விடுதி ஒன்றில் இருந்து இளம் ஜோடி சடலமாக மீட்பு...தங்கள்ளயில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் இளம் பெண் மற்றும் இளைஞன் இருவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

குறித்த ஹோட்டலில் பணிபுரியும் இளைஞனும் அம்பலாந்தோட்டை பிரதேசத்தில் சேர்ந்த யுவதியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இருவருக்கும் இடையே காதல் தொடர்பு இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

குறித்த இளைஞன் சிறுவயதிலிருந்தே ஹோட்டலில் வளர்ந்தவர் எனவும் குறித்த இளைஞனே ஹோட்டலை கவனித்து வருவதாகவும் தெரிவித்தப்படுகின்றது.

குறித்த இளைஞன் நேற்று இரவு முச்சக்கர வண்டியில் அம்பலாந்தோட்டை பகுதிக்கு சென்று சிறுமியை விடுதிக்கு அழைத்து வந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இவர்கள் இருவரும் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் தங்கல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விடுதி ஒன்றில் இருந்து இளம் ஜோடி சடலமாக மீட்பு... விடுதி ஒன்றில் இருந்து இளம் ஜோடி சடலமாக மீட்பு... Reviewed by Madawala News on January 23, 2023 Rating: 5

நாளைய தினம் மின்வெட்டு நேரம் குறைப்பு.இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு இணங்க,
*நாளைய தினம் (24) பிற்பகல் 4 மணிமுதல் 6.30 மணிவரை 40 நிமிடங்களும்

*6.30 முதல் 10.30 மணிவரை 1 மணி நேரம் 20 நிமிடங்களும் சுழற்சி முறையில் மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

பிற்பகல் மின்வெட்டு நேரம் 20 நிமிடங்களால் குறைக்கப்பட்டுள்ளது.


நாளைய தினம் மின்வெட்டு நேரம் குறைப்பு. நாளைய தினம் மின்வெட்டு நேரம் குறைப்பு. Reviewed by Madawala News on January 23, 2023 Rating: 5

VIDEO : அதிகரித்துள்ள வாழ்க்கை செலவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பாரிய போராட்டம்.துறைமுக தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த கூட்டமைப்பு கொழும்பு துறைமுகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் இன்று (23) மதிய உணவு வேளையில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியது.


அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கை மற்றும் அதிகரித்துள்ள வாழ்க்கை செலவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்தப் போராட்டத்தை முன்னெடுத்ததாகவும், இதன் காரணமாக அருகில் உள்ள வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

VIDEO : அதிகரித்துள்ள வாழ்க்கை செலவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பாரிய போராட்டம். VIDEO : அதிகரித்துள்ள வாழ்க்கை செலவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பாரிய போராட்டம். Reviewed by Madawala News on January 23, 2023 Rating: 5

அவதானமாக இருங்கள் : தேர்தலில் வெற்றி பெறுவதற்காக சில வேட்பாளர்கள் இலஞ்சம் வழங்குவார்கள் - மக்கள் ஏமாந்துவிடக்கூடாது.

 (எம்.ஆர்.எம்.வசீம்) 

தேர்தலில் வெற்றி பெறுவதற்காக இலஞ்சம் வழங்கும் வேட்பாளர்களிடமிருந்து மக்கள் ஏமாந்துவிடக்கூடாது. 


தேர்தல் நடவடிக்கைக்காக அரச அதிகாரம் மற்றும் வளங்கள் பயன்படுத்தப்படுவதை தடுப்பது அரச அதிகாரிகள் பொறுப்பாகும் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று அதிகாரி ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.


உள்ளூராட்சி மன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கிடைக்கப்பெறும் தேர்தல் சட்ட மீறல் தொடர்பான முறைப்பாடுகள் தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.


இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,


உள்ளூராட்சி மன்ற தேர்தல் எதிர்வரும் மார்ச் 9ஆம் திகதி இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. 


இந்நிலையில் சிலர் தேர்தல் நடவடிக்கைகளுக்காக அரச அதிகாரம் மற்றும் அரச வளங்களை முறைகேடாக பயன்படுத்தி வருவதாக பல முறைப்பாடுகள் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளன. 


இந்த நடவடிக்கைகளை தடுப்பதற்காக அரச அதிகாரிகள், குறிப்பாக உள்ளூராட்சி மன்ற செயலாளர்கள், நகர ஆணையாளர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும். 


அதேபோன்று வேட்பாளர்களும் மக்கள் பிரதிநிதியாவதற்கு தகுதியானவர்கள் என்ற வகையில் செயற்படவேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.


நாடு பொருளாதார நெருக்கடியில் இருப்பதால், மக்கள் பொருளாதார கஷ்டத்தில் இருக்கின்றனர். அதனால் உணவுப் பொதிகள், வேறு உதவிகள் அல்லது 5 ஆயிரம் ரூபா பணம் போன்ற விடயங்களுக்காக மக்கள் தங்களதும் தங்கள் பிள்ளைகளினதும் எதிர்காலத்தை அழித்துக்கொள்ளக்கூடாது. 


இதுதொடர்பாக மக்கள் மிகவும் சிந்தித்து செயற்பட வேண்டும். ஏனெனில், வேட்பாளர்கள் இன்று வழங்கும் 5 ஆயிரம் ரூபாவுக்கு பதிலாக தேர்தலுக்கு பின்னர் 50 ஆயிரம் ரூபாவுக்கும் அதிகம் பெற்றுக்கொள்ள முடியும். 


பணம், உதவிகளை வழங்கும் வேட்பாளர்கள் மக்களின் உண்மையான வேட்பாளர்களாகப் போவதில்லை. அதனால் அவதானமாக இருக்கவேண்டும்.


உள்ளூராட்சி மன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, எமது தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளின் முதற்கட்ட நடவடிக்கைகளை தற்போது நாங்கள் ஆரம்பித்திருக்கிறோம். அதனால் தேர்தல் சட்டம் மீறப்படுகின்றமை தொடர்பான முறைப்பாடுகளை தெரிவிப்பதற்கு தேவையான தொலைபேசி இலக்கங்களை எதிர்வரும் தினங்களில் அறிவிக்கவுள்ளோம் என்றார்.

அவதானமாக இருங்கள் : தேர்தலில் வெற்றி பெறுவதற்காக சில வேட்பாளர்கள் இலஞ்சம் வழங்குவார்கள் - மக்கள் ஏமாந்துவிடக்கூடாது. அவதானமாக இருங்கள் : தேர்தலில் வெற்றி பெறுவதற்காக சில வேட்பாளர்கள் இலஞ்சம் வழங்குவார்கள் - மக்கள் ஏமாந்துவிடக்கூடாது. Reviewed by Madawala News on January 23, 2023 Rating: 5

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிறைக் கைதி ஒருவர் இன்று உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுகிறார்... மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிறைக் கைதி ஒருவர் இன்று ஆரம்பமான 2022 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.


இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டாலும் அது நடைமுறைப்படுத்தப்படாமல் ஆயுள் தண்டனையாக வழங்கப்பட்டுள்ளது.


இதேவேளை, வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து மேலும் நான்கு கைதிகளும் 2022/23 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.


கைதிகள் வெலிக்கடையில் உள்ள மகசின் சிறைச்சாலை பரீட்சை நிலையத்தில் பரீட்சைக்கு தோற்றுவர்.


இதேவேளை, யாழ்ப்பாண சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவரும் 2022 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிறைக் கைதி ஒருவர் இன்று உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுகிறார்... மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிறைக் கைதி ஒருவர் இன்று உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுகிறார்... Reviewed by Madawala News on January 23, 2023 Rating: 5

சுமுகமான முறையில் நடைபெற்று வரும் உயர்தர பரீட்சைகள்... மாணவர்கள் மிகவும் ஆர்வத்தோடு.. 2023 ம் ஆண்டுக்கான  கல்வி பொது உயர்தர பரீட்சைகள்  திருகோணமலை மாவட்டத்தில் மிகவும் சுமுகமான முறையில் நடைபெற்று வருகின்றது .


இன்று காலை ஆரம்பமான பரிட்சை நடவடிக்கைகள்  மாணவர்கள் மிகவும் ஆர்வத்தோடு பரீட்சை நிலையங்களுக்கு செல்வதை காணக்கூடியதாக இருந்தது .


அத்தோடு இவ் மாவட்டத்தில் பாதுகாப்பு கடமைகளில் பொலிசார் ஈடுபட்டதையும் காணக்கூடியதாக இருந்தது .


திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய் கிண்ணியா மூதூர் வெருகல் தம்பலகாமம் முள்ளிபொத்தானை போன்ற கல்வி வலயங்களில் பரிட்சை நிலையம் ஏற்படுத்த பட்டுள்ளதை அவதானிக்க கூடியதாக இருந்தது .


மாணவர்கள் ஆர்வத்தோடு பரிட்சை நிலையத்துக்கு சென்றதையும் அவதானிக்க முடிந்தது .

சுமுகமான முறையில் நடைபெற்று வரும் உயர்தர பரீட்சைகள்... மாணவர்கள் மிகவும் ஆர்வத்தோடு.. சுமுகமான முறையில் நடைபெற்று வரும் உயர்தர பரீட்சைகள்... மாணவர்கள் மிகவும் ஆர்வத்தோடு.. Reviewed by Madawala News on January 23, 2023 Rating: 5

வேலை வாய்ப்பு 💼 ஆண் / பெண் தம்மிடம் கணனி வசதி உள்ளவர்களுக்கு பயணச்சீட்டு நிர்வாகிகளாக தொழில் வாய்ப்பு.கிழக்கிலங்கையில் இயங்கிவரும் விமானப் பயனச்சீட்டு முகவர் நிலையத்திற்கு பயணச்சீட்டு நிர்வாகிகள் தேவை


●ஆண் / பெண் தம்மிடம் கணனி வசதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
( operating MS windows 10)


தகைமை : கணணி இயக்கத் தெரிந்திருத்தல்

மேலதிக தகவல்களுக்கு : 0757361615

* காலை 7 மணி முதல் காலை 9.00 மணிவரை
மட்டுமே Call பண்ணவும் -
( வேறு நேரங்களில் அழைக்க வேண்டாம்) 

31 January 2023 வரை அழைக்கலாம்


குறிப்பு :
அவரவர் இல்லத்திலிருந்தே வட்ஸ் அப் ஊடாக அவர்களது சேவையை வழங்க முடியும்
வேலை வாய்ப்பு 💼 ஆண் / பெண் தம்மிடம் கணனி வசதி உள்ளவர்களுக்கு பயணச்சீட்டு நிர்வாகிகளாக தொழில் வாய்ப்பு. வேலை வாய்ப்பு 💼 ஆண் / பெண் தம்மிடம் கணனி வசதி உள்ளவர்களுக்கு பயணச்சீட்டு நிர்வாகிகளாக தொழில் வாய்ப்பு. Reviewed by Madawala News on January 23, 2023 Rating: 5

கொழும்பின் பிரபல ஆடையகத்தில் இடம்பெற்ற தாக்குதல் - நடந்தது என்ன என்ற விபரம் வெளியானது.பம்பலப்பிட்டியில் உள்ள ஆடைக் கடையில் ஊழியர்களுக்கும் வாடிக்கையாளர் ஒருவருக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.மற்றொரு வாகனம் தமது வாகனத்திற்கு பின்னால் இடையூறாக நின்றதால், வாடிக்கையாளர் ஒருவர் தனது வாகனத்தை வாகன நிறுத்துமிடத்திலிருந்து வெளியே நகர்த்த முடியாத நிலையில் இந்த மோதல் வெடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த வாடிக்கையாளர் தனது வாகனத்தை எடுக்க முடியாமை தொடர்பில் ஊழியர்களிடம் தெரிவித்ததையடுத்து, இடையூறாக இருக்கும் வாகனத்தை நகர்த்துவதற்கு கடையில் பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.எனினும் வாடிக்கையாளர் பொறுமை இழந்து கடையின் மேலாளரை திட்டியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, ஊழியர்களுக்கும் வாடிக்கையாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.இதனையடுத்து சில ஊழியர்கள் வாடிக்கையாளரை இரக்கமின்றி தாக்கும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.சம்பவத்தில் வாடிக்கையாளர் மற்றும் ஊழியர்கள் சிலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

கொழும்பின் பிரபல ஆடையகத்தில் இடம்பெற்ற தாக்குதல் - நடந்தது என்ன என்ற விபரம் வெளியானது. கொழும்பின் பிரபல ஆடையகத்தில் இடம்பெற்ற தாக்குதல் - நடந்தது என்ன என்ற விபரம் வெளியானது. Reviewed by Madawala News on January 23, 2023 Rating: 5

பிரதேச சபையை கைப்பற்றி மாட்டு இறைச்சியின் விலையை உடனடியாக ஒரு கிலோ 1200 ருபாவாக குறைப்போம் ; தேர்தல் வாக்குறுதி வெளியானது.பாறுக் ஷிஹான்

மாட்டு இறைச்சியின் விலையை உடனடியாக 1200 ருபாவாக குறைக்கவுள்ளோம்

எதிர்வரும் காலங்களில் சம்மாந்துறை பிரதேச சபையை எமது அணி கைப்பற்றியதுடன் மாட்டு இறைச்சியின் விலையை உடனடியாக 1200 ருபாவாக குறைக்கவுள்ளோம்.தமிழ் பேசும் மக்கள் அரசியல் அனாதைகளாக தற்போது இருக்கின்ற நிலையில் அதனை நிவர்த்தி செய்ய நாம் பல்வேறு திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம் என என நாபீர் பவுண்டேஷன் ஸ்தாபகரும் சமூக சேவையாளருமான கலாநிதி யூ.கே. நாபீர் குறிப்பிட்டார்.உள்ளுராட்சி தேர்தல் -2023 தொடர்பில் அம்பாறை ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது


உள்ளுராட்சி மன்ற வேட்புமனுத்தாக்கல் நிறைவுற்றுள்ள நிலையில் அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை தேர்தல் தொகுதியில் சம்மாந்துறை பிரதேச சபைக்காக கட்டுப்பணம் மற்றும் வேட்புமனுத்தாக்கல்களை மேற்கொண்டுள்ளோம்.எதிர்வரும் மார்ச் மாதம் 09 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடவுள்ளோம்.சம்மாந்துறை சகல வளங்களையும் கொண்ட பிரதேசமாகும்.இங்கு தமிழ் முஸ்லீம் ஏனைய சமூக அமைப்புகள் ஒருங்கிணைக்கப்பட்டு எதிர்வரும் தேர்தலில் போட்டியிடவுள்ளோம்.


கடந்த 2 தசாப்தங்களாக பல அரசியல்வாதிகளை அமுக்க குழுக்கள் போல் அழுத்தங்களை கொடுத்து வருகின்றோம்.சம்மாந்துறை பகுதிகளில் பல கட்சிகள் கால் ஊன்றி காணப்பட்ட போதிலும் எதுவித உரிமைகளையோ அல்லது அபிவிருத்தியையோ பெற்றதாக நாம் காணவில்லை.எனவே எதிர்வரும் காலங்களில் எமது பகுதி பிரச்சினைகளை நாம் இனங்கண்டுள்ளோம்.தற்போது மக்களுக்கு தேவையானது கொள்கை ரீதியான அரசியல் அல்ல.தற்போது மக்களுக்கு வாழ்வாதாரம் சார்ந்த அபிவிருத்தியே குறிக்கோளாக காணப்படுகின்றது.


நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினைக்கு எவ்வாறு முகம் கொடுக்க முடியும் என்ற குறிக்கோளில் எமது மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.எனவே தான் எதிர்வரும் தேர்தலில் மக்களின் பொருளாதார பிரச்சினையை தீர்ப்பதற்கு எதிர்பார்த்து களமிறங்கியுள்ளோம்.100 வீதம் இப்பிரச்சினைகளை தீர்க்க முடியாத நிலையிலும் ஒரு குறிப்பிட்ட அளவிற்காவது அப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.அத்துடன் எமது திட்டங்கள் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் தேர்தல் விஞ்ஞாபனத்தின் ஊடாக அறிவிக்கவுள்ளோம்.


குறிப்பாக சகல மக்களாலும் தற்போது நுகரப்படுகின்ற இறைச்சி வகைகளில் மாட்டு இறைச்சியின் விலை ஏனைய பிரதேசங்களை விட சம்மாந்துறை பகுதியில் அதிகளவில் காணப்படுகின்றது.இங்கு விலை அதிகரிப்பினால் மாட்டு இறைச்சியை விற்பவர்களை குறை கூற முடியாது.பிரதேச சபையின் குத்தகை பெறுமானம் அதிகமாக இருப்பதே விலையேற்றத்திற்கு பிரதான காரணமாகும்.இதனால் மாட்டின் விலை எற்றப்படுகின்றது.


நாளடைவில் மக்களின் பொருளாதார விடயத்தில் தாக்கம் செலுத்துகின்றது.இதனை எவ்வாறு கட்டுப்படுத்த முடியும் என்பதை நாம் திட்டமிட்டுள்ளோம்.எதிர்வரும் காலங்களில் சம்மாந்துறை பிரதேச சபையை எமது அணி கைப்பற்றியதுடன் மாட்டு இறைச்சியின் விலையை உடனடியாக 1200 ருபாவாக குறைக்கவுள்ளோம்.தமிழ் பேசும் மக்கள் அரசியல் அனாதைகளாக தற்போது இருக்கின்ற நிலையில் அதனை நிவர்த்தி செய்ய நாம் பல்வேறு திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம் என குறிப்பிட்டார்.


அம்பாறை மாவட்டத்தில் பொருளாதார ரீதியான அபிவிருத்தி முன்னெடுப்துடன் பாரிய உரிமை இருப்பு சார்ந்த விடயங்களையும் இளைஞர்களின் வேலைவாய்ப்பினையும் முன்னெடுக்கவுள்ளோம்.எம்மதமும் சம்மதம் என்ற நிலையில் எமது வேலைத்திட்டங்கள் அமையும் என நம்பிக்கை வெளியிட்டார்.


பிரதேச சபையை கைப்பற்றி மாட்டு இறைச்சியின் விலையை உடனடியாக ஒரு கிலோ 1200 ருபாவாக குறைப்போம் ; தேர்தல் வாக்குறுதி வெளியானது. பிரதேச சபையை கைப்பற்றி மாட்டு இறைச்சியின் விலையை உடனடியாக ஒரு கிலோ 1200 ருபாவாக குறைப்போம் ; தேர்தல் வாக்குறுதி வெளியானது. Reviewed by Madawala News on January 23, 2023 Rating: 5

ஒரு பக்கம் மட்டும் அச்சிடப்பட்ட இலங்கையின் நாணயத்தாள் ஒன்று நான்கரை இலட்சம் ரூபாவுக்கு விற்பனை.1917ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட நாணயத்தாள் ஒன்று நான்கரை இலட்சம் ரூபாவுக்கு (450,000/-) விற்பனை செய்யப்படவுள்ளது.இந்த இரண்டு ரூபா தாளின் பின்புறம் அச்சிடப்படவில்லை என்பதுதான் இதன் சிறப்பு.இந்த நாணயத்தாளின் முன் பக்கம் மட்டும் அச்சிடப்பட்டுள்ளது, பின்புறம் வெள்ளை நிறத்தில் இருக்கும்
ஒரு பக்கம் மட்டும் அச்சிடப்பட்ட இலங்கையின் நாணயத்தாள் ஒன்று நான்கரை இலட்சம் ரூபாவுக்கு விற்பனை. ஒரு பக்கம் மட்டும் அச்சிடப்பட்ட இலங்கையின் நாணயத்தாள் ஒன்று நான்கரை இலட்சம் ரூபாவுக்கு விற்பனை. Reviewed by Madawala News on January 23, 2023 Rating: 5

பசுக்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்தினால் உலகில் உள்ள அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் ; வழக்கு தீர்ப்பில் குஜராத் நீதிபதி தெரிவிப்பு'பசுக்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்தினாலே உலகில் உள்ள அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும்' என இந்தியாவின் குஜராத் நீதிமன்ற நீதிபதி ஒருவர் வழக்குத் தீர்ப்பு ஒன்றின்போது கூறியுள்ளார்.


பசு கடத்தல் தொடர்பான வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கும் போது, இத்தகைய கருத்துகளை நீதிபதி தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், குஜராத் நீதிமன்றத்தின் இந்தக் கருத்தானது நாடு முழுவதும் பல்வேறு விமர்சனங்களுக்கும், விவாதத்திற்கும் வித்திட்டுள்ளது.

டாப்பி மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதி சமீர் வினோசந்திரா வியாஸ் என்பவவே இவ்வாறு கூறியுள்ளார்.


பசு சாணத்தினால் உருவாக்கப்பட்ட வீடுகள் அணுக்கதிரியக்கத்தினாலும் பாதிக்கப்படுவதில்லை என விஞ்ஞானத்தினால் நிரூபிக்கப்பட்டுள்ளது. மாட்டின் சிறுநீர் பல நோய்களை குணப்படுத்துகிறது எனவும் அவர் கூறியதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நீதிபதியின் இக்கருத்துகளுக்கான விஞ்ஞான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்பதையும் ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

2020 ஆம் ஆண்டு மகாராஷ்ட்ராவில் இருந்து 16 பசு மாடுகளை கடத்தி வந்ததாக கூறி மொஹம்மத் அமீன் என்பவரை குஜராத் பொலிஸார் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு, டாப்பி மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி வினோத் சந்திரா வியாஸ் முன்னிலையில் நேற்றுமுன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது அவர், மொஹம்மத் அமீனுக்கு ஆயுள் தண்டனையும் 5 லட்சம் ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

இத்தீர்ப்பை நீதிபதி வினோத் சந்திரா வியாஸ் அறிவித்தபோது, 'இந்த உலகத்திற்கே பசு முக்கியமானது. பசு ஒரு மிருகம் மாத்திரமல்ல. அது ஒரு தாய். பசுவின் ரத்தம் பூமியில் சிந்தக்கூடாது. அவ்வாறு பசுவின் ரத்தம் பூமியில் என்றைக்கு சிந்தாமல் இருக்கிறதோ, அன்றுதான் இந்த உலகம் செழிப்பாக இருக்கும். உலகில் உள்ள வேறு எந்த ஜீவராசியும் பசுவை போன்று நன்றியுணர்வு கொண்டது இல்லை. எனவே, அத்தகைய நன்றியுணர்வு கொண்ட பசுக்களுக்கு நாம் மிகவும் மதிப்பளிக்க வேண்டும்.

பெரும்பாலான மக்கள் பசுவை ஒரு மதம் சார்ந்த விஷயமாகவே பார்க்கின்றனர். அது தவறு. பொருளாதார ரீதியாகவும், விஞ்ஞான ரீதியாகவும் பசுக்கள் பலன் கொடுக்க கூடியவை ஆகும். உதாரணமாக, ஒருவர் பசுவை துன்புறுத்தினால் அவரது சொத்துகள் அனைத்தும் அழிந்துபோகும். மொத்தத்தில், இந்த உலகம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் பசுக்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்' எனவும் கூறியுள்ளார்
பசுக்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்தினால் உலகில் உள்ள அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் ; வழக்கு தீர்ப்பில் குஜராத் நீதிபதி தெரிவிப்பு பசுக்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்தினால் உலகில் உள்ள அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் ; வழக்கு தீர்ப்பில் குஜராத் நீதிபதி தெரிவிப்பு Reviewed by Madawala News on January 23, 2023 Rating: 5

உயர் தரப் பரீட்சை ஆரம்பித்தாலும் இன்றும் வழமை போல் மாலை மற்றும் இரவு வேளைகளில் மின் வெட்டு இடம்பெறும்.க.பொ.த உயர் தரப் பரீட்சைகள் இன்று முதல் ஆரம்பமாகியுள்ள நிலையில், பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் நலன் கருதி இரவு 7.00 மணிக்கு பின்னர் மின் வெட்டை அமுல்ப்படுத்த வேண்டாமென இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பரிந்துரைத்திருந்த போதிலும், இன்றும் வழமை போன்று பகல் வேளையில் 1 மணித்தியாலமும், இரவு வேளையில் 1 மணித்தியாலம் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.


மின் உற்பத்தி தொடர்பில் தற்போது நிலவும் நெருக்கடி நிலை காரணமாக இந்த மின்வெட்டு காலத்தை தொடர வேண்டியுள்ளதாக மின்சார சபை அறிவித்துள்ளது.


மின்சார உற்பத்திக்கு அதிகளவு நிதி தேவைப்படுவதாகவும், தற்போதைய சூழலில் மின்சார சபையிடம் அந்தளவு நிதி இல்லை எனவும், அவசியமான நிதி வழங்கப்பட்டால், மின்வெட்டை அமுல்ப்படுத்துவதை நிறுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவருக்கும், ஜனாதிபதி அடங்கலான அமைச்சர் மற்றும் இதர மின்சார சபை அதிகாரிகளுக்கிடையே மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் முரண்பாடு எழுந்துள்ளமை, இந்த தீர்மானத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம் எனவும், இதனால் தமது எதிர்கால வாழ்க்கையை தீர்மானிக்கும் முக்கியமான பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு இந்த மின்வெட்டு அமுலப்படுத்தப்படுவதானது பரீட்சைக் காலத்தில் மன அழுத்தத்தை தோற்றுவித்துள்ளதாகவும் பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

உயர் தரப் பரீட்சை ஆரம்பித்தாலும் இன்றும் வழமை போல் மாலை மற்றும் இரவு வேளைகளில் மின் வெட்டு இடம்பெறும். உயர் தரப் பரீட்சை ஆரம்பித்தாலும் இன்றும் வழமை போல் மாலை மற்றும் இரவு வேளைகளில் மின் வெட்டு இடம்பெறும். Reviewed by Madawala News on January 23, 2023 Rating: 5

கொழும்பு உளவியல் ஆராய்ச்சி கல்வி நிறுவனத்தின் 300 பட்டதாரிகளுக்கு பட்டமளிப்பு வைபவம்.(அஷ்ரப் ஏ சமத்)
கொழும்பு உளவியல் ஆராய்ச்சி கல்வி நிறுவனத்தின்
Colombo Institute of Research & Psychology (CIRP) உளவியல் டிப்ளோமா, பட்டப்படிப்பு, முதுமாணிப் பட்டங்களை வெற்றிகரமாக பூர்த்தி செய்த 300 பட்டதாரிகளுக்கு பட்டமளிப்பு வைபவம்  கொழும்பு கண்காட்சி மண்டபத்தில் நேற்று 21  சனிக்கிழமை  கல்விநிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி தர்சன பெரேரா தலைமையில் நடைபெற்றது. 


அத்துடன் பம்பலப்பிட்டியில் உள்ள இந் நிறுவனத்துடன் இணைந்து  இங்கிலாந்து அவுஸ்திரேலியா , இலங்கையில் உட்பட உளவியல் பேராசிரியா்களும் பட்டமளிப்பு விழாவில்  கொண்டனா்.


 இங்கு கருத்து தெரிவித்த அவுஸ்திரேலியா பல்கலைக்கழத்தின் பேராசிரியா் தெரிவிக்கையில்,
 
இந்த பாடம் உலகின் பிற நாடுகளில் மிகவும் பிரபல்யமாக  சேவைகளை பெற முடியும்.  என்பது அந்த நாடுகளின்  மக்கள் அதிக  ஆயுட்காலம்  இருப்பதற்கு  முக்கிய  காரணமாக அமைகின்றது. உலகின் ஒவ்வொரு நாட்டிலும் இத்துறைக்கு  அதிக கேள்வி  நிலவுவதுடன்  இலங்கை மாணவர்கள்  இதன் மூவம்  வெளிநாடுகளில் உயா்வேலை வாய்ப்புகளைப் பெறமுடியும்.தமது குழந்தை வளா்ப்புக்கள் தமது அன்றாட வாழ்க்கை முறைகளுக்கு  குழந்தைப் பாடசாலைகள் முதியோா் பராமரிப்பு  போன்ற பல்வேறு துறைகளில் உளவியல்துறை கற்கை அவசியமாகின்றது. ஒவ்வொரு ஆசிரியர் வாழ்க்கைத்துனைவியர் உளவியல் துறை அறிந்து இருத்தல் வேண்டும்.  எனவும் கருத்து தெரிவித்தா்ர்


இந் நிகழ்வில் கலாநிதி ரன்ஜித் பத்துவான்தொடுவ,  உளவியல்த்துறை பாடத் தலைவா்  சி.ஜ.ஆர்.பி  பாடசாலை  உளவியல்,  டிப்ளோமா, வியாபார உளவியல் டிப்ளோமா,  பொது உளவியல், முதுமாணி  ஆகிய பயிற்சி நெறிகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்த மாணவா்களுக்கு  திரு. கிரான் சிரோனி,  உயா்தர டிப்ளோமா உளவியல் முடித்தவா்களுக்கு கலாநிதி ரண்ஜித் பதுவந்தொடுவ,  பேராசிரியா் அனிில் குணதிலக்க,  கலாநிதி தரசனி பெரேரா ஆகியோா்கள் பட்டங்களுக்கான சான்றிதழ்களை  வழங்கி வைத்தனா்.
இந் நிகழ்வில் 1000க்கும் ஆதிகமான பெற்றோா்கள், மாணவ மாணவிகள் வருகை தந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


இத்துறையில்  கொழும்பு கண்டி பிரதேச மூவினங்களையும் சாா்ந்த  ஆங்கில மொழி மூலமான மாணவிகள் 90 வீதமானவா்கள் சான்றிதழ்களை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பு உளவியல் ஆராய்ச்சி கல்வி நிறுவனத்தின் 300 பட்டதாரிகளுக்கு பட்டமளிப்பு வைபவம். கொழும்பு உளவியல் ஆராய்ச்சி கல்வி நிறுவனத்தின் 300 பட்டதாரிகளுக்கு பட்டமளிப்பு வைபவம். Reviewed by Madawala News on January 23, 2023 Rating: 5

அதலபாதாளத்தில் இருந்த நாட்டை மீட்கத் துணிச்சலுடன் முன்வந்த ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்தி பொருளாதார உதவிகளை துரிதப்படுத்துவோம்"அஸீம் கிலாப்தீன்
ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்கவின் கரங்களைப் பலப்படுத்தும் நோக்கிலேயே உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட முன்வந்ததாக காலிமாநகர சபை ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் றாசிக் அன்வர் தெரிவித்தார்.


தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களுக்கு அவர் கருத்து தெரிவித்தார்


வேட்பு மனு தாக்கலின் போது பாராளுமன்ற உறுப்பினரும் ஐ.தே.க காலி மாவட்ட தலைவருமான வஜிர அபேவர்தனவும் பிரசனமாகியிருந்தார்


வேட்பாளர் றாசிக் அன்வர் மேலும் கூறியதாவது;
அதலபாதாளத்தில் சென்றுகொண்டிருந்த நாட்டை மீட்கத் துணிச்சலுடன் முன்வந்த தலைவர் ரணில்விக்ரமசிங்க.

நாட்டின் மூத்ததும் முதல் கட்சியுமான ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட தலைவர்களுடன் பழகிய இவரிடம் தலைமைத்துவப் பண்புகள் நிறையவுள்ளன.சர்வதேசத்தில் இவருக்குள்ள செல்வாக்குகள் பொருளாதார உதவிகள் கிடைப்பதற்கு வழிகோலும். உள்ளூராட்சி தேர்தலில் அமோகஆதரவு வழங்கி மக்கள் ஆணையை நிரூபிப்பதற்கு மக்கள் தயாராவது அவசியம்.

அப்போதுதான், நாட்டுக்கு கிடைக்கவுள்ள பொருளாதார உதவிகள் விரைவில் வந்து சேரும். இன்றுள்ள நிலையில்,சர்வதேசத்தின் நன்மதிப்பை வென்ற நமது ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சியைப் பலப்படுத்த மக்கள் முன்வர வேண்டும் எனத் தெரிவித்தார்.

அதலபாதாளத்தில் இருந்த நாட்டை மீட்கத் துணிச்சலுடன் முன்வந்த ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்தி பொருளாதார உதவிகளை துரிதப்படுத்துவோம்" அதலபாதாளத்தில் இருந்த நாட்டை மீட்கத் துணிச்சலுடன் முன்வந்த ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்தி பொருளாதார உதவிகளை துரிதப்படுத்துவோம்" Reviewed by Madawala News on January 23, 2023 Rating: 5

நானாக யாரையும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிலிருந்து விரட்டியதும் கிடையாது, யாருக்கும் கதவு திறந்தே இருக்கும் ; ரவூப் ஹக்கீம்ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் என்ற வகையில் நானாக யாரையும் கட்சியிலிருந்து விரட்டியது கிடையாது என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.


முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வை கட்சியில் இணைத்துக்கொண்டது போன்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியை இணைத்துக்கொள்வீர்களா என்று ஓட்டமாவடி பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் எஸ்.ஐ.முகாஜிரீன் கேட்டதற்கே ரவூப் ஹக்கீம் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை தாய்வீடாக கருதும் யாருக்கும் இந்தக் கதவு திறந்திருக்கும். அதில் எந்த சந்தேகமும் கிடையாது.


ஆனால், அவர்கள் இணைய விரும்புகின்ற போது இந்தக் கட்சியின் பாரம்பரியத்துக்கமைய, கட்சியில் இருக்கும் அனைத்து முக்கியஸ்தர்களுடனும் கலந்துரையாடியதன் இறுதியில் சாத்தியமான முடிவை எடுக்கலாம்.


எதிர்காலத்தில் கட்சியில் யாரும் இணைய விரும்பினால், அது தொடர்பாக பரிசீலித்து இணைக்கப்படுவார்கள் என்றார்.

நானாக யாரையும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிலிருந்து விரட்டியதும் கிடையாது, யாருக்கும் கதவு திறந்தே இருக்கும் ; ரவூப் ஹக்கீம் நானாக யாரையும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிலிருந்து விரட்டியதும் கிடையாது, யாருக்கும் கதவு திறந்தே இருக்கும் ; ரவூப் ஹக்கீம் Reviewed by Madawala News on January 22, 2023 Rating: 5

மின்சார கட்டணத்தை அதிகரிக்காவிட்டால் மீண்டும் வரிசை யுகத்திற்கு செல்ல நேரிடும் ; மின்சக்தி - எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரமின்சார கட்டணத்தை அதிகரிக்காவிட்டால் மீண்டும் வரிசை யுகத்திற்கு செல்லும் அபாயம் உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.


செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்,
சமீபத்தில் கட்டண திருத்தம் செய்யப்பட்ட பிறகு CEB க்கு மாதாந்தம் சுமார் 35 பில்லியன் சேர்க்கப்படுகிறது .

ஆனால் ஜனவரி மாதத்தில் மட்டும் மின்சார விநியோகத்திற்கான நிலக்கரிக்கு 38.45 பில்லியன் தேவை உள்ளது.


மின் உற்பத்திக்குத் தேவையான நிலக்கரியை ஏப்ரல் 25ஆம் தேதிக்கு முன்னதாகக் கொள்முதல் செய்ய வேண்டும், அதன் பிறகு செப்டம்பர் வரை நிலக்கரி இறக்குமதி செய்ய முடியாது என்று அமைச்சர் மேலும் கூறினார்.


மேலும், உயர்தரப் பரீட்சைகளின் போது தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு இலங்கைக்கு மேலதிகமாக 5 பில்லியன் பெறுமதியான எரிபொருள் தேவைப்படுகின்ற நிலையில் தற்போது அதனை வழங்க முடியாது.


“கட்டண திருத்தம் என்பது அரசாங்கமோ அமைச்சரோ எடுக்கக்கூடிய கடினமான முடிவாகும். நாங்கள் தேர்தலை சந்திக்கும் நேரத்தில் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏன் என்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியும்” என்று அவர் மேலும் கூறினார்.
மின்சார கட்டணத்தை அதிகரிக்காவிட்டால் மீண்டும் வரிசை யுகத்திற்கு செல்ல நேரிடும் ; மின்சக்தி - எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மின்சார கட்டணத்தை அதிகரிக்காவிட்டால் மீண்டும் வரிசை யுகத்திற்கு செல்ல நேரிடும் ; மின்சக்தி - எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர Reviewed by Madawala News on January 22, 2023 Rating: 5

பஸ் மோதியதில் பெண் ஒருவர் (சாஹிப் மைமூன்) சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு #புத்தளம் (சாரதி தப்பியோடி பொலிஸில் சரண் )புத்தளம் ரத்மல்யாய பகுதியில் இன்று (22) காலை இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.கற்பிட்டி – ஆலங்குடா பி முகாமைச் சேர்ந்த அசனார் லெப்பை பக்கீர் சாஹிப் மைமூன் (வயது 71) எனும் சிறுவர்களுக்கு கை வைத்தியம் செய்து வந்த வயோதிப பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.ரத்மல்யாய பகுதியிலிருந்து புத்தளம் நோக்கிப் பயணிப்பதற்காக வீதியோரத்தில் நின்றுகொண்டிருந்த குறித்த வயோதிப பெண் மீது தனியார் பயணிகள் பஸ் ஒன்று மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.இதன்போது விபத்து சம்பவம் இடம்பெற்ற இடத்திலேயே குறித்த வயோதிப பெண் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்த வயோதிப பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதி சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்று புத்தளம் பொலிஸில் சரணடைந்துள்ள நிலையில், அவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன், குறித்த பஸ் பொலிஸ் பாதுகாப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் புத்தளம் போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
பஸ் மோதியதில் பெண் ஒருவர் (சாஹிப் மைமூன்) சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு #புத்தளம் (சாரதி தப்பியோடி பொலிஸில் சரண் ) பஸ் மோதியதில் பெண் ஒருவர் (சாஹிப் மைமூன்) சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு #புத்தளம் (சாரதி தப்பியோடி பொலிஸில் சரண் ) Reviewed by Madawala News on January 22, 2023 Rating: 5

மக்கள் எனக்கு பணம் தராதவிடத்து நான் சிறைக்கு செல்வேன் ; மைத்திரிபாலஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 10 கோடி ரூபா நஷ்ட ஈட்டை வழங்கவேண்டுமென உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

இந்த நிலையில், நீதிமன்றத்தால் வழங்கப்படட தீர்ப்பின் பிரகாரம் 10 கோடி ரூபா செலுத்தும் அளவுக்கு தன்னிடம் இல்லை எனவும் சொத்தும் இல்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்,

எனவே, மக்களிடமிருந்து அந்த பணத்தை திரட்டுவதற்கு தான் எதிர்பார்த்துள்ளதாகவும், அந்த பணத்தொகை கிடைக்காவிட்டால் சிறைக்கு செல்ல தயாராக இருப்பதாகவும் அவரு தெரிவித்துள்ளார்
மக்கள் எனக்கு பணம் தராதவிடத்து நான் சிறைக்கு செல்வேன் ; மைத்திரிபால மக்கள் எனக்கு பணம் தராதவிடத்து நான் சிறைக்கு செல்வேன் ; மைத்திரிபால Reviewed by Madawala News on January 22, 2023 Rating: 5

மஞ்சள், யூரியா உரம், போதைப்பொருள் கடத்தல் வரிசையில் இலங்கைக்கு கடத்த இருந்த 250 ஜோடி காலணிகள் கடற்கரை மணலில் பதுக்கி வைத்த நிலையில் மீட்பு. ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி கடல் வழியாக நேற்று இரவு நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்த இருந்த சுமார் 6 இலட்சம் மதிப்பிலான 250 ஜோடி காலணிகள், ராமேஸ்வரம் சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டதுடன், கடத்தலில் ஈடுபட்ட கடத்தல்காரர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.


