்பி ஓடிவிட்டதாக கல்கிஸை பொலிஸார் தெரிவித்தனர்.



மொஹமட் பாயிஸ் முகம்மட் நாஸிர் என்ற பேக்கரி உரிமையாளரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.



கத்திக்குத்துக்கு இலக்கான பேக்கரி உரிமையாளர் களுபோவில போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.



தப்பியோடிய சந்தேக நபரை கைது செய்வதற்காக கல்கிஸை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இரத்மலானையில் பேக்கரி உரிமையாளர் ( முகம்மட் நாஸிர் 29 வயது ) குத்திக் கொலை. இரத்மலானையில் பேக்கரி உரிமையாளர் ( முகம்மட் நாஸிர் 29 வயது ) குத்திக் கொலை. Reviewed by Madawala News on May 22, 2023 Rating: 5

வீடொன்றை சுற்றிவளைத்து பெண்ணொருவரை கைது செய்த பொலிஸார் மற்றும் கடற்படை.



குச்சவெளி பொலிஸாருடன் இணைந்து இலங்கை
கடற்படையினர் திருகோணமலை குச்சவெளி காசிம்நகர் பகுதியில் திங்கட்கிழமை (22) நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, வாட்டர் ஜெல் (Water Gel) எனப்படும் வெடிபொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டார்.

சந்தேகத்துக்கு இடமான வீடு சுற்றிவளைக்கப்பட்டது. அங்கிருந்து 54 வாட்டர் ஜெல் மற்றும் மின்சாரம் அல்லாது பயன்படுத்தக்கூடிய டெட்டனேட்டர்கள் 40 உம் கைப்பற்றப்பட்டன.
வீடொன்றை சுற்றிவளைத்து பெண்ணொருவரை கைது செய்த பொலிஸார் மற்றும் கடற்படை. வீடொன்றை சுற்றிவளைத்து பெண்ணொருவரை கைது செய்த பொலிஸார் மற்றும் கடற்படை. Reviewed by Madawala News on May 22, 2023 Rating: 5

இன்று முதல் குறைக்க பிஸ்கட் விலையை ( 100 க்கு 8 முதல் 15 ரூபா ) குறைக்க தீர்மானம்.



சந்தைகளில் பிஸ்கட் விலையை இன்று முதல் குறைக்க பிஸ்கட் உற்பத்தி நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.


இதன்படி, 8 முதல் 15 சதவீதத்தால் பிஸ்கட் விலை குறைவடையவுள்ளதாக குறித்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.


இதற்கமைய, புதிய விலை அடங்கிய பிஸ்கட் இன்று முதல் சந்தைகளில் விற்பனை செய்யப்படவுள்ளதாக நாட்டின் முன்னணி பிஸ்கட் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.


டொலர் மற்றும் மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக கடந்த காலங்களில் முன்னணி பிஸ்கட் நிறுவனங்கள் தங்களது உற்பத்தி பொருட்களின் விலைகளை அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
இன்று முதல் குறைக்க பிஸ்கட் விலையை ( 100 க்கு 8 முதல் 15 ரூபா ) குறைக்க தீர்மானம். இன்று முதல் குறைக்க பிஸ்கட் விலையை ( 100 க்கு 8 முதல் 15 ரூபா ) குறைக்க தீர்மானம். Reviewed by Madawala News on May 22, 2023 Rating: 5
Powered by Blogger.