முனையத்தில் எரிபொருள் கையிருப்பு இல்லை ? மீண்டும் நீள்கிறது எரிபொருள் வரிசைதற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மீண்டும் எரிபொருள் வரிசை நீண்டு செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.


பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இல்லை என்ற பதாகைககள் மீண்டும் தொங்கவிடப் பட்டுள்ளதுடன், பல நிலையங்களில் மக்கள் வரிசை காணப்படுகிறது. எரிபொருள் கையிருப்பு இன்மையால் முத்துராஜவெல முனையம் மூடப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டு, மக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரியவருகிறது.


முத்துராஜவெல முனையத்தில் எரிபொருள் கையிருப்பு இல்லை என மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்த வட்டாரங்களில் இருந்து தெரியவந்துள்ளதாக அறியமுடிகிறது.

முனையத்தில் எரிபொருள் கையிருப்பு இல்லை ? மீண்டும் நீள்கிறது எரிபொருள் வரிசை முனையத்தில் எரிபொருள் கையிருப்பு இல்லை ? மீண்டும் நீள்கிறது எரிபொருள் வரிசை Reviewed by Madawala News on September 21, 2022 Rating: 5

விளையாட வேண்டாம் ... பசியில் உண்ணாது இருக்கும் பிள்ளைகளின் தந்தைகளின் ஆவேசம் வெளிப்பட்டால், மக்கள் கொதித்தெழும் நிலைமை உருவாகும் ; விமல்எரிபொருள், எரிவாயுவை கொண்டு வந்துவிட்டால் மக்கள் அமைதியாக இருந்துவிடுவார்கள் என

விளையாட வேண்டாம் ... பசியில் உண்ணாது இருக்கும் பிள்ளைகளின் தந்தைகளின் ஆவேசம் வெளிப்பட்டால், மக்கள் கொதித்தெழும் நிலைமை உருவாகும் ; விமல் விளையாட வேண்டாம் ... பசியில் உண்ணாது இருக்கும் பிள்ளைகளின் தந்தைகளின் ஆவேசம் வெளிப்பட்டால், மக்கள் கொதித்தெழும் நிலைமை உருவாகும் ; விமல் Reviewed by Madawala News on September 21, 2022 Rating: 5

''பசியுடன் ஒருவரும் வாடக்கூடாது" என்ற உயர்ந்த எண்ணத்தில், பல இடங்களில் இலவசமாக ரொட்டியை வழங்கும் வெண்டிங் மெஷின்களை நிறுவிய அரசாங்கம் ; இது டுபாயில்..பசியுடன் ஒருவரும் வாடக்கூடாது என்ற உயர்ந்த எண்ணத்தில், டுபாய் முழுதும் ஆங்காங்கே சூடான ரொட்டியை இலவசமாக அளிக்கும், ‘வெண்டிங்’ இயந்திரங்களை அந்நாட்டு அரசு நிறுவியுள்ளது.

மத்திய கிழக்கு நாடான ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில், வெளிநாடுகளில் இருந்து வந்து பணிபுரிவோர் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர்.

இவர்களில் பெரும்பாலானோர் கட்டட வேலை, கார் மற்றும் கனரக வாகன ஓட்டுனர்கள், ‘டெலிவரி’ ஊழியர்களாக பணியாற்றுகின்றனர். குடும்பத்தினருக்கு பணத்தை சேமிப்பதற்காக இவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் மூன்று வேளை சாப்பிடாமல் பட்டினியுடன் நாட்களை கழிக்கின்றனர். இந்நிலையை மாற்ற வேண்டும் என ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தோம் கடந்த ஆண்டு தெரிவித்தார்.

இதன் ஒருபகுதியாக, டுபாயில் இலவச உணவு அளிக்கும், ‘வெண்டிங் மிஷின்’ எனப்படும், தானியங்கி இயந்திரங்களை நகரின் பல்வேறு பகுதிகளிலும் அவர் நிறுவியுள்ளார். இந்த உணவு இயந்திரங்கள் கடந்த 17ஆம் திகதி முதல் செயல்பாட்டுக்கு வந்தன. டுபாயின், ‘அஸ்வாக்’ மளிகை கடைகளின் வாயிலில் இந்த இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இதில், அரபி ரொட்டி மற்றும், ‘பிங்கர் ரோல்’ ஆகிய இரண்ட வகை உணவுகள், சுடச்சட தயாரிக்கப்பட்டு ஒரு நிமிடத்தில் அளிக்கப்படுகின்றன. இந்த இலவச உணவு திட்டத்துக்கு தனிநபர்களும் நன்கொடை அளிக்கலாம் என டுபாய் அரசு தெரிவித்துள்ளது
''பசியுடன் ஒருவரும் வாடக்கூடாது" என்ற உயர்ந்த எண்ணத்தில், பல இடங்களில் இலவசமாக ரொட்டியை வழங்கும் வெண்டிங் மெஷின்களை நிறுவிய அரசாங்கம் ; இது டுபாயில்.. ''பசியுடன் ஒருவரும் வாடக்கூடாது" என்ற உயர்ந்த எண்ணத்தில், பல இடங்களில் இலவசமாக ரொட்டியை வழங்கும் வெண்டிங் மெஷின்களை நிறுவிய அரசாங்கம் ; இது டுபாயில்.. Reviewed by Madawala News on September 21, 2022 Rating: 5

தம்பதியினர் பயணித்த கார் மீது ரயில் மோதியதில் பெண் படுகாயம்.நுகேகொட பிரதேசத்தில் கார் ஒன்று ரயிலில் மோதியதில் பெண் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.


நுகேகொட பங்கிரிவத்தை ரயில் நிலையத்திற்கு அருகில் இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காரில் பயணித்த பெண் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மிரிஹான தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

பெங்கிரிவத்த புகையிரத நிலையத்திற்கு அருகில் வசிக்கும் தம்பதியினர் இன்று (21) அதிகாலை திம்புலாகல பகுதிக்கு செல்வதற்காக வீட்டை விட்டு வெளியேறிய போதே இந்த விபத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் வசிக்கும் பெண்ணும் அவரது கணவரும் இன்று அதிகாலை வீட்டை விட்டு வெளியேறி, வீட்டை விட்டு வெளியேறிய சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளாகியுள்ளனர்.


அவிசாவளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் நுகேகொட பங்கிரிவத்தை புகையிரத கடவையில் தம்பதியினர் பயணித்த கார் மோதியுள்ளது.

புகையிரதத்துடன் மோதிய கார் சில மீட்டர்கள் முன்னோக்கிச் சென்று பெங்கிரிவத்த புகையிரத நிலையத்திற்கு முன்பாக நிறுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்விபத்தில் கார், இரண்டு தொலைபேசி கம்பங்கள் மற்றும் புகையிரதத்தின் மின் விளக்கு ஒன்றும் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மிரிஹான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தம்பதியினர் பயணித்த கார் மீது ரயில் மோதியதில் பெண் படுகாயம். தம்பதியினர் பயணித்த கார் மீது ரயில் மோதியதில் பெண் படுகாயம். Reviewed by Madawala News on September 21, 2022 Rating: 5

இராஜாங்க அமைச்சர் மீது வீதியில் வைத்து ஹெல்மெட்டால் தாக்குதல்.. இருவரை தேடி பொலிஸ் வலை வீச்சு.ஆரம்ப கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க மீது மோட்டார் சைக்கிள் ஹெல்மெட் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


திங்கட்கிழமை (19) மாலை பதுளை பண்டாரநாயக்க மாவத்தையில் வைத்து இராஜாங்க அமைச்சர் இருவரால் ஹெல்மெட்டால் தாக்கப்பட்டதாக டெய்லி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.


பதுளையில் உள்ள உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் ஒருவருக்கு சொந்தமான கடைக்கு அருகில் அரச அமைச்சர் தனது காரை நிறுத்தி உரையாடலில் ஈடுபட்டதை அடுத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.


மதுபோதையில் இருவர் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், மோட்டார் சைக்கிளில் வந்த தலைக்கவசத்தால் அவரை தாக்கியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பதுளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
இராஜாங்க அமைச்சர் மீது வீதியில் வைத்து ஹெல்மெட்டால் தாக்குதல்.. இருவரை தேடி பொலிஸ் வலை வீச்சு. இராஜாங்க அமைச்சர் மீது வீதியில் வைத்து ஹெல்மெட்டால் தாக்குதல்.. இருவரை தேடி பொலிஸ் வலை வீச்சு. Reviewed by Madawala News on September 21, 2022 Rating: 5

கட்டாய ஓய்வு வயது 60 ஆனதால் சுமார் 300 விசேட மருத்துவர்கள் ஓய்வு பெறுகிறார்கள்... சுகாதாரத் துறையில் பெரும் நெருக்கடியை ஏற்பட வாய்ப்பு.இடைக்கால வரவு செலவுத்திட்டத்தின் பரிந்துரையின்படி அரசத்துறையின் கட்டாய ஓய்வு வயது 60 என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், டிசம்பர் 31ம் திகதிக்குப் பிறகு சுமார் 300 விசேட மருத்துவர்கள் ஓய்வு பெற உள்ளதாக விசேட மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, ஒரு நாளில் அதிக எண்ணிக்கையிலான மருத்துவ நிபுணர்கள் ஓய்வு பெறும் நாளாக அது இருக்கும் என அவர்கள் அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது சுகாதாரத் துறையில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 43 விசேட வைத்திய நிபுணர்களும், கண்டி தேசிய வைத்தியசாலையின் 30 விசேட வைத்திய நிபுணர்களும், கராப்பிட்டி போதனா வைத்தியசாலையின் 17 விசேட வைத்திய நிபுணர்களும், சிறுவர் வைத்தியசாலையின் 15 விசேட வைத்திய நிபுணர்களும், மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையின் 9 விசேட வைத்திய நிபுணர்களும் ஓய்வுபெறவுள்ளனர்.

மேலும், சுமார் 8 எழும்பு மச்சை மாற்று தொடர்பான விசேட மருத்துவர்களும் டிசம்பர் 31ஆம் திகதி ஓய்வுபெறவுள்ளனர்.

அவ்வாறான விசேட வைத்தியர்கள் 33 பேர் மட்டுமே நாட்டில் உள்ள நிலையில், அவர்களில் இருவர் ஏலவே ஓய்வு பெற்றுள்ளதுடன், 5 பேர் வெளிநாடு செல்ல தயாராவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, 14 எலும்பு மச்சை மாற்று விசேட வைத்தியர்களே எஞ்சியுள்ளதாகவும், மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் எலும்பு மச்சை மாற்று சத்திரசிகிச்சைக்கான திகதிகள் தற்போது 2025 ஆம் ஆண்டிற்கு வழங்கப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கட்டாய ஓய்வு வயது 60 ஆனதால் சுமார் 300 விசேட மருத்துவர்கள் ஓய்வு பெறுகிறார்கள்... சுகாதாரத் துறையில் பெரும் நெருக்கடியை ஏற்பட வாய்ப்பு. கட்டாய ஓய்வு வயது 60 ஆனதால் சுமார் 300 விசேட மருத்துவர்கள் ஓய்வு பெறுகிறார்கள்... சுகாதாரத் துறையில் பெரும் நெருக்கடியை ஏற்பட வாய்ப்பு. Reviewed by Madawala News on September 21, 2022 Rating: 5

மறைந்த மகாராணி எலிசபெத்திற்கு கல்முனை மாநகர சபையில் அஞ்சலி.... மகாராணியின் சிறப்பியல்புகள் பற்றியும் முதல்வர் றகீப் இனால் எடுத்துக் கூறப்பட்டது.(அஸ்லம் எஸ்.மௌலானா)
பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து கல்முனை மாநகர சபையில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.


கல்முனை மாநகர சபையின் 54ஆவது மாதாந்த பொதுச் சபை அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை (20) பிற்பகல், மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் இடம்பெற்றபோதே இந்நிகழ்வு இடம்பெற்றது.


சபை அமர்வின் ஆரம்பத்தில் பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர், எலிசபெத் அவர்களின் சிறப்பியல்புகள் பற்றியும் எடுத்துக் கூறினார். அத்துடன் அவருக்கு மரியாதை செலுத்தும் பொருட்டு அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று 02 நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.

அதுபோல் கல்முனை மாநகர சபையின் மறைந்த உறுப்பினர் புவனேஸ்வரி விநாயகமூர்த்தி அவர்களுக்கும் இதன்போது 02 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

--
Aslam S.Moulana
Journalist

மறைந்த மகாராணி எலிசபெத்திற்கு கல்முனை மாநகர சபையில் அஞ்சலி.... மகாராணியின் சிறப்பியல்புகள் பற்றியும் முதல்வர் றகீப் இனால் எடுத்துக் கூறப்பட்டது. மறைந்த மகாராணி எலிசபெத்திற்கு கல்முனை மாநகர சபையில் அஞ்சலி.... மகாராணியின் சிறப்பியல்புகள் பற்றியும் முதல்வர் றகீப் இனால் எடுத்துக் கூறப்பட்டது. Reviewed by Madawala News on September 21, 2022 Rating: 5

இமய மலையே வியக்கும் இமாலய சாதனை! 106 Km நடந்து ஸ்ரீ பாத மலையேறிய பேருவளை இளைஞன்.இமய மலையே வியக்கும் இமாலய சாதனை!

106 Km நடந்து ஸ்ரீ பாத மலையேறிய பேருவளை இளைஞன்...

சாதனைகள் பலவிதம்... இதுவோ புதுவிதம்!

இரண்டு மாடி ஏறி விட்டு இருபது நிமிடம் மூச்சு வாங்கும் காலமிது. அப்படி இருக்கையில் ஒருவன் இரண்டு நாட்களுக்கு மேல் நடந்து, பின் கரடு முரடான காட்டுப் பாதையைக் கடந்து 2243m உயரமான ஸ்ரீ பாத மலையுச்சியை அடைவது என்பதெல்லாம் வேற லெவல்..

தரமான சிறப்பான சம்பவம்!!

Shahmee Saheedh . துடிப்பான இளைஞன். ஒரு YouTuber. சமூகநேயமுடையவன்.

இலங்கையின் பல இடங்களுக்குச் சென்று இயற்கையைத் தானும் ரசித்து,

Show me the view எனும் தனது YouTube channel இல் அந்த வீடியோக்களை இட்டு பிறரையும் ரசிக்க வைக்கும் சாமர்த்தியம் மிக்கவன்!

இருந்தும் இவனுக்கு உரிய அங்கீகாரம் சரியாகக் கிடைக்கவில்லை!

ஆனால் எதையும் இவன் பொருட்படுத்தவில்லை!

"சாதனை புரி'டா ஷஹ்மீ" என்று இவனுக்குள் இருந்து ஏதோ ஒரு குரல் ஓங்கி ஒலித்துக்கொண்டே இருந்திருக்க வேண்டும்..

அதனால் தான் மாபெரும் சம்பவத்தில் இறங்கி இருக்கிறான் இந்த 23 வயது இளைஞன்!

எந்தவொரு சாதனைக்குப் பின்னாலும்,
மிகப் பெரும் அர்ப்பணிப்பு வேண்டும்..
உடலை வருத்தும் தியாகங்கள் வேண்டும்..

இரண்டு நாட்களுக்கு மேலாக தொடர்ந்து நடக்கத் தயாரான
இவனது துணிச்சல் உண்மையிலேயே பாராட்டத்தக்கது!

18 ஆம் திகதி அதிகாலை 5.30 மணிக்கு தனது நடைப் பயணத்தை ஆரம்பித்திருக்கிறான், கையில் இருந்த வெறும் 900 ரூபாவோடு... கூடவே மனதில் பெரும் தைரியத்தோடு!!!

அந்த 900 ரூபாய் எதற்கு??? வயிற்றுக்குத் தான்!
பசித்தால் சாப்பிடலாம்....

சாப்பாடா? சாதனையா??

"சாதனையின் முன் சாப்பாடெல்லாம் ஒரு சாமனா" என்று பேருவளையில்  இருந்து நடக்க ஆரம்பித்தான் இவன் ...

இரண்டு நாட்களாக நடந்து ஸ்ரீபாத மலையடிவாரத்தை அடைந்து...

மூன்றாம் நாள் இன்று (செப்டம்பர் 20) காலை 7 மணிக்கு கரடுமுரடான காட்டுப்பதையில் (படிகளில் அல்ல!) மலையேற ஆரம்பித்து, 
நண்பகல் 12.30 மணிக்கு மலையுச்சியில் காலடி எடுத்து வைத்து சாதனை புரிந்திருக்கிறான்!!

பேருவளையில் இருந்து ஸ்ரீபாத மலையுச்சி வரை கிட்டத்தட்ட 106 km தூரம் நடந்திருக்கிறான்!!

'பேருவளையில் இருந்து ஸ்ரீபாதவிற்கு ஒரு இளைஞன் நடந்து வருகிறான்' எனும் செய்தி சமூக வலைத்தளங்களில் பரவ...
சிங்கள அன்பர்களுக்கும் அச் செய்தி சென்றடைந்தது!!

"யார்ரா இவன்... இவனைப் பார்த்தே ஆக வேண்டும்!" என்று இவரைச் சந்திக்க பல சிங்கள அன்பர்கள் 
ஸ்ரீபாத மலையை அண்மித்த இடங்களில் காத்திருந்து இவனைச் சந்தித்தனர்...

இவரது சாதனையைப் பாராட்டி ஊக்குவித்தனர்!!

எனக்குத் தெரிந்து இலங்கையில் இப்படி நடந்து பிரசித்தி பெற்ற ஸ்ரீபாத மலையை உச்சியை, மூன்று நாட்களாக நடந்து ஏறியதில்லை!!!

சாதனை புரியும் இப்படியான இளைஞர்களைப் பாராட்டி ஊக்குவிக்க வேண்டும்!!!

அடுத்து இலங்கை பூராவும் நடந்து சாதிக்கும் நோக்கில் இருக்கிறார். Sponsors கிடைத்தால் அதையும் சாதிப்பான்!!!

இவரது சாதனையை உலகறியச் செய்வோம்!
மேலும் பல சாதனைகளைப் புரிய இவரை ஊக்குவிப்போம்!

இவ்வாறான சாதனைகளின் பால் எமது இளைஞர்களைத் தூண்டி விட்டால், 
இளைஞர்கள் தவறான பழக்க வழக்கங்களில் இருந்து தவிர்ந்து தேக ஆரோக்கியத்துடன் இருக்க முனைவார்கள் ....

விளையாட்டும் சாதனைகளுமே இளைஞர்களின் உள ஆரோக்கியத்தில் செல்வாக்கு செலுத்துகின்றன!

Ifham Aslam
20.09.2022
இமய மலையே வியக்கும் இமாலய சாதனை! 106 Km நடந்து ஸ்ரீ பாத மலையேறிய பேருவளை இளைஞன். இமய மலையே வியக்கும் இமாலய சாதனை! 106 Km நடந்து ஸ்ரீ பாத மலையேறிய பேருவளை இளைஞன். Reviewed by Madawala News on September 21, 2022 Rating: 5

35 வருடங்களாக திருத்தப்படாத இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் யாப்பு உடனடியாக திருத்தப்பட வேண்டும்இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் யாப்பை திருத்துமாறு சர்வதேச கால்பந்து சம்மேளனம் பல தடவைகள் அறிவித்தும் அது திருத்தப்படவில்லை எனவும் சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் பரிந்துரைகளுக்கு அமைவாக இலங்கைக்கு ஏற்றவாறு அதன் யாப்பை துரிதமாக திருத்துவதற்கு நடவடிக்கைகள் எடுப்பதாகவும் இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர்   ஜஸ்வர் உமர் தெரிவித்தார்.


இலங்கை கால்பந்தாட்ட  சம்மேளனத்தின் யாப்பு கடந்த 2002 ஆம் ஆண்டு சிறிதளவு திருத்தப்பட்டது. மீண்டும் சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் 2014 ஆம் ஆண்டு இந்த யாப்பை திருத்தும்படி இலங்கை   கால்பந்தாட்ட சம்மேளனத்திற்கு அறிவித்த போதும் அது மாற்றப்படவில்லை. அப்போது கால்பந்தாட்ட  சம்மேளனத்தின் தலைவராக ரஞ்சித். ரொட்ரிகோ இருந்தார். மேலும்  அனுர டி சில்வா தலைவராக செயற்பட்ட சமயத்திலும் சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் இந்த யாப்பை திருத்துமாறு அறிவித்திருந்த போதிலும் அது திருத்தப்படவில்லை.

2021ஆம் ஆண்டு இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் அடுத்த தேர்தலுக்கு முன்னர் இந்த யாப்பை திருத்த சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.அதன் எதிரொலியாக இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் புதிய அரசியலமைப்பு வரைவு தயாரிக்கப்பட்டு அதன் பிரதிகள் மே 2022 க்கு முன்னர் விளையாட்டு அமைச்சு மற்றும் கால்பந்தாட்ட சம்மேளனத்தின் அனைத்து உறுப்பினர்களும் அனுப்பப்பட்டன

இந்த புதிய யாப்பில்  சுயாதீன நிதி நிர்வாகம், சுயாதீன தேர்தல் முறை, சுயாதீன ஒழுக்காற்று குழுக்கள் உள்ளிட்ட தெளிவான அதிகார பகிர்வு முறையை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த யாப்பை  நிறைவேற்றுவதற்கு இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் பொதுச் சபையின் மூன்றில் இரண்டு  அதிகாரம் ஏற்கனவே  கிடைத்துள்ளது.

இலங்கை கால்பந்தாட்ட மேளனத்தின் யாப்பை திருத்துவதற்கு தேவையான ஆலோசனைகள் மற்றும் கண்காணிப்புகளுக்காக சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் இரண்டு பிரதிநிதிகளும், ஆசிய கால்பந்தாட்ட சம்மேளனத்தின் ஒரு பிரதிநிதியும் ஏற்கனவே நாட்டுக்கு வந்துள்ளனர்.

ஜஸ்வர் உமர்
தலைவர்
இலங்கை கால்பந்து சம்மேளனம்
35 வருடங்களாக திருத்தப்படாத இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் யாப்பு உடனடியாக திருத்தப்பட வேண்டும் 35 வருடங்களாக திருத்தப்படாத இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் யாப்பு உடனடியாக திருத்தப்பட வேண்டும் Reviewed by Madawala News on September 20, 2022 Rating: 5

I

தேசிய பேரவையில் நம்பிக்கை வைத்து
செயலாற்றி பிரச்சினைகளைத் தீர்ப்போம்.

மக்களை தொடர்ந்தும் ஏமாற்றுகின்ற பாராளுமன்றமாக இருக்காமல், பிரச்சினைகளுக்கு தீர்வு காண்கின்ற சபையாக தேசியபேரவை இயங்குவதற்கு சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒத்துழைக்க வேண்டுமென, சுற்றாடல்துறை அமைச்சர் நஸீர் அஹமட் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.


தேசிய பேரவை உருவாக்குவது தொடர்பில் பிரதமர் (20) சமர்ப்பித்த பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அமைச்சர் நஸீர் அஹமட் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர்,

தேசிய இனப்பிரச்சினை உள்ளிட்ட நாட்டின் முக்கிய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தேசிய பேரவை உருவாக்கப்படவுள்ளது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உள்ளடங்கலாக சகல கட்சிகளதும் எம்பிக்கள் இச்சபையில் உள்வாங்கப்படவுள்ளனர்.

எனவே, இச்சபையில் சகலரது கருத்துக்களும் உள்வாங்கப்படும். இதனால், இச்சபையின் செயற்பாடுகளில் நம்பிக்கை வைத்து சகலரும் செயற்பட வேண்டும். இதற்கான சிறந்த ஆலோசனைகளை அமையவுள்ள இத்தேசியபேரவை வரவேற்கும்.


எனக்கு முன்னர் பேசிய சில எம்பிக்கள், இதுவரை காலங்களும் அமைக்கப்பட்ட சபைகளால் எதுவும் நடக்கவில்லை என்ற நம்பிக்கையீனத்தில்
கருத்துக்களை வௌியிட்டனர். அவ்வாறன்று. கடந்தகாலங்களில் நடந்தவற்றை கருத்திற்கொண்டு இப்போது அமையவுள்ள தேசிபேரவையில் நம்பிக்கை இழக்கக் கூடாது.


இந்த உயரிய சபையில் பேசப்படாத விடயங்கள் எதுவுமில்லை. நாட்டில் நடந்த எல்லா விடயங்களும் பேசப்பட்டுள்ளன. ஆனால், இவைகளில் 99 வீதமானவற்றுக்கு தீர்வுகள் காணப்படவில்லை.


 இனியாவது, அமையவுள்ள இத்தேசிய பேரவையால் இந்நிலைமைகளை மாற்ற முயற்சிப்போம். கல்வி, சுகாதாரம், பொருளாதாரம் மற்றும் தேசிய பிரச்சினைகளுக்கான தீர்வுகளையும் இச்சபையினூடாக பெறுவதற்கு செயற்படல் அவசியம். அப்போதுதான் மக்களின் நம்பிக்கையை வெல்ல முடியும்.
I I Reviewed by Madawala News on September 20, 2022 Rating: 5

எச்சரிக்கை ⚠️ மேலும் பல ரயில்கள் தடம்புரளும் என இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்தது.ரயில் மார்க்கங்களின் பராமரிப்புக்கு தேவையான உதிரிபாகங்கள் உடனடியாகக் கிடைக்காவிட்டால், எதிர்காலத்தில் ஏற்படும் கோளாறுகள் காரணமாக மேலும் பல ரயில்கள் தடம் புரளும் என்று இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரயில்களுக்கு தேவையான உராய்வு நீக்கிகள் மற்றும் இயந்திரங்கள், பெட்டிகளுக்கான பல்வேறு உதிரிபாகங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

நாளாந்தம் ரயில்கள் தடம்புரள்வதுடன், இயங்கும் பல ரயில்களில் இயந்திரக் கோளாறுகள் ஏற்படுவதாகவும் குறிப்பிட்ட சங்கம், ரயில்கள் இல்லை என்று கூறி பல ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்படுவதாகவும் தெரிவித்தது.

ரயில் உதிரி பாகங்கள் இல்லாததால், தற்போது நாளொன்றுக்கு சுமார் 14 ரயில் சேவைகளை திணைக்களம் இரத்து செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ரயில்வே திணைக்களத்தில் 19,382 ஊழியர்கள் தேவை என்றும் தற்போது 10,500 ஊழியர்கள் மாத்திரமே உள்ளதாகவும் தெரிவித்த சங்கம், இதன் காரணமாக பயணிகளுக்கு முழுமையான சேவை வழங்கப்படுவதில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனால் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தும் பயணிகள் கடும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் திணைக்களத்தின் தற்போதைய நிலைமை குறித்து நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மற்றும் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தவுள்ளதாகவும் சங்கம் குறிப்பிட்டது.

கொழும்பு பிரதம செயலாளர் அலுவலகத்துக்கு அருகில் நேற்று (19) ரயிலொன்று தடம்புரண்டதுடன், காங்கேசன்துறையிலிருந்து கல்கிசை நோக்கி பயணித்த குளிரூட்டப்பட்ட ரயிலொன்று, கொள்ளுப்பிட்டியில் கடந்த வாரம் தடம்புரண்டமையால் ரயில் சேவைகள் பல தாமதமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

மார்க்கங்களை பராமரிப்பதற்கு தேவையான மூலப் பொருட்களுக்கான பற்றாக்குறை காரணமாக இவ்வாறான சம்பவங்கள் பதிவாகுவதாகவும் டொலர் நெருக்கடி காரணமாக மூலப் பொருட்களை கொள்வனவு செய்வதில் சிக்கல் காணப்படுவதாகவும் ரயில்வே பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன குறிப்பிட்டார்.
எச்சரிக்கை ⚠️ மேலும் பல ரயில்கள் தடம்புரளும் என இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்தது. எச்சரிக்கை ⚠️ மேலும் பல ரயில்கள் தடம்புரளும் என இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்தது. Reviewed by Madawala News on September 20, 2022 Rating: 5

மின்சார வாகன இறக்குமதிக்கான முதல் அனுமதிப்பத்திர உரிமம் வழங்கி வைக்கப் பட்டது.வங்கி முறையின் ஊடாக இலங்கைக்கு சட்டரீதியாக பணம் அனுப்பும் வெளிநாட்டில் பணிபுரிந்துவரும் இலங்கையர்களுக்கு வழங்கப்படும் விசேட வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரத்தின் முதலாவது உரிமம் இன்று வழங்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார இலங்கையிலுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளருக்கு குறித்த உரிமத்தை வழங்கியுள்ளார்.

மின்சார வாகனங்களுக்கான இறக்குமதி அனுமதிப்பத்திரங்களுக்கு விசேட கோரிக்கை எழுந்துள்ளதாக அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
மின்சார வாகன இறக்குமதிக்கான முதல் அனுமதிப்பத்திர உரிமம் வழங்கி வைக்கப் பட்டது. மின்சார வாகன இறக்குமதிக்கான முதல் அனுமதிப்பத்திர உரிமம் வழங்கி வைக்கப் பட்டது. Reviewed by Madawala News on September 20, 2022 Rating: 5

மாணவர்களை இலக்கு வைத்து இயங்கி வந்த பாலியல் விடுதி முற்றுகை ... பெண்கள் கைது. ( ஒன்லைனில் படிக்கும் மாணவர்களுக்கு விளம்பரங்களை காட்சிப்படுத்தி இணையம் மூலம் வலை)


பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து நுகேகொடை பிரதேசத்தில்  இயங்கி வந்த பாலியல்

மாணவர்களை இலக்கு வைத்து இயங்கி வந்த பாலியல் விடுதி முற்றுகை ... பெண்கள் கைது. ( ஒன்லைனில் படிக்கும் மாணவர்களுக்கு விளம்பரங்களை காட்சிப்படுத்தி இணையம் மூலம் வலை) மாணவர்களை இலக்கு வைத்து இயங்கி வந்த பாலியல் விடுதி முற்றுகை ... பெண்கள் கைது. ( ஒன்லைனில் படிக்கும் மாணவர்களுக்கு விளம்பரங்களை காட்சிப்படுத்தி இணையம் மூலம் வலை) Reviewed by Madawala News on September 20, 2022 Rating: 5

பிஸ்கட் உள்ளிட்ட இனிப்பு வகைகளின் விலையை குறைப்பதாக உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவிப்பு.அதிக விலையை தொடர்ந்து பிஸ்கட் விற்பனையில் வீழ்ச்சியால் விலை குறைப்பு?

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பிஸ்கட் உள்ளிட்ட இனிப்பு வகைகளின் விலையை 10-13% இனால் குறைக்க தீர்மானித்துள்ளதாக, இலங்கை இனிப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


அதேவேளை,
மலிபன் பிஸ்கட் நிறுவனம் தனது நிறுவனம் தயாரிக்கும் பிஸ்கட் வகைகளின் விலையை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

07தசாப்தங்களுக்கும் மேலாக, இந்த நாட்டு மக்களுக்கு மிக உயர்ந்த தரமான தயாரிப்புகளை வழங்க நாங்கள் உழைத்துள்ளோம்.

கடந்த சில மாதங்களாக நாட்டில் நிலவும் பணவீக்கச் சூழ்நிலையில், உற்பத்திச் செலவு அதிகரித்ததன் காரணமாக பிஸ்கட் விலையை அதிகரிக்க வேண்டியதாயிற்று.

மேலும் சமீபத்தில், உற்பத்தி செயல்முறைக்கு பயன்படுத்தப்படும் சில மூலப்பொருட்களின் விலை குறைவாலும், உற்பத்தி செயல்முறையை பாதிக்கும் சில காரணிகள் ஒரு நல்ல நிலையை எட்டியுள்ளதாலும், அதன் நன்மையை எங்கள் விருப்பமுள்ள வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதற்கிணங்க, எமது நிறுவனம் ஏற்கனவே பல பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். என அறிவித்துள்ளது.
- jamhar


பிஸ்கட் உள்ளிட்ட இனிப்பு வகைகளின் விலையை குறைப்பதாக உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவிப்பு. பிஸ்கட் உள்ளிட்ட இனிப்பு வகைகளின் விலையை குறைப்பதாக உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவிப்பு. Reviewed by Madawala News on September 20, 2022 Rating: 5

எதிர்வரும் தேர்தலிலும் இந்நாட்டின் அரசியலை இலங்கை பொதுஜன முன்னணியே தீர்மானிக்கும் ; அமைச்சர் பிரசன்ன⏩சவால்களுக்குப் பயந்து அரசியல் செய்ய முடியாது…
⏩அநீதி இழைக்கப்பட்ட அனைத்துக் கட்சி உறுப்பினர்களுக்காகவும் கட்சி நிற்கும்…

- அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

எதிர்வரும் தேர்தலிலும் சிறீலங்கா பொதுஜன பெரமுன நாட்டின் அரசியலில் தீர்க்கமான காரணியாக மாறும் என ஆளும் கட்சியின் பிரதம கொரடாவும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

அதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கம்பஹா, உடுகம்பொல ரெஜி ரணதுங்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நேற்று (19) நடைபெற்ற “பொதுஜன முன்னணியின் கிராமத்திற்கு கிராமம்” நிகழ்ச்சியின் மினுவாங்கொட தொகுதிக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதில் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த பெருந்தொகையான உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டதுடன், எத்தகைய சவால்கள் வந்தாலும் இலங்கை பொதுஜன முன்னணியைக் கைவிடப் போவதில்லை என அனைவரும் தெரிவித்தனர்.

எதிர்வரும் தேர்தலில் இலங்கை பொதுஜன முன்னணியின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் கருத்துத் தெரிவித்தார்

கடந்த மே மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற கலவரத்தினால் எமது கட்சியினர் பலர் பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் தாக்கப்பட்டும் உள்ளனர்.

அந்தச் சம்பவம் நடந்து மூன்று மாதங்களுக்கும் மேலாகி விட்டது. தாக்கப்பட்டவர்கள் பற்றி கட்சி கவலைப்படாததால் எங்கள் கட்சியினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அந்த நேரத்தில் நாங்களும் ஆதரவற்று இருந்தோம். ஆனால் நாங்கள் முடிந்தவரை எங்கள் கட்சி உறுப்பினர்களைப் பார்த்தோம். உங்களைத் தனித்து விடமாட்டோம். எதிர்காலத்தில் கட்சி உங்களுக்கு நீதி வழங்கும். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

சதிகாரர்களை அடையாளம் காண முடியாதது எங்களின் பெரிய பலவீனம். 2014 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் நாங்கள் தவறு செய்த இடம். எங்களுடைய குறைபாடுகள் காரணமாக கிராமங்களில் நமது அரசியல் எதிரிகள் உருவாகினர்.

கடந்த காலங்களில் நடந்த சம்பவங்களால் மக்கள் அரசியலில் சேர விரும்பவில்லை. எங்கள் கட்சியின் உள்ளுராட்சி உறுப்பினர்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதுவும் நியாயம் தான். அப்போது இருந்த நிலைமை இப்போது இல்லை. சவால்களுக்குப் பயந்து அரசியல் செய்ய முடியாது. எப்படியும் இந்த விளையாட்டை விளையாடித்தான் ஆக வேண்டும். இல்லை என்றால் நாம் தோற்று விடுவோம்.

எனது மினுவாங்கொடைத் தொகுதியானது சதிகாரர்களின் போராட்டத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டது. அதற்குக் காரணம் இலங்கையில் அதிக வாக்கு சதவிகிதத்தைக் கொண்ட தொகுதி இது. நான் இன்னும் உங்களுடன் இருக்கிறேன். அது அப்படியே தொடரும்.

மக்கள் இன்னும் இந்தக் கட்சியுடன் தான் இருக்கிறார்கள். அந்த மக்களுக்குச் சரியான தலைமைத்துவத்தை வழங்கினால் வெற்றிப் பாதைக்குத் திரும்பலாம். அடுத்த தேர்தலிலும் இலங்கை பொதுஜன முன்னணி இந்த நாட்டு அரசியலில் தீர்க்கமான காரணியாக மாறும். இதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

அதன் காரணமாக இப்போது கட்சியைத் திட்டுவதில் அர்த்தமில்லை. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டுக்காக பல செய்துள்ளார். அந்த விடயங்கள் சரியா? தவறா? என்று எதிர்காலத்தில் தீர்மானிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மகிந்தானந்த அளுத்கமகே, மேஜர் பிரதீப் உந்துகொட, பேராசிரியர் ரஞ்சித் பண்டார, ஏ.டி. ஜகத் குமார, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பண்டு பண்டாரநாயக்க உள்ளிட்ட மினுவாங்கொடை மற்றும் கம்பஹா பிரதேசங்களில் உள்ள உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

முனீரா அபூபக்கர்
2022.09.20
எதிர்வரும் தேர்தலிலும் இந்நாட்டின் அரசியலை இலங்கை பொதுஜன முன்னணியே தீர்மானிக்கும் ; அமைச்சர் பிரசன்ன எதிர்வரும் தேர்தலிலும் இந்நாட்டின் அரசியலை இலங்கை பொதுஜன முன்னணியே தீர்மானிக்கும் ; அமைச்சர் பிரசன்ன Reviewed by Madawala News on September 20, 2022 Rating: 5

நுவரெலியாவில் பாதுகாப்பற்ற படகு பயணம்... ஆபத்தானதாக மாறியுள்ள சொகுசு சவாரி.


நுவரெலியா கந்தேஎல நீர்த்தேக்கத்தில்  சுற்றுலா பயணிகளை படகு மூலம் அழைத்துச்

நுவரெலியாவில் பாதுகாப்பற்ற படகு பயணம்... ஆபத்தானதாக மாறியுள்ள சொகுசு சவாரி. நுவரெலியாவில் பாதுகாப்பற்ற படகு பயணம்... ஆபத்தானதாக மாறியுள்ள சொகுசு சவாரி. Reviewed by Madawala News on September 20, 2022 Rating: 5

நாட்டில் 18 - 25 வயதிற்குட்பட்ட எச்.ஐ.வி நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரித்தது.18 - 25 வயதிற்குட்பட்ட எச்ஐவி நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய STD மற்றும் HIV தடுப்பு திட்ட பணிப்பாளர் ரசாஞ்சலி ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

ஒகஸ்ட் மாதத்தில் பாதிக்கப்பட்ட 50 பேரில் 18 பேர் 18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட சுமார் 2300 பேர் தடுப்பூசியை எடுத்துக்கொள்வதாகவும், சுமார் 3700 பேர் தடுப்பூசியைப் பெற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்டவர்கள் என இனங்காணப்படாத சுமார் 1400 பேர் சமூகத்தில் வாழ்ந்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்
நாட்டில் 18 - 25 வயதிற்குட்பட்ட எச்.ஐ.வி நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரித்தது. நாட்டில் 18 - 25 வயதிற்குட்பட்ட எச்.ஐ.வி நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரித்தது. Reviewed by Madawala News on September 20, 2022 Rating: 5

ஈரானில் பெண்கள் ஹிஜாப்பை கழற்றி எறிந்து போராட்டம்.ஈரானில் அண்மையில் ஹிஜாப்பினை முறையாக அணியவில்லை என கூறி கைது செய்யப்பட்ட மஹ்சா அமினி என்ற இளம்பெண்ணொருவர் பொலிஸார் தாக்கியதில் உயிரிழந்தார்.


இச்சம்பவமானது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்ததோடு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்காக
பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.


குறிப்பாக அப்பெண்ணின் சொந்த ஊரான சஹிஸ் நகரில் நேற்று முன்தினம் திரண்ட நூற்றுக்கணக்கான பெண்கள் தாங்கள் அணிந்திருந்த ஹிஜாப்பை கழற்றி எறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், ஈரான்
ஜனாதிபதி இப்ராகிம் ரைசிக்கு எதிராக ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட
பெண்கள் ‘சர்வாதிகாரிக்கு
மரணம்’ என்ற கோஷத்தையும்
எழுப்பினர். பல பகுதிகளில்
போராட்டக்காரர்கள்
மீது பொலிஸார் தடியடி
நடத்தியதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானில் பெண்கள் ஹிஜாப்பை கழற்றி எறிந்து போராட்டம். ஈரானில் பெண்கள் ஹிஜாப்பை கழற்றி எறிந்து போராட்டம். Reviewed by Madawala News on September 20, 2022 Rating: 5

துவிச்சக்கர வண்டியில் வந்து துணிகர கொள்ளை...யாழ்ப்பாணம் - சங்கானை பகுதியில் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த ஒருவரை துவிச்சக்கர வண்டியில் வந்த நபர் ஒருவர் கத்தியினால் வெட்டி காயப்படுத்திவிட்டு, அவரிடமிருந்த நகையையும் பணத்தினையும் கொள்ளையடித்து சென்றுள்ளார்.

