D.I.G தென்னகோன் மீது இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் - பொதுமக்களின் உதவியை கோரும் பொலிஸார்

 


மே 10ஆம் திகதி சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட 4 பேர் மீது

D.I.G தென்னகோன் மீது இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் - பொதுமக்களின் உதவியை கோரும் பொலிஸார் D.I.G தென்னகோன்  மீது இடம்பெற்ற தாக்குதல்  சம்பவம் - பொதுமக்களின் உதவியை கோரும் பொலிஸார் Reviewed by Madawala News on August 04, 2022 Rating: 5

அம்பாறை - மாளிகைக்காட்டில் சட்டவிரோதமாக சிலை வைக்கும் முயற்சி முறியடிப்பு !



மாளிகைக்காடு நிருபர்

இன்று காலை சமூக நல்லிணக்கத்தை குழப்பும் நோக்கில் காரைதீவை சேர்ந்த சிலரினால் முன்னெடுக்கப்பட்ட

அம்பாறை - மாளிகைக்காட்டில் சட்டவிரோதமாக சிலை வைக்கும் முயற்சி முறியடிப்பு !  அம்பாறை -  மாளிகைக்காட்டில் சட்டவிரோதமாக சிலை வைக்கும் முயற்சி முறியடிப்பு ! Reviewed by Madawala News on August 04, 2022 Rating: 5

நாம் பிச்சை கேட்டு எரிபொருள் கொள்வனவு செய்ய முடியாது



மின் உற்பத்தி செயற்திட்டம் ஒன்றை செயற்படுத்த வேண்டும் என அதுரலியே ரத்தன தேரர் குறிப்பிட்டார்.


மேலும் கருத்து வெளியிட்ட அவர் ,


எல்லா நாட்களும் நாம் பிச்சை கேட்டு எரிபொருள் கொள்வனவு செய்ய முடியாது.காற்று மற்றும் சூரிய சக்தியைபயன்படுத்தி எமக்கு தேவையான  மின்னினை உற்பத்தி செய்யும் திட்டத்தை செயற்படுத்த வேண்டும்.


தென் மாகாணத்தில் கூரைகளுக்கு மேல் சூரிய மின்களன்களை அமைப்பதால் மின் நெருக்கடியை தீர்க்கமுடியும்.50 வீதமான மின் தேவையை பூர்த்தி செய்யலாம்.


நாம் பிச்சை கேட்டு எரிபொருள் கொள்வனவு செய்ய முடியாது நாம் பிச்சை கேட்டு எரிபொருள் கொள்வனவு செய்ய முடியாது Reviewed by Madawala News on August 04, 2022 Rating: 5

கைது வேட்டை தொடர்ந்தால் பெரும் போராட்டம் வெடிக்கும் – அரசாங்கத்திற்கு சுமந்திரன் எச்சரிக்கை



மக்களின் தன்னெழுச்சிப் போராட்டங்களால் ஆட்சிப்பீடமேறிய புதிய அரசாங்கம், அந்தப் போராட்டங்களுக்குத் தலைமை தாங்கியவர்களை வேட்டையாடும் செயற்பாடுகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.


கொழும்பில் இன்று(4) நடைபெற்ற எதிரணிகளின் கூட்டு செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “புதிய அரசு மக்கள் மீது தொடர்ச்சியாக அடக்குமுறையைப் பிரயோகித்துக் கொண்டிருக்கின்றது. மக்கள் எழுச்சிப் போராட்டங்களால் நாட்டில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அந்த மாற்றங்களினாலேயே இந்த அரசு ஆட்சியைக் கைப்பற்றியது.


போராட்டக்காரர்களின் முதுகில் ஏறி ஆட்சியைக் கைப்பற்றியவர்கள், தற்போது அந்தப் போராட்டக்காரர்களையே வேட்டையாடத் தொடங்கியுள்ளமையை ஏற்றுக்கொள்ள முடியாது.


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் ஆற்றிய கொள்கை விளக்க உரையில், ஆரம்பத்தில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் வன்முறையற்றவையாகவும், அமைதியானவையாகவும் காணப்பட்டன என்று சான்றிதழ் வழங்கியிருந்தார்.


ஆனால், இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு ஆரம்பத்திலிருந்தே தலைமை தாங்கியவர்களைத் தற்போது அரசு கைதுசெய்து வருகின்றது.


நேற்றுக் கைதுசெய்யப்பட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் பிரபல தொழிற்சங்கவாதியாவார்.


அவரைக் கைதுசெய்ததை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இவ்வாறான கைதுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். ஏற்கனவே கைதுசெய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். போராடும் உரிமையை எவரும் தடுக்க முடியாது.“ எனத் தெரிவித்துள்ளார்.

கைது வேட்டை தொடர்ந்தால் பெரும் போராட்டம் வெடிக்கும் – அரசாங்கத்திற்கு சுமந்திரன் எச்சரிக்கை கைது வேட்டை தொடர்ந்தால் பெரும் போராட்டம் வெடிக்கும் – அரசாங்கத்திற்கு சுமந்திரன் எச்சரிக்கை Reviewed by Madawala News on August 04, 2022 Rating: 5

ஜனாதிபதிக்கு 2 மாதங்கள் கொடுத்து பார்ப்போம் ..



பதவி ஏற்ற உடனேயே ஜனாதிபதிக்கு எதிராக  கோ ஹோம் என கோஷம் எழுப்பாமல அவருக்கு  2 மாதங்கள் கொடுத்து பார்ப்போம்  என அதுரலிய ரத்தன தேரர் குறிப்பிட்டார்.

இந்த நாடு எமக்கு வேண்டும் எமது எதிர்கால சந்ததியினருக்கு வேண்டும். ஜனாதிபதியால் இரண்டு மாதங்களில் செய்ய முடியாவிட்டால் நாம் இந்த நாட்டை  எமது கைகளுக்கு எடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதிக்கு 2 மாதங்கள் கொடுத்து பார்ப்போம் .. ஜனாதிபதிக்கு 2 மாதங்கள் கொடுத்து பார்ப்போம் .. Reviewed by Madawala News on August 04, 2022 Rating: 5

I இன்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் குறைப்பு.



இன்று நள்ளிரவு முதல் குறைந்தபட்ச பேருந்து கட்டணம் ரூ.38ல் இருந்து ரூ.34 ஆக குறைக்கப்படும்.

சாதாரண பஸ் கட்டணம் 11.14% குறைக்கப்படும் என
- தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


I இன்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் குறைப்பு. I இன்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் குறைப்பு. Reviewed by Madawala News on August 04, 2022 Rating: 5

ஹட்டன் நகரின் சில கட்டிடங்களில் இருந்து வெளியேறுமாறு அவசர அறிவிப்பு.



ஹட்டன் நகரின் டிக்கோயா வீதியில் அமைந்துள்ள எம்.ஆர். நகர பகுதியில் இடிந்து விழும் கட்டிடங்கள் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளை நுவரெலியா மாவட்ட கட்டிட ஆய்வு நிறுவன புவியியலாளர்கள் ஆய்வு செய்தனர்.

