ஐ.தே.க தலைவர் ரணில் விக்ரமசிங்ஹ சற்றுமுன் இலங்கையின் புதிய பிரதமராக நியமிக்கப் பட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு வலியுறுத்தி நாளை (வெள்ளிக்கிழமை) ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக மற்றுமொரு பாரிய தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடந்த திங்கட்கிழமை பதவியை இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து நாடு தழுவிய தொழிற்சங்க போராட்டம் நேற்றைய தினம் கைவிடப்பட்டதாக அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
இந்த நிலையில், நேரத்தை வீணடிக்காமல் உடனடியாக பதவியை இராஜினாமா செய்யுமாறு சமரசிங்க ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டின் மறுசீரமைப்புச் செயற்பாடுகளைத் தொடங்குவதற்கு இந்நாட்டில் உள்ள பல அரசியல் இயக்கங்கள் தமது வேலைத்திட்டங்களை முன்வைத்துள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, நாளை பிற்பகல் 2.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக மாபெரும் தொழிற்சங்கப் போராட்டமொன்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதி தனது பதவியை இராஜினாமா செய்து மௌனமாக இருக்காவிட்டால் இந்த பாரிய தொழிற்சங்க நடவடிக்கையை பாரிய மக்கள் போராட்டமாக மாற்றுவோம் எனவும் சமரசிங்க எச்சரித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க
தேவையான போது துப்பாக்கிச் சூடு நடத்த பொலிஸாருக்கு அறிவுறுத்தல்
தேவையான போது துப்பாக்கிச் சூடு நடத்துவது உட்பட சட்டத்தை பயன்படுத்துவதற்கு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தியுள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலவரக்காரர்கள் அல்லது வன்முறைக் குழுக்களால் உயிர் இழப்பு அல்லது கொள்ளைச் சம்பவங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் அவர்கள் வாகனங்களை நிறுத்தி சோதனையிடும் நடவடிக்கையை தடுப்பதற்காக அதிகபட்ச நடவடிக்கைகளை எடுக்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரச அல்லது தனியார் சொத்துக்களுக்கு சேதம், கொள்ளை, உயிர் இழப்பு அல்லது பாரிய காயங்களைத் தடுப்பதற்கு அதிகபட்ச நடவடிக்கைகளை எடுக்குமாறு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அன்புடையீர்,
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி