ஞானசார தேரர் சுகவீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி.



4 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரர் சுகவீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஞானசார தேரரை பார்வையிட வந்த ராவணா பலய அமைப்பின் செயலாளர் நாயகம் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஞானசார தேரர் இதற்கு முன்னரும் நோய் நிலைமையால் பீடிக்கப்பட்டிருந்ததாகவும் அதற்கான சிகிச்சைக்காகவே சிறைச்சாலை வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டதாகவும் சத்தாதிஸ்ஸ தேரர் குறிப்பிட்டுள்ளார்.
ஞானசார தேரர் சுகவீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி. ஞானசார தேரர் சுகவீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி. Reviewed by Madawala News on March 29, 2024 Rating: 5

VIDEO : இனவாதத்தை தூண்டும் அம்பிட்டிய சுமணரத்ன தேரரையும் கைது செய்யவேண்டும் ; வியாழேந்திரன் கோரிக்கை



 மட்டக்களப்பு மங்களாராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்யவேண்டும் என வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த காலத்தில் வியாழேந்திரன் உண்ணாவிரதம் இருந்தபோது , மட்டக்களப்பு மங்களாராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் வியாழேந்திரனுடன் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அவருடன் உண்ணாவிரதம் இருந்த நிலையில் அம்பிட்டிய தேரருக்கு ஆதரவாக வியாழேந்திரனும் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்,


தமிழர்கள் தொடர்பாகவும் தமிழர்களது சமயம், கலாசாரம் தொடர்பாகவும் மிக மோசமான கருத்துக்களை வெளியிட்டு வந்த ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டுள்ள 04 வருட கடூழிய சிறைத்தண்டனை வரவேற்கக்கூடிய ஒன்று என்றும் வியாழேந்திரன் கூறினார் .


 இவ்வாறான  நிலையில்  , மட்டக்களப்பிலும் இனவாத போக்குடைய அம்பிட்டிய தேரர் இருக்கின்றார் என்றும், அவர்களுக்கும் இது போன்று தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என தனக்கு ஆதரவு வழங்கிய  தேரரை கைது செய்ய வேண்டுமென  இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவிததுள்ளமை  தமிழ் மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIDEO : இனவாதத்தை தூண்டும் அம்பிட்டிய சுமணரத்ன தேரரையும் கைது செய்யவேண்டும் ; வியாழேந்திரன் கோரிக்கை VIDEO : இனவாதத்தை தூண்டும் அம்பிட்டிய சுமணரத்ன தேரரையும்  கைது செய்யவேண்டும் ;  வியாழேந்திரன் கோரிக்கை Reviewed by Madawala News on March 29, 2024 Rating: 5

கணவர், மகள் மற்றும் மகன் வெளியில் சென்றிருந்த வேளை வீட்டில் இருந்த பெண் தாக்கப்பட்டு கொலை .



 கடுவெல (Kaduwela), கொத்தலாவல, பட்டியாவத்த வீதியிலுள்ள வீட்டில் இரத்தக் காயங்களுடன் பெண்ணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அஜந்தா என்ற 51 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


அவரது கணவர், மகள் மற்றும் மகன் ஆகியோர் காலையில் வேலைக்குச் சென்ற நிலையில், வீட்டில் பெண் தனியாக இருந்துள்ளார். இவரும் கடுவெல நகரில் பணிபுரிந்து வருகின்றார்.

வழமையாக காலை 11.00 மணியளவில் வேலைக்கு செல்வதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பெண்ணின் தலையின் பின்புறத்தில் ஒரு பெரிய காயம் மற்றும் அவரது முகத்தில் கீறல்கள் இருந்தன. அவர் அணிந்திருந்த தங்க ஆபரணமும் காணாமல் போனதையும், வீட்டில் எதையோ தேடியதற்கான தடயங்களும் கிடைத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.


இதனால், வீட்டில் திருடுவதற்காக புகுந்த யாரேனும் ஒருவர் தாக்கியதமையால் இந்த மரணம் நிகழ்ந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.


இந்த நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கணவர், மகள் மற்றும் மகன் வெளியில் சென்றிருந்த வேளை வீட்டில் இருந்த பெண் தாக்கப்பட்டு கொலை .  கணவர், மகள் மற்றும் மகன் வெளியில் சென்றிருந்த வேளை வீட்டில் இருந்த பெண் தாக்கப்பட்டு கொலை . Reviewed by Madawala News on March 29, 2024 Rating: 5

சனத் நிஷாந்தவின் மனைவிக்கு பொதுஜன பெரமுனவில் பதவி.



முன்னாள் இராஜாங்க அமைச்சர் மறைந்த சனத் நிஷாந்தவின் மனைவி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஒழுக்காற்று சபைக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.


சனத் நிஷாந்தவின் மனைவியான திருமதி சாமரி பெரேராவும் சட்டத்தரணியாக கடமையாற்றுகின்றார்.


பொதுஜன பெரமுனவின்  ஒழுக்காற்று சபையின் தலைவர்களாக ஜனாதிபதியின் சட்டத்தரணிகள் இருவர் நியமிக்கப்படவுள்ளனர்.

தற்போது ஒழுக்காற்று சபைக்கு ஏழு உறுப்பினர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

சனத் நிஷாந்தவின் மனைவிக்கு பொதுஜன பெரமுனவில் பதவி. சனத் நிஷாந்தவின் மனைவிக்கு  பொதுஜன பெரமுனவில் பதவி. Reviewed by Madawala News on March 29, 2024 Rating: 5

உடலால் இணைந்த இரட்டைச் சகோதரிகள் அபி மற்றும் பிரிட்னி தாயாக போவதாக தெரிவிப்பு



உடலால் இணைந்த இரட்டையர்கள் ஆன அபி மற்றும் பிரிட்னி என்ற அமெரிக்க இரட்டைச் சகோதரிகள் இருவரும் தாயாக மாறத் தயாராக இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


இந்த இரண்டு சகோதரிகளுக்கும் இரண்டு தலைகள் மற்றும் இரண்டு இதயங்கள் உள்ளன, ஆனால் ஒரே ஒரு உடல் மட்டுமே.

34 வயதான அபி மற்றும் பிரிட்னி ஆகியோர் தொழில் ரீதியாக ஆசிரியர்கள்.


Tv ரியாலிட்டி ஷோ மூலம் அபி மற்றும் பிரிட்னி அமெரிக்கர்கள் மற்றும் உலகம் முழுவதும் பிரபலமடைந்தனர்.


அப்பியும் பிரிட்னியும் திருமணம் செய்து கொண்ட செய்தியும் தற்போது பகிரங்கமாகியுள்ளது,


ஆனால் அவர்கள் 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டதாக டெய்லிமெயில் இணையதளம் தெரிவித்துள்ளது.

அப்பி மற்றும் பிரிட்னியை திருமணம் முடித்தவர் 33 வயதான ஜோஷ் பவுலிங் எனும் அமெரிக்க இராணுவ அதிகாரி ஆவார் .

உடலால் இணைந்த இரட்டைச் சகோதரிகள் அபி மற்றும் பிரிட்னி தாயாக போவதாக தெரிவிப்பு உடலால் இணைந்த இரட்டைச் சகோதரிகள் அபி மற்றும் பிரிட்னி தாயாக போவதாக தெரிவிப்பு Reviewed by Madawala News on March 29, 2024 Rating: 5

தெற்கில் பாதாள உலக சந்தேக நபர்களின் 10 கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான சொத்துக்கள் கைப்பற்றப்பட்டன.



 காலி, அம்பலாங்கொட மற்றும் அஹுங்கல்ல பிரதேசங்களில் பாதாள உலக சந்தேக நபர்களின் 10 கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான சொத்துக்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.


இவற்றில் 2  மீன்பிடி படகுகள், முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் நிலம் உள்ளடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


இந்த விசாரணைகள் ஆபரேஷன் யுக்திய  கீழ் நடத்தப்படுகின்றன.

தெற்கில் பாதாள உலக சந்தேக நபர்களின் 10 கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான சொத்துக்கள் கைப்பற்றப்பட்டன. தெற்கில்  பாதாள உலக சந்தேக நபர்களின் 10 கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான சொத்துக்கள் கைப்பற்றப்பட்டன. Reviewed by Madawala News on March 29, 2024 Rating: 5

மூச்சகரவண்டி சாரதி ஒருவரிடம் 500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தருக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.



500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் ஒருவருக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் பிரகாரம், பொலிஸ் அதிகாரிக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


போக்குவரத்து விதிமீறல் தொடர்பான சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளாமல் இருக்க முச்சக்கர வண்டி சாரதியிடம் இருந்து பொலிஸ் உத்தியோகத்தர் 500 ரூபாவை இலஞ்சமாகப் பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

போக்குவரத்து டிஐஜியின் அறிவிப்பின் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டது, அதன் பிறகு நான்கு குற்றச்சாட்டுகளுடன் வழக்கு பதிவு செய்யப்பட்டது.


நான்கு குற்றச்சாட்டுக்களிலும் பொலிஸ் சார்ஜன்ட் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு நான்கு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், நீதிமன்றம் ரூ. 20,000 அபராதமாக
விதிக்கப்படும்.
மூச்சகரவண்டி சாரதி ஒருவரிடம் 500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தருக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மூச்சகரவண்டி சாரதி ஒருவரிடம் 500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தருக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. Reviewed by Madawala News on March 29, 2024 Rating: 5

பாராளுமன்ற உறுப்பினர்கள் விளையாடும் பார்லிமெண்ட் பிரீமியர் லீக் கிரிக்கட் போட்டி இன்று நடைபெறுகிறது.



நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்கேற்புடன், பார்லிமெண்ட் பிரீமியர் லீக் தொடர் பெலவத்த புத்ததாஸ விளையாட்டரங்கில் இன்று இடம்பெறவுள்ளது.


இந்த தொடரில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மேலதிகமாக நாடாளுமன்ற பணிக்குழாமினரும் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இதேவேளை, எதிர்வரும் முதலாம் திகதியும், இரண்டாம் திகதியும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்றம் கூடவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.


இதற்கமைய, எதிர்வரும் முதலாம் திகதி ஆயுர்வேத சட்டத்தின் கீழான கட்டளைகள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.


அதேநேரம், இரண்டாம் திகதி பரேட் திருத்தச் சட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதமும், கொழும்பு துறைமுக பொருளாதார ஆணைக்குழு சட்டம் தொடர்பான விவாதமும் இடம்பெறவுள்ளன


பாராளுமன்ற உறுப்பினர்கள் விளையாடும் பார்லிமெண்ட் பிரீமியர் லீக் கிரிக்கட் போட்டி இன்று நடைபெறுகிறது. பாராளுமன்ற உறுப்பினர்கள் விளையாடும் பார்லிமெண்ட் பிரீமியர்  லீக் கிரிக்கட் போட்டி இன்று நடைபெறுகிறது. Reviewed by Madawala News on March 29, 2024 Rating: 5

நாட்டில் கடந்த வருடத்தை விட எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டது.



கடந்த வருடத்தை விட எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கையின் தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு திட்டத்தின் பணிப்பாளர் டொக்டர் ஜானகி விதானபத்திரன தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில் 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் பாதுகாப்பற்ற பாலுறவில் ஈடுபடுபவர்கள் அதிக ஆபத்தில் உள்ளனர் என்று அவர் கூறினார்.


கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட டொக்டர் ஜானகி விதானபத்திரன இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டில் கடந்த வருடத்தை விட எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டது. நாட்டில் கடந்த வருடத்தை விட எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டது. Reviewed by Madawala News on March 29, 2024 Rating: 5

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார் ..





பரந்த கூட்டணியின் முன்மொழிவின் பேரில் ஜனாதிபதி வேட்புமனுவை ஏற்றுக்கொள்வதற்கான

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார் .. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார் .. Reviewed by Madawala News on March 29, 2024 Rating: 5

காசாவில் இஸ்ரேலின் தாக்குதல் உக்கிரம்; உதவிக்கு அழைப்பு விடுப்பு



காசாவில் பஞ்சம் ஒன்று ஏற்படும் அச்சுறுத்தல் அதிகரித்து போர் நிறுத்தம் ஒன்றுக்கான சர்வதேச அழுத்தத்திற்கு மத்தியிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் தீவிரம் அடைந்துள்ளன.


முற்றுகையில் உள்ள காசாவுக்கு உதவிகள் தேவைப்படுவதோடு அந்தப் பகுதியில் வானில் இருந்து தொடர்ந்து உதவிகளை போடுவதாக அமெரிக்கா கூறியுள்ளது. எனினும் அவ்வாறு விழும் உதவிகளை பெறும் முயற்சியில் 18 பேர் கொல்லப்பட்டிருக்கும் நிலையில், வானில் இருந்து உதவிகளை போடுவதை நிறுத்தும்படி ஹமாஸ் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.


இந்நிலையில் இன்னும் இஸ்ரேலிய தரைப்படை நுழையாத பகுதியாக இருக்கும் தெற்கு காசாவின் ரபாவில் இஸ்ரேலின் வான் தாக்குதலை அடுத்து இரவு வானில் பாரிய தீப்பிழப்பு வெளியானது. இங்கு 1.5 மில்லியன் மக்கள் நிரம்பி வழிவதோடு, பெரும்பாலானவர்கள் காசாவின் தெற்கு விளிம்பு வரை இடம்பெயர்ந்து எகிப்துடனான எல்லையில் இருக்கும் இந்தப் பகுதியை அடைந்துள்ளனர்.


வடக்கு காசாவில் உள்ள காசா நகரிலும் இஸ்ரேலின் உக்கிர தாக்குதல்களால் நேற்று கறும்புகை வெளியான வண்ணம் இருந்தது. இங்குள்ள காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல் ஷிபாவில் இஸ்ரேலியப் படை ஒரு வாரத்துக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கடந்த புதன்கிழமை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 66 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதில் ரபா மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் கொல்லப்பட்ட மூவரும் உள்ளடங்குகின்றனர்.