அதனையடுத்து, சில கட்டிடங்களைச் சோதனையிட்டபோது, இதில் சில கட்டிடங்கள் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதை அவதானித்ததாக புவியியலாளர் புத்திக விஜேகோன் தெரிவித்தார். .

குறித்த பகுதியில் அமைந்துள்ள மிகவும் ஆபத்தான நான்கு மாடி கட்டிடத்தில் வெடிப்புகள் காணப்பட்டதாகவும், இதனால் அங்கிருந்தவர்களை வெளியேறுமாறு தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போதைய நிலவரப்படி, கட்டிடம் உடனடியாக இடிந்து விடுவதற்கான சாத்தியங்கள் இல்லையென உறுதி செய்யப்பட்டதாகவும், கட்டிடம் கட்டுவதற்கு பெறப்பட்ட அனுமதி மற்றும் திட்டம் மற்றும் முறை கோப்புகளை சரிபார்த்து, இறுதி முடிவு எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும், வாகனங்கள் செல்ல முடியாமல் இருந்த அப்பகுதியில் உள்ள காமினிபுர நுழைவு வீதியை திறப்பதன் மூலம் இலகு ரக வாகனங்களுக்கு மட்டும் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

க.கிஷாந்தன்
Thamilan
ஹட்டன் நகரின் சில கட்டிடங்களில் இருந்து வெளியேறுமாறு அவசர அறிவிப்பு. ஹட்டன் நகரின் சில கட்டிடங்களில் இருந்து வெளியேறுமாறு அவசர அறிவிப்பு. Reviewed by Madawala News on August 04, 2022 Rating: 5

தனியார் பஸ்கள் நள்ளிரவு முதல் சேவையில் இருந்து விலக தீர்மானம்



இன்று (04) நள்ளிரவு முதல் தனியார் பஸ் சேவையில் இருந்து விலகுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பஸ் சங்கங்கள் தெரிவிக்கின்றன. 


பேருந்துகளுக்கான டீசல் 40 லிட்டராக குறைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் பேருந்து சேவையில் இருந்து விலக முடிவு செய்யப்பட்டுள்ளது. 


இது தொடர்பில் தனியார் பஸ் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்னவிடம் வினவியபோது.


சங்கம் என்ற ரீதியில் இந்த விடயம் தொடர்பில் இன்னும் முடிவெடுக்கவில்லை எனவும் உள்ளூர் பஸ் சேவையில் இருந்து ஏற்கனவே விலகியுள்ளதாகவும் அவர் அங்கு தெரிவித்தார். 


இந்த விடயத்திற்கு அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தனியார் பஸ்கள் நள்ளிரவு முதல் சேவையில் இருந்து விலக தீர்மானம் தனியார் பஸ்கள் நள்ளிரவு முதல்  சேவையில் இருந்து விலக தீர்மானம் Reviewed by Madawala News on August 04, 2022 Rating: 5

விளக்கமறியலில் வைக்கபட்டுள்ள இஸ்மத் மௌலவி நாளை அடையாள அணிவகுப்பில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.



 போராட்டத்தில் ஈடுபட்ட சமூக ஊடக ஆர்வலர் பாதும் கர்னர் மற்றும் இஸ்மத் மௌலவி ஆகியோர் கொழும்பு

விளக்கமறியலில் வைக்கபட்டுள்ள இஸ்மத் மௌலவி நாளை அடையாள அணிவகுப்பில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். விளக்கமறியலில் வைக்கபட்டுள்ள இஸ்மத் மௌலவி நாளை அடையாள அணிவகுப்பில்  ஆஜர்படுத்தப்படவுள்ளார். Reviewed by Madawala News on August 04, 2022 Rating: 5

கடத்தல்காரர்களால் புதைக்கப்பட்ட சுமார் 14 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு.



 மன்னார் வெலிபர பகுதியில் கடத்தல்காரர்களால் புதைக்கப்பட்ட சுமார் 14 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.


வடமத்திய கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பலான தம்மென்னா மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த கஞ்சா பொதி கண்டுபிடிக்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.


இருபது பொட்டலங்களில் கவனமாக பொதி செய்யப்பட்டு கடத்தல்காரர்களால் புதைக்கப்பட்டிருந்த 49 கிலோ 380 கிராம் கேரள கஞ்சா கையிருப்பு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.


குறித்த கேரள கஞ்சா கையிருப்பு தொடர்பில் மேலதிக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.

கடத்தல்காரர்களால் புதைக்கப்பட்ட சுமார் 14 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு. கடத்தல்காரர்களால் புதைக்கப்பட்ட சுமார் 14 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு. Reviewed by Madawala News on August 04, 2022 Rating: 5

காமன்வெல்த் போட்டிக்கு இங்கிலாந்து சென்ற மற்றுமொரு இலங்கை வீரரும் எஸ்கேப்



இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில் நடைபெற்ற 22வது பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் இலங்கை அணியில் இருந்து மூன்றாவது
வீரர் காணாமல் போனதாகக் கூறப்படும் நிலையில், பொதுநலவாய விளையாட்டுப் பாதுகாப்புத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.


துணை செஃப் -டி-மிஷன் காமினி ஜெயசிங்கவின் கூற்றுப்படி,

இலங்கையின் மல்யுத்த அணியைச் சேர்ந்த ஒரு வீரர், முன்னதாக COVID-19 சோதனையில் positive ஆனதை அடுத்து காணாமல் போனதாக கூறப்படுகிறது.


காணாமல் போன மல்யுத்த வீரர் ஆகஸ்ட் 6 ஆம் தேதி மல்யுத்தப் போட்டியின் முதல் சுற்று போட்டியில் பங்கேற்க இருந்தார், ஆனால் கொரோனா சோதனைக்குப் பிறகு காமன்வெல்த் விளையாட்டு மருத்துவ மையத்திற்கு மாற்றப்பட்டார்.


அவர் இரண்டாவது ரேண்டம் டெஸ்டில் தேர்ச்சி பெற்ற பிறகு அவர் பின்னர் விடுவிக்கப்பட்டார், ஆனால் இலங்கை அணி நிர்வாகம் அவரை மையத்திலிருந்து அழைத்துச் செல்ல வந்தபோது, ​​தடகள வீரர் காணாமல் போனதை உறுதி செய்தனர்.

முன்னதாக, இலங்கை ஜூடோ வீரர் ஒருவரும், ஜூடோ அணியின் அதிகாரி ஒருவரும் காணாமல் போயுள்ளனர்.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இருந்து காணாமல் போன விளையாட்டு வீரர்கள் குறித்து பாதுகாப்புத் துறை விசாரணை நடத்தி வருகிறது.
காமன்வெல்த் போட்டிக்கு இங்கிலாந்து சென்ற மற்றுமொரு இலங்கை வீரரும் எஸ்கேப்  காமன்வெல்த் போட்டிக்கு  இங்கிலாந்து சென்ற மற்றுமொரு இலங்கை வீரரும் எஸ்கேப் Reviewed by Madawala News on August 04, 2022 Rating: 5

இன்றும் நாட்டின் பல பாகங்களில் கடும் மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு...



