VIDEO : ஊரடங்கு சட்டம் அமுலில் இருப்பதால் ( Gota go கம ) ஆர்ப்பாட்ட இடத்திலிருந்து அனைவரும் வெளியேறவும் ; போலீசார் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு.

எதிர்க்கட்சித் தலைவர் பிரதமர் பதவியை ஏற்கத் தயாராக இருந்தால், அவருக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், நாடாளுமன்றத்தில் உள்ள சுயேச்சைக் குழுவும் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி பதவி விலகினால் மாத்திரமே தாம் பிரதமர் பதவியை ஏற்பேன் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhon மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (11) காலை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்றது.
இதன்போது இலங்கை தற்போது எதிர்கொள்ளும் நிலைமை தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதோடு, இந்தப்பேரழிவு தருணத்தில் இலங்கைக்கு சகோதரத்துவத்தின் பிரகாரம் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சீனத் தூதுவரிடம் கோரிக்கை விடுத்தார்.
வெளிப்படைத்தன்மையுடன் நாட்டை ஆட்சி செய்தல்,இலஞ்சம்,ஊழல் மற்றும் அடக்குமுறைகள் ஒழிப்பு என்பனவே தனது நிர்வாகத்தில் முதன்மையான அம்சமாக இருக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் இதன் போது தெரிவித்தார்.
இலங்கையை தற்போதைய நிலையில் இருந்து மீட்கும் முகமாக சீனாவின் பெருந்தன்மையான ஆதரவு மிகவும் அவசியமானது என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இது தொடர்பில் தலையிடுமாறும் தூதுவரிடம் அவர் கோரிக்கையும் விடுத்தார்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவும் கலந்து கொண்டார்.
தனது கட்சி உறுப்பினர்களின் உயிர்களுக்கும் அவர்களது உடமைகளுக்கும் பாதுகாப்பு வழங்கமுடியாத ஜனாதிபதி எதற்கு ?
தனது கட்சி உறுப்பினர்களின் உயிர்களுக்கும் அவர்களது உடமைகளுக்கும் பாதுகாப்பு வழங்கமுடியாத ஜனாதிபதி எதற்கு ? என எதிர்கட்சி பிரதான அமைப்பாளர் லக்ஸ்மன் கிரியல்ல கேள்வி எழுப்பினார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர் ,
தற்போது ஆளும் கட்சி உறுப்பினர்களே பாதுகாப்பு இல்லாத நிலை தோன்றியுள்ளதாக அவர்களே அவர்கள் வாயால் கூறுகிறார்கள். தங்கள் உயிர்களுக்கு உடமைகளுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாத ஜனாதிபதி இந்த நாட்டிற்கு எதற்கு என அவர்கள் கேட்கிறார்கள் என எதிர்கட்சி பிரதான அமைப்பாளர் லக்ஸ்மன் கிரியல்ல கூறினார்..
அதிபர் ஆசிரியர்கள் மறு அறிவித்தல் வரை கடமைக்கு வரமாட்டார்கள் என்பதுடன், இன்றைய அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் குறித்து சமயோசித்தமாக செயற்படுமாறும் கேட்டுக்கொள்கின்றோம் என இலங்கை ஆசிரியர் சங்க உப தலைவர் ஆ. தீபன் திலீசன் தெரிவித்தார்.
இது தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், காலிமுகத்திடல் போராட்டம் மீதான அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டு, இதன் மூலம் முழுமையான இராணுவ ஆட்சியை உருவாக்கும் நோக்கிலேயே கோத்தபாய அரசாங்கம் செயற்படுகிறது.
தமது ஆட்சிக்கான அதிகார போதையில், சிங்கள மக்களுக்கு பொய்களைக் கூறிய ஆட்சியாளர்கள் - தமிழினத்தை இனவழிப்புச் செய்து இன்று தன் சொந்த இனத்தின் ஜனநாயக போராட்டங்களையே நசுக்க முனைந்து, பாரிய வன்முறைச் சம்பவங்களை உருவாக்கியிருக்கிறார்கள்.
கட்டுமீறிய இன்றைய சூழலில், இந்த கொலைகார, ஊழல், அடக்குமுறை ஆட்சியாளர்கள் மக்கள் மட்டத்திலிருந்து அகற்றப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.
எனவே ஜனாதிபதி கோட்டாபய உள்ளிட்ட அரசாங்கம் அகற்றப்படும் வரையில் அனைத்து தொழிற்சங்கங்களும் வேலை நிறுத்தத்தை தொடரவுள்ளோம்.
இதன்படி அனைத்து ஆசிரியர்கள், அதிபர்கள் மே 10 ஆம் திகதி முதல் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளோம் என்பதையும் - பணிப்பகிஸ்கரிப்பின் போது, விடுமுறை தொடர்பாக விண்ணப்பிக்கவோ அல்லது விடுப்பு குறித்து அறிவிக்கவோ வேண்டியதில்லை என்பதையும் அறியத்தருகின்றோம்.
எனவே அதிபர் ஆசிரியர்கள் மறு அறிவித்தல் வரை கடமைக்கு வரமாட்டார்கள் என்பதுடன், இன்றைய அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் குறித்து சமயோசித்தமாக செயற்படுமாறும் கேட்டுக்கொள்கின்றோம் என்றுள்ளது.