அரச செலவுகளை கட்டுப்படுத்தவும் ; ஜனாதிபதிஅரச செலவுகளை கட்டுப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.


நாடு முகம் கொடுத்துள்ள பொருளாதார சவால்களை வெற்றிக்கொள்வதற்காக அரச செலவுகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் கடுமையான கட்டுபாடுகளை விதிக்குமாறு, ஜனாதிபதியின் செயலாளரால் அமைச்சின் செயலாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பான சுற்றுநிருபம் ஒன்றும் சகல அமைச்சிகளினதும் செயலாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதியின் ஆலோசனைக்கமையவே ஜனாதிபதியின் செயலாளரால் இந்த சுற்றுநிருபம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


செலவுகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் திறைசேறி சுற்றுநிருபத்தை கடுமையாக பின்பற்றுமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

அரச செலவுகளை கட்டுப்படுத்தவும் ; ஜனாதிபதி அரச செலவுகளை கட்டுப்படுத்தவும் ; ஜனாதிபதி Reviewed by Madawala News on August 14, 2022 Rating: 5

2,600 ரூபா பெறுமதியான ரயில் பயணச்சீட்டை 7300 ரூபாவுக்கு விற்ற நபர் கண்டியில் கைது.அதிக விலைக்கு வெளிநாட்டு தம்பதியருக்கு ரயில் பயணச்சீட்டை இணையத்தில் விற்பனை செய்த நபர் ஒருவர் கண்டியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (13) பிற்பகல் சந்தேக நபர் கண்டி புகையிரத நிலைய பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

சந்தேக நபர் 2,600 ரூபா பெறுமதியான ரயில் பயணச்சீட்டை வெளிநாட்டு தம்பதியொருவருக்கு 7,300 ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கண்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், முன்பதிவு செய்யப்பட்ட மற்றுமொரு ரயில் பயணச்சீட்டும் சந்தேகநபரிடம் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கண்டி பிரதேசத்தை சேர்ந்த 64 வயது​டைய சந்தேகநபர் கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
2,600 ரூபா பெறுமதியான ரயில் பயணச்சீட்டை 7300 ரூபாவுக்கு விற்ற நபர் கண்டியில் கைது. 2,600 ரூபா பெறுமதியான ரயில் பயணச்சீட்டை 7300 ரூபாவுக்கு விற்ற நபர் கண்டியில் கைது. Reviewed by Madawala News on August 14, 2022 Rating: 5

பொதுஜன பெரமுனயால் அடுத்த தேர்தலில் எம்.பிக்களைக் கூட வெற்றி கொள்ள முடியாது.பொதுஜன முன்னணியால் அடுத்த தேர்தலில் எம்.பிக்களைக் கூட வெற்றி கொள்ள முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகவே அரசாங்கம் தேர்தலுக்குச் செல்ல அஞ்சுவதாகவும் அரசாங்கத்தின் அதிகாரத்தை தக்கவைக்க வேறு வழிகளைத் தேடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், தற்போது தேர்தலை நடத்துவது அத்தியாவசியமானது எனவும், குறுகிய காலத்தில் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கிவிட்டு தேர்தலை நடத்த வேண்டும் என்றும் சுனில் ஹந்துன்நெத்தி மேலும் தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனயால் அடுத்த தேர்தலில் எம்.பிக்களைக் கூட வெற்றி கொள்ள முடியாது. பொதுஜன பெரமுனயால் அடுத்த தேர்தலில் எம்.பிக்களைக் கூட வெற்றி கொள்ள முடியாது. Reviewed by Madawala News on August 14, 2022 Rating: 5

6 தமிழ் அமைப்புக்கள் மீதான தடையை இலங்கை அரசாங்கம் தளர்த்தியது.சர்வதேச தமிழ் அமைப்புக்கள் சிலவற்றின் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை இலங்கை அரசாங்கம் தளர்த்தியுள்ளது.

அதன்படி, 6 சர்வதேச தமிழ் அமைப்புக்கள் மீதான தடை தளர்த்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது
6 தமிழ் அமைப்புக்கள் மீதான தடையை இலங்கை அரசாங்கம் தளர்த்தியது. 6 தமிழ் அமைப்புக்கள் மீதான தடையை இலங்கை அரசாங்கம் தளர்த்தியது. Reviewed by Madawala News on August 14, 2022 Rating: 5

தொலைபேசி அழைப்பிற்கு பதில் அளிக்காத அமைச்சர்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு முறைப்பாடு..தொலைபேசி அழைப்பிற்கு பதில் அளிக்காத சில  அமைச்சர்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அண்மையில் இடம்பெற்ற ஆளும் கட்சி கூட்டத்தில் இந்த விடயம் பொதுஜன பெரமுன உறுப்பினர்களால் ஜனாதிபதிக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

அண்மையில் அமைச்சர்களாக நியமிக்கப்பட்ட சில இளையவர்கள் சீனியர் முன்னாள் அமைச்சர்களின் அழைப்புகளுக்கு கூட பதில் அளிப்பதில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


தொலைபேசி அழைப்பிற்கு பதில் அளிக்காத அமைச்சர்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு முறைப்பாடு.. தொலைபேசி அழைப்பிற்கு பதில் அளிக்காத அமைச்சர்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு முறைப்பாடு.. Reviewed by Madawala News on August 14, 2022 Rating: 5

சில மருந்து வகைகளின் விலைகள் 300 % வீதத்தால் உயர்வு ..சில மருந்து வகைகளின் விலைகள்  300 % வீதத்தால் உயர்வடைந்தள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித அலுத்கெதர குறிப்பிட்டார்.

நாட்டில் மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் சில மருந்து வகைகளின் விலைகள்  300 % வீதத்தால் உயர்வடைந்துள்ளதால் மக்கள் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித அலுத்கெதர குறிப்பிட்டார்.
சில மருந்து வகைகளின் விலைகள் 300 % வீதத்தால் உயர்வு .. சில மருந்து வகைகளின் விலைகள் 300 % வீதத்தால் உயர்வு .. Reviewed by Madawala News on August 14, 2022 Rating: 5

நட்டத்தில் இயங்கும் ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு 18 ஆலோசகர்கள் நியமனம் !!நட்டத்தில் இயங்கும் ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு 18 ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவன உள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த ஆலோசகர்களுக்கு மாதம் 5 லட்சம் வரை கொடுப்பனவு வழங்கப்படுவதாக கூறப்பட்டது.
நட்டத்தில் இயங்கும் ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு 18 ஆலோசகர்கள் நியமனம் !! நட்டத்தில் இயங்கும் ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு 18 ஆலோசகர்கள் நியமனம் !! Reviewed by Madawala News on August 14, 2022 Rating: 5

இந்தியா,அமெரிக்காவின் தேவைக்கமைய எமது வெளிவிவகார கொள்கையினை மாற்றியமைத்துக்கொள்ள முடியாதுஇந்தியா,அமெரிக்கா ஆகிய நாடுகளின் தேவைக்கமைய எமது வெளிவிவகார கொள்கையினை மாற்றியமைத்துக்கொள்ள முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். 


யுவான் வோங் -05 கண்காணிப்பு கப்பல் உளவு பார்ப்பதற்காக அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தருகிறது என இந்தியா குறிப்பிடுவது அடிப்படையற்றது எனவும் அவர் தெரிவித்தார்.


மேலும் வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி வழங்கப்பட்ட அனுமதியை இரத்து செய்ய முயற்சிப்பது சர்வதேசத்தின் மத்தியில் இலங்கையின் வெளிவிவகார கொள்கையினை மலினப்படுத்தும் எனவும் குறிப்பிட்டார்.


இதேவேளை யுவான் வோங் கப்பல் விவகாரத்தில் இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் அழுத்தம் பிரயோகிப்பதை அவதானிக்க முடிகின்றதோடு இந்தியா மற்றும் அமெரிக்காவின் யுத்த கப்பல்கள் இலங்கைக்கு வருகை தரும் போது சீனா ஒருபோதும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனவும் அவர் சுட்டிகாட்டியுள்ளார்.


 

இந்தியா,அமெரிக்காவின் தேவைக்கமைய எமது வெளிவிவகார கொள்கையினை மாற்றியமைத்துக்கொள்ள முடியாது இந்தியா,அமெரிக்காவின் தேவைக்கமைய எமது வெளிவிவகார கொள்கையினை மாற்றியமைத்துக்கொள்ள முடியாது Reviewed by Madawala News on August 14, 2022 Rating: 5

அந்நிய செலாவணி நெருக்கடி எதிர்காலத்தில் மேலும் உக்கிரமடையலாம் ; இறக்குமதி தடையை நீடிக்குமாறு கோரிக்கை ..அந்நிய செலாவணி நெருக்கடி எதிர்காலத்தில் மேலும்  உக்கிரமடையலாம் என மத்திய வங்கி திரைசேறிக்கு அறிவுறுத்தல் வழங்கி உள்ளது. 