 தென் மேல் பருவப்பெயர்ச்சி வலுவடைந்து காணப்படுவதனால் நாட்டின் தென்மேற்கு காற் பகுதியிலும்

இன்றும் நாட்டின் பல பாகங்களில் கடும் மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு... இன்றும் நாட்டின் பல பாகங்களில் கடும் மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு... Reviewed by Madawala News on August 04, 2022 Rating: 5

ஜனாதிபதியிடம் அதாவுல்லாஹ்வின் தேசிய காங்கிரஸ் முன்வைத்த முன்மொழிவுகள்.



நூருல் ஹுதா உமர்
தேசிய காங்கிரஸ் தலைவரின் ஜனாதிபதியுடனான சந்திப்பு நாட்டின் சமூக பொருளாதார ஸ்தீரத்தன்மையை நிறுவும் நோக்கில் சர்வகட்சிகள் அடங்கிய தேசிய நிகழ்ச்சித்திட்டம் ஒன்றை உருவாக்குவற்கான முன்னெடுப்பில் செயற்பட்டுவரும் நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் குறித்த
செயற்திட்டத்திற்கு ஆதரவுகோரி தேசிய காங்கிரஸ் தலைவருக்கும் உத்தியாேகபூர்வமாக கடிதம் மூலம் அழைப்பு விடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி அவர்கள் கடந்த 02.08.2022 அன்று பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சி என்கின்ற வகையில் குறித்த தேசிய செயற்திட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக தேசிய காங்கிரஸ் தலைவருடன் நேரடி சந்திப்பினையும் ஏற்பாடு செய்திருந்தார்.

ஜனாதிபதியின் தேசிய சர்வகட்சி முன்னெடுப்பு அழைப்பிற்கான பதிலை கடிதம் முலம் ஜனாதிபதியிடம் கையளித்த தேசிய காங்கிரஸ் தலைவர், நாட்டில் தற்போது நிலவும் சமூக பொருளாதார நெருக்கடி நிலைமைகளை தீர்ப்பதற்கான சர்வகட்சி அரசாங்கத்தில் இணைந்து ஒத்துழைப்பு வழங்குதற்கு ஆதரவினை வெளிப்படுத்தியிருந்தார்.இச் சந்திப்பின்போது தேசிய காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம் அதாஉல்லா, அக்கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவர் ஏ. உதுமாலெப்பை அவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

நாடு எதிர் கொள்கின்ற சமகாலப் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு சகல இனங்களுக்குமான சமூக பொருளாதார அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வகையிலான புதிய அரசியலமைப்பினை
பாராளுமன்றில் சமர்ப்பிக்க வேண்டிய தருணம் இது என்பதன் அவசியத்தை தேசியகாங்கிரஸ் இச்சந்திப்பின் போது வலியுறுத்தியது. மேலும் 19வது திருத்தச்சட்டத்தை மீண்டும் அறிமுகம் செய்வதைவிட காலத்தின் தேவை கருதி இருபதாவது திருத்தத்தில் அவசியமான திருத்தங்களை மாத்திரம் கொண்டு
வருவதன் மூலம் தீர்வு காண்பதோடு புதிய அரசியலமைப்பினை அறிமுகம் செய்வதன்மூலம் நிரந்தர தீர்வினை காண்பதே அவசியமானது என்பதை தேசியகாங்கிரஸ் தலைவர் இச்சந்திப்பின்போது வலியுறுத்தனார்.

மேலும் புதிய அரசியலமைப்புக்கான செயற்பாடுகளை பூர்த்தி செய்யும்வரை நிறைவேற்று அதிகார ஜனாதிபதி
முறைமையினை முற்றாக நீக்குவது என்பது, நாட்டின் இறைமை, தேசிய பாதுகாப்பு மற்றும் சகல இனங்களுக்குமான ஜனநாயக காப்பீடு போன்ற விடயங்களை கருத்திற்கொள்கையில் தற்போது உசிதமானதல்ல என்பதையும் தேசிய காங்கிரஸ் தலைவர் இச்சந்திப்பின் போது ஜனாதிபதியிடம் தெளிவாகச் சுட்டிக்காட்டிருந்தார். மேலும் நாட்டின் சுதேச வளங்களை முறையாகப் பயன்படுத்தி போஷாக்குணவு உட்பட பால் உற்பத்தி மற்றும் குறைந்த விலையில் எரிபொருள் வினியோகம் போன்ற நீண்டகால பிரச்சினை களுக்கும் முறையான நிரந்தர திட்டங்களை அறிமுகம் செய்வதன் முக்கியத்துவம் பற்றியும் அதற்கான பொறிமுறை பற்றியும் தேசிய காங்கிரஸ் தரப்பு ஜனாதிபதி உடனான இச்சந்திப்பில் வலியுறுத்தயமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏற்கனவே பாராளுமன்றில் எதிர்க்ட்சிகள் 21வது திருத்தச்சட்டத்தினை சமர்ப்பித்துள்ள நிலையில்,
அரசாங்கம் கொண்டுவர உத்தசேித்துள்ள திருத்தசட்டத்திற்குரிய மாற்று திருத்த முன்மொழிவுகளை தேசிய காங்கிரஸ் ஏற்கனவே சமர்ப்பித்துள்ளது என்பதையும் தேசிய காங்கிரஸ் தலைவர் ஜனாதிபதிக்கு எடுத்துக் கூறினார். அதற்கு பதிலளித்த ஜனாதிபதி தேசிய காங்கிரஸின் குறித்த முன் மொழிவுகளை
பரிசீலிப்பதாகவும் எடுத்துரைத்தார். தேசிய காங்கிரஸ் ஏற்கனவே சமர்ப்பித்துள்ள திருத்த முன்மாெழிவுகள் புதிய அரசியலமைப்பு உருவாகும்வரை நிறைவேற்று அதிகார முறைமையினை தக்க வைப்பதற்கும், சகல இன மக்களுக்குமான முறையான வளப்பகிர்வு முறைமையினை அரசியலமைப்புச் சட்டத்தின் மூலமாக உறுதி செய்வதற்கும் உரிய திருத்தங்களை உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

UMAR LEBBE NOORUL HUTHA UMAR

ஜனாதிபதியிடம் அதாவுல்லாஹ்வின் தேசிய காங்கிரஸ் முன்வைத்த முன்மொழிவுகள். ஜனாதிபதியிடம் அதாவுல்லாஹ்வின் தேசிய காங்கிரஸ் முன்வைத்த  முன்மொழிவுகள். Reviewed by Madawala News on August 04, 2022 Rating: 5

ஆர்ப்பாட்டம் நடத்திய மக்கள் தற்போது நியாயமற்ற முறையில் குறிவைக்கப்பட்டு கைது செய்யப்படுவது தொடர்பில் ஜம்இய்யத்துல் உலமாவின் நிலைப்பாடு..



