ஒலுவிலின் முதலாவது பெண் சட்டத்தரணியாக எம்.எம். பாத்திமா ஹுஸ்னா தேர்வானார்.

இந்திய பிரதமர் மோடி, அமைதிக்கான நோபல் பரிசை பெற தகுதியான நபர் என்று நோபல் பரிசின் கமிட்டி உறுப்பினர் அஸ்லே டோஜே தெரிவித்துள்ளார்.
நோபல் பரிசு கமிட்டியின் உறுப்பினரான அஸ்லே டோஜே, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் இன்று தனியார் செய்தி தொலைகாட்சி ஒன்றில் அவர் பேசும்போது, “அமைதிக்கான நோபல் பரிசுக்கு மிகப்பெரிய போட்டியாளராக இருப்பவர் பிரதமர் நரேந்திர மோடி. அமைதியை நிலைநாட்டக்கூடிய நம்பிக்கைக்குரிய தலைவராக மோடி உள்ளார். இன்று உலகில் உள்ள அமைதியின் மிகவும் நம்பகமான முகமாக பிரதமர் மோடி இருக்கிறார். போரிடும் நாடுகளுக்கு இடையே போரைத் தடுத்து அமைதியை நிலைநாட்டும் திறன் கொண்டவர் மோடி. நம்பகமான தலைவர்.
பிரதமர் மோடி செயல்படுத்திய கொள்கைகளால் இந்தியா பணக்கார நாடாகவும், சக்திவாய்ந்த நாடாகவும் வளர்ந்து வருகிறது . பிரதமர் மோடி அமைதிக்கான நோபல் பரிசை வென்றால், அது தகுதியான தலைவருக்கு ஒரு வரலாற்று தருணமாக இருக்கும்” என்று கூறினார்.
மடகஸ்காரில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு குற்றப்புலனாய்வு திணைக்களத்தின்கீழ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள நந்துன் சிந்தக விக்ரமரத்ன என்ற ஹரக் கட்டாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உத்தரவிடுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் நீதிப் பேராணை மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் காவல்துறை காவலில் இருந்த மாகந்துரே மதுஷ் போன்ற சந்தேகநபர்கள் விசாரணைக்காக வெளியே அழைத்துச் செல்லப்பட்ட போது உயிரிழந்த விடயத்தை சுட்டிக்காட்டி சந்தேகநபரின் தந்தை இந்த மனுவை சமர்ப்பித்துள்ளார்.
இதன்படி, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள தமது மகனின் பாதுகாப்பு தொடர்பில் பாரிய சிக்கல் எழுந்துள்ளதாகவும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த மனுவில் பிரதிவாதிகளாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்புச் செயலாளர், காவல்துறைமா அதிபர், மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
இதேவேளை, ஹரக் கட்டாவுடன் மடகஸ்காரில் கைதுசெய்யப்பட்ட மற்றொரு சந்தேகநபரான 'குடு சலிந்து' என்றழைக்கப்படும் சலிந்து மல்ஷிக குணரத்ன சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணையின்றி நிராகரிக்குமாறு சட்டமா அதிபர் நேற்று கோரியிருந்தார்.
குடு சாலிந்துவின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரிக்கை விடுத்து இந்த நீதிப்பேராணை மனுவை அவரின் தாயார் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளார்.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ.மரிக்கார் ஆகியோர் அடங்கிய இருவரடங்கிய நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் இந்த மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி மன்றாடியார் நாயகம் ஷனில் குலரத்ன, அடிப்படை ஆட்சேபனைகளை முன்வைத்தார்.
இந்த நிலையில், மனுதாரர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி நளின் லத்துவஹெட்டி, மகனின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக தமது கட்சிக்காரர் தனக்கு அறிவித்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இரு தரப்பு சமர்ப்பணங்களை கருத்தில் கொண்டு, மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர், மனுவை எதிர்வரும் 20 ஆம் திகதி அழைப்பதற்கு தீர்மானித்ததுடன், மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள பிரதிவாதிகள் குறித்த நிலைப்பாட்டை அன்றைய தினம் தெரிவிக்குமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டார்.
