இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான முழுமையான ஆதரவையும் ஒத்துழைப்பையும் இந்தியா வழங்கும் ; நிதி அமைச்சர் உறுதியளித்தார்.

பிரித்தானியாவில் உணவு, எரிசக்தி மற்றும் எரிபொருள்
காலி முகத்திடல் போராட்ட குழு தற்போது அதன் உண்மை நோக்கத்தை இழந்துள்ளதாகவும், நாட்டில் அராஜகத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ள சில குண்டர்கள் மட்டுமே தற்போது அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் விமல் வீரவன்ச பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
போராட்டக்காரர்கள் அவர்களின் உண்மையான நோக்கங்களைக் கொண்டிருந்தால், IMF பிரதிநிதிகள் இங்கு வருகை தரும் போது அவர்கள் ஜனாதிபதி செயலகத்தின் நுழைவாயிலைத் தடுத்திருக்க மாட்டார்கள் என்றும் அவர் கூறியுள்ளார் .
மேலும் காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிஸ் ட்ரக் வண்டிகள் மூலம் அகற்றும் நடவடிக்கை அமெரிக்க தூதுவரின் தலையீட்டினால் வாபஸ் பெறப்பட்டதாகவும் ,காலி முகத்திடலில் போராட்டக்காரர்கள் அகற்றப்பட்டால் அது சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையை பாதிக்கும் என அமெரிக்க தூதுவர் குறிப்பிட்ட அமைச்சர் ஒருவரிடம் கூறியதாக விமல் வீரவன்ச பாராளுமன்றத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.
உதிரிபாகங்கள் தட்டுப்பாடு காரணமாக இலங்கை போக்குவரத்து திணைக்களம் கடும் நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாக கூறப்படுகிறது.
இதுவரை நல்ல நிலையில் உள்ள ! 1000 க்கும் அதிகமான CTB பஸ்கள் சேவையில் ஈடுபடுத்த முடியாத நிலை தோன்றி உள்ளது.
பஸ்களுக்கு தேவையான டயர்கள் மற்றும் பெட்டரி போன்ற பல உதிரிப்பாகங்களுக்கு கூட இலங்கை போக்குவரத்து திணைக்களத்தில் பற்றாக்குறை நிலவுவதாக கூறப்பட்டது.
வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்கு செல்ல அனுமதி கோரும் மருத்துவ பணியார்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..
தினம் 25 முதல் 30 மருத்துவ பணியாளர்கள் வெளிநாடு செல்ல அனுமதி கோரி விண்ணப்பித்து வருவதாக கூறப்பட்டது.
சிம்பாப்வேயில் மோசமடைந்திருக்கும் பணவீக்கத்தால் வாங்கும் திறன் வீழ்ச்சி கண்டிருக்கும் நிலையில் அமெரிக்க டொலரில் சம்பளம் தரும்படி கோரி சுகாதார பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து தாதியர், மருத்துவர், மருந்தாளர்கள் மற்றும் கதிரியக்க நிபுணர்கள் மற்றும் ஏனைய மருத்துவ தொழில்முறையாளர்கள் கடந்த திங்கட்கிழமை வேலைக்கு திரும்பவில்லை. இந்த வேலை நிறுத்தம் பெரும் வெற்றி பெற்றிருப்பதாக ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். மிகைப்பணவீக்கத்தால் சிம்பாப்வே பொருளாதாரம் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டிருப்பதோடு அந்நாட்டின் நாணய மதிப்பு வேகமாகக் குறைந்து வருகிறது.
நாட்டின் பணவீக்கம் 132 வீதம் உயர்ந்திருக்கும் சூழலில் அதிக நிலையான நாணயமாக இருக்கும் அமெரிக்க டொலரில் சம்பளம் தரும்படியான கோரிக்கை சிம்பாப்வேயில் அதிகரித்துள்ளது.
மிகைப்பணவீக்கத்தால் சிம்பாப்வேயின் உள்ளூர் நாணயம் மதிப்பிழந்ததை அடுத்து 2009 இல் அந்த நாடு அமெரிக்க டொலருக்கு மாறியது. எனினும் 2019 இல் அந்த நாடு மீண்டும் சொந்த நாணயத்துக்கு மாறியபோதும், அமெரிக்க டொலருக்கு நிகரான அதன் பெறுமதியை தக்கவைத்துக்கொள்ள தவறியுள்ளது.
தொழிலாளர் பிரச்சினை விரைவாக தீர்க்கப்படாவிட்டால் உயிர்கள் பறிபோகலாம் என்று சிம்பாப்வே தாதியர் சங்கத்தின் செயலாளர் நாயகம் எனொக் டொங்கோ எச்சரித்துள்ளார்.