கடந்த காலங்களில் நமது நாட்டில் ஏற்பட்ட பொருளாதார
மற்றும் அரசியல் நெருக்கடிகளின் காரணமாக இந்நாட்டு மக்கள் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கோரியும், அரசியல் முறைமையில் மாற்றத்தை வேண்டியும் முழு நாட்டிலும் மக்கள் பல மாதங்களாக ஜனநாயக விழுமியங்களுக்கேற்ப தமது ஆதங்கங்களை வெளிப்படுத்தி வந்தனர். இதன் விளைவாக அரசியல் ரீதியாக சில மாற்றங்கள் ஏற்பட்டாலும் இன்னும் பல மாற்றங்கள் ஏற்பட வேண்டுமென்று நாட்டுப் பிரஜைகள் எதிர்பார்ப்பதோடு, பொருளாதார ரீதியான நெருக்கடிக்கு சரியான தீர்வைப் பெறாததன் காரணமாக தொடர்ந்து போராடியும் வருகின்றனர்.


இந்நிலையில் போராட்டத்தில் மும்முரமாக ஈடுபட்டவர்கள் நியாயமற்ற முறையில் குறிவைக்கப்பட்டு கைது செய்யப்படுகிறார்கள் என்று பௌத்த, கிறிஸ்தவ மற்றும் ஏனைய மதத் தலைவர்கள், சட்டத்தரணிகள், விசேட வைத்திய நிபுணர்கள், ஏராளமான சிவில், சமூக அமைப்புக்கள் மற்றும் வெளிநாட்டு மனித உரிமை அமைப்புக்கள் தமது அதிருப்தியையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.


தற்போது நமது நாடு எதிர்நோக்கியிருக்கும் பொருளாதார நெருக்கடியிலிருந்து வெளிவர சர்வதேசத்தின் உதவியும் ஒத்துழைப்பும் மிக அவசியமாக இருக்கின்ற இந்நிலையில் ஜனநாயக விழுமியங்களுக்கு மாற்றமாக அரச அதிகாரிகள் செயற்படுவதன் காரணமாக சர்வதேசத்தின் உதவியையும், ஒத்துழைப்பையும் நாம் இழக்க நேரிடலாம்.
ஆகவே, இந்நாட்டின் அரச அதிகாரிகள் மற்றும் பொறுப்பில் உள்ளவர்கள் ஜனநாயக விழுமியங்களையும் சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட மனித அடிப்படை உரிமைகளையும் பேணி நேர்மையாகவும் நியாயமாகவும் நடந்து கொள்ளுமாறும், இப்போராட்டத்திற்குக் காரணமாக இருக்கின்ற அனைத்து விடயங்களுக்கும் வெகு சீக்கிரமாக தீர்வு வழங்குமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வினயமாக வேண்டிக் கொள்கின்றது.


நம் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான இந்நிலை அவசரமாக நீங்கி, நம் தாய்நாட்டுக்கும் முழு உலகுக்கும் சுபீட்சமும் அபிவிருத்தியும் ஏற்பட வேண்மென்றும், இந்நாட்டில் நீதியும் நியாயமும் நிலைநாட்டப்பட வேண்டுமென்றும் சிறப்பான இம்முஹர்ரம் மாதத்தில் எல்லாம் வல்ல அல்லாஹுதஆலாவிடம் நாம் பிரார்த்தனை செய்கின்றோம்.

அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
ஆர்ப்பாட்டம் நடத்திய மக்கள் தற்போது நியாயமற்ற முறையில் குறிவைக்கப்பட்டு கைது செய்யப்படுவது தொடர்பில் ஜம்இய்யத்துல் உலமாவின் நிலைப்பாடு..  ஆர்ப்பாட்டம் நடத்திய மக்கள் தற்போது நியாயமற்ற முறையில் குறிவைக்கப்பட்டு கைது செய்யப்படுவது தொடர்பில் ஜம்இய்யத்துல் உலமாவின் நிலைப்பாடு.. Reviewed by Madawala News on August 04, 2022 Rating: 5

டீசல் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டதை அடுத்து, பஸ் கட்டணங்களில் திருத்தம்.



இன்று (04) நள்ளிரவு தொடக்கம் பஸ் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சமீபத்தில் டீசல் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது குறித்த விலைத் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது
டீசல் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டதை அடுத்து, பஸ் கட்டணங்களில் திருத்தம். டீசல் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டதை அடுத்து, பஸ் கட்டணங்களில் திருத்தம். Reviewed by Madawala News on August 04, 2022 Rating: 5

மாட்டிறைச்சியின் அதிகூடிய கட்டுப்பாட்டு விலையாக 1600 ரூபா நிர்ணயம்.



பாறுக் ஷிஹான் / அஸ்லம் எஸ்.மௌலானா
கல்முனை மாநகராட்சி ஆள்புல எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் 01 கிலோ கிராம் மாட்டிறைச்சியின் அதிகூடிய விலையாக 1600 ரூபா கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் அசாதாரண சூழ்நிலையை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுஇ கல்முனை மாநகர பிரதேசங்களில் ஒரு கிலோ கிராம் மாட்டிறைச்சி 2200 ரூபாவுக்கு மேல் விற்கப்படுவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளைக் கவனத்தில் கொண்டு மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் எதிர்வரும்   சனிக்கிழமை (06)தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் இந்த நிர்ணய விலையை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக கல்முனை மாநகர சபைக்குட்பட்ட மாட்டிறைச்சி விற்பனையாளர்கள்  புதன்கிழமை (03) மாநகர முதல்வரினால் மாநகர சபைக்கு நேரடியாக அழைக்கப்பட்டு, இறைச்சி வியாபாரத்தின்போது அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் செலவீனங்கள் குறித்து கேட்டறியப்பட்டு, அவற்றுக்குரிய தீர்வுகள் முன்மொழியப்பட்ட நிலையில், அவர்களது இணக்கத்துடன் மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் 01 கிலோ கிராம் மாட்டிறைச்சி 1600 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட வேண்டும் எனவும் அதில் ஆகக்கூடியது 200 கிராம் மாத்திரமே முள் அடங்கியிருத்தல் வேண்டும் எனவும் அனைத்து இறைச்சிக் கடைகளிலும் டிஜிட்டல் தராசு பயன்படுத்தப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனை மீறும் மாட்டிறைச்சி வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் மாட்டிறைச்சிக் கடைக்கான வியாபார உரிமம் இரத்துச் செய்யப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, இறைச்சிக் கடைக்காரர்களுக்கு மாடுகளை விற்பனை செய்வோர் மாநகர சபையில் தம்மைப் பதிவு செய்து, அனுமதிப் பத்திரத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் ஒரு கிலோ கிராம் இறைச்சியை ஆகக்கூடியது 1300 ரூபாப்படி வழங்க வேண்டும் எனவும் முதல்வரினால் உத்தரவிடப்பட்டிருக்கிறது.

இதனை மீறும் மாடு வியாபாரிகள் பொலிஸார் மூலம் கைது செய்யப்பட்டு, கடுமையான சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவதுடன் மாடுகளும் பறிமுதல் செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாட்டிறைச்சி வியாபாரிகளுடனான இக்கலந்துரையாடலை ஆரம்பித்து வைத்து முதல்வர் ஏ.எம்.றகீப்   கருத்துரைக்கையில், அம்பாறை மாவட்டத்தின் ஏனைய பல பிரதேசங்களில் மாட்டிறைச்சியானது 1200 ரூபா, 1400 ரூபா தொடக்கம் 1600 ரூபா வரை விற்கப்படுகின்றபோது ஏன் கல்முனையில் மாத்திரம் 2200 ரூபாவுக்கு மேல் அநியாயமாக விற்பனை செய்கின்றீர்கள் என்று விசனம் தெரிவித்தார்.

மிகவும் கஷ்டமான இக்கால கட்டத்தில் எமது மக்களின் உணவுத் தேவையை நிறைவு செய்வதில் இவ்வளவு கொள்ளை இலாபத்தை ஈட்டுவது மனச்சாட்சிக்கு விரோதமாகத் தெரியவில்லையா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

நாட்டு நிலைமையை உங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு நாளுக்கு நாள் உங்கள் இஷ்டம் போல் விலையைக் கூட்டிக்கொண்டு போவதை இனியும் அனுமதிக்க முடியாது. இறைச்சிக்கடைகளை இழுத்து மூட வேண்டியேற்பட்டாலும் பரவாயில்லை கொள்ளை இலாபத்தில் இறைச்சி விற்பதை அனுமதிக்க மாட்டேன் என்றும் தனது நிலைப்பாட்டை உறுதியாக வெளிப்படுத்தினார்.

மேலும், பொது மக்களின் தொடர்ச்சியான முறைப்பாடுகளையடுத்து இவ்விடயம் தொடர்பில் பொலிஸ் மற்றும் நுகர்வோர் அதிகார சபையின் உயர் அதிகாரிங்களுடனும் சில உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களுடனும் பேசிவிட்டே உங்களை இங்கு அழைத்திருக்கிறேன்.

ஆகையினால், மக்கள் நலன் கருதி இறைச்சியை ஓரளவாவது நியாயமான விலையில் விற்பனை செய்ய நீங்கள் முன்வர வேண்டும் என மாட்டிறைச்சி வியாபாரிகளிடம் இதன்போது முதல்வர் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.

இது தொடர்பாக மாட்டிறைச்சி வியாபாரிகள் சிலர் விளக்கமளிக்கையில், நாங்கள் மாடுகளை கொள்வனவு செய்வது தொடக்கம் அவற்றை அறுத்து விற்பனை செய்யும் வரையிலான பல்வேறுபட்ட செலவீனங்கள் பற்றி எடுத்துரைத்தனர். நாட்டு நிலைமை காரணமாக எல்லா செலவுகளும் அதிகரித்துள்ள நிலையில் எங்களுக்குக் கட்டுமான விலையில்தானே நாங்கள் வியாபாரம் செய்ய முடியும் என வாதிட்டனர்.

குறிப்பாக மாடு விற்பவர்கள், எங்களுக்கு ஒரு கிலோ கிராம் இறைச்சியை முள்ளுடன் சேர்த்து 1700 ரூபாவுக்கே தருகிறார்கள் எனவும் இதர செலவுகளை சேர்த்துப் பார்க்கும்போது இரண்டாயிரம் ரூபாவுக்கு குறைவாக எங்களால் இறைச்சியை விற்க முடியாதிருக்கிறது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

அத்துடன் நுகர்வோர் எல்லோரும் தனி இறைச்சிதான் கேட்கிறார்கள், நாங்கள் முள்ளுடன் சேர்த்து 1700 ரூபாவுக்கு வாங்குவதை எப்படி குறைந்த விலையில் தனி இறைச்சியாக கொடுக்க முடியும்? இவைதான் எங்களுடைய முக்கிய பிரச்சினைகளாகும் என்று மேலும் சுட்டிக்காட்டிய வியாபாரிகள், இவற்றுக்கு தீர்வு பெற்றுத்தர முடியுமாக இருந்தால் நாங்கள் விலையை குறைப்பது குறித்து யோசிக்க முடியும் என்று முதல்வரிடம் தெரிவித்தனர்.

நுகர்வோரின் விலைவாசி குறித்து சிந்திக்காமல் நீங்கள் அதிக விலை கொடுத்து மாடுகளை வாங்குவதற்கு தயாராக இருப்பதால்தான் மாடு வியாபாரிகள், அவர்கள் நினைத்த விலைக்கு கொள்ளை இலாபம் வைத்து உங்களுக்கு விற்கின்றனர் என்று குறிப்பிட்ட முதல்வர், எவ்வாறாயினும் அவர்கள் விற்கின்ற 1700 ரூபாவை 1300 ரூபாவாக குறைத்துத் தருவதற்கு நான் உடனடி நடவடிக்கை எடுக்கின்றேன் எனவும் நீங்கள் நுகர்வோருக்கு ஆகக்கூடியது 1500 ரூபா அல்லது 1600 ரூபாவுக்காவது விற்பதற்கு முன்வர வேண்டுமெனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.

எங்களுக்கு மாடுகள், கிலோவொன்று 1300 ரூபாப்படி கிடைக்குமாயின், செலவுகள் போக சிறிது இலாபம் வைத்து 300 கிராமளவில் முள்ளுடன் சேர்த்த இறைச்சியை கிலோவோன்று 1600 ரூபாவுக்கு விற்பதற்கு நாங்கள் தயார் என மாட்டிறைச்சி வியாபாரிகள் இதன்போது இணக்கம் தெரிவித்தனர்,

ஒரு கிலோவுக்கு, 300 கிராம் முள் என்பது அதிகமாகையினால் 200 கிராம் முள் சேர்ப்பதே ஓரளவு நியாயம் என எடுத்துரைத்த முதல்வர், இறைச்சி 800 கிராமும் முள் 200 கிராமும் என்றவாறு கண்டிப்பாக டிஜிட்டல் தராசில் நிறுக்கப்பட வேண்டும் என பணிப்புரை விடுத்தார்.

இவற்றை அடிப்படையாகக் கொண்டே மேற்படி தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
மாட்டிறைச்சியின் அதிகூடிய கட்டுப்பாட்டு விலையாக 1600 ரூபா நிர்ணயம். மாட்டிறைச்சியின்  அதிகூடிய கட்டுப்பாட்டு விலையாக 1600 ரூபா நிர்ணயம். Reviewed by Madawala News on August 04, 2022 Rating: 5

ஆதம்லெவ்வை நியாஸ் உயர் நீதிமன்ற சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம்.



அட்டாளைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த ஆதம்லெவ்வை
 நியாஸ் சட்டத்தரணியாக உயர் நீதிமன்ற நீதியரசர்கள் முன்னிலையில் அண்மையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலயம், அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை ஆகியவற்றின் பழைய மாணவரான இவர், சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தராகவும் பணியாற்றி வருகின்றார்.

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் (சமூகவியல்) விசேட பட்டத்தினையும், இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சட்டமாணி பட்டத்தினையும் பெற்றுள்ள இவர், பல்வேறு அமைப்புக்களில் முக்கிய பதவிகளை வகித்து, பல்வேறு சமூகப் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றார்.

இவர், அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஐ.எல்.ஆதம்லெவ்வை, எம்.கதீஜா உம்மா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வராவார்
ஆதம்லெவ்வை நியாஸ் உயர் நீதிமன்ற சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம். ஆதம்லெவ்வை நியாஸ் உயர் நீதிமன்ற  சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம். Reviewed by Madawala News on August 04, 2022 Rating: 5

2022 ஆம் ஆண்டு CBSE 12th( உயர்தரம்), CBSE 10th (சாதாரண தரம்) பரீட்சைகளில் குவைத் வாழ் இலங்கை மாணவர்கள் அசத்தல் சாதனை.



2022 ஆம் ஆண்டு CBSE 12th( உயர்தரம்), CBSE 10th (சாதாரண தரம்) பரீட்சைகளில் குவைத் வாழ் இலங்கை மாணவர்களின் சாதனைகள்.

இந்திய அரசாங்கத்தின் Central Board of Secondary Education (CBSE) மூலம் 2022 ஆம் ஆண்டுக்கான பன்னிரெண்டாம் மற்றும் பத்தாம் வகுப்புக்களுக்கான பரீட்சை பெறுபேறுகள் அண்மையில் வெளிவந்துள்ளன.

குவைத்தில் கல்வி பயின்ற மாணவி ஹாஜரா முஹம்மத் ஆஷிக் உயர்தரம் விஞ்ஞான பிரிவில் 95.6% புள்ளிகளைப் பெற்று மருத்துவக் கல்லூரிக்கு தகைமை பெறுகிறார். மாணவி தீபா அல்-பழ்லி விஞ்ஞான பிரிவில் 68.2% புள்ளிகளும், மாணவி ஆயிஷா முஹம்மத் ஷீராஸ் உயர்தரம் மனிதநேயம் பிரிவில் 92.2% புள்ளிகளையும் பெற்று பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெறுகிறார்கள்.

சாதாரண தரப் பரீட்சையில் மாணவன் உமர் ஷிராஸ் 85% புள்ளிகளையும், மாணவன் மனாஸ் வஜுஹுதீன் 84% புள்ளிகளையும் பெற்று உயர்தரம் விஞ்ஞான பிரிவுக்கு தகுதி பெறுகிறார்கள்.

இம்முறை மொத்தம் 14,44,341 மாணவர்கள் CBSE 12th( உயர்தரம்) பரீட்சைக்கு பதிவு செய்திருந்தனர். இதில் 14,35,366 மாணவர்கள் பரீட்சை எழுதி 13 இலட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அதே போல் மொத்தம் 21,09,208 மாணவர்கள் CBSE 10th (சாதாரண தரம்) பதிவு செய்திருந்தனர். அவர்களில் 20,93,978 பேர் பரீட்சை எழுதி 19,76,668 மாணவர்கள் சித்தி எய்துள்ளனர்.

மொத்தம் 44,000 வெளிநாட்டு மாணவர்கள் இம்முறை CBSE பரீட்சைகளுக்கு பதிவாகியுள்ளனர். இதில் 12 ஆம் வகுப்புக்கு 18,834 மாணவர்களும், 10 ஆம் வகுப்பிற்கு 25,095 மாணவர்களும் அடங்குவர்.

இந்த மாணவச் செல்வங்கள் அனைவரையும் குவைத் வாழ் இலங்கை சமூகம் வாழ்த்தி மகிழ்வதுடன் அவர்களது கல்விப் பயணம் தொடரவும் வளமான எதிர்காலத்துக்காகவும் பிரார்த்திக்கிறது.

ஹரீஸ் ஸாலிஹ்
2022 ஆம் ஆண்டு CBSE 12th( உயர்தரம்), CBSE 10th (சாதாரண தரம்) பரீட்சைகளில் குவைத் வாழ் இலங்கை மாணவர்கள் அசத்தல் சாதனை. 2022 ஆம் ஆண்டு CBSE 12th( உயர்தரம்), CBSE 10th (சாதாரண தரம்) பரீட்சைகளில் குவைத் வாழ் இலங்கை மாணவர்கள் அசத்தல் சாதனை. Reviewed by Madawala News on August 04, 2022 Rating: 5

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு



தனக்கு ஆதரவாக கூட்டமைப்பின் சிலர்வாக்களித்திருந்தமையினை அனைவர் முன்னிலையிலும் பகிரங்கப்படுத்தினார் ரணில்!


இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.


ஜூலை மாதத்தில் சுமார் 43,000 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்கா விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார்.


இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தங்கும் சுற்றுலா ஹோட்டல்களின் மின் பிறப்பாக்கிகள் உள்ளிட்ட பிற தேவைகளுக்கான எரிபொருளை வழங்கும் முறை தற்போது நடைமுறையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு Reviewed by Madawala News on August 04, 2022 Rating: 5

எலிசபெத் மகாராணியிடம் இருந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு வாழ்த்து மடல். 👑 🇬🇧 🇱🇰



ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பியுள்ள இரண்டாம் எலிசபெத் மகாராணி, இரு நாடுகளுக்கும் இடையிலான அன்பான நட்புறவைத் தொடர விரும்புவதாகவும், ஜனாதிபதிக்கு தனது நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.


எலிசபெத் மகாராணியிடம் இருந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு வாழ்த்து மடல். 👑 🇬🇧 🇱🇰 எலிசபெத் மகாராணியிடம் இருந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு வாழ்த்து மடல்.  👑 🇬🇧 🇱🇰 Reviewed by Madawala News on August 04, 2022 Rating: 5

ஜனாதிபதியின் அழைப்புக்கு மக்கள் காங்கிரஸ் சாதகமான பதில்.



ஜனாதிபதியின் அழைப்புக்கு மக்கள் காங்கிரஸ் சாதகமான பதில்!

நாட்டின் தற்போதைய நெருக்கடியான சூழலில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து, பொதுவான வேலைத்திட்டத்தின் கீழ் செயற்படுவதற்கு ஜனாதிபதியினால் விடுக்கப்பட்ட அழைப்புக்கு சாதகமான பதிலை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வழங்கியுள்ளதாக, கட்சியின் செயலாளர் எஸ்.சுபைர்தீன் தெரிவித்துள்ளார்.

ஊடகப்பிரிவு-
ஜனாதிபதியின் அழைப்புக்கு மக்கள் காங்கிரஸ் சாதகமான பதில். ஜனாதிபதியின் அழைப்புக்கு மக்கள் காங்கிரஸ் சாதகமான பதில். Reviewed by Madawala News on August 04, 2022 Rating: 5

இந்திய அரசுடனான ஒப்பந்தத்தின் கீழ் நாடு பூராக 600 வீடுகள்.. 436 வீடுகள் பூரணம்.



இந்திய உதவியின் கீழ் முன்மாதிரிக் கிராம வீட்டுத் திட்டம் 4 திறத்தல்.


• ஏனைய கிராமங்களின் வீடமைப்புத் திட்ட வேலைகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் ஆலோசனை.