கடந்த முதலாம் திகதி மடகஸ்காரில் 8 பேருடன் கைது செய்யப்பட்ட பிரபல குற்றக் கும்பலின் உறுப்பினர் நதுன் சிந்தக எனப்படும் ஹரக் கட்டா மற்றும் குடு சலிந்து நேற்று அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.
உலக சந்தையில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை இன்று (16) கணிசமானளவு குறைந்துள்ளது.
அதன்படி, WTI மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை தற்போது 67.90 அமெரிக்க டொலர்களாக உள்ளது.
பிரண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 74.5 அமெரிக்க டொலராக குறைந்துள்ளது.
ரஷ்ய - யுக்ரைன் மோதலால் உயர்ந்து வந்த மசகு எண்ணெய் விலை, 2021 ஆம் ஆண்டுக்கு பின், இத்தகைய அளவுக்கு சரிந்துள்ளது.
மோதலின் ஆரம்ப காலத்தில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 100 டொலருக்கு மேல் உயர்ந்து காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த வருடம் முத்துராஜவெல கடற்கரையிலிருந்து நீர்கொழும்பு கடற்கரை வரையிலான இரண்டு மில்லியன் கனமீற்றர் கடல் மணல் அள்ளப்படும்
Ø பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ரூ.200 மில்லியன் இழப்பீடு...
Ø தரமான கடல் மணலை மக்களுக்கு மானிய விலையில் வழங்க திட்டம்...
- அமைச்சர் பிரசன்ன ரணதுங்க
இவ்வருடம் இரண்டு மில்லியன் கனமீற்றர் கடல் மணலை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் திரு.பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரைக்கு அமைவாக இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
கழுவி தேவையான தரத்தில் தயாரிக்கப்பட்ட கடல் மணலின் கனசதுரத்தை பொதுமக்களுக்கு மலிவு விலையில் விற்பனை செய்யுமாறு இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திற்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
முத்துராஜவெல கடற்கரையிலிருந்து நீர்கொழும்பு வரை 10-15 கிலோமீற்றர் தூரத்தில் கடலில் இருந்து நிலத்திற்கு கடல் மணல் அள்ளப்படும்.
இந்த கடல் மணல் அகழ்வுத் திட்டத்தினால் கொழும்பிலிருந்து நீர்கொழும்பு வரையான கடற்பரப்பில் வாழும் மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மீனவ சமூகத்தின் முன்னேற்றத்திற்காக அந்த மீனவ பிரதேசங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வது தொடர்பில் கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றைச் செய்யுமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். அதற்கு முன்னதாக, இது தொடர்பில் அரசியல் அதிகாரிகள், பிரதேசத்தின் மதத் தலைவர்கள் மற்றும் மீனவ சங்கங்களுக்கும் தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
மீனவ சமூகத்தின் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக 200 மில்லியன் ரூபாவை வழங்குவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது. இந்தப் பணத்தை அத்தியாவசியத் தேவையுடைய மக்களுக்கு வெளிப்படைத்தன்மையுடன் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் அமைச்சர் கடுமையாக வலியுறுத்தினார்.
கடலில் இருந்து குழாய்கள் மூலம் ஏற்றப்படும் மணலை சம்பந்தப்பட்ட இடத்துக்கு கொண்டு வந்து, திறந்த வெளியில் மணல் திட்டுகளாக சேமித்து, மணலை இயந்திரத்தில் செலுத்தி, கழுவி, சுத்தம் செய்து, தேர்வு செய்து உலர்த்துதல் ஆகிய பிரிவுகளாக நடைபெறும்.
கழுவி சுத்தம் செய்து உலர்த்தப்படும் உப்பு இல்லாத கடல் மணலை பொறியாளர்களின் மேற்பார்வையில் தேவையான தரத்தில் தயாரிக்கின்றனர். அதன் பின்னர் கெரவலப்பிட்டிய - முத்துராஜவெல மணல் விற்பனை நிலையத்தில் கடல் மணல் விற்பனை செய்யப்படும்.
கடல் மணலைப் பெறுவதற்கு முன்னர் கரையோரப் பாதுகாப்பு அதிகாரசபை, நாரா நிறுவனம் மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபை போன்ற நிறுவனங்களிடமிருந்து சுற்றாடல் மதிப்பீட்டு அறிக்கைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டுமெனவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வலியுறுத்தினார்.
(அஷ்ரப் ஏ சமத்)
புதுமைப் பெண் , திட்டத்தின் கீழ் இதுவரை 15,000 பெண்கள் தாம் செய்யும் சுயதொழில் முயற்சியில் டிஜிட்டல் முறையில் பயிற்சி அளிக்கப்பட்டு இலங்கையின் பொருளாதாரத்திற்கு மட்டுமல்ல நமது குடும்பத்தின் வருமானத்திற்கும் சொந்தக் காலில் நின்று வருமானம் பெருகின்றனர் என இராஜாங்க அமைச்சர் கனக்க கேரத் தெரிவித்தார்.
.
மேற்கண்டவாறு புதன்கிழமை (15) பி.எம்.ஜ.சி.எச்சில் இலங்கையில் உள்ள 24 மாவட்டங்களிலும் மகளிர் விவகார அமைச்சின் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் கைத்தொழில் முயற்சியாளர்கள் திட்டத்தின் கீழ் ”புதுமைப் பெண்” விருது வழங்கும வைபவம் நடைபெற்றது..
இந் நிகழ்வுக்கு தொழில்நுட்ப தகவல் துறை இராஜாங்க அமைச்சர் கனக கேரத், மற்றும் மகளிர் மற்றும் சிறுவர் விவகார இ்ராஜாங்க அமைச்சர் கீத்தா குமாரசிங்கவின் அதிதிகளாக கலந்து கொண்டு விருதுகளை வழங்கி வைத்தனா் அத்துடன் அமைச்சின் அதிகாரிகளும் இத்திட்டத்தினை இரண்டு அமைச்சுக்களுடன் இணைந்து செயற்படுத்து நிறுவனங்கள் அதிகாரிகளும் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
தொடா்ந்து அங்கு உரையாற்றிய இராஜாங்க அமை்சசர் கனக்க கேரத்
இலங்கையின் பொருளாதாரத்திற்கு பெண்கள் உதவி வருகிறார்கள். இப் பெண்களது உற்பத்திகள் வெளிநாட்டவர்களும் கொள்முதல் செய்வதற்கு டிஜிட்டல் முறையில் பயிற்சி அளிக்கப்பட்டது.
இப் பெண்கள் தமது உற்பத்திகளை சமூக வலைத்தளங்கள் ஊடாக சந்தைப்படுத்தல் முறையைில் நமது வீடுகளில் இருந்தவாரே இத் தொழில்களை செய்துவருகின்றனா். இப் பெண்களுக்கு கனனி முறையில் பெற்ற பயிற்சியின் ஊடகாவே உள்ளுரிலும் சர்வதேச மட்டத்திலும் தமது உற்பத்திகளை பொதி செய்து ஒன்லைன் ஊடகா தபால் மூலம் பொதிகளை அனுப்புகின்றனர். இத்துறையில் இவா்கள் கைத்தொழில் கொண்ட வல்லுணர்களாகவும் விளங்கி வருகின்றனதையிட்டு பாராட்டுத் தெரிவித்துக் கொள்கிறேன். என தொழில்நுட்ப தகவல் சம்பந்தமான இராஜாங்க அமைச்சர் கனக கேரத் தெரிவித்தார்
வுவனியாவினைச் சேர்ந்த நிசாந்தன் சோபனா இங்கு கருத்து தெரிவிக்கையில் நான் இத்துறையில் வவுனியாவில் உள்ள பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உதவுியுடன் டிஜிட்டல் முறைமை மற்றும் சமுகவலைத்தளங்கள் ஊடாக பயிற்சியைப் பெற்றேன். எனது உற்பத்தியானது வாழை மரத்தின் நார்களை வாங்கி அதனை பதனிட்டு மேசையின் மேல்போடும் துண்டு, நாரினால் இறைக்கப்பட்ட செருப்பு , பாய், தட்டு போன்ற பல் உற்பத்திகளை செய்து அதனை விற்பனை செய்து வருகின்றேன். என்னிடம் 10 விதவைப் பெண்கள் அவர்களது உற்பத்திகளை வாங்கி உள்ளுாரிலும் வெளி ஊர்களிலும் விற்பனை செய்து வருகின்றேன். வீட்டில் இருந்தவாரே எனக்கு 30 ஆயிரம் மாதாந்தம் உழைக்க முடியும். எனக் கூறினார் எனது முகநுால் ஊடாக தொடா்பு கொண்டு பரர்சல்பன்றி விமானதபால் மூலம் இப்பொருட்களை அனுப்பி வைப்பேன் எனவும் சோபனா தெரிவித்தார்
மகளிர் சிறுவர் விவகார அமைச்சும் தொழில்நுட்பம் தகவல் சம்பந்தான அமைச்சும் இணைந்து ஜக்கியநாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் உள்ள மெட்டா, ஜசீரீ(இக்டா) ஆகிய நிறுவனங்களின் உதபியுடக் இலங்கையின் 24 மாவட்டங்களிலும் பெண் தொழில் முயற்சி திட்டத்தின் கீழ் புதுமைப் பெண் (சுகுரலிய) எனும் திட்டத்தினை 2017ஆம் ஆண்டு ஆரம்பித்து வைத்தது.
பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட துருக்கியில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி, 14 பேர் உயிரிழந்தனர்.
சான்லியுர்ஃபா மற்றும் அதியமான் மாகாணங்களில் பெய்து வரும் கனமழையால், வீதிகளில் வெள்ளம் கரைபுரண்டோடியது. அப்போது, வீதியில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, ஒன்றோடொன்று மோதி உருக்குலைந்தன.
பூகம்பத்தால் வீடுகளை இழந்த மக்கள் கொள்கலன்களிலும், கூடாரங்களிலும் வசித்துவரும் நிலையில், திடீர் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
விளையாட்டுக் கழகத்திற்கு வந்த ஒருவரின் கடன் அட்டையைப் பயன்படுத்தி 20,000 ரூபா பெறுமதியான முகத்தை வெண்மையாக்கும் கிரீம் ஒன்றை கொள்வனவு செய்த சந்தேகநபரை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் நேற்று (15) உத்தரவிட்டுள்ளது.
சிங்கள விளையாட்டுக் கழகத்தின் மதுபானக் கடையில் பணியாளராகப் பணியாற்றிய ஜா-எல பிரதேசத்தைச் சேர்ந்த தினேஷ் உதயகுமார என்ற சந்தேகநபரே கைது செய்யப்பட்டுள்ளார்.
“எனது மனைவி வெள்ளையாக இருப்பதால் நானும் வெள்ளையாக இருக்க வேண்டும்” எனக் கூறி குறித்த கிரீமை கொள்வனவு செய்துள்ளதாக கைது செய்யப்பட்ட நபர் குருந்துவத்தை பொலிஸாிடம் தெரிவித்துள்ளார்.
முறைப்பாட்டாளர் கிளப்பிற்கு வந்து பரிவர்த்தனை செய்து விட்டு வெளியேறிய போது, அவரது கிரெடிட் கார்ட் தொலைந்து போனதாகவும், சந்தேகநபர் அதனை பயன்படுத்தி குறித்த கிரீமை பெற்றுக் கொண்டதாகவும் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்
Solar Power Bekcup நவீன கண்டுபிடிப்பு.
(அல் மக்கியா மாணவி அம்ராவின் புதிய கண்டுபிடிப்பு)
இரத்தினபுரி அல் மக்கியா தேசிய பாடசாலையில் உயர்தரம் கற்கும் மாணவி M.A.F அம்ரா செயலிழந்த பெட்டரிகளை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவரவும், தொலைபேசியை மின் வெட்டு காலங்களில் சார்ஜ் செய்து கொள்ளவும் ஒரு புதிய கருவியை கண்டுபிடித்து சாதணைப்படைத்துள்ளார்.
பலங்கொடை ஜெய்லானி தேசிய பாடசாலையில் வருடாந்த வர்த்தக தினத்தை முன்னிட்டு இரத்தினபுரி பிரதேசத்தில் வர்த்தக பிரிவில் கல்வியை தொடரும் மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் வண்ணம் புதிய நவீன பிரச்சினைகளுக்கு தீர்வாக உற்பத்தி ஒன்றை அறிமுகம் செய்யுமாறு மாணவர்களை கேட்டுகொண்டனர்.
இதன் போது அல் மக்கியா தேசிய பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம் மில்ஹான் , வர்த்தக பிரிவுக்கு பொருப்பான ஆசிரியர் எம்.எம்.எம் நுஸ்ஸாக் அவர்களும் மாணவர்களுக்கு இந்த வர்த்தக நிகழ்வு தொடர்பாக விழிப்பூட்டப்பட்டதுடன் , புதிய நவீன உற்பத்தி தொடர்பாக ஆலோசனை மற்றும் வழிகாட்டல் முன்வைக்கப்பட்டது.
இதன் போது M.A.F அம்ரா என்ற மாணவி என்னும் பெயரில் புதிய ஒரு உற்பத்தியை அறிமுகம் செய்தார். இதன் போது பலங்கொட ஜெய்லானி தேசிய பாடசாலையின் வர்த்தக நிகழ்வில் கலந்து கொண்ட பலங்கொட வலயகல்விப்பணிப்பாளர் G.G Abeywikrama அவர்களும், ஜெய்லானி தேசிய பாடசாலை பிரதி அதிபர், வர்த்தக பிரிவில் கற்பிக்கும் அனைத்து பாடசாலை ஆசிரியர்களும் பாராட்டினர்.
அதேபோன்று இந்நிகழ்ச்சியில் அம்ரா என்ற மாணவி முதலிடம் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த கண்டுபிடிப்பை அகில இலங்கைரீதியில் அறிமுகம் மற்றும் விநியோகம் செய்ய தனது சொந்த செலவில் நிதி உதவியையும் அனுசரணையும் வழங்குவதாக பலங்கொடை வலயகல்விப்பணிப்பாளர் G.G Abeywikrama குறிப்பிட்டார்.
இந்த உற்பத்தியை கண்டுபிடிக்க M.A அப்துல்லாஹ் என்ற மாணவன் யோசனை வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த உற்பத்தியானது solar power bekcup என்று அறிமுகப்படுத்தப்படுவதோடு
⭕இவ்வுற்பத்தி மூலம் எமக்கு நாம் பயன்படுத்தி பாவனை குன்றிக் காணப்படும் பற்றரிகளை மீள் பாவனைக்கு உட்படுத்த முடியும். மேலும் மின்குமிழ், தொலைபேசி என்பவற்றை மின்னேற்றம் ( charge) செய்யவும் முடியும்.
⭕இவ்வுற்பத்தியானது சூரிய கதிர்களை பயன்படுத்தி இடம்பெறும் ஒரு சூழல்நேயமான உற்பத்தியாகும்.
⭕இக்காலத்தின் பொருளாதார நிலைமைக்கு பொருத்தமான வகையில் மின்சார பாவனையை குறைப்பதற்கும், அதனை சேமிப்பதற்கும் உகந்த முறையில் இம் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
🛑 _எமது இவ்வுற்பத்தியானது குறைந்த விலையில் அதிகளவு பலனை தரக்கூடிய ஒரு முயற்சியாகும்._
*Cost For The Product*
Solar power backuper உற்பத்தியினை உற்பத்தி செய்தல், அதனை விநியோகம் செய்தல் மற்றும் ஊழியம் செய்யும் வேலையாற்கள் என அனைத்து விடயங்களுக்கும் இனங்க நாம் இவ்வுற்பத்தியினை *ரூபா 500* இற்கு விநியோகம் செய்யவுள்ளோம்.
☑️ ஒ௫ உற்பத்திக்கு பயன்படும் பொருட்களின் செலவு :- 300/=
☑️போக்குவரத்து மற்றும் ஊழியர் சம்பளத்திற்கு ஒதுக்கும்
தொகை(by one product) :- 100/=
☑️Profit :- 100/=
இவ்வுற்பத்தி மூலம் நாம் கவனம் செலுத்தும் பிரிவினர்கள்
0️⃣1️⃣ வாலிபர்கள்
0️⃣2️⃣குடும்பத் தலைவர்கள்
முதலில் நாம் 1000 solar power backupers ஐ உற்பத்தி செய்யவுள்ளோம். அவற்றை இரத்தினபுரி மாவட்டம் முழுவதும் உள்ள வாலிபர்களையும் குடும்பத் தலைவர்களையும் கவ௫ம் விதத்தில் விநியோகிக்கவுள்ளோம்.
இவ்வுற்பத்தியினை சந்தைபடுத்தும் முறைகள்....