இதனால் 2500 அத்தியவசியமற்ற பொருட்களுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள தடையை நீடிக்குமாறு மத்திய வங்கி  திரைசேறிக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
அந்நிய செலாவணி நெருக்கடி எதிர்காலத்தில் மேலும் உக்கிரமடையலாம் ; இறக்குமதி தடையை நீடிக்குமாறு கோரிக்கை .. அந்நிய செலாவணி நெருக்கடி எதிர்காலத்தில் மேலும் உக்கிரமடையலாம் ; இறக்குமதி தடையை நீடிக்குமாறு கோரிக்கை .. Reviewed by Madawala News on August 14, 2022 Rating: 5

100,000 மெற்றிக் டன் மசகு எண்ணெய் அடங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்தது.நாட்டை வந்தடைந்த மசகு எண்ணெய் தொகையில் இருந்து பெறப்படும் மாதிரி இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.

100,000 மெற்றிக் டன் மசகு எண்ணெய் அடங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது.

அதன் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் அதனை தரையிறக்கும் பணிகள் முன்னெடுக்கப்படும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

அத்துடன் 120,000 மெற்றிக் டன் மசகு எண்ணெய் அடங்கிய இரண்டாவது கப்பல் எதிர்வரும் 23 முதல் 29ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதிக்குள் நாட்டை வந்தடையும் என அவர் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், சுத்திகரிப்பு பணிகள் அடுத்த வாரத்தின் நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்படும் என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
100,000 மெற்றிக் டன் மசகு எண்ணெய் அடங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்தது. 100,000 மெற்றிக் டன் மசகு எண்ணெய் அடங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்தது. Reviewed by Madawala News on August 14, 2022 Rating: 5

ட்ரோன் கெமரா பாராளுமன்ற ஆற்றில் வீழ்ந்ததில் ஐம்பது இலட்சம் ரூபா நஷ்டமாகி விட்டது... விமானப்படை தெரிவிப்பு(எம்.எம்.சில்‍வெஸ்டர்)
பாராளுமன்றத்தின் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்பட்ட டிரோன் கெமரா (Drone Camera) தியவன்ன ஆற்றில் வீழ்ந்ததில் சுமார் ஐம்பது இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விமானப்படை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.


இவ்வாறு விபத்துக்குள்ளான டிரோன் கெமரா மீண்டும் பயன்படுத்த முடியாதளவுக்கு சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


இலங்கை விமானப்படைக்கு சொந்தமான இந்த டிரோன் கெமராவானது, கடந்த மாதம் 20 ஆம் திகதியன்று பாராளுமன்றத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக விமானப் படையினரால் ஈடுபடுத்தப்பட்டிருந்த வேளையில் திடீரென தியவன்னா ஓயாவில் விழுந்து விபத்துக்குள்ளானது.

பேட்டரி வலுவிழந்ததால் விபத்துக்குள்ளானதாக தற்போதைய விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

அப்போது, டிரோன் னெமராவை பத்திரமாக தரையிறக்க விமானப்படை வீரர்கள் எவ்வளவோ முயன்றபோதிலும் அது கைகூடாமல் தோல்வியில் முடிந்ததாக தெரியவந்துள்ளது.

தியவன்னாவில் விபத்துக்குள்ளான குறித்த டிரோன் கெமராவை கடற்படையின் 'டைவிங்' குழுவினரால் அண்மையில் மீட்கப்பட்டடிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ட்ரோன் கெமரா பாராளுமன்ற ஆற்றில் வீழ்ந்ததில் ஐம்பது இலட்சம் ரூபா நஷ்டமாகி விட்டது... விமானப்படை தெரிவிப்பு ட்ரோன் கெமரா பாராளுமன்ற ஆற்றில் வீழ்ந்ததில் ஐம்பது இலட்சம் ரூபா நஷ்டமாகி விட்டது... விமானப்படை தெரிவிப்பு Reviewed by Madawala News on August 14, 2022 Rating: 5

அம்பாறை மாவட்டத்தில் தலைதூக்கியுள்ள மாட்டிறைச்சி அரசியல்.நூருல் ஹுதா உமர்

நாட்டில் இப்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக மூச்சிவிடுவதாக இருந்தால் கூட சாதாரண ஒருவருக்கு தினம் 5000 ரூபாய்க்கு மேல் தேவை எனும் நிலை உருவாகியுள்ளது. அதில் பல்வேறு மாபியாக்களும், மனசாட்சி இல்லாதவர்களின் செயலும் அதிகமாக ஆதிக்கம் செலுத்துகிறது. இப்படியான பெரும் மாபியா கடலிலிருந்து ஒரு துளியை பிரித்தெடுத்தது போல அம்பாறை மாவட்டத்தில் சில நாட்களாக பேசுபொருளாக மாறியிருக்கும் இறைச்சி விலை பிரச்சினையை ஆராய்ந்தால் பல்வேறு இடியப்ப சிக்கல்களையும், அதிகார வர்க்கத்திற்கு வர்த்தகர்களுக்கும், வர்த்தகர்களுக்கும் நுகர்வோர்களுக்கும் இடையில் உள்ள முரண்பாடுகளையும் காணக்கூடியதாக உள்ளது.

கல்முனை முதல்வரின் அறிக்கைக்கு கடையை மூடிய இறைச்சி கடைக்காரர்கள்.

சொந்தமான விலங்கறுமனையையோ அல்லது சொந்தமான இறைச்சிக்கடைகளையோ கொண்டிராத கல்முனை மாநகராட்சி இந்த இறைச்சி விலையை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றது. அதன் பகுதியாக கல்முனை மாநகராட்சி ஆள்புல எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் ஒரு கிலோ மாட்டிறைச்சியின் அதிகூடிய கட்டுப்பாட்டு விலையாக 1,600 ரூபாவை கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றக்கீப் நிர்ணயித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள மாநகர சபை தரப்பு நாட்டின் அசாதாரண சூழ்நிலையை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, கல்முனை மாநகர பிரதேசங்களில் ஒரு கிலோ மாட்டிறைச்சி 2,200 ரூபாய்க்கு மேல் விற்கப்படுவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கமைய மேற்படி கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2022.08.06 தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில், இந்த நிர்ணய விலையை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருகின்றனர். இவ்விடயம் தொடர்பாக கல்முனை மாநகர சபைக்குட்பட்ட மாட்டிறைச்சி விற்பனையாளர்கள் மாநகர மேயரால் மாநகர சபைக்கு நேரடியாக அழைக்கப்பட்டு, இறைச்சி வியாபாரத்தின்போது அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் செலவீனங்கள் குறித்து கேட்டறியப்பட்டு, அவற்றுக்குரிய தீர்வுகள் முன்மொழியப்பட்ட நிலையில், அவர்களது இணக்கத்துடன் மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஒரு கிலோகிராம் மாட்டிறைச்சி 1,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட வேண்டும் எனவும் அதில் ஆகக் கூடியது 200 கிராம் மாத்திரமே முள் அடங்கியிருத்தல் வேண்டும் எனவும் அனைத்து இறைச்சிக் கடைகளிலும் டிஜிட்டல் தராசு பயன்படுத்தப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை மீறும் மாட்டிறைச்சி வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், மாட்டிறைச்சிக் கடைக்கான வியாபார உரிமம் இரத்துச் செய்யப்படும் எனவும் கல்முனை முதல்வரினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே வேளை, இறைச்சிக் கடைக்காரர்களுக்கு மாடுகளை விற்பனை செய்வோர் மாநகர சபையில் தம்மைப் பதிவு செய்து, அனுமதிப் பத்திரத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் ஒரு கிலோ இறைச்சியை ஆகக்கூடியது 1,300 ரூபாய்க்கு வழங்க வேண்டும் எனவும் மேயரால் உத்தரவிடப்பட்டிருக்கின்றது. இதனை மீறும் மாட்டு வியாபாரிகள் பொலிஸார் மூலம் கைது செய்யப்பட்டு, கடுமையான சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவதுடன், மாடுகளும் பறிமுதல் செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் இம்மாதம் 05ம் திகதிவரை 2000- 2200 ரூபாய் வரை கல்முனை மாநகர எல்லைக்குள் இறைச்சி விற்கப்பட்டதுடன் 06ம் திகதி முதல் பெரும்பான்மையான இறைச்சி கடைகள் முதல்வரின் அறிவிப்பின் காரணமாக மூடப்பட்டுள்ளது. கடைகளை மூடியமைக்கு காரணமாக இறைச்சி கடைகளில் மேயரினால் குறிக்கப்பட்டுள்ள விலைக்கு இறைச்சியை விற்க முடியாது என்கின்றனர் இறைச்சி கடைக்காரர்கள். இறைச்சி விலை ஏன் அதிகரிக்கின்றது என்ற கேள்விக்கு விடை தேட வேண்டியது இறைச்சிக்கடைக்காரர்களைத் தாண்டி இறைச்சிக்கடைகளைக் குத்தகைக்கு விடுவோரின் கைகளிலும் தங்கியுள்ளது என்பதனை ஒரு கனம் புரிந்துகொள்ள வேண்டும். பல லட்ச ரூபாய்களுக்கு கடைகளைக் குத்தகைக்கு விட்டால் நாளுக்கொரு விலையை அவர்களும் அதிகரிப்பதில் நியாயமும் இல்லாமல் இல்லை. அவ்வாறான தொகைக்குக் குத்தகைக்கு விட்டுவிட்டு விலையைப்பற்றிப் பேசுவதில் நியாயமும் இல்லை. அவ்வாறான பெருந்தொகைக்குக் குத்தகைக்கு பெரும் அவர்கள் அவர்களது வாழ்வாதாரம், இலாபம், அடுத்த முறை குத்தகைக்குப் பெறுவதற்கான பணத்தினை சேகரித்தல் போன்ற விடயங்களில் கவனஞ்செலுத்துவதால் விலை அதிகரிப்பு ஏற்படுகின்றதே தவிர இங்கு டொலர் தட்டுப்பாட்டிற்காக விலை அதிகரிக்கப்படுவதில்லை. இந்நிலையில் மாற்றம்பெற வேண்டுமானால் முதலில் குத்தகையை நிர்ணயம் செய்து குறிப்பிட்ட ஒரு சிறு தொகைக்குக் குத்தகைக்குக் கடையை வழங்கி விட்டு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயம் செய்தால் மக்களும் கடையைக் குத்தகைக்கு எடுத்தவரும் நன்மையடைவார்கள் என்பதில் ஐயமில்லை. மக்களின் வயிற்றில் அடித்து கட்டிடங்களை கம்பீரமாகக் காட்சிப்படுத்தி என்ன பயன்? மாற்றத்தை எதிர்பார்க்கும் நம்மிடமிருந்து முதலில் மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்ற நியாயமான கருத்தொன்று பொதுவெளியில் இந்த பிரச்சினைகளின் பின்னர் உலவுகிறது.

இறைச்சி விலை நிர்ணயத்தில் பிராந்தியத்தின் அனைத்து உள்ளூராட்சி சபைகளும் ஒருமித்த ஒரு விலை நிர்ணயத்திற்கு வரவேண்டும். கல்முனையில் ஒரு விலை, அக்கரைப்பற்றில் ஒரு விலை, நிந்தவூரில் ஒரு விலை, அட்டளைச்சேனையில் ஒரு விலையும் சம்மாந்துறையில் ஒரு விலையும் இருக்கக்கூடாது. இதனால் கடந்த காலங்களில் மாட்டு வியாபாரிகளுக்கும் இறைச்சிக்கடைக்காரர்களுக்கும், உள்ளுராட்சி சபைகளுக்கும் இடையில் இணக்கப்பாடு இன்மையும், தான்தோன்றித்தனமான விலை அதிகரிப்பும் காணப்பட்டது. எனவே சபைகள் ஒன்றினது இறைச்சி விற்பனையுடன் சம்மந்தபட்ட மாட்டு வியாபாரிகள் , கடைகாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிராந்தியத்திற்கான ஓர் விலை நிர்ணயம் செய்யுங்கள். இது இறைச்சிக்கு மட்டுமல்ல மீன் வியாபாரத்திலும் மேற்கொள்ளப்பட வேண்டும். செல்வமீன்-1000/= மேல், வெட்டு மீன்-2400/= மேல், ஒரு வேக் 100/= ரூபாக்கு வாங்கிய சாலை மீன் 1000/=, கீரி 1400/= தவிர கடல் மீனுக்குதான் எரிபொருள் தட்டுப்பாடு என்றால் ஆற்று மீனுக்கும் இந்த நிலைதான் என்கின்றனர் நுகர்வோர். கோழி இறைச்சிக்கும் இதுதான் நிலைமை.

மாட்டிறைச்சிக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயம் செய்து, அதனை இறுக்கமாக அமுல்படுத்துவதற்கு எடுத்துள்ள நடவடிக்கைகளில் இருந்து தான் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை. 2022.08.06 ஆம் திகதி சனிக்கிழமை தொடக்கம் இதனை அமுல் நடத்துவதற்கு மாட்டிறைச்சி வியாபாரிகள் இணக்கம் தெரிவித்திருந்தனர். ஆனாலும் குறித்த தினத்திலிருந்து பெரும்பாலான இறைச்சிக் கடைக்காரர்கள் இறைச்சிக் கடைகளை திறக்காமல், வியாபாரத்தை நிறுத்தியுள்ளனர். இன்னும் சில நாட்களுக்கு இந்நிலை தொடரலாம். உண்மையில், நிர்ணய விலைக்கு இறைச்சியை விற்காமல், தமது தீர்மானத்தை மீறும் இறைச்சிக் கடைகளை இழுத்து மூடுவதற்கு முதல்வர் தயாராக இருந்தார். அதற்காக 06ஆம் திகதி சனிக்கிழமையன்று காலை வேளையில் பொலிஸ் மற்றும் மாநகர சபை உத்தியோகத்தர்கள் சகிதம் முதல்வர் கள விஜயம் மேற்கொண்டு கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏற்பாடாகியிருந்தது. ஆனால் வியாபாரம் நடத்தாமல் கடைகளை அவர்களாகவே மூடியிருந்தமை முதல் வெற்றியாகும் என கல்முனை மாநகர சபை விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை எனும் கதையை பக்குவமாக எடுத்துரைத்தது. இவைகளெல்லாம் இப்படி இருக்க இந்த விடயம் தொடர்பில் கடந்த செவ்வாய்க்கிழமை (09) கல்முனை முதல்வரின் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கல்முனை பொலிஸ் நிலைய சமூக பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி ஏ.எல்.ஏ.வாஹிட், மாநகர சபை கணக்காளர் எம்.எம்.ரியாஸ், கால்நடை வைத்திய அதிகாரி வட்டப்பொல உட்பட இறைச்சிக் கடைக்காரர்கள் எனப்பலரும் கலந்து கொண்டு நீண்ட நேர வாதப்பிரதிவாதங்களை மேற்கொண்டதுடன்  01 கிலோ மாட்டிறைச்சி (200 கிராம் எலும்பு அடங்கலாக) 1700 ரூபாவுக்கும் தனி இறைச்சி 1900 ரூபாவுக்கும் விற்பனை செய்வதற்கும் இணக்கம் காணப்பட்டது. ஆனாலும் இன்றுவரை அதிக இறைச்சிக்கடைகளுக்கு பூட்டே போடப்பட்டுள்ளது. இதன்மூலம் கல்முனை முதல்வரின் ஆளுமை வெளிப்படையாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கல்முனையை ஆளும் தரப்பு மாநகர சபை உறுப்பினர் ஏ.ஆர். அமீர் "நாங்க சும்மா பகடிக்கி சொல்றதையெல்லாம் நீங்க நம்புறானா-  நாங்க எவ்வளவோ தீர்மானங்களை எடுத்திரிக்கின்றோம் ஏதாவது நடந்திரிக்கா" என தனது சமூக வலைத்தள பக்கத்தில் இதுதொடர்பில் பகிரங்கமாகவே கிண்டல் செய்துள்ளார்.

இறைச்சி வியாபாரத்தில் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகள்

பொதுமக்கள் பொறுமையுடன் ஒத்துழைப்பு வழங்கினால் இறைச்சிக்கடைக்காரர்களை வழிக்குக் கொண்டு வந்து விடலாம் என கல்முனை மாநகர சபை நம்புவதாக தெரிவிக்கப்படுவதுடன் 01 கிலோ மாட்டிறைச்சி 1600 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட வேண்டும். அதில் ஆகக்கூடியது 200 கிராம் மாத்திரமே எலும்பு அடங்கியிருத்தல் வேண்டும், தனி இறைச்சியாயின் 01 கிலோ கிராம்- 1800 ரூபாவுக்கே விற்கப்பட வேண்டும், அனைத்து இறைச்சிக் கடைகளிலும் டிஜிட்டல் தராசு பயன்படுத்தப்பட வேண்டும் என மாநகர சபைகள் கட்டளைச் சட்டம் பிரிவு 272 (8)(gg) இன் பிரகாரம் மாநகர முதல்வருக்கு உரித்தான அதிகாரத்தின் கீழ் இத்தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. பொது மக்களின் நலன் கருதி எடுக்கப்பட்ட இத்தீர்மானங்களில் எவ்வித விட்டுக்கொடுப்புக்கும் இடமில்லை. இதனை அமுல்படுத்துகின்ற விடயத்தில் மாநகர முதல்வர் மிகவும் உறுதியுடன் இறுக்கமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார் என்று அறிவிக்கப்பட்டு பின்னர் அதில் தளர்வை கல்முனை முதல்வரே மேற்கொண்டுள்ளார்.

அக்கரைப்பற்று மாநகர சபை எல்லையினுள் நிர்ணய விலைகளிலேயே மாட்டிறைச்சி விற்கப்படுவதை அப்பகுதி வியாபாரிகள் அக்கரைப்பற்று மாநகர சபைக்கு உறுதிப்படுத்தியிருக்கின்றனர். அதேவேளை, அட்டாளைச்சேனையில் இவ்விலையை நடைமுறைப்படுத்த அங்குள்ள மாட்டிறைச்சி வியாபாரிகள் தவறியமையால், அப்பிரதேச சபை சபைத் தவிசாளரினால் அப்பகுதி விலங்கறுமனை இழுத்து மூடப்பட்டிருக்கிறது. ஆனாலும் துரதிஷ்டவசமாக இழுத்து மூட மாநகர சபைக்கு சொந்தமான விலங்கறுமனையோ மாநகர சபைக்கு சொந்தமான இறைச்சிக்கடைகளோ கல்முனையில் இல்லை என்பதே இங்கு கவலையான விடயமாக உள்ளதுடன் கல்முனை மாநகர இறைச்சிக்கடைக்காரர்கள் தமது எண்ணம் போலவே இதுவரையும் வியாபாரம் செய்து வருகின்றனர். தனியார் ஒருவருக்கு சொந்தமான விலங்கறுமனைக்கு எதிராக வழக்கொன்றை பதியுமாறு கல்முனை நீதிமன்றம் ஆணையாளரை பணித்திருந்தும் அதனை கூட நிறைவேற்ற முடியாமல் காலம் இழுத்தடிக்கும் கல்முனை மாநகர சபை நிர்வாகம் இறைச்சி விலையில் உச்சகட்ட இறுக்கம் காட்ட முடியாது இருக்க பல காரண காரியங்கள் இருக்கிறது.

பொய்யும், இயலாமையும் நிறைந்த தீர்மானங்கள்

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட மாட்டிறைச்சி விற்பனையாளர்கள், கடந்த 03 ஆம் திகதி மாநகர சபைக்கு அழைக்கப்பட்டு, இறைச்சி வியாபாரத்தின்போது அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் ஆராயப்பட்டு அவற்றுக்குரிய தீர்வுகள் முதல்வரினால் முன்மொழியப்பட்ட நிலையில் அத்தீர்மானங்களை மீறும் மாட்டிறைச்சி வியாபாரிகள் மீது மாநகர சபைகள் கட்டளைச் சட்டம் பிரிவு 272 (😎 (c),(d) இன் கீழ் குறித்த மாட்டிறைச்சிக் கடைகள் உடனடியாக இழுத்து மூடப்படும் எனவும் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் மாட்டிறைச்சிக் கடைக்கான வியாபார உரிமம் இரத்துச் செய்யப்படும் எனவும் முதல்வரினால் அறிவுறுத்தப்பட்டிருந்தது. மாட்டிறைச்சி வியாபாரிகளுடனான குறித்த கலந்துரையாடலில், அவர்களினால் தெரிவிக்கப்பட்ட செலவீனங்கள் தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்பினருடன் ஆராய்ந்தபோது, அவை மிகைப்படுத்தப்பட்டவை என தெரிய வந்துள்ளது. குறிப்பாக மாடு விற்பவர்கள், தங்களுக்கு ஒரு கிலோ கிராம் இறைச்சியை எலும்புடன் சேர்த்து 1700 ரூபாவுக்கே தருகிறார்கள் என இறைச்சிக்கடை வியாபாரிகள் கூறியிருந்தனர். அப்போது இவ்விலையைக் குறைத்துத் தருவதற்கு நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் உறுதியளித்ததன் பிரகாரம் வெள்ளிக்கிழமை (05) மாடு வியாபாரிகளை, மாநகர சபைக்கு அழைத்து, பேச்சுவார்த்தை நடாத்தினார். இதன்போது, தாம் மாட்டிறைச்சிக் கடைக்காரர்களுக்கு கிலோவொன்று 1500 ரூபாப்படியே விற்பதாகவும் அத்தொகைக்கு மேல் அவர்கள் வாங்க மாட்டார்கள் எனவும் ஒவ்வொரு மாட்டிலும் 04 சந்துகள் மாத்திரமே நிறுக்கப்பட்டு, மாட்டுக்கான தொகை தீர்மானிக்கப்படுவதாகவும் ஈரல், குடல் மற்றும் இதர பகுதிகள் யாவும் இறைச்சிக் கடைக்காரர்களுக்கு இலவசமாகவே கிடைக்கின்றன எனவும் மாடு வியாபாரிகள் சுட்டிக்காட்டியிருந்தனர். இவற்றின் மூலம் இறைச்சி வியாபாரிகளுக்கு 10,000 ரூபா முதல் 15,000 ரூபா வரை மேலதிக வருமானம் கிடைக்கிறது எனத் தெரிய வந்துள்ளது.

ஆக, உண்மைகள் மறைக்கப்பட்டு, செலவீனங்கள் அதிகமாகக் காட்டப்பட்டே மாட்டிறைச்சி வியாபாரத்தில் கொள்ளை இலாபம் அடிக்கப்படுகின்றமை நிரூபிக்கப்பட்டுள்ளதால், இந்த மாபியாவை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது என்றும் இந்த விடயத்தில் எத்தகைய விமர்சனங்கள், சவால்கள் வந்தாலும் அவற்றை முறியடித்து ,மக்களுக்கு நியாய விலையில் மாட்டிறைச்சி கிடைப்பதை உறுதிப்படுத்துவதற்கு மாநகர முதல்வர் அதீத பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றார். இந்த விடயம் சம்மந்தமாக கல்முனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட பொலிஸ் உயர் அதிகாரிகள் மற்றும் நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகளுடனும் அம்பாறை மாவட்டத்திலுள்ள ஏனைய சில உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்களுடனும் முதல்வர் பேசியிருப்பதுடன் அவர்களது ஒத்துழைப்பும் கிடைக்கப் பெற்றுள்ளது. ஆகையினால், தீர்மானிக்கப்பட்ட விலைகளுக்கு இறைச்சி விற்பதற்கு வியாபாரிகள் முன்வராத வரை மாட்டிறைச்சிக் கடைகளை திறப்பதற்கோ வேறு வழிகளில் மாட்டிறைச்சி விற்பதற்கோ அனுமதி வழங்கப்பட மாட்டாது. இதனால் இன்னும் சில தினங்களுக்கு நுகர்வோருக்கு இறைச்சி கிடைக்காமல் போகலாம். இது விடயத்தில் சகிப்புத்தன்மையுடன் பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம் இந்த மாபியாவை முறியடிக்கும் சவாலை ஒன்றிணைந்து வெற்றி கொள்வோம் என்கிறது கல்முனை மாநகர சபை.

அக்கரைப்பற்றில் நடக்கும் இறைச்சி வியாபாரம்

அக்கரைப்பற்று மாநகர எல்லைக்குள் அதிக விலைக்கு மாட்டிறைச்சி விற்பனை செய்யப்படுவதாக வந்த விமர்சனங்களை கருத்தில் கொண்டு, மாட்டிறைச்சி விற்பனையாளர்களுடனான சந்திப்பொன்று அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லா அஹமட் சகி தலைமையில் மாநகர சபையில் இடம்பெற்றது. இதில் அதிக விலைக்கு மாட்டிறைச்சி விற்பனை செய்யப்படுவதாக வந்த குற்றச்சாட்டை விற்பனையாளர்கள் முற்றாக மறுத்தனர். மேலும் , ஒரு கிலோ இறைச்சி (இறைச்சி 800g+முள்ளு 200g) 1600/- ரூபாய்க்கும் , தனி இறைச்சி 1800/- ரூபாய்க்கும்  தொடர்ந்தும் விற்பனை செய்வதாகவும் உறுதியாக கூறினர். இருந்தாலும் , ஒரு சில சம்பவங்கள் இடம்பெற்றிருக்க வாய்பிருக்கலாம் என்பதையும் , பொருளாதார நெருக்கடி நிலையையும் கருத்தில் கொண்டு மாநகர மக்களின் நலனுக்காக தொடர்ந்தும் மாநகர சபை இவ்விடயத்தில் மிகவும் கண்காணிப்புடன் நடந்து கொள்ளும் என்பதை மாநகர மக்களுக்கு அக்கரைப்பற்று மாநகர சபை தெரிவித்திருந்தது.

அக்கரைப்பற்று மாநகர சபை எல்லைக்குட்பட்ட இறைச்சி கடைகளின் விற்பனை நடைமுறைகள் குறித்து ஆராயும் நோக்கிலான திடீர் கள விஜயமொன்றினை அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி கடந்த காலங்களில் மேற்கொண்டிருந்தார். இதில் டிஜிட்டல்  அல்லாத சாதாரண தராசுகள் பாவித்த ஒரு சில இறைச்சி கடைக்காரர்களின் தராசுகள் மாநகர சபையினரால் பறிமுதல் செய்யப்பட்டதுடன், சட்ட விரோதமான முறையில் கடைகளும் இனம் காணப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும், இக்கள விஜயத்தின் போது ஒரு சில இறைச்சி கடைகளில் தீர்மானிக்கப்பட்ட விலை நிர்ணயம் மற்றும் விலைப் பட்டியலை பேணாதவர்களுக்கும் அக்கரைப்பற்று மாநகர முதல்வரால் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மாநகர சபை முதல்வரின் தலைமையில் மாநகர சபையினருக்கும்- பிரதேச மாட்டிறைச்சி விற்பனையாளர்களுக்குமிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் எட்டப்பட்ட தீர்மானத்திற்கமைய பொதுமக்களுக்கு சரியான முறையில் இறைச்சி விநியோகம் இடம்பெறுகிறதா என்பதை கண்காணிக்கும் அடிப்படையில் இத்திடீர் விஜயம் அமைந்தது இக்கள விஜயத்தின் போது மாநகர சபை உத்தியோகத்தர்களும் பங்கேற்றிருந்தனர்.

இதன் தொடர்ச்சியாக கடந்த செவ்வாய்க்கிழமை (09) அக்கரைப்பற்று மாநகர சபையின் விலை நிர்ணய  தீர்மானத்திற்கு மாற்றமாக செயல்பட்ட இறைச்சிக்கடை முதல்வரின் அறிவுறுத்தல்களுக்கு அமைய அதிகாரிகளால் இழுத்து மூடப்பட்டது. மக்களின் வேண்டுகோளுக்கு அமைய அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் இறைச்சிகடைகள் தொடர்சியாக இருந்ததால் ஒரு விற்பனையாளர் 800g + 200g என்ற முறை இருக்க வேண்டும் என்ற போதும், சுமார் 600g இறைச்சி 400g முள்ளுடன் விற்பனை செய்ததை ஆதார பூர்வமாக நிரூபித்ததன் பின் அக்கடை இழுத்து மூடப்பட்டுள்ளது. ஏனைய இறைச்சி விற்பனை நிலையங்களும் தொடர்ந்தும் கண்காணிக்கப்படும் என்பதை மாநகர மக்களுக்கு அறியத்தருவதோடு பொதுமக்களும் உரிமையுடன் உங்களின் பணத்திற்கு ஏற்ற பொருளை கேட்டு பெற்றுக்கொள்ள தயங்கக்கூடாது என்றும் , அக்கரைப்பற்று முதல்வர் மாநகர மக்களை அறிவுறுத்தியுள்ளார்.

பிரதேச சபைகள் என்ன செய்கிறது.

அம்பாறை மாவட்ட காரைதீவு, நிந்தவூர், அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, இறக்காமம், சம்மாந்துறை, நாவிதன்வெளி, பொத்துவில் போன்ற பிரதேச சபைகளிலும் இந்த மாட்டிறைச்சிக்கான நிர்ணய விலை இல்லாத பிரச்சினை தொடர்கிறது. மாட்டிறைச்சி விலையில் மாநகர சபைகளினால் மாற்றம் கொண்டுவர முடியுமானால் அதே போன்று ஏனைய மாவட்டங்களிலுள்ள பிரதேச சபைகளினால் மாற்றங்கள் கொண்டு வந்து குறைந்த விலைகளில் மாட்டிறைச்சி விற்கப்படும் போது ஏன் அம்பாறை மாவட்ட பிரதேச சபைகளின் பிரதேசத்தில் மாத்திரம் கண்முடித்தனமாக இறைச்சி விற்பனை செய்யப்படுகின்றது ஏன் இதுவரை பிரதேச சபைகள்  கவனம் கொள்ளாமல் இருப்பதன் காரணம் என்ன? இனியாவது பிரதேச சபைகள் இதனை கவனம் கொள்ளுமா? எனும் கேள்விகள் பரவலாக எழ ஆரம்பித்துள்ளது. இதனடிப்படையில் அட்டாளைச்சேனை மற்றும் இறக்காமம் பிரதேச சபைகள் பலகட்ட பேச்சுவார்த்தைகளின் பின்னர் மாட்டிறைச்சி விலையில் ஒரு நிர்ணயத்தை முன்மொழிந்துள்ளது. அட்டாளைச்சேனை பிரதேச சபையின் அறிவுறுத்தல்களை மீறி, அதிக விலைக்கு மாட்டிறைச்சி விற்பனை செய்தால் கொல்களத்தை மூடுவதாக தவிசாளர் தெரிவித்துள்ளதுடன்
ஒரு கிலோ மாட்டிறைச்சியை 1600 ரூபாவுக்கு விற்பனை செய்வதாக மாட்டிறைச்சிக் கடைக்காரர்கள் உத்தரவாதமளித்தால் மட்டுமே, மாடறுக்கும் இடம் திறந்து கொடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். இப்படியான உடும்புப்பிடி அறிவிப்புக்களின் உறுதிப்பாடும், மாநகர சபைகளினதும் பிரதேச சபைகளினதும் முன்மொழிவுகளின் சாத்தியப்பாடுகளும் நீண்ட காலத்திற்கு நிலைக்குமா என்பதை காலமே கூற வேண்டும்.

நூருல் ஹுதா உமர்
 
UMAR LEBBE NOORUL HUTHA UMAR 
அம்பாறை மாவட்டத்தில் தலைதூக்கியுள்ள மாட்டிறைச்சி அரசியல். அம்பாறை மாவட்டத்தில் தலைதூக்கியுள்ள மாட்டிறைச்சி அரசியல். Reviewed by Madawala News on August 13, 2022 Rating: 5

சர்வ கட்சி ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு தோல்வி?இதன் காரணமாக சர்வ கட்சி அரசாங்கத்துக்குப் பதிலாக சர்வ கட்சி வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதியால் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

எனினும், அரசாங்கத்துடன் இணைந்தவுடன், அரசியல் கட்சிகளாக இல்லாவிட்டாலும், கட்சிகளிலிருந்து தனித்தனியாக வந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட உள்ளன.

அமைச்சர்கள் அடுத்த வாரம் பதவியேற்க உள்ளதாகவும் தெரியவருகிறது.

ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் உட்பட பதினைந்துக்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் அரசாங்கத்தில் இணையவுள்ளதாக வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

சர்வ கட்சி ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு தோல்வி? சர்வ கட்சி ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு தோல்வி? Reviewed by Madawala News on August 13, 2022 Rating: 5

QR கோட் உட்பட வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்காத எரிபொருள் நிலையங்கள் குறித்து உரிய நடவடிக்கை.வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்காத எரிபொருள் நிலையங்கள்
குறித்து உரிய நடவடிக்கை எடுக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விநியோகம் தொடர்பான முன்னேற்ற மீளாய்வு கூட்டம் இன்று காலை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கொலன்னாவ முனையத்தில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்..

இதன்போது, ஒவ்வொரு எரிபொருள் நிலையத்திற்கும் விநியோகிக்கப்படும் எரிபொருளின் அளவு மற்றும் QR அமைப்புடன் வழங்கப்படும் எரிபொருளின் அளவு பற்றிய தரவு பகுப்பாய்வு செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அத்தியாவசிய சேவைகள், பொதுப் போக்குவரத்து, மீன்பிடித் துறை, விவசாயத் தேவைகள், தொழிற்சாலைகள், சுற்றுலாத்துறை ஆகியவற்றுக்கான எரிபொருள் விநியோகம் குறித்தும் பரிசீலனை செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
QR கோட் உட்பட வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்காத எரிபொருள் நிலையங்கள் குறித்து உரிய நடவடிக்கை. QR கோட் உட்பட வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்காத எரிபொருள் நிலையங்கள் குறித்து உரிய நடவடிக்கை. Reviewed by Madawala News on August 13, 2022 Rating: 5

நீங்கள் அரச அங்கீகாரம் பெற்ற நிறுவனம் ஊடாக Online மூலம் வருமானம் பெற தயாரா?*FREE SEMINAR*

*நீங்கள் அரச அங்கீகாரம் பெற்ற நிறுவனம் ஊடாக Online மூலம் வருமானம் பெற தயாரா*

*நாளாந்தம் 2000 to 4000 மேல் வருமானம் பெறும் வழிமுறையில் இருந்து பல்லாயிரம் ரூபாய் வருமானம் பெறுகிறவர்கள் வரை ஆதாரபூர்வமாக எம்மிடம் உள்ளது*

*முதலீடு இன்றி உழைக்க கூடிய முறை*

*உடன் இணைந்து கொள்ளுங்கள் குறிப்பிட்ட நபர்கள் மாத்திரமே அணுமதிக்கபடவுள்ளனர்*

Whatsapp குரூப்யில் 
இப்போதே இணைந்து கொள்ளுங்கள் 
👇👇👇👇👇👇

Join What's App Group

*🔥Online மூலம் Dollars இல் வருமானம் உழைப்பதற்கான நேரம் இது*  

*அரச அங்கீகாரம் பெற்ற 09 வருடத்திற்கு மேற்பட்ட அனுபவம் கொண்ட Company ஊடாக நடாத்தபடுகின்றது* (Reg No PV00242017)

இணையத்தின் மூலம் சம்பாதிப்பது பற்றி ISE Digital Nation (PVT) Ltd நடாத்தும் மாபெரும் இலவச Seminar🔥🔥💯

Online மூலம் எந்த investment ம் இல்லாமல் நிரந்தரமான தொழில் வாய்ப்பை உருவாக்க கூடிய வழிமுறையை தான் நாங்கள் சொல்லி தர இருக்கின்றோம்

*எம்மோடு இணைந்து 10வது நாளில் இருந்து வருமானம் பெறலாம்*

இணையத்தின் மூலம் உழைப்பது பற்றி எதிர்வரும் (2022/08/14) Sunday பிற்பகல்  8.00PM மணிக்கு   எமது  Zoom Link ஊடாக இணைந்திருங்கள். 
(மேலதிக விடயங்கள், சந்தேகங்கள் அனைத்தும் இங்கு நிவர்த்தி செய்யப்படும் )

நீங்கள் இலங்கை மற்றும் உலகில் எந்த இடத்தில் இருந்தாலும் Zoom App இனுடாக இணைந்து கொள்ள முடியும்.

ISE Digital Nation (PVT) LTD இனால் இலவசமா நடாத்தும் Free seminar இல் பங்கு கொள்ள & முதலாவது இலவச வகுப்பில் பங்குபற்ற உங்களுக்கு ஆர்வம் உள்ளது எனில் முதலாவது இலவச வகுப்பின் Zoom Link இனை  பெற எமது  Whatsapp இலக்கத்தினை தொடர்பு கொள்ளுங்கள் 

09 வருட online தொழில் துறையில் அனுபவம் கொண்ட ஆசான் மூலம் அரசாங்க அங்கீகாரம் பெற்ற பதிவு செய்யப்பட்ட Company ஊடாக நாடாத்தப்படுகின்றது.

*இதுவரை காலமும் எங்களுடைய மாணவர்கள் Success Rate பண்ணின proofs ஐ கீழே உள்ள telegram channel இல் join செய்து பார்க்க முடியும்.*

அனைத்து விதமான online Method ஐயும் ஒரு குடையின் கீழ் நாங்கள் சொல்லி கொடுக்கின்றோம்.. நேரத்தை வீணாடிகாமல் இப்பொழுதே Join ஆகி கொள்ளுங்கள்

*ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் கீழே உள்ள WhatsApp No ஐ Contact செய்யவும்*
Contact No -

Telegram பதில்  தரக்கூடியதாக இருக்கும்

8.00pm நேரத்தில் இது  ZOOM  ஊடாக நடாத்தப்படும் அதனால் முன்கூட்டியே (7.55pm ) முன்கூட்டி வருவது நல்லது
 இதுவரை காலமும் எங்களுடைய மாணவர்கள் earn பண்ணின proofs ஐ கீழே உள்ள telegram channel இல் join செய்து பார்க்க முடியும்.

https://t.me/itsISEDN

*💸💲Dollars currency மூலம் சம்பாதிப்பது எப்படி...??🤩🤩*

*நாட்டில் தற்போது dollars தட்டுப்பாடு உள்ளதால் நம் நாடானது பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றது.*

*இதன் அடிப்படையில் நாம் dollar மூலம் சம்பாதிப்பதன் மூலம் நம் நாட்டிற்கு dollars களை சேர்த்து கொடுக்க முடியும்...*

*Qn⛔ -  ஏன் நாம் dollars currency மூலம் சம்பாதிக்க வேண்டும்??🤔*

நாம் சாதாரணமாக இலங்கை ரூபாயில் சம்பாதிப்பதை விட Dollar மூலம் சம்பாதிதால் அதிகமான பணத்தை பெற்று கொள்ள முடியும்.

காரணம் இலங்கையில் நீங்கள் ஒரு வேலை செய்தால் எவ்ளோ நேரம் வேலை செய்துள்ளீர்கள் என்பதை பார்த்து இலங்கையின் மதிப்பிட்டு அளவில் பணத்தை தருவார்கள்...

At the same time நீங்கள் வெளிநாட்டவர்களுக்கு வேலை செய்து கொடுத்தால் உலகத்தின் பொதுவான currency Dollars மூலம் நமக்கு பணத்தை தருவார்கள்...

So dollars ஐ நாம் இலங்கை நாட்டு currency மூலம் convert செய்தால் ஒரு dollar இன் பெறுமதி 360/- ஆக காணப்படுகிறது. இதனால் நாம் வேலை செய்யும் வேலை சிறியதாக இருந்தாலும் பணத்தை அதிகமாக பெற்று கொள்ள முடியும்😍😍
-------------------------------------------------------------------------------

*Qn⛔ - நாம் இலங்கையில் இருந்து கொண்டு எவ்வாறு dollars இல் சம்பாதிப்பது??🤔*

இலங்கை நாட்டில் இருந்து கொண்டு dollars ஐ சம்பாதிக்க கூடிய ஒரே ஒரு இடம் online மட்டுமே... நீங்கள் online இல் சம்பாதிப்பதன் மூலம் வீட்டில் இருந்து கொண்டே பல dollars ஐ earn பண்ணலாம்.

-------------------------------------------------------------------------------
*Qn⛔ - எவ்வாறு நாம் online இல் சம்பாதிப்பது??*

Online இல் சம்பாதிக்க கூடிய basic அறிவு கூட உங்களிடம் இல்லாமல் இருக்கலாம்.. But 

எந்தவொரு basic அறிவும் இல்லாமல் Online மூலம் சம்பாதிக்க கூடிய அனைத்து வழிமுறைகளையும் சொல்லி கொடுக்க கூடிய ஒரே ஒரு இலங்கையின் முதல் தர இடம் ISE DIGITAL NATION (PVT) LTD மட்டும் தான்..

-------------------------------------------------------------------------------
*Qn⛔ - ஏன் நாம் ise digital nation இல் இணைந்து படிக்க வேண்டும் 🤔*

*✅1 - ISE DIGITAL NATION ஆனது அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்ட company ஆக காணப்படுகிறது*

*✅2 -  9 வருடம் online earning மூலம் அனுபவம் உள்ளவர்களை கொண்டு கற்பிக்கப்படுகின்றது*

*✅3 - இலகுவாகவும், எல்லோருக்கும் விளங்க கூடிய வகையில் படித்து கொடுக்கின்றனர் (easy to understanding)*

*✅4 - (💯 money back guarantee) நீங்கள் இந்த company இல் படித்து earn பண்ணவில்லை என்றால் உங்களுடைய பணத்தை மீண்டும் வழங்கப்படும் (Highly trusted)*

*✅5 - 24/7 students doubt clearing support*

*✅6 - Life time student support*

-------------------------------------------------------------------------------

*Qn⛔ - எப்படி Ise digital nation இல் இணைந்து கொள்ளுவது?? 🤔*

வருகின்ற August 14 ஆம் திகதி மாபெரும் இலவச Webinar (Free Class) உள்ளது... தவறாமல் இணைந்து கொண்டு Ise digital nation பற்றின முழுமையான தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்

First class free😍😍 Don't miss it

Contact No -

Telegram பதில்  தரக்கூடியதாக இருக்கும்
நீங்கள் அரச அங்கீகாரம் பெற்ற நிறுவனம் ஊடாக Online மூலம் வருமானம் பெற தயாரா? நீங்கள் அரச அங்கீகாரம் பெற்ற நிறுவனம் ஊடாக Online மூலம் வருமானம் பெற தயாரா? Reviewed by Madawala News on August 13, 2022 Rating: 5

அனைத்து கடவுளின் ஆசிர்வாதத்துடன் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியும் என்று நம்புகிறேன் ; ஜனாதிபதி(இராஜதுரை ஹஷான்)
அனைத்து கடவுளின் ஆசிர்வாதத்துடன் எதிர்வரும்

ஆண்டுக்குள் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியும் என்பதை முழுமையாக நம்புகிறேன்.சவால்களை வெற்றிக்கொள்ள அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரசிங்க தெரிவித்தார்.

கண்டி தலதா மாளிகை பெரஹரவின் நிறைவு நாளான நேற்று வெள்ளிக்கிழமை (12) கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்.

பெருமைமிக்க பொறுப்பினை நிறைவேற்றியுள்ளமைக்கு முதலில் கண்டி தியவடன நிலமேவிற்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

இரண்டு வருட காலத்திற்கு பின்னரே கண்டி தலதா மாளிகை பெரஹராவை வெகுவிமர்சையாக நடத்த முடிந்தது.கண்டி தலதா மாளிகை பெரஹரவில் சகல மதத்தவர்களும் கலந்துக்கொள்வார்கள்.இலங்கையின் சம்பிரதாயத்தின் ஒரு பகுதியாகவே கண்டி பெரஹர இடம்பெறுகிறது.நாட்டை பாதுகாப்பது பிரதான வேண்டுதலாக காணப்படுகிறது.பொருளாதார நெருக்கடியினை எதிர்க்கொண்டுள்ள சூழ்நிலையில் கண்டி பெரஹர இடம்பெறுவது கடவுளின் ஆசிர்வாதத்தை பெற்றுக்கொள்ளும் ஒரு வாய்ப்பாக கருதுகிறேன்.நெருக்கடியான சூழல் அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும்.இதனை விட சவால்மிக்க காலம் தோற்றம் பெற முடியும்.சகல சவால்கமில் இருந்தும் மீண்டெழ வேண்டும்.சிறந்த கொள்கையுடன் நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வதற்கு அனைவரும் தயாராக வேண்டும்.தலதா மாளிகை உட்பட நாட்டின் சகல மதங்களில் செயற்பாடுகளும் எமக்கு ஆசிர்வாதத்தை முழுமையாக வழங்கும் என்பதை நம்புகிறேன்.அனைத்து கடவுளின் ஆசிர்வாதத்துடன் எதிர்வரும் ஆண்டுக்குள் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியும் என்பதை முழுமையாக நம்புகிறேன்.சவால்களை வெற்றிக்கொள்ள அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றார்.
அனைத்து கடவுளின் ஆசிர்வாதத்துடன் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியும் என்று நம்புகிறேன் ; ஜனாதிபதி அனைத்து கடவுளின் ஆசிர்வாதத்துடன் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியும் என்று நம்புகிறேன் ; ஜனாதிபதி Reviewed by Madawala News on August 13, 2022 Rating: 5

VIDEO : பாலத்தில் இருந்து எரிபொருளுடன் விழுந்த டேங்கர்.இன்று (13ம் திகதி) அதிகாலை 2.00 மணியளவில் களனி, ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே மேம்பாலத்தில் இருந்து எரிபொருள்
டேங்கர் ஒன்று கீழே வீதியில் விழுந்துள்ளது.


எரிபொருள் கையிருப்பு வேறு ஒரு டேங்கர் வாகனத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சாரதிக்கு தூக்கம் ஏற்பட்டதால் விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்தின் போது பௌசர் சாரதி மாத்திரமே பயணித்துள்ளதுடன், காயமடைந்த சாரதி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பேலியகொட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
VIDEO : பாலத்தில் இருந்து எரிபொருளுடன் விழுந்த டேங்கர். VIDEO : பாலத்தில் இருந்து எரிபொருளுடன் விழுந்த டேங்கர். Reviewed by Madawala News on August 13, 2022 Rating: 5

திங்கள் முதல் அனைத்து அரச பாடசாலைகளும் வாரத்தின் 5 நாட்களுகம் வழமை போல இயங்கும்.எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் அனைத்து அரச பாடசாலைகளும் வாரத்தின் 5 நாட்களுகம் வழமை போல இயங்கும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது
திங்கள் முதல் அனைத்து அரச பாடசாலைகளும் வாரத்தின் 5 நாட்களுகம் வழமை போல இயங்கும். திங்கள் முதல் அனைத்து அரச பாடசாலைகளும் வாரத்தின் 5 நாட்களுகம் வழமை போல இயங்கும். Reviewed by Madawala News on August 13, 2022 Rating: 5

தாக்குதல் தாரி கைது ! சல்மான் ருஷ்டி குணமடைய நீண்டநாள் தேவைப்படலாம் !!
நிவ்ஜேர்ஸியின் ஃபேர்வீவ் பகுதியில் வசித்து வந்த 24 வயதான ஹாதி மதார் என்ற நபேரே சல்மான் ருஷ்டி மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. 


லெபனானைப் பூர்வீகமாகக் கொண்ட ஷியா இஸ்லாமியப் பிரிவைச் சேர்ந்த ஹாதி மதார் ஈரானிய இஸ்லாமியத் தலைவர்கள் மற்றும் ஹிஸ்புல்லாஹ் இயக்கத்தின் தீவிர ஆதரவாளர் என கூறப்படுகிறது.


தற்பொழுது சந்தேக நபரின் பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டுள்ள நிலையில் நிவ்யோர்க் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


மேலும் தாக்குதலாளி போலியான சாரதி அனுமதிப் பத்திரத்தைப் பயன்படுத்தியுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 


கத்திக் குத்திற்கு இலக்கான பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு பல மணிநேர சத்திர சிகிச்சை மேற்கொள்ளப் பட்டுள்ளதுடன் தற்பொழுது அவர் செயற்கைச் சுவாசக் கருவியின் (Vandilator) துணையில் உள்ளார். "சல்மான் ருஷ்டி தற்பொழுது பேசக் கூடிய நிலையில் இல்லை. அவரது ஒரு கண் பார்வை இழக்கப்படும் அபாயம் உள்ளது, கழுத்துப் பகுதியில் மேற்கொள்ளப் பட்ட தாக்குதலால் அவரது ஒரு கைக்கான நரம்புகள் துண்டிக்கப் பட்டிருந்தன, அவரது ஈரலிலும் காயங்கள் உள்ளன" என சல்மான் ருஷ்டிக்காக பேசவல்ல அவரது பிரதிநிதியான அன்ட்ரீவ் வைலி தெரிவித்துள்ளார். சல்மான் ருஷ்டிக்கு உயிராபத்து இல்லையானாலும் அவர் குணமடைய நீண்ட காலம் தேவைப்படலாம் என்று அவருக்கு உதவி புரிந்த மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


1988 ஆம் ஆண்டு பிரசுரமான "சாத்தானிய வசனங்கள்" எனும் உலகப் புகழ்பெற்ற நூலை எழுதியதற்காக 1989 ஆம் ஆண்டு ஈரானின் அப்போதைய தலைவர் ஆயதுல்லாஹ் குமைனியால் மரணதண்டனை பத்வா (மதத் தீர்ப்பு) விதிக்கப்பட்டது. 


சல்மான் ருஷ்டியைக் கொலை செய்பவருக்கு 3.3 மில்லியன் அமெரிக்க டாலர் கொலைச் சன்மானத்தை ஈரான் அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. 


1989 ஆம் ஆண்டு அப்போதைய தலைவர் ஆயதுல்லாஹ் குமைனியால் வழங்கப்பட்ட மரணதண்டனைப் பத்வாவை 2005 ஆம் ஆண்டு ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லாஹ் அலி காமேனி மீண்டும் உறுதி செய்திருந்தார். 


இந்தியாவின் மும்பையில் பிறந்த 75 வயதான சல்மான் ருஷ்டி உயிர் அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் இருந்து வெளியேறித் தலைமறைவாகவே வாழ்ந்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.


தாக்குதல் தாரி கைது ! சல்மான் ருஷ்டி குணமடைய நீண்டநாள் தேவைப்படலாம் !! தாக்குதல் தாரி கைது ! சல்மான் ருஷ்டி குணமடைய நீண்டநாள் தேவைப்படலாம் !! Reviewed by Madawala News on August 13, 2022 Rating: 5

வெளிநாடுகளில் உள்ள இலங்கை பணியாளர்கள் அனுப்பும் பணம் 50 வீதத்தால் குறைந்தது.கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், 2022 ஜனவரி
 முதல் ஜூலை வரையிலான காலப்பகுதியில், வெளிநாடுகளில் உள்ள இலங்கை பணியாளர்களின் பணவனுப்பல் 50% இனால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த 2021 ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலப்பகுதியில் வெளிநாடுகளில் உள்ள இலங்கை பணியாளர்கள் மொத்தமாக 3,777.6 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை நாட்டுக்கு அனுப்பியுள்ளனர்.

எனினும், இவ்வருடத்தின் ஜனவரி முதல் ஜூலை வரையான காலப்பகுதியில் 1,889.4 மில்லியன் அமெரிக்க டொலர்களை மாத்திரமே அனுப்பியுள்ளனர்.

மத்திய வங்கியின் தகவலுக்கமைய, வெளிநாட்டு பணியாளர்கள் இவ்வருடத்தின் ஜூலையில் 297.5 மில்லியன் அமெரிக்க டொலரையும், ஜூனில் 274 மில்லியன் அமெரிக்க டொலரையும், அதற்கு முந்தைய மாதத்தில் 304 மில்லியன் அமெரிக்க டொலரையும் அனுப்பியுள்ளனர்.
வெளிநாடுகளில் உள்ள இலங்கை பணியாளர்கள் அனுப்பும் பணம் 50 வீதத்தால் குறைந்தது. வெளிநாடுகளில் உள்ள இலங்கை பணியாளர்கள் அனுப்பும் பணம் 50 வீதத்தால் குறைந்தது. Reviewed by Madawala News on August 13, 2022 Rating: 5

கோட்டபாய ராஜபக்ஷ தமிழ் மக்களின் இனப்படுகொலைக்கான விளைவினை அனுபவிக்கின்றார்பாறுக் ஷிஹான்
முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தமிழ் மக்களின் இனப்படுகொலையை அரங்கேற்றிய முக்கிய காரண கர்த்தாவாக இருந்தமையினால் சொந்த நாட்டில் கால் பதிக்க முடியாமல் சிங்கள மக்களினால் துரத்தி அடிக்கப்பட்டு இன்று ஒவ்வொரு நாடாக தத்தளித்து திரிகின்றவர்களாக இருக்கின்றார்கள்.

எந்தவொரு நாட்டிலும் அவருக்கான புகழிடம் மறுக்கப்படுகின்ற நிலைமை தொடர்கின்றது.இனப்படுகொலைக்கான விளைவினை இன்று அவர் அனுபவிக்கின்றார் என அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் குறிப்பிட்டார்.

அம்பாறை மாவட்டம் வீரமுனையில் 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ஆம் திகதி இடம்பெற்ற படுகொலை தினத்தின் 32 ஆவது வருட நினைவேந்தல் நிகழ்வு வெள்ளிக்கிழமை(12) மாலை அகம் மனிதபிமான வள நிலையம்(AHRC) சூழலியல் நீதிக்கான மக்கள் கூடல் (PCCJ) அமைப்பின் ஏற்பாட்டில் வீரமுனை பகுதியில் அனுஷ்டிக்கப்பட்ட வேளை மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது


படுகொலைகளுக்கு காரணமானவர்கள் இந்த நாட்டில் இருந்து தப்பி ஓடி வருகின்றார்கள்.முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ கூட நாட்டில் கால் பதிக்க முடியாமல் சிங்கள மக்களினால் துரத்தி அடிக்கப்படுகின்ற துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.இன்று ஒவ்வொரு நாடாக தத்தளித்து திரிகின்றவர்களாக இருக்கின்றார்கள்.

எந்தவொரு நாட்டிலும் அவருக்கான புகழிடம் மறுக்கப்படுகின்ற நிலைமை தொடர்கின்றது.இதற்கெல்லாம் காரணம் எமது தமிழ் மக்களின் இனப்படுகொலையை அரங்கேற்றிய முக்கிய காரண கர்த்தாவாக இருந்தமையினால் ஆகும்.அதற்கான விளைவினை இன்று அவர் அனுபவிக்கின்றார்.அன்று முள்ளிவாய்க்காலில் இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.

அதனால் தான் இன்று சிங்கள மக்களும் பல சிரமங்களை எதிர்கொண்டுள்ளார்கள்.காலிமுகத்திடலில் இன்று சடலங்கள் கரையொதுங்கும் நிலை காணப்படுகின்றது.சிங்கள மக்கள் கூட இன்று பயந்து நடுங்குகின்ற துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளாகியுள்ளார்கள்.அன்று தமிழ் மக்கள் அனுபவித்த துயரத்தை தற்போது சிங்கள மக்கள் அனுபவிக்கின்ற துர்ப்பாக்கிய நிலைமை இந்த நாட்டில் உருவாகியுள்ளது.எனவே தான் தமிழையும் தமிழ் தேசியத்தையும் என்றும் நாம் நேசிக்கின்றவர்களாகவே இருக்கின்றோம் என்றார்.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின்   பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் ,காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில்,  உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள்,  பொதுமக்கள்  உயிரிழந்தவர்களின் உறவினர்கள், என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கடந்த 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ஆம் திகதி அம்பாறை மாவட்டம் வீரமுனையில் இடம்பெற்ற படுகொலை தினத்தின் 32 ஆவது வருட நினைவேந்தல் நிகழ்வு   வீரமுனையில் அனுஷ்டிக்கப்பட்டதுடன் வீரமுனையில் ஆலயத்திற்குள் புகுந்து இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 55 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில்  அவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்பதற்காக 32 ஆவது வருடம் தொடர்ச்சியாக நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

இந்த சதிகாரர்களை நாங்கள் மறக்கவும் மாட்டோம். மன்னிக்கவும் மாட்டோம்.எதிர்கால சந்ததிக்கு இதனை எடுத்தியம்பும் பிரகாரத்தில் எதிர்காலத்தில் இப்படிப்பட்ட சம்பவம் இடம்பெறக்கூடாது என்பதற்காகவும் நினைவேந்தலை நடத்தி வருகின்றோம் என கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

கோட்டபாய ராஜபக்ஷ தமிழ் மக்களின் இனப்படுகொலைக்கான விளைவினை அனுபவிக்கின்றார் கோட்டபாய ராஜபக்ஷ தமிழ் மக்களின் இனப்படுகொலைக்கான விளைவினை அனுபவிக்கின்றார் Reviewed by Madawala News on August 13, 2022 Rating: 5

பாதையை விட்டு தடம்புரண்ட ரயிலால் ஏற்பட்ட சேதம்.கொழும்பிலிருந்து நேற்றிரவு(12) 9:30 மணியளவில் புறப்பட்ட ரயில் திருகோணமலை சைனாபே ரயில் நிலயத்தில் இன்று(13) காலை 5.25 மணியளவில் பாதையை விட்டு தடம்புரண்டதனால் ஏற்பட்ட சேதமே இதுவாகும்.

Almashoora Madawala News
பாதையை விட்டு தடம்புரண்ட ரயிலால் ஏற்பட்ட சேதம். பாதையை விட்டு தடம்புரண்ட ரயிலால் ஏற்பட்ட சேதம். Reviewed by Madawala News on August 13, 2022 Rating: 5

டொயோட்டா கொரோல்லா மற்றும் யாரிஸ் வாகன உரிமையாளர்களுக்கு விஷேட அறிவிப்பு. #இலங்கைடொயோட்டா , கொரோலா மற்றும் யாரிஸ் வாகனங்களின் பயணிகள் பக்க ஏர்பேக்கை ( passenger side airbage ) மாற்றி புதிதாக பொருத்தி தர உரிமையாளர்களிடம் அறிவிப்பை டொயோட்டா லங்கா நிறுவனம் விடுத்துள்ளது.ஒரு சிறப்பு அறிவிப்பை வெளியிட்ட நிறுவனம், கரோல்லா 141 மற்றும் யாரிஸ் வாகனங்களில் முன்பக்க பயணிகள் ஏர்பேக் இன்ஃப்ளேட்டர்களை மாற்றுவதற்கான அறிவிப்பை தொடங்கியுள்ளது.


Airbag ஐ மாற்றுவதற்கு தகுதியுடைய வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை அருகில் உள்ள டொயோட்டா லங்கா சேவை மையத்தில் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மாற்றீடு இலவசமாக செய்யப்படும் என்று நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.


டொயோட்டா கொரோல்லா மற்றும் யாரிஸ் வாகன உரிமையாளர்களுக்கு விஷேட அறிவிப்பு. #இலங்கை டொயோட்டா கொரோல்லா மற்றும் யாரிஸ் வாகன உரிமையாளர்களுக்கு விஷேட அறிவிப்பு. #இலங்கை Reviewed by Madawala News on August 13, 2022 Rating: 5

ஞானசார தேரரின் ஒரு நாடு ஒரு சட்டம் செயலணியின் அறிக்கையை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை ; ரனில்ஞானசார தேரரின் ஒரு நாடு ஒரு சட்டம் செயலணியின்  அறிக்கையை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்க கூறி உள்ளார்.


கடந்த வாரம் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை சந்தித்து கலந்துரையாடிய ஜனாதிபதி இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 


ஞானசார தேரரின் ஒரு நாடு ஒரு சட்டம் செயலணியின்  அறிக்கையை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை எனவும் அதன் பரிந்துரைகளை செயற்படுத்த போவதில்லை எனவும் அவர் கூறி உள்ளார்.

ஞானசார தேரரின் ஒரு நாடு ஒரு சட்டம் செயலணியின் அறிக்கையை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை ; ரனில் ஞானசார தேரரின் ஒரு நாடு ஒரு சட்டம் செயலணியின் அறிக்கையை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை ; ரனில் Reviewed by Madawala News on August 13, 2022 Rating: 5

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க வேண்டும் என்பதே எனது பிரார்த்தனைநாடு தற்போது பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்த போதிலும் அந்த நெருக்கடியில் இருந்து நாடு நிச்சயம் மீண்டு வரும் என்று தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அதற்கு தலதா மற்றும் அனைத்து கடவுள்களின் ஆசிர்வாதம் பெரும் பலமாக அமையுமென சுட்டிக்காட்டினார்.


வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி ஶ்ரீ தலதா பெரஹரா விழா மற்றும் வருடாந்த நான்கு மகா விகாரைகளின் ஊர்வலம் வெற்றிகரமாக நிறைவடைந்ததை தொடர்ந்து, கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று (12) பிற்பகல் நடைபெற்ற வைபவத்திலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.


அனைத்து மக்களுக்கும் நல்வாழ்வைக் கொண்டுவரும் புதிய பொருளாதாரம் தொடர்பில் அனைவரும் புதிய நம்பிக்கைகளுடன் முன்னோக்கிச் செல்ல வேண்டுமெனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதன்போது குறிப்பிட்டார்.

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை Reviewed by Madawala News on August 12, 2022 Rating: 5
Powered by Blogger.