சங்கானை பகுதியில் உள்ள வங்கி ஒன்றுக்கு சென்று விட்டு, தனது வீடு நோக்கி குறித்த நபர் நடந்து சென்று கொண்டிருந்த வேளை, அவரை பின் தொடர்ந்து துவிச்சக்கர வண்டியில் வந்தவர், ஆள் நடமாட்டம் அற்ற பகுதியில் இடைமறித்து கத்தியால் வெட்டி காயப்படுத்திய பின்னர் அவர் அணிந்திருந்த ஒன்றரை பவுண் தங்க சங்கிலி மற்றும் அவரிடம் இருந்த 15,000 ரூபா பணம் என்பவற்றை கொள்ளையடித்துக்கொண்டு அங்கிருந்து துவிச்சக்கர வண்டியிலையே தப்பி சென்றுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்னர்
துவிச்சக்கர வண்டியில் வந்து துணிகர கொள்ளை... துவிச்சக்கர வண்டியில் வந்து துணிகர கொள்ளை... Reviewed by Madawala News on September 20, 2022 Rating: 5

தன்னுயிரை மாய்த்துக் கொள்ள போவதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு, பேராதனைப் பல்கலைக்கழக மாணவன் மாயம்.பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டில் கல்விக் கற்கும், யக்கல பிரதேசத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

பல்கலைக்கழகத்துக்கு அருகிலுள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த மாணவனே, கடந்த 16ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக அவரது பெற்றோர் பேராதனைப் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.


மாணவனின் கையடக்கத் தொலைபேசிக்கு அவரது நண்பர்கள் அழைப்பை ஏற்படுத்திய போது பதில்
கிடைக்காததால், விடுதி உரிமையாளரிடம் விசாரித்துள்ளனர். இந்நிலையில், மாணவனின் அறை மூடியிருப்பதாகவே விடுதி உரிமையாளர் தெரிவித்துள்ளார். பின்னர் நேற்று (18) மாலை மாணவன் தங்கியிருந்த அறையை சோதனையிட்ட போது, மாணவனால் எழுதப்பட்ட கடிதம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் தான் தன்னுயிரை மாய்த்துக்கொள்ள போவதாக, எழுதப்பட்டிருந்தது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தன்னுயிரை மாய்த்துக் கொள்ள போவதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு, பேராதனைப் பல்கலைக்கழக மாணவன் மாயம். தன்னுயிரை மாய்த்துக் கொள்ள போவதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு, பேராதனைப் பல்கலைக்கழக மாணவன் மாயம். Reviewed by Madawala News on September 20, 2022 Rating: 5

கோட்டாபய ராஜபக்ஷ ஒதுங்கி விட்டார்.. இனிமேல் அவர் அரசியலுக்கு வரமாட்டார்.. ஆனால் அவரை ஆட்சியில் இருந்து நீக்க போராடிய அனைவரும் தம் இறுதி மூச்சை விடும் முன் அதற்காக வருத்தப்படுவார்கள்.கோட்டாபய ராஜபக்ஷவை ஆட்சியில் இருந்து நீக்க முன்வந்த, போராடிய சகலரும் தாம் இறுதி மூச்சை விட முன்னரேனும் அதற்காக வருத்தப்படுவார்கள்.


அவரை போன்ற ஒரு அரச தலைவரை வரலாற்றிலும், இனியும் தேடிப்பிடிக்க முடியாது.


துரதிஷ்டவசமாக மக்கள் உண்மையான தலைவர்களுக்கு இடம் வழங்குவதில்லை.


அவர் அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொண்டார், இனிமேல் அவர் அரசியலுக்கு வரமாட்டார்.


என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இன்று எரிவாயுவும், எரிபொருளும் மட்டுமே இல்லை, ஏனைய அனைத்தையும் இந்த நாட்டிலேயே உற்பத்தி செய்துகொள்ள முடியும்.

ஆனால் இவற்றை உற்பத்தி செய்யாது, சகல பொருட்களையும் வெளிநாடுகளில் இருந்து பெற்றுக்கொள்ள நினைத்ததன் விளைவாகவும், கடன்களை பெற்று நுகர்வுப் பொருட்களை இறக்குமதி செய்த காரணத்தினாலுமே மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் நாம் தள்ளப்பட்டோம்.


எனினும் இன்று நாடு வழமைக்கு திரும்பிக்கொண்டுள்ளது.


தட்டுப்பாடுகள் இல்லாது மக்களுக்கு பொருட்கள் கிடைக்கின்ற நிலைமை உருவாகியுள்ளது.


அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் பிரச்சினைகள் முழுமையாக தீரும் என நம்புகின்றோம். அதுமட்டுமல்ல, கோட்டாபய ராஜபக்சவை
ஆட்சியில் இருந்து நீக்க முன்வந்த, போராடிய சகலரும் தாம் இறுதி மூச்சை விட முன்னரேனும் அதற்காக வருத்தப்படுவார்கள்.


அவரை போன்ற ஒரு அரச தலைவரை வரலாற்றிலும், இனியும் தேடிப்பிடிக்க முடியாது. ஊழல் செய்யாத ஒரு அரசு தலைவரே கோட்டாபய ராஜபக்ஷவேயாகும்.


அவர் ஆட்சிக்கு வந்த பின்னர் ஒரு பாதாள உலக கோஷ்டியேனும் தலைதூக்கவில்லை. ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக எந்தவித தாக்குதல்களும் நடத்தவில்லை. மக்கள் உண்மையான தலைவர்களுக்கு இடம் வழங்குவதில்லை என்பது துரதிஸ்டவசமாகும்.


இனியும் இதனை கதைத்து அர்த்தமில்லை. அவர் அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொண்டார், இனிமேல் அவர் அரசியலுக்கு வரமாட்டார் எனவும் மஹிந்தானந்த தெரிவித்தார.
கோட்டாபய ராஜபக்ஷ ஒதுங்கி விட்டார்.. இனிமேல் அவர் அரசியலுக்கு வரமாட்டார்.. ஆனால் அவரை ஆட்சியில் இருந்து நீக்க போராடிய அனைவரும் தம் இறுதி மூச்சை விடும் முன் அதற்காக வருத்தப்படுவார்கள். கோட்டாபய ராஜபக்ஷ ஒதுங்கி விட்டார்.. இனிமேல் அவர் அரசியலுக்கு வரமாட்டார்.. ஆனால் அவரை ஆட்சியில் இருந்து நீக்க போராடிய அனைவரும் தம் இறுதி மூச்சை விடும் முன் அதற்காக வருத்தப்படுவார்கள். Reviewed by Madawala News on September 20, 2022 Rating: 5

மனிதபிமான உதவியை இலங்கை மக்களுக்கு வழங்கியது பாக்கிஸ்தானின் மருந்து உற்பத்தி நிறுவனம்.(அஷ்ரப் ஏ சமத்)
பாகிஸ்தான் மருந்து உற்பத்தி நிறுவனமான சீ.சீ.சீ. கம்பனி மனிதபிமான உதவியை இலங்கை மக்களுக்கு வழங்கியுள்ளது.
இவ் மருந்து உற்பத்திகளை பாக்கிஸ்தான் உயா் ஸ்தாணிகா் பாக்கிஸ்தான் கம்பனிக்கு அறிவுறுத்தியதன் பயனாக இலங்கையில் கடந்த காலமாக பொருளாதார நெருக்கடியில் மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு நிலவியதை சுட்டிக்காட்டியிருந்தாா். பாக்கிஸ்தான் நாடு பாரிய வெள்ளத்தினால் 1500 பாக்கிஸ்தானியா் இழந்துள்ள சா்ந்தர்பத்தில் இலங்கைக்கு மருந்துப் பொருட்களை கையளிப்பது பாராட்டத்தக்கதாகும்.
இலங்கையில் சிறுநீர் நோய்க்கான மருந்துப் பொருட்களை ஜக்கிய நாடுகள் அமையத்தின் 2030 வரையிலான சஸ்டைநெபில் கோல் திட்டத்தின் கீழ் சீ.சீ.சசீ நிறுவனம் இத்திட்டத்தினை அமுல்படுத்தியுள்ளது.
இவ் வைபவத்தில் பாக்கிஸ்தான் உயா் ஸ்தாணிகா் மேஜர் ஜெனரரல் ஓய்வு உமர் பாருக் புர்க்கி, மற்றும் பாக்கிஸ்தான் உயா் ஸ்தாணிகா் ஆலயத்தின் வர்த்தகம் முதலீடு சம்பந்தமான செயலாளா் அஸ்மா கமால், ஆகியோர் பங்கு பற்றுதலுடன் சீ.சீ.சீ கம்பனியின் இலங்கையின் பணிப்பாளா் விராஜ் மனதுங்க, மற்றும் தக்ராப், ஆகியோா் இணைந்து சுகாதார அமைச்சா் கலாநிதி கெகிலிய ரம்புக்வெலவிடம் 19ஆம் திகதி சுகாதார அமைச்சில் வைத்து கையளித்தனா்.


இங்கு உரையாற்றிய பாக்கிஸ்தான் உயா் ஸ்தாணிகா் இலங்கை அன்மையில் பாக்கிஸ்தான் நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளத்திற்காக ஒரு தொகுதி தேயிலையை அன்பளிப்பு செய்தது. இருந்தும் அங்கு தற்போதைய நிலையில் மேலதிகமான தேயிலை தேவைப்படுகின்றது. .எனவும் கூறினாா்.

மனிதபிமான உதவியை இலங்கை மக்களுக்கு வழங்கியது பாக்கிஸ்தானின் மருந்து உற்பத்தி நிறுவனம். மனிதபிமான உதவியை இலங்கை மக்களுக்கு வழங்கியது பாக்கிஸ்தானின் மருந்து உற்பத்தி நிறுவனம். Reviewed by Madawala News on September 20, 2022 Rating: 5

உக்ரைனின் கார்கிவ் பகுதியில் இருந்து மீட்கப்பட்ட 7 இலங்கையர்கள் தொடர்பில் மேலதிக விளக்கம் வெளியானது.உக்ரைனின் கார்கிவ் பகுதியில் இருந்து மீட்கப்பட்டதாகக் கூறப்படும் 07 இலங்கை மாணவர்களின் நிழற்படங்களை உக்ரைன் ஊடகவியலாளர் ஒருவர் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதைத் தொடர்ந்து, ரஷ்ய மற்றும் உக்ரைன் ஊடகங்களுக்கு இடையே பனிப்போர் ஆரம்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

20 முதல் 40 வயதுக்குட்பட்ட இந்த ஏழு மாணவர்களில் 6 ஆண்களும் ஒரு பெண்ணும் அடங்குவதாகவும் ரஷ்யா உக்ரைன் மீது படையெடுப்பதற்கு மூன்று வாரங்களுக்கு முன்பு உக்ரைனுக்கு வந்தவர்கள் என்றும் உக்ரைன் ஊடகவியலாளர் மரியா ரோமானென்கோ தனது டுவிட்டரில் சுட்டிக்காட்டியுள்ளார்.

உக்ரைனின் குப்யன்ஸ்க் பிரதேசத்துக்குச் சென்ற 3 வாரங்களில், குப்பியன்ஸிலிருந்து கார்கிவ் நோக்கி செல்ல முயன்ற போது இவர்கள் ரஷ்ய படைகளிடம் சிக்கி, அவர்களிடம் சம்பளம் வழங்காமல் ரஷ்ய படைகள் வேலை வாங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச சமூகத்தை ரஷ்யாவின் இராணுவ சிவிலிய ஆட்சிக்கு எதிராகத் தூண்டும் முயற்சி என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக இராணுவ சிவிலியன் ஆட்சியின் தலைவர் விட்டலி கஞ்சேவ்வை மேற்கோள் காட்டி ரஷ்ய ஊடகமான டாஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை மாணவர்களை உக்ரைனிய சிறப்புப் படைகள் தடுத்து வைத்ததாகவும் போரில் வெற்றி பெற உக்ரைன் மக்களின் உயிரைப் பணயம் வைத்து வருவதாகவும் விட்டலி குற்றம் சுமத்தியுள்ளார்.

7 இலங்கை மாணவர்களையும் ரஷ்யப் படைகள் தடுத்து வைத்துள்ளதாக உக்iரனிய ஊடகங்கள் குற்றம் சுமத்துகின்ற போதும், உக்ரைனிய பாதுகாப்புப் படையினர் மீது ரஷ்ய ஊடகங்கள் குற்றம் சுமத்தி வருகின்றன.

இந்நிலையில் உக்ரைனின் கார்கிவ் நகரில் ரஷ்ய படையினரால் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 7 இலங்கையர்களும் மருத்துவ மாணவர்கள் அல்ல என வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார்.

அவர்கள் சட்டவிரோதமான முறையில் ஐரோப்பாவிற்கு பயணிக்க முயற்சித்த குழுவினர் என அமைச்சர் கூறுகிறார்.

இன்று (19) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

யுத்தம் இடம்பெற்ற ஆரம்ப காலத்தில் உக்ரைனில் இருந்து இந்த நாட்டுக்கு வருவதற்கு தயாராக இருந்த இலங்கையர்கள் அனைவரும் அழைத்து வரப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

உக்ரைனின் கார்கிவ் பகுதியில் இருந்து மீட்கப்பட்ட 7 இலங்கையர்கள் தொடர்பில் மேலதிக விளக்கம் வெளியானது. உக்ரைனின் கார்கிவ் பகுதியில் இருந்து மீட்கப்பட்ட 7 இலங்கையர்கள் தொடர்பில் மேலதிக விளக்கம் வெளியானது. Reviewed by Madawala News on September 19, 2022 Rating: 5

முன்னைய ஆட்சியாளர்களுக்கு இலகுவில் தப்பித்துக் கொள்ள முடியாது ; ரவூப் ஹக்கீம்முன்னைய ஆட்சியாளர்களுக்கு இலகுவில் தப்பித்துக் கொள்ள முடியாது

நினைவேந்தல் நிகழ்வில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்

ஜெனீவா,பிரேரணைத் திருத்தங்களில் மிக முக்கியமான ஒன்றாக இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு காரணமான மோசடிகளுக்கான பொறுப்புக்கூறல் ஒன்றும் இடம்பெறவேண்டும் என்று புதிதாகச் சேர்த்திருக்கிறார்கள். இதன் நோக்கம் என்னவென்று எல்லோருக்கும் தெரியும் எனவே முன்னைய ஆட்சியாளர்களுக்கு இலகுவில் தப்பித்துக்கொள்ளமுடியாது. இது முள்ளிவாய்க்கால் இழப்புகள் சம்பந்தமான விடயத்திற்கு அப்பால் போன விடயமாகும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார்.

முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் மறைந்து 22 ஆண்டுகள் நிறைவையொட்டிய நினைவேந்தல் நிகழ்வு, அக்கரைப்பற்று அய்னாஹ் கடற்கரை மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (16) நடைபெற்றபோது தலைமை வகித்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது,

ஒரு நினைவேந்தல் நிகழ்வு என்பது வெறும் மறைந்த எங்களுடைய மாபெரும் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் உடைய நினைவுகளை இரைமீட்டுகின்ற நிகழ்ச்சியாக மாத்திரம் இருந்துவிட்டுப்போவது அல்ல .
ஆனால் , அவருடைய வாழ்க்கையோடு எங்களுடைய அரசியலை ஒர் உரைகல்லாக உரசிப்பார்க்கின்ற நிகழ்வாகத்தான் இந்த நிகழ்வுகள் தொடர்ந்தும் நடந்து வந்திருக்கின்றன என்பதுதான் யதார்த்தமாகும்.

தமிழ் பேசும் இனங்களின் ஒற்றுமையை தலைவர் பார்த்த அதே பார்வையில் எப்படி நாங்கள் காப்பாற்றி முன் கொண்டுபோவது என்பது முக்கியம். நிறைய முரண்பாடுகளோடு தமிழ் பேசும் சமூகங்கள் இருந்தாலும் அந்த முரண்பாடுகளை அந்த வேற்றுமைகளுக்கு அப்பால் ஒற்றுமை ஏற்படுத்துவது என்ற அவருடைய சித்தாந்தத்தைப் பற்றி எங்கள் பிரதம அதிதி நண்பர் ஜெயபாலன் இங்கு  தன்னுடைய கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

 பேராசிரியர் ரமீஸ் அப்துல்லாஹ்வும் பேசுகின்ற போது சொன்ன விடயங்களில் குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸுக்கு அப்பால் இன்னுமொரு கட்சி வந்துவிடக்கூடாது, முஸ்லிம்களுக்கென்று ஒரு தனிக் கட்சிதான் இருக்கவேண்டும் என்று தலைவர் அஷ்ரப்,  பாஷாவிலாவில் கட்சியை ஆரம்பித்தபோது சொன்ன விடயத்தை இங்கு   நினைவூட்டினார்.

 ஊர்வாதம் என்பது மிக மோசமான பிரதேசவாதமாகும்.இன்று முஸ்லிம்களுடைய அரசியல் சிதறிப்போயிருப்பதற்கான அடிப்படையே ஊரை மையப்படுத்திய கட்சியமைக்கிற அல்லது ஒரு பிராந்தியத்தை மையப்படுத்தி அதிலிருந்து, அந்த அபிலாஷைகளோடு சேர்ந்து எங்களுக்கும்  அமைச்சர் அந்தஸ்து வேண்டும் என்பதற்காக கட்சி வேண்டும் என்று தொடங்கிய விவகாரங்கள்தான் இன்று கல்லெறிந்தால் போய் முஸ்லிம் கட்சித் தலைவர் ஒருவரின் தலையில் விழக்கூடிய அளவிற்கு தலைவர்கள் மலிந்துபோயிருக்கின்ற சமூகமாக நாங்கள் மாறியிருக்கிறோம்.  

கட்சிக்குள்ள இருக்கின்ற உள்விவகாரங்களை பொறுத்தவரை மறைந்த தலைவரின் வார்த்தைகளில் சொல்வதானால்" நீ குருடனாகவும்,செவிடனாகவும், ஊமையாகவும் இல்லாதிருந்தால் இந்தப் பயணத்தில் உன்னால் நிலைக்கமுடியாது."
நான் சிலவேளைகளில் குருடனாக இருக்கிறேன், சிலவேளைகளில் செவிடனாக இருக்கிறேன், பல சந்தர்ப்பங்களில் ஊமையனாக இருக்கிறேன் ஆனால் பயணத்திலிருப்பதற்காக, ஏன் என்றால் இந்தப் பயணம் நிறைய கரடுமுரடான பயணம்,  இதில் பலவிதமான, விதவிதமான பிரச்சினைகளை நாங்கள் எதிர்கொண்டு போகிறோம். ஆனால் ,நிச்சியமாக ஈற்றிலே அந்த இலக்கை அடைவதற்கான  உளச்சுத்தியுடனான முயற்சியாகத்தான் அது இருக்கிறது என்பதற்காகத்தான் நான் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்  வெவ்வேறான நிலைப்பாடுகளில் இருந்து கொண்டு இந்த விடயங்களைக் கையாண்டு வருகிறேன்  என்ற ஒரு விடயத்தை மாத்திரம் நான் இப்போதைக்கு ச்சொல்லிவைக்க விரும்புகின்றேன்.

எல்லாம் போட்டி அரசியலின் வெளிப்பாடு ,விருப்புவாக்கு தேர்தலின் போட்டி அதுதான் நடக்கின்றது.இங்கு மேடையில் பேசப்படுவதும் அப்படியாக இருக்கலாம், மேடைக்கு அப்பால் சிலர்  இன்று நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமல் தவிர்ந்து கொள்வது எல்லாம் போட்டி அரசியலின் விளைவாகும். நான் இங்கு விருப்புவாக்கு அரசியலின் விபரீதம் என்று சொல்லும்போது எல்லோரும் அதனைப்  புரிந்து கொள்வீர்கள்.   விருப்புவாக்கு அரசியலின் விபரீதம் எதுவாகவும் இருக்கலாம்.அது இயல்பான விடயம், ஒரு மாமூலான விடயம்,  அதை நாங்கள் தவிர்க்கமுடியாது,

ஆனால் ,கட்சியுடைய தீர்மானங்கள்,கொள்கைகள், பாராளுமன்றத்தில் வாக்களிப்பது  போன்றவற்றில் அங்கு விருப்பு,வெறுப்பு என்பதெல்லாம் தீர்மானம் எடுப்பதற்கு முன்பு செய்யப்படவேண்டிய விடயங்களாகும். தீர்மானம் எடுத்த பின்னர் அதில் குளறுபடிகள் இருக்குமாகவிருந்தால் அவை குறித்த விவகாரங்களில் கட்சி மிக இறுக்கமான முடிவுகளை எடுக்கவேண்டும் என்பதுதான் போராளிகளுடைய எதிர்பார்ப்பாகும். அதன் விளைவுகளை தாராளமாக எல்லோரும் அனுபவித்துவிடுவார்கள்.
என்ன நடக்கும் என்பதை நான் ஆரம்பத்திலிருந்தே சொல்லி வருகிறேன்.

"இந்த ஆட்சியாளர்கள் ஆட்சியில் நீடிக்கமாட்டார்கள்; இந்த ஆட்சியாளர்களின் ஆயுள் நீடிக்கப்போவதில்லை ;ஆபத்தான கட்டத்திற்கு வரப்போகிறது" என்று ஆரூடம் சொல்லிக்கொண்டே இருந்தேன். அதனைக் கேட்கத் தவறியதன் விபரீதத்தினால்இன்று என்ன நடந்திருக்கிறது என்பது எல்லோரும் எண்ணிப்பார்க்கவேண்டிய விடயமாகும்.  

 நண்பர்  மறைந்த எம்.ஐ.எம்.  முஹைதீனுடைய நாமத்தினால், இன்று ஒர் அரங்கம் அமைத்திருக்கிறோம்,  அந்த நாமத்தைச் சூடி அரங்கம் அமைப்பதற்கான காரணமே எங்களை விட்டு அவர் மறைந்துவிட்டதால்  மாத்திரமல்ல ,  அவர் இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு அவருடைய ஆளுமை என்ன செய்தது என்ற விவகாரத்துக்கு நாங்கள் சாட்சிகளாக இருக்கவேண்டிய அவசியமிருக்கிறது.

 நண்பர் மறைந்த எம்.ஐ.எம். முஹைதீன் ஒரு வித்தியாசமான ஆளுமை  .தலைவர் அஷ்ரப்புடைய ஆளுமை ஜனரஞ்சகமான அரசியல் சார்ந்த ஆளுமை, எம்.ஐ.எம். முஹைதீன்  ஜனரஞ்சகமாக அரசியல் செய்த ஒருவராக கணிக்கப்படாமல் இருக்கலாம்,  ஆனால் அவர் தனிக் கட்சி அமைத்த விவகாரமும், முதலாவது புலிகளோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோது,  கலாநிதி பதியுத்தீன்  மஹ்மூத்தோடு, கிட்டுவோடு போய் புலிகளுடனான முதலாவது பேச்சுவார்த்தையும், உடன்படிக்கையும் செய்தவர் என்பது மாத்திரமல்ல, அப்போதிலிருந்து  முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி என்ற கட்சியை அமைத்திருந்தார்.

 1995 ஆம் ஆண்டு அவர் தலைவரோடு தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டு, தன்னுடைய கட்சியை கலைத்துவிட்டு  , முஸ்லிம்களுக்கு என்று இன்னுமொரு கட்சி தேவையில்லை என்று சொன்னதுடன் , தலைவரோடு சேர்ந்து ஒன்றாக இணைந்து,  முஸ்லிம் காங்கிரஸின் தேசிய ஒருங்கிணைப்பு செயலாளராகஆற்றிய அவருடைய பணிகள்  சாமான்யமானவையல்ல, இந்த நாட்டின் முஸ்லிம்களின் ஆவணப்படுத்தல் விவகாரம் என்ற ஒரு விடயம் இருக்குமாகவிருந்தால், முஸ்லிம்களின் தரவுகளை ஆவணப்படுத்துவது, இழப்புகளை ஆவணப்படுத்துவது என்ற விவகாரத்தில் அவருடைய பங்கு, அவருக்கு நிகர் அவர்தான் என்ற அடிப்படையில் மாபெரும் பங்களிப்பைச் செய்திருக்கிறார்.
. எம்.ஐ.எம்.முஹைதீன் தனிமனிதனாக,   இப்படியெல்லாம்  செய்திருக்கிறார், அவரது வீட்டில் நான் பல தடவைகள், பல மணித்தியாலங்கள் நான் அவரோடு கழித்திருக்கிறேன்.ஏன்என்றால் அவ்வளவு தூரம் எல்லா வரைபடங்களையும், அட்டவணைகளையும் அடுக்கி,அடுக்கி வைத்திருப்பார். எங்கெங்கெல்லாம் முஸ்லிம்களுடைய விவசாய நிலங்கள் பறிபோயிக்கின்றன என்பதற்கு  70வது ஆயிரத்திற்கு மேற்பட்ட கோப்புக்களை நான் புலிகளோடு பேச்சுவார்த்தைக்கு போனபோது எனக்கு உறுதுணையாக அவர்  தந்திருந்தார்.ஒரு டென்மார்க்  நிறுவனத்தின் உதவியோடு   ஆவணப்படுத்துகின்ற விவகாரத்தில்,அவரிடம் வேண்டிக் கொண்டமாதிரி கன கச்சிதமாக அந்தக் காரியத்தை அவர் செய்திருந்தார். வடகிழக்கு ,
வடக்கு முஸ்லிம்களின் இழப்புகள்,சுனாமியின் போது ஏற்பட்ட இழப்புகள் என்பவற்றையெல்லாம் முழுமையாக ஆவணப்படுத்தி மிகப் பெரிய ஒரு பங்களிப்பை அவர் செய்தது மாத்திரமல்ல, முஸ்லிம்களுடைய எல்லைப் பிரச்சினைகள், தமிழ் பிரதேசங்களிலும்,சிங்கள பிரதேசங்களிலும் எல்லை நிர்ணய விவகாரத்தில் என்னென்ன விதமாக முஸ்லிம்களுக்கு அநியாயம் இழைக்கப்பட்டிருக்கிறது என்பதை  கன கச்சிதமாக ஆவணப்படுத்திய வேறொருவர் இருக்க முடியாது என்கின்ற அளவிற்கு எம்.ஐ.எம்.முஹைதீனுடைய பங்களிப்பிருந்தது. 
இதை எங்களுடைய மாபெரும் தலைவர் கண்ணியப்படுத்தியது மாத்திரமல்ல அவரை கட்சியோடு இணைக்கவேண்டும், அவரின் முழு அறிவையும் இந்த இயக்கத்திற்குப் பயன்படுத்தவேண்டும்  என்பதில் தலைவர் காட்டிய ஆர்வத்தின் வெளிப்பாடுதான் அவரை தேசிய ஒருங்கிணைப்புச் செயலாளர் என்ற பதவியைக் கொடுத்து எல்லா விடயங்களிலும் அவரையை ஈடுபடுத்தியதாகும்.

தென்கிழக்கு பல்கலைக்கழகம் அமைவதில்,அந்த பல்கலைக்கழகத்தின் கட்டடவேலைகளெல்லாம் மேற்பார்வை செய்வதில் தலைவருக்கு உறுதுணையாக நின்ற அவருடைய பங்களிப்பு  சாமான்யமானதல்ல.
எனவே அப்படிப்பட்ட ஒருவருடைய பெயரில் இந்த அரங்கை அமைதத்தது, அதுவும் அவருடைய ஊரிலே இந்த விடயங்களை நினைவுகூர்வது எங்களுடைய கடமை .

இங்கு நாம் பேசிக் இந்தக்கட்டத்தில ஜெனிவாவில் மனித உரிமைப் பேரவையின் அமர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன, அந்த அமர்வில், இந்த நாட்டிற்கு எதிரான ஒரு பிரேரணை குறித்து வாக்கெடுப்பு நடக்கின்ற ஒரு விவகாரமும், இருக்கிறது.பிரேரணைக்கான திருத்தங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. திருத்தங்களில் மிக முக்கியமான ஒன்றாக பொருளாதார நெருக்கடிக்கு காரணமான மோசடிகளுக்கான பொறுப்புக்கூறல் ஒன்றும் இடம்பெறவேண்டும்  என்று புதிதாக சேர்த்திருக்கிறார்கள். இதன் நோக்கம் என்னவென்று எல்லோருக்கும் தெரியும் எனவே  முன்னைய ஆட்சியாளர்களுக்கு இலகுவில் தப்பித்துக்கொள்ளமுடியாது. ஏனென்றால் இது முள்ளிவாய்க்கால் இழப்புகள் சம்பந்தமான விடயத்திற்கு அப்பால் போன விடயமாகும். முள்ளிவாய்க்காலோடு சேர்த்து இப்போது மோசடிகளுக்கு பொறுப்பு கூறுகின்ற, அந்த மோசடிகளூடாக இந்த நாட்டின் பொருளாதாரத்தை  அதலபாதாளத்திற்கு இட்டுச்சென்ற முன்னாள் ஆட்சியாளர்களுக்கு எதிரான குற்ற விசாரணைகளை ஆரம்பிப்பதற்கான ஒரு முஸ்தீபும் ஆரம்பித்திருக்கிறது.


அதனோடு சேர்த்து  மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படுவது மற்றும் அதிகாரங்கள் பகிர்தளிக்கப்படுவது சம்பந்தமாக இந்திய அரசின் சார்பில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. அதனால் அடுத்தகட்ட அரசியல் இன்னும் கொஞ்சம் சூடுபிடிக்கிற அரசியலாக கட்டாயம் இருக்கப்போகிறது.


வெறும் அரசியல் யாப்பு திருத்தங்கள் மாத்திரமல்ல,  அரசியல் யாப்பு திருத்தமென்று ஜனாதிபதி அண்மையில் இன்னுமொரு கூற்றை பகிரங்கமாக சொல்லியிருக்கிறார்.  "பாராளுமன்ற தேர்தல் சீர்திருத்தத்திற்கு பாராளுமன்றத்திலிருப்பவர்கள் உடன்படவில்லை என்றால் நான் சர்வஜன வாக்கெடுப்புக்கு விடப்போகிறேன்" என்ற ஒரு சவாலை விட்டிருக்கிறார், இவை இந்த மொட்டுக்காரர்களுடைய தூண்டுதல்களால் பேசும் பேச்சுக்கள் . ஏனென்றால், அவர் மொட்டுக்காரர்களின் பேச்சாளராக மாறிவருகின்ற ஒரு வேதனைதான் எல்லோருக்குமிருக்கிறது. இதனை அவரிடம் நேரடியாகவே சொல்லியிருக்கிறேன்.ஆனால், இந்தவிதமாக முஸ்லிம் காங்கிரஸுக்கு மாத்திரமல்ல, சகல எதிர்க் கட்சிகளுக்கும் இன்று இவ்வாறு எச்சரிக்கை விடுத்து, அச்சமூட்டி  பல்கலைக்கழக மாணவரர்களை பிடித்து அடைக்கின்றமாதிரி எங்களுடனும் நடக்கவந்தால் அந்த விவகாரம் சரிப்பட்டு வராது. அதே நேரம் எங்களுக்கு  "வேறு அழைப்பு"ம் வருகிறது.

 ஆனால் இவற்றுக்கெல்லாம் முகம் கொடுப்பதற்கு இந்தக் கட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற இயக்கத்திற்கு இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் பலம் ,ஒற்றுமை என்பன முக்கியமாக இருக்கிறது, அது சமூகத்திற்காக ஒவ்வொரு கட்டத்திலும் பயன்படுத்தப்படவேண்டும்.


ஒருவர் போய் அமைச்சுப் பதவியை எடுத்து, இப்போது அரசின் சார்பில் ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியாக போய் ,கேவலம் இளவரசர்   சல்மானுக்கு கொடுக்கவேண்டிய கடிதத்தை  ஒரு துணையமைச்சரின் கையில் கொடுத்துவிட்டு வந்திருக்கிறார். இது இராஜதந்திர ரீதியாக ஜனாதிபதிக்கு செய்யப்பட்ட மிகப் பெரிய இழுக்கு,  Protocol இன் படி ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியாக நியமித்து இளவரசர் சல்மானிடம்  அனுப்பினால் இளவரசர் சல்மானைத்தான்அவர் சந்திக்கவேண்டும்,  அங்கு இளவரசரை சந்திப்பதை விட்டுவிட்டு, அமைச்சரைக் கூட சந்திக்கவில்லை, ஒரு துணையமைச்சர் வந்து கடிதத்தை பெற்றுக் கொண்டு, "போய் வாங்க" என்று கூறி அனுப்பிவிட்டார் . இதுதான் அவரது கூத்து.

ஆனால்,அவருக்கு எதிரான வழக்கு  நீதி மன்றத்தில் நடக்கிறது. கட்சியை மீறி வாக்களித்தது ஒரு புறமிருக்க , கட்சியை மீறிப் போய் அமைச்சர் பதவியும் எடுத்து   அதற்கு அப்பாலும் போய்  பெரிய டாம்பீகமாகப் பல விடயங்கள் நடக்கின்றன.

இவற்றையெல்லாம் கண்டு கொண்டு முஸ்லிம் காங்கிரஸ் சும்மா வாளாவிருக்கிறது என்பதல்ல. அதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

ஆனால், இப்படியான துரோகத்தனங்கள் என்ற விவகாரம் எனது காலத்தில்  மாத்திரமல்ல, மறைந்த தலைவர் காலத்திலும் ஏராளமாக நடந்திருக்கின்றன. ஒவ்வொரு கட்டத்திலும் அதற்கெதிரான நடவடிக்கைகள் செய்யக்கூடிய அடிப்படையில் செய்யப்பட்டு பலரும் அதன் விளைவை அனுபவித்திருக்கின்றார்கள்.

 ஆனால்  இவற்றையெல்லாம் மீறி இவர்களையெல்லாம் ஒன்று சேர்க்கவேண்டும் துரோகத்தனங்களை மறந்து,பிரச்சினைகளை மறந்து,  பிரதேசவாத அரசியலை அப்படியே போட்டுவிட்டு தேசிய அரசியலுக்கு இந்தக் கட்சியை வலுப்படுத்துவதற்கு அனைவரையும் அரவணைப்பதில் முஸ்லிம் காங்கிரஸ் தலைமைக்கு எந்தவிதமான பிரச்சினையும் கிடையாது. 

அவர்களாகவே முஸ்லிம் காங்கிரஸின் தலைவரோடு சேர்ந்து பல சந்தர்ப்பங்களிலும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரை தலைமைப்பதவியில் வைத்து தொழிற்பட்ட சந்தர்ப்பங்கள் அண்மைக்காலங்களில் நடந்திருக்கின்றன. கூட்டாக இராஜினாமா செய்த விவகாரத்தில் முஸ்லிம் காங்கிரஸுடைய தலைவரைத்தான் முன்னிலைப்படுத்தி இந்த விவகாரங்கள் செய்யப்படவேண்டும் என்ற போது எல்லோரும் ஒன்றாக செயற்பட்டார்கள். 

 தலைவருடைய அந்திம கால விருப்பம் தன்னுடைய எதிர்ப் பாசறையில் இருந்த அனைவரையும் அரவணைப்பது. அதன் விளைவாக அக்கறைப்பற்று மண்ணில் எம்.ஐ. உதுமாலெப்பை,  றிஸ்வி சின்ன லெப்பை  ஏ.ஆர்.மன்சூர் , எம்.எம்.முஸ்தபா சம்மாந்துறை  அப்துல் மஜீத், பொத்துவில் மஜீத் ,ஜலால்தீன் ஆகியோரை நேரில்போய் சந்தித்து அனைவரையும் ஆரத்தழுவி, பெருந்தன்மையுடன் நடந்து கொண்டார்.

ஒவ்வொரு வீடுவீடாக பெரும்பாலும் அவருடன்  நானும் போயிருக்கிறேன் . இவையெல்லாம்  அவருடையஅந்திம காலத்தில் அவர் எடுத்த அதிரடி நடவடிக்கைகள் .ஆனால் அவாற்றிற்கு கைமேல் பலன்கிடைத்தது. ஒட்டுமொத்தமாக யாரும் மறுக்கவில்லை .எல்லோரும் இந்த கட்சியை அங்கீகரித்தார்கள்.

 நாங்கள் ரமடா ஹோட்டலில் நடத்திய மாநாட்டில் ஆயிரத்துக்கு மேற்பட்ட ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள்  வந்து எங்கள் கட்சியோடு இணைந்து கொண்டார்கள். அது 2000ஆம் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி நடந்தது. தலைவர் செப்டம்பர் மாதம் 16 ஆம் திகதி எங்களை விட்டுப் பிரிந்தார்.  இவ்வாறான ஒரு மாபெரிய சாதனையை செய்துவிட்டுத்தான் தலைவர்  எம்மை விட்டும் பிரிந்தார். ஆனால் அவரின் பிரிவின் பின்னால் கட்சிக்குள் நடந்த பிளவுகள்,பிரச்சினைகள் என்ற அந்த நீண்ட வரலாற்றைப்  பேசுவதற்கான சந்தர்ப்பமல்ல இது. ஆனால், அனைவரையும் ஒற்றுமைப்படுத்தி இந்த இயக்கத்தைப் பலப்படுத்துகின்ற முயற்சி எவ்வளவுதான் தடைகள்,பிரச்சினைகள் வந்தாலும் தடையின்றித் தொடரும் என்றார்.

(தொகுப்பு: எம்.என்.எம்.யஸீர் அறபாத்,ஓட்டமாவடி)

முன்னைய ஆட்சியாளர்களுக்கு இலகுவில் தப்பித்துக் கொள்ள முடியாது ; ரவூப் ஹக்கீம் முன்னைய ஆட்சியாளர்களுக்கு இலகுவில் தப்பித்துக் கொள்ள முடியாது ; ரவூப் ஹக்கீம் Reviewed by Madawala News on September 19, 2022 Rating: 5

தந்தையை கவனிக்க ரூ.2 இலட்சம் கேட்கும் 7 மகள்கள் #பொலீசாரிடம் தந்தை முறைப்பாடு #இலங்கைதங்களுடைய தந்தையை கவனித்துக்கொள்ள வேண்டுமாயின் மாதமொன்றுக்கு 2 இலட்சம் ரூபாயை, தருமாறு அவருடைய ஏழு மகள்களும் கோரியுள்ள சம்பவம் பாதுக்க பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

என்னுடைய ஏழு மகள்மார்களில் ஒருவர் கூட தன்னை கவனித்துக்கொள்வதில்லை என்றும் அவ்வாறு கவனித்துக் கொள்ளவேண்டுமாயின் மாதம் 2 இலட்சம் தருமாறு ஏழு மகள்மார்களும் கேட்கின்றனர் என 82 வயதான தந்தையொருவர் பாதுக்க பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அந்த முறைப்பாட்டை ஏற்றுக்கொண்ட பொலிஸார், அதனை விசாரணைக்கு உட்படுத்துவதற்கு தீர்மானித்து அந்த ஏழு மகள்களையும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்தனர்.அவர்கள் அனைவரும் சொகுசு வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருப்பது தெரியவந்தது.

பெற்றோர்களை கவனித்துக்கொள்ள வேண்டிய முறைமை தொடர்பில் அந்த ஏழு பெண்களுக்கும் தெளிவூட்டிய பொலிஸார், தங்களுடைய தந்தையை மாறி, மாறி கவனித்துக்கொள்ளுமாறும் அறிவுரை வழங்கினர்.

பொலிஸாரின் அறிவுரையை ஏற்றுக்கொள்ள மறுத்த ஏழு பெண்களும், தங்களுடைய தந்தையை கவனித்துக்கொள்ள வேண்டுமாயின் மாதாந்தம் 2 இலட்சம் ரூபாய் பணத்தை தரவேண்டுமென பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

மகள்மார்கள் இரண்டு இலட்சம் ரூபாயை கோருகின்றனர். எனினும், அவ்வளவு தொகையை தன்னால் ​தரமுடியாது எனத் தெரிவித்துள்ள 82 வயதான தந்தை, தன்னிடம் எந்தப் பணமும் இல்லை. மாத்தறை ​ரொட்டும்ப பிரதேசத்தில் உள்ள காணியை விற்ற பணத்திலேயே தன்னுடைய சிறுநீரகங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

மிகுதி இருந்த பணத்தில் 4 இலட்சம் ரூபாயை கடைசி மகளுக்கு கொடுத்துவிட்டேன். கடந்த காலங்களில் அவருடனேயே வாழ்ந்து வந்தேன். எனினும், அவரும், மருமகனும் தன்னையும் தன்னுடைய மனைவியையும் பாதுக்க பிரதேசத்தில் உள்ள வாடகை வீடொன்றில் வாடகைக்கு அமர்த்திவிட்டு சென்றுவிட்டனர். இதனால் தாங்கள் இருவரும் பெரிதும் பாதிக்கப்பட்டோம் என்றும் 82 வயதான தந்தை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இரு தரப்பினரின் கருத்துகளைக் கேட்டறிந்த பொலிஸார், பிரச்சினையை தீர்க்க முடியாமையால், நீதிமன்றத்தை நாடுவதை தவிர ​வேறு வழியில்லை எனவும் நீதிமன்றத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

இந்நிலையில், தந்தை, தான் தற்காலிகமாக பார்த்துக்கொள்கின்றேன் என தெரிவித்த பிலியந்​தலையை வசிப்பிடமாகக் கொண்ட மகள், அவரை அழைத்துச் சென்றுவிட்டார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
தந்தையை கவனிக்க ரூ.2 இலட்சம் கேட்கும் 7 மகள்கள் #பொலீசாரிடம் தந்தை முறைப்பாடு #இலங்கை தந்தையை கவனிக்க ரூ.2 இலட்சம் கேட்கும் 7 மகள்கள் #பொலீசாரிடம் தந்தை முறைப்பாடு #இலங்கை Reviewed by Madawala News on September 19, 2022 Rating: 5
Powered by Blogger.