❎விற்பனையாளர்கள் (By Sales Man)
❎சமூக ஊடகம்(By Using Social medias)
ஏன் Solar Power Backuper ஏனைய உற்பத்திகளை விட சிறந்தது ❔
உதாரணமாக பற்றரிகளை எடுப்போமயானால் ஒனறு ரூபா 100 இற்கு விற்கப்படும். அதனை சுமார் 02 மாதத்திற்கு பயன்படுத்தலாம். சாதாரணமாக ஒரு வீட்டில் 10 பயன்படுத்துவார்கள் எனின் ஒ௫ வ௫டத்திற்கு ஏற்படும் மொத்த செலவு ரூபா 6000 ஆகும்.
வெறும் ரூபா500 ஆன இவ்வுற்பத்தியினை நாம் பெற்றால் ஒரு வ௫டத்திற்கு சுமார் 5500/= சேமிக்கலாம்.
இவ்வுற்பத்தி சாதகமான விளைவை த௫மாயின் நாம் Solar Pole இனையும் தயாரிக்கவுள்ளோம்...
இந்த உற்பத்தி தொடர்பான விளம்பரம் மக்கியா தேசிய பாடசாலையில் Commerce unit யூடீப் தளத்தில் பார்வையிடலாம்.
ஆசிரியர் எம் எம் எம் நுஸ்ஸாக்
இர/அல் மக்கியா தேசிய பாடசாலை
பாடசாலை மாணவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி வந்த கும்பல் ஒன்றினை கைது செய்வதற்கு யாழ்ப்பாண பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
யாழ்.நகர் புற பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து கும்பல் ஒன்று பாலியல் ரீதியாக துன்புறுத்தி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு மாணவர்களை உள்ளாக்கி வருவது தொடர்பில் பொலிஸாருக்கு இரகசிய தகவல்கள் கிடைக்கப்பெற்ற நிலையில் கும்பலை கைது செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த நபர்கள் மாணவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி ஓரின சேர்க்கையில் ஈடுபடுவதாகவும் , அவற்றினை காணொளி பதிவாக கையடக்க தொலைபேசிகளில் பதிவு செய்து , அதனை காண்பித்து தொடர்ந்து தமது இச்சைகளுக்கு மாணவர்களை பயன்படுத்தி வந்ததுடன் , மாணவர்களிடம் இருந்து பணமும் பெற்று வந்துள்ளனர்.
இவை குறித்த தகவல்கள் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற நிலையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் அக்கும்பலை சேர்ந்தவர்களை அடையாளம் கண்டுள்ள நிலையில் அவர்களை கைது செய்தவற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
-யாழ். நிருபர் பிரதீபன்-
இந்த நாட்டிற்கு ரஷ்ய மற்றும் சீன சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்தாலும், அவர்கள் மிகக் குறைந்த பணத்தையே செலவிடுவதாக சுற்றுலா ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனால் ஐரோப்பிய நாடுகளில் இருந்து அதிகளவான சுற்றுலாப் பயணிகளை வரவழைக்க அரசாங்கம் தலையிட வேண்டும் என சங்கத்தின் செயலாளர் திரு.சுமித் உபேசிறி தெரிவித்துள்ளார்.
ஹோட்டல்கள் தற்போது ரஷ்ய மற்றும் சீன சுற்றுலாப் பயணிகளால் நிரம்பியுள்ளன, ஆனால் அவர்கள் மிகக் குறைந்த பணத்தை செலவிடுகிறார்கள் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
ஐரோப்பிய நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வரமாட்டார்கள் என்றும் ரஷ்ய சுற்றுலா பயணிகள் கடற்கரையில் இருந்தால் ஐரோப்பிய நாடுகளின் சுற்றுலா பயணிகள் கடற்கரைக்கு கூட வரமாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.
அதன் காரணமாக மேற்கத்திய நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட வேண்டுமென அவர் வேண்டுகோள் விடுத்தார்.
ஊவா மாகாணத்திலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.
சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரேலியா மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.
பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
கடல் பிராந்தியங்களில்
****************************
புத்தளம் தொடக்கம் கொழும்பு,காலி, பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.
கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 - 30 km வேகத்தில் கிழக்குத் திசையில் இருந்து தென் கிழக்குத் திசையை நோக்கி காற்று வீசும்.
நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும்.
கலாநிதி மொஹமட் சாலிஹீன்,
சிரேஸ்ட வானிலை அதிகாரி.