ராமேஸ்வரம் சுங்கத்துறை கண்காணிப்பாளருக்கு  சனிக்கிழமை  இரவு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து இன்று மாலை ராமேஸ்வரம் சுங்கத்துறை அதிகாரிகள் சேராங்கோட்டை கடற்கரையில் தீவிர சோதனை நடத்தினர்.


அப்போது சேராங்கோட்டை கடற்கரை மணலில் வெள்ளை சாக்கு மூட்டைகள் சில புதைத்து வைத்திருந்தது தெரியவந்ததையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அதை  சோதனை செய்த போது சுமார் 15க்கும் மேற்பட்ட சாக்குப் பைகளில்  250 ஜோடி  காலணிகள் இருந்தது. 


இதனையடுத்து 250 ஜோடி காலணிகளை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர் ராமேஸ்வரம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு எடுத்து வந்து விசாரணை நடத்தினர்.


சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய முதல் கட்ட விசாரணையில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 6 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 250 ஜோடி காலணிகள் நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்துவதற்காக தயாராக கடற்கரை மணலில் பதுக்கி வைத்தது தெரிய வந்துள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


மேலும் இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட கடத்தல்காரர்கள்  குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


இலங்கைக்கு சமையல் மஞ்சள், யூரியா உரம், வலி நிவாரணி, மருத்துவ பொருட்கள் கடத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது இலங்கைக்கு கடத்த இருந்த 250 ஜோடி காலணிகள் பறிமுதல் செய்யப்பட்டது பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மஞ்சள், யூரியா உரம், போதைப்பொருள் கடத்தல் வரிசையில் இலங்கைக்கு கடத்த இருந்த 250 ஜோடி காலணிகள் கடற்கரை மணலில் பதுக்கி வைத்த நிலையில் மீட்பு. மஞ்சள், யூரியா உரம், போதைப்பொருள் கடத்தல் வரிசையில் இலங்கைக்கு கடத்த இருந்த 250 ஜோடி காலணிகள் கடற்கரை மணலில் பதுக்கி வைத்த நிலையில் மீட்பு. Reviewed by Madawala News on January 22, 2023 Rating: 5

இளவயது திருமணம்,சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் போதை பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு-ஹஸ்பர் _
தம்பலகாமம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட தாயிப் நகர் பகுதியில் இளவயது திருமணம்,சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் போதை பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வொன்று இன்று (21) இடம் பெற்றது.

தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டுதளுக்கிணங்க இடம் பெற்ற குறித்த நிகழ்வினை தம்பலகாமம் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மற்றும் அப்பகுதி இளைஞர் கழகம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். வளவாளராக தம்பலகாமம் சுகாதார வைத்திய அதிகாரி Dr.மலர்விழி கலந்து கொண்டார்.

மேலும் தம்பலகாமம் பிரதேச செயலக இளைஞர் சேவை அதிகாரி ஜாபிர்,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.டி.பாயிஸ் ,இளைஞர் யுவதிகள் என பலர் கலந்து கொண்டனர்.இளவயது திருமணம்,சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் போதை பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு இளவயது திருமணம்,சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் போதை பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு Reviewed by Madawala News on January 22, 2023 Rating: 5

உள்ளாட்சி மன்ற தேர்தலால் நாட்டில் ஆட்சி மாறப்போவதில்லை ; அமைச்சர் ஜீவன் தொண்டமான்.இது அரசியல் செய்யும் நேரம் அல்ல. நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டு, நாட்டு மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்க வேண்டும். அதனை ஜனாதிபதி செய்து வருகின்றார். எனவே, மக்கள் நலன்கருதி அதற்கு நாம் முழு ஒத்துழைப்பையும் வழங்கி வருகின்றோம்." - என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

அத்துடன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மொட்டு கட்சியினரின் கைக்கூலி அல்லர். தனது செயல்மூலமே அவர் அதனை நிரூபித்து விட்டார் எனவும் அமைச்சர் ஜீவன் கூறினார்.

நுவரெலியாவில் இன்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் அமைச்சரும், முன்னாள் எம்.பியுமான நவீன் திஸாநாயக்க, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், எம்.பியுமான எம்.ராமேஷ்வரன் ஆகியோர் உடனிருந்தார்கள்.

அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது,

" உள்ளாட்சி மன்ற தேர்தலால் நாட்டில் ஆட்சி மாறப்போவதில்லை. எனினும், மக்களுக்கு தமது உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளை தெரிவு செய்யக்கூடியதாக இருக்கும். நாட்டில் தற்போது சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர். மக்களின் வரிப்பணத்தில்தான் அவர்களுக்கு சம்பளமும், சிறப்புரிமைகளும் வழங்கப்படுகின்றன.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இதனை எப்படி நிர்வகிப்பது?

அதேபோல உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைத்தால் அது சிறுபான்மையின மக்களின் பிரதிநிதித்துவத்தில் தாக்கம் செலுத்தும்.

ஜனாதிபதி தேர்தல் ஒன்றின் ஊடாக நிலையான ஆட்சியை ஏற்படுத்தலாம். அவ்வாறானதொரு தேசிய மட்ட தேர்தலே ஏற்புடையதாக இருக்கும். பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் குட்டி தேர்தல் மேலும் சுமையாகவே அமையும். எது எப்படி இருந்தாலும் ஜனநாயக வழியில் நாம் தேர்தலை எதிர்கொள்வோம்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மொட்டு கட்சியின் கைக்கூலி என சிலர் விமர்சிக்கின்றனர். ஆனால் அவர் ஜனாதிபதியான கையோடு மொட்டு கட்சியின் ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்சவால் எடுக்கப்பட்ட சில தீர்மானங்களை இரத்து செய்தார். அவர் மொட்டு கட்சி கைக்கூலி என்றால் அப்படி செய்ய முடியுமா? நாடாளுமன்ற தேர்தல் ஊடாக , அரசமைப்பின் பிரகாரம் தெரிவான ஜனாதிபதி அவர் என்பதை நாம் ஏற்றாக வேண்டும்.

மலையக அரசியலில் இன்று சகோதரத்துவ உணர்வு உள்ளது. அந்த புரிந்துணர்வு இனி மாறாது. நாங்கள் இன்று அமைச்சராக இருக்கலாம். நாளை அவர்கள் அமைச்சராகலாம். அதேபோலதான் பிரதான கட்சிகளுடனும் எமக்கு புரிந்துணர்வு உள்ளது. மக்கள் பக்கம் நின்று, மக்களுக்கு நன்மை பயக்கும் தீர்மானங்களையே நாம் எடுப்போம்." - என்றார்.

-மலையக நிருபர் கிரிஷாந்தன்
உள்ளாட்சி மன்ற தேர்தலால் நாட்டில் ஆட்சி மாறப்போவதில்லை ; அமைச்சர் ஜீவன் தொண்டமான். உள்ளாட்சி மன்ற தேர்தலால் நாட்டில் ஆட்சி மாறப்போவதில்லை ; அமைச்சர் ஜீவன் தொண்டமான். Reviewed by Madawala News on January 21, 2023 Rating: 5

Sad News : பேராதனைப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஜூமான் விபத்தில் உயிரிழப்பு.பேராதனைப் பல்கலைக்கழக விஞ்ஞான பீட சிரேஷ்ட விரிவுரையாளராகப் பணியாற்றிய கலாநிதி ஜூமான் அவர்கள் இன்று குருநாகல் கல்கமுவ என்ற இடத்தில் இடம்பெற்ற விபத்தில் விபத்தில் காலமானார்.

It is very sad to inform you that Dr Juman, Senior Lecturer, Faculty of Science (Mathematics Dept) passed away today on 21st January 2023 by an accident at Galgamuwa, Kurunegala.
Sad News : பேராதனைப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஜூமான் விபத்தில் உயிரிழப்பு. Sad News : பேராதனைப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஜூமான் விபத்தில் உயிரிழப்பு. Reviewed by Madawala News on January 21, 2023 Rating: 5

2022 ஆண்டில் சுமார் 10 இலட்சம் பேர் கடவுச்சீட்டுக்களை பெற விண்ணப்பித்தனர்.வெளிநாடுகளுக்கு செல்வதற்காக கடந்த 2022 ஆம் ஆண்டின் இறுதி வரை 9 லட்சத்து 11 ஆயிரத்து 693 பேர் கடவுச்சீட்டுக்களை பெற விண்ணப்பித்திருந்ததாக குடிவரவு,குடிகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் ஹர்ச இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.


அதேவேளை கடவுச்சீட்டு விநியோகம் மற்றும் இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டவர்களுக்கு விசா அனுமதிகளை வழங்க அறவிடப்பட்ட கட்டணங்கள் மூலம் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்திற்கு கடந்த ஆண்டு 20.1 பில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளது.

கடந்த வருடம் 18.05 பில்லியன் வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அதனை விட மேலதிகமான வருமானத்தை பெற முடிந்தது.இரட்டை குடியுரிமை வழங்குதல் மற்றும் விமான நிலைய சேவைகள் மூலம் கிடைத்த வருமானத்தில் இந்த வருமானத்தை பெற முடிந்தது.

இதனிடையே எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் தற்போது விநியோகிக்கப்படும் கடவுச்சீட்டு நவீனமயப்படுத்தப்பட்டு, இலத்திரனியல் வகை கடவுச்சீட்டை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


இதற்கான தொழிற்நுட்ப குழு நியமிக்கப்பட்டு அதன் பரிந்துரைகள் அரசாங்கத்திடம் சமர்பிக்கப்பட உள்ளன எனவும் எனவும் ஹர்ச இலுக்பிட்டிய கூறியுள்ளார்
2022 ஆண்டில் சுமார் 10 இலட்சம் பேர் கடவுச்சீட்டுக்களை பெற விண்ணப்பித்தனர். 2022 ஆண்டில் சுமார் 10 இலட்சம் பேர் கடவுச்சீட்டுக்களை பெற விண்ணப்பித்தனர். Reviewed by Madawala News on January 21, 2023 Rating: 5

பெண் ஒருவரை யார் சொந்தம் கொள்வது என்ற தகராற்றில் வர்த்தகர்கள் மீது துப்பாக்கிச் சூடு... மற்றொரு வர்த்தகர் கைது.ஹொரண, கும்புக பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரை கொலை செய்ய முயன்ற நபர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.


கடந்த 16 ஆம் திகதி குறித்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.


சம்பவம் தொடர்பில் ஹொரண, வவுலுகல பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய நபரே (அவரும் ஒரு வார்த்தகர்) கைது செய்யப்பட்டுள்ளார்.

தனிப்பட்ட தகராறு காரணமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான விசாரணையில் சந்தேக நபர் ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததும் அதே பெண்ணுடன் குறிப்பிட்ட வர்த்தகரும் தொடர்பு வைத்திருந்ததால் ஏற்பட்ட குரோதம் காரணமாக துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளது தெரியவந்தது.

சந்தேகநபரின் துப்பாக்கி வவுலுகல பிரதேசத்தில் வெறிச்சோடிய காணி ஒன்றில் வைக்கோல் குவியலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் ஹொரணை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
பெண் ஒருவரை யார் சொந்தம் கொள்வது என்ற தகராற்றில் வர்த்தகர்கள் மீது துப்பாக்கிச் சூடு... மற்றொரு வர்த்தகர் கைது. பெண் ஒருவரை யார் சொந்தம் கொள்வது என்ற தகராற்றில் வர்த்தகர்கள் மீது துப்பாக்கிச் சூடு... மற்றொரு வர்த்தகர் கைது. Reviewed by Madawala News on January 21, 2023 Rating: 5

இலங்கையில் உள்ளூராட்சித் தேர்தல் மார்ச் 9ஆம் திகதி நடைபெறும் - தேர்தல் ஆணையம் சற்றுமுன் அறிவிப்பு.இலங்கையில் உள்ளூராட்சித் தேர்தல் மார்ச் 09ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது இன்று (ஜனவரி 21) நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடைந்தது
.

இலங்கையில் உள்ளூராட்சித் தேர்தல் மார்ச் 9ஆம் திகதி நடைபெறும் - தேர்தல் ஆணையம் சற்றுமுன் அறிவிப்பு. இலங்கையில் உள்ளூராட்சித் தேர்தல் மார்ச் 9ஆம் திகதி நடைபெறும் - தேர்தல் ஆணையம் சற்றுமுன் அறிவிப்பு. Reviewed by Madawala News on January 21, 2023 Rating: 5
Powered by Blogger.