இந்திய அரசின் உதவியின் கீழ் நாடு பூராகவும் முன்மாதிரிக் கிராம வீட்டுத் திட்டத்தின் கீழ் இதுவரை 04 முன் மாதிரிக் கிராமங்களின் வேலைகள் நிறைவடைந்துள்ளன. அந்த முன்மாதிரிக்.கிராமங்களை மக்களுக்கு கையளிப்பதற்கான சகல வேலைகளும் தயார் நிலையில் உள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.


இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே அவர்களின் பங்கேற்புடன் முதல் 2 மாதிரிக் கிராமங்களும் திறக்கப்படும்.


இதன்படி அனுராதபுர.மாவட்டத்தில் கிழக்கு நுவரகம் பிரதேச செயலகப் பிரிவில் 24 வீடுகளைக் கொண்ட கிரிக்குளம் கிராமம் மற்றும் பதுளை மாவட்டத்தில் லுணுகல பிரதேச செயலகப் பிரிவில் 24 வீடுகளைக் கொண்ட அக்கிரிய கிராமத்தையும் பொது மக்களின் பாவனைக்காக கையளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.


இந்த மாதிரிக் கிராமத்தில் நீர், மின்சாரம், உள் நுழையும் வீதி மற்றும் உள் வீதிகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளன.


இந்திய அரசின் உதவித் திட்டத்துடன் இந்த மாதிரிக் கிராம வீட்டுத் திட்டம் நாடு பூராகவும் 25 மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அங்கு ஒரு மாவட்டத்திற்கு 24 வீடுகளைக் கொண்ட மாதிரிக் கிராமம் நிர்மாணிக்கப்படும்.


இந்திய அரசுடனான ஒப்பந்தத்தின் படி இந்த வீட்டுத் திட்டத்தின் கீழ் நாடு பூராக 600 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. அதற்கமைய தற்போது 436 வீடுகளின் நிர்மாண வேலைகள் முடிவடைந்துள்ளன.


இந்திய அரசு முழு வேலைத் திட்டத்திற்கும் 300 மில்லியன் ரூபா வழங்கியுள்ளது. அந்த பணத்தில் 281.535 மில்லியன் ரூபா இது வரை வழங்கப்பட்டுள்ளது. நிறைவடையும் கட்டத்தில் உள்ள முன் மாதிரிக் கிராமங்களின் வீடுகளுக்காக 18.465 மில்லியன் ரூபா கிடைப்பதற்கு இருப்பதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.


இங்கு ஒரு வீட்டை நிர்மாணிப்பதற்கு பயனாளிக்கு 5 இலட்சம் ரூபா உதவித் தொகை மற்றும் திறைசேரியின் ஊடான கொடுப்பனவாக ஒரு இலட்சம் ரூபாவும் மீள செலுத்தப்படாத கொடுப்பனவாக வழங்கப்படும் என்றும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு மேலும் தெரிவித்தது.


நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையும் ஒன்றிணைந்து இந்த வேலைத் திட்டத்தை செயற்படுத்துகிறது.


இந்த முன்மாதிரிக் கிராமத்தின் கீழ் ஏனைய கிராமங்களின் வீடமைப்பையும் துரிதமாகப் பூர்த்தி செய்து மக்களுக்கு கையளிப்பதற்கு துரித நடவடிக்கையை எடுக்குமாறும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறித்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.


முனீரா அபூபக்கர்

2022.08.03
இந்திய அரசுடனான ஒப்பந்தத்தின் கீழ் நாடு பூராக 600 வீடுகள்.. 436 வீடுகள் பூரணம். இந்திய அரசுடனான ஒப்பந்தத்தின் கீழ் நாடு பூராக 600 வீடுகள்..  436 வீடுகள் பூரணம். Reviewed by Madawala News on August 04, 2022 Rating: 5

மின்சார விநியோகம், எரிபொருள் விநியோகம், சுகாதார சேவைகள் அத்தியவசியம் ; ஜனாதிபதி வெளியிட்ட விஷேட வர்த்தமானி



மின்சார விநியோகம், எரிபொருள் விநியோகம் மற்றும் சுகாதார சேவைகளுடன் இணைக்கப்பட்ட அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.


மின்சார விநியோகம், எரிபொருள் விநியோகம், சுகாதார சேவைகள் அத்தியவசியம் ; ஜனாதிபதி வெளியிட்ட விஷேட வர்த்தமானி மின்சார விநியோகம், எரிபொருள் விநியோகம், சுகாதார சேவைகள் அத்தியவசியம் ; ஜனாதிபதி வெளியிட்ட விஷேட வர்த்தமானி Reviewed by Madawala News on August 03, 2022 Rating: 5

தனக்கு ஆதரவாக கூட்டமைப்பின் சிலர்வாக்களித்திருந்தமையினை அனைவர் முன்னிலையிலும் பகிரங்கப்படுத்தினார் ரணில்!



தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.


ஜனாதிபதி செயலகத்தில் இன்று(புதன்கிழமை) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.


சர்வ கட்சி அரசாங்கத்தினை அமைக்கும் முயற்சியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஈடுபட்டுள்ள நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.


இதன்போது தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் பேசப்பட்டுள்ளது.


குறிப்பாக தமிழ் மக்களின் நலன்சார்ந்த 10 முக்கிய விடயங்களை நிறைவேற்றுமாறு கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளனர்.


இதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணக்கம் வெளியிட்டுள்ளதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.


இதன்போது கருத்து வெளியிட்ட சிறிதரன், ஜனாதிபதி தெரிவின் போது கூட்டமைப்பினர் டலஸ் அழகப்பெருவிற்கு வாக்களித்திருந்தமையினை சுட்டிக்காட்டியிருந்தார்.


எனினும் இதனை பொருட்படுத்தாமல் தங்களது கோரிக்கையினை நிறைவேற்றவுள்ளமையினை வரவேற்பதாகவும் அவர் தெரிவித்தார். இதனை எம்.ஏ சுமந்திரன் மொழி பெயர்த்திருந்தார்.


இதன்போது பதில் வழங்கிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனக்கு ஆதரவாக வாக்களித்திருந்ததாக குறிப்பிட்டார்.


இதன்போது, குறித்த கூட்டத்தில் பங்கேற்றிருந்த கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மௌனம் காத்திருந்தனர்.


அத்துடன், ஜனாதிபதியின் தேசிய வேலைத்திட்டத்தின் அடிப்படையிலேயே, சர்வ கட்சி அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதா இல்லையா என்பதனை தீர்மானிக்க முடியும் என கூட்டமைப்பினர் ஜனாதிபதியிடம் குறிப்பிட்டிருந்தனர்.


குறித்த சந்திப்பில் பிரதமர் தினேஸ் குணவர்த்தனவும் பங்கேற்றிருந்தார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.


கூட்டமைப்பினர் ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ள முக்கிய கோரிக்கைகள் வருமாறு,


நீண்டகாலமாக சிறையிலுள்ள தமிழ் அரசியல்கைதிகளில் ஒருதொகுதியினரை மூன்று மாத காலத்திற்குள் முதற்கட்டமாக விடுதலை செய்வது.


அம்பாறை மாவட்டம், கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை 1991ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமான அறிவித்தலின் பிரகாரம் பிரதேச செயலகமாக தரமுயர்த்துவதுடன் கணக்காளர் ஒருவரையும் நியமித்தல்.


வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் தனிப்பட்ட காணிகளிலும், பொதுப்பயன்பாட்டுக்குரிய அரச காணிகளிலும் அடாத்தாக முகாமிட்டிருக்கும் இராணுவத்தினருக்கு அக்காணிகளை நிரந்தரமாக வழங்கும் முகமாக, நில அளவைத் திணக்களத்தினால் மேற்கொள்ளப்படும் அளவீட்டுப் பணிகளை உடனடியாக நிறுத்துதல்.


தொல்பொருள் திணைக்களம், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை, வனவளத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், கனியவளத் திணைக்களம் உள்ளிட்டவற்றால், வடக்கு, கிழக்கு தமிழர் நிலங்களில் மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்புக்களை உடன் நிறுத்துதல்.


பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடனடியாக நீக்குதல் மற்றும் அதற்கான நல்லெண்ண சமிக்ஞைகளை முதலில் வெளிப்படுத்தல், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் செயலகத்தால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்த உதவுதல்.


வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியை நிலைநிறுத்தவும், உண்மையைக் கண்டறிவதற்கும் உடனடி நடவடிக்கை எடுத்தல்.


வடக்கு, கிழக்கிலுள்ள தனியார் காணிகளிலிருந்து படையினரை வெளியேற்றி, தமது சொந்த நாட்டில் இன்னும் அகதிகளாக உள்ள எமது மக்கள் தமது பூர்வீக நிலங்களில் குடியேற வழிவகை செய்தல்.


கடந்த எண்பது வருடங்களுக்கு மேலாக இந்த நாட்டில் புரையோடிப்போயுள்ள தமிழர்களின் உரிமைக்கான அரசியல் தீர்வுக்காக, காலதாமதமற்ற உடனடிப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தல்.“உள்ளிட்டவற்றினையே முன்வைத்திருந்தனர்.

தனக்கு ஆதரவாக கூட்டமைப்பின் சிலர்வாக்களித்திருந்தமையினை அனைவர் முன்னிலையிலும் பகிரங்கப்படுத்தினார் ரணில்! தனக்கு ஆதரவாக கூட்டமைப்பின் சிலர்வாக்களித்திருந்தமையினை அனைவர் முன்னிலையிலும் பகிரங்கப்படுத்தினார் ரணில்! Reviewed by Madawala News on August 03, 2022 Rating: 5

இருண்ட இலங்கைக்குள் ஒளிந்திருக்காது, ஔிச்சுடரை ஏற்றுவதற்காகத்தான் புதிய ஜனாதிபதி தெரிவாகியுள்ளார். I



ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரை இலங்கை இலட்சியத்தில் ஔியேற்றியுள்ளது.
அமைச்சர் ஹாபிஸ் நசீர்

(ஊடகப்பிரிவு)

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கொள்கை பிரகடனவுரை, எதிர்கால இலங்கையின் இலட்சியத்தில் ஔியேற்றியுள்ளதாக சுற்றாடல்துறை அமைச்சர் நஸீர் அஹ்மட் தெரிவித்துள்ளார்.

புதிய ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை தொடர்பில் அமைச்சர் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பெரும்பாலான மக்கள் பிரதிநிதிகளின் ஆதரவுடன் தெரிவு செய்யப்பட்டவர் புதிய ஜனாதிபதி. இத்தெரிவில், ஜனநாயகத்துக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.


இதேபோன்றுதான்,அவரது உரையும் ஜனநாயகத்தை உயிரூட்டுவதாக இருந்தது. இலங்கையர் என்ற உணர்வில் சிந்தித்து, சவால்களை எதிர்கொள்ள ஜனாதிபதி அழைத்திருப்பது, எல்லோரும் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியை கட்டியெழுப்பவே!இதில், அரசியல் அனுகூலங்கள் கைவிடப்பட வேண்டும் என்பதே அவரது எதிர்பார்ப்பு.

இருண்ட இலங்கைக்குள் ஒளிந்திருக்காது,ஒரு ஔிச்சுடரை ஏற்றுவதற்காகத்தான் புதிய ஜனாதிபதி தெரிவாகியுள்ளார்.

பொருளாதார பிரச்சினைக்கு மட்டுமல்ல பல வருடங்களாக கிடப்பில் கிடக்கும் சிறுபான்மை சமூகங்களின் அரசியல் அபிலாஷைகளுக்கும் அவரது உரையில் தீர்வு இருப்பதாகவே நான் உணர்கிறேன்.

சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்படாவிடின்,முழு எம்பிக்கள் மட்டுமல்ல நாடே மூழ்குமென்ற அவரது எச்சரிக்கையை எவரும் அலட்சியம் செய்யக்கூடாது.பல முன்னுதாரங்களை குறிப்பிட்டு அவர் வழங்கிய விளக்கவுரை பொருளாதார வல்லுநர்கள், அரசியல் அனுபவசாலிகளாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. .

எடுத்தெறிந்த போக்கில் எல்லாவற்றையும் எதிர்க்கும் அரசியல் கலாசாரத்தால் வந்த விளைவையே ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

சமூகமயப்படுத்தபட்ட
ஏற்றுமதிப் பொருளாதாரத்தை ஊக்குவிப்பது மனையியல் பொருளாதாதரத்துக்கு அடித்தளமிடும். இந்த வியூகமே, எதிர்கால பொருளாதாரத்தில் விஷேடம் பெறவுள்ளது. ஐரோப்பிய நாடுகளின் காலடியிலுள்ள பொருளாதார பலத்தை, இந்து சமுத்திர தேசத்தின் காலடியில் கொண்டுவரும் அவரது திட்டத்துக்கு பிராந்திய நாடுகளின் பங்களிப்பும் கோரப்பட்டிருக்கிறது.

இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் ஒத்துழைப்புடன் மீண்டெழ இலங்கை முயற்சிப்பது இதற்காகவே!இறக்குமதியை இறுக்கி, ஏற்றுமதியை உயர்த்தும் உன்னத இலட்சியத்துக்காகவே சர்வகட்சி அரசாங்கத்துக்கு முயற்சிக்கப்படுகிறது. எனவே, ஜனாதிபதியின் உரையிலுள்ள யதார்த்தங்களை சிறுபான்மை சமூகத்தின் பிரதிநிதியென்ற வகையில், தன்னால் பாராட்டாமல் இருக்க முடியாதென்றும் அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
இருண்ட இலங்கைக்குள் ஒளிந்திருக்காது, ஔிச்சுடரை ஏற்றுவதற்காகத்தான் புதிய ஜனாதிபதி தெரிவாகியுள்ளார். I இருண்ட இலங்கைக்குள் ஒளிந்திருக்காது,  ஔிச்சுடரை ஏற்றுவதற்காகத்தான் புதிய ஜனாதிபதி தெரிவாகியுள்ளார். I Reviewed by Madawala News on August 03, 2022 Rating: 5
Powered by Blogger.