அதேபோன்று காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 76 பேர் கொல்லப்பட்டு மேலும் 102 பேர் காயமடைந்திருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது. இதன்படி ஆறு மாதங்களாக நீடிக்கும் போரில் அங்கு கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 32,490 ஆக அதிகரித்துள்ளது.


காசாவில் அவசர போர் நிறுத்தம் ஒன்றை வலியுறுத்தி பாதுகாப்புச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இரண்டு நாட்கள் கடந்திருந்தபோதும் மோதல்களில் எந்தத் தணிவும் ஏற்படவில்லை.


கான் யூனிஸ் நகரில் இருக்கும் மேலும் இரு மருத்துவமனைகளை இஸ்ரேலியப் படை சுற்றிவளைத்திருப்பதோடு இடம்பெயர்ந்த மக்கள் வசிக்கும் தற்காலிக முகாம் ஒன்றின் மீது நடத்திய தாக்குதலில் சிறுவர்கள் உட்பட 12 பேர் கொல்லப்பட்டதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டது.


கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கி இருக்கும் நிலையில் அவர்கள் உயிர் ஆபத்தை சந்தித்து வருவதாக பலஸ்தீன செம்பிறை சங்கம் எச்சரித்துள்ளது.



போருக்கு மத்தியில் மக்கள் சிக்கியுள்ள சூழலில், வானில் இருந்து உதவிகள் போடுவதை நிறுத்துமாறு நன்கொடை நாடுகளை ஹமாஸ் கேட்டுள்ளது. கடலில் விழுந்த இந்த உதவிப் பொதிகளை பெற முயன்ற 12 பலஸ்தீனர்கள் மூழ்கி உயிரிழந்ததை அடுத்து ஹமாஸ் இந்தக் கோரிக்கையை விடுத்தது.


உதவியைக் பெற முயன்ற மேலும் ஆறு பேர் நெரிசலில் சிக்க உயிரிழந்ததாக ஹமாஸ் மற்றும் சுவிஸை தளமாகக் கொண்ட மனித உரிமை கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளன.


‘ஒரு டின் மீன் கலனை பெறுவதற்காக மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள்’ என்று காசா குடியிருப்பாளரான முஹமது அல் சபாவி ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார். உதவிப் பொதி ஒன்றில் இருந்து இவ்வாறான ஒரு கலனை பெற்று அதனை கையில் வைத்துக் கொண்டே அவர் இதனைத் தெரிவித்தார்.



காசாவுக்குள் மேலும் உதவி வாகனங்களை இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட ஹமாஸ், இது காசாவில் மனிதனால் உருவாக்கப்பட்ட பஞ்சத்தை ஏற்படுத்தும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.



கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி வெடித்த காசா போரினால் அந்தப் பகுதியில் கிட்டத்தட்ட அனைத்து உட்கட்டமைப்புகளும் அழிக்கப்பட்ட நிலையில் அங்குள்ள 2.4 மில்லியன் மக்கள் தொகையில் அனைவருக்கும் மனிதாபிமான உதவி தேவைப்படுவதாக ஐ.நா கூறுகிறது.


விரைவான பஞ்சம் ஒன்றை தடுப்பதற்கு வான் அல்லது கடல் வழிகளை விடவும் வீதிகள் மூலம் காசாவுக்கு உதவிகள் விரைவாக எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்று ஐ.நா சிறுவர் அமைப்பான யுனிசெப் தெரிவித்துள்ளது.


அவசியமான உதவிகள் ஒரு கிலோமீற்றர் தூரத்திலேயே தங்கி உள்ளன. உதவிகளை நிரப்பிய லொறிகள் எகிப்துடனான காசாவின் தெற்கு எல்லையில் காத்துக் கிடக்கின்றன என்று யுனிசெப் பேச்சாளர் ஜேம்ஸ் எல்டர் சுட்டிக்காட்டினார்.



உதவிகளை தரை வழியாக எடுத்துச் செல்ல தொடர்ந்து முயற்சிப்பதாக குறிப்பிட்டிருக்கும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு கௌன்சில், தொடர்ந்தும் வானில் இருந்து உதவிகளை போடுவதாக கூறியுள்ளது.



ஜோர்தான், எகிப்து, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஜெர்மனி நாடுகாளில் அனுப்பப்பட்ட விமானங்களில் இருந்து பாராசூட் மூலம் வீசப்பட்ட உதவிப் பொதிகளை நோக்கி மக்கள் குவியும் காட்சியை ஏ.எப்.பி. தொலைகாட்சி வெளியிட்டுள்ளது.


காசாவில் இஸ்ரேல் தனது போர் நடவடிக்கையை விட்டுக்கொடுக்காது தொடர்ந்து செயற்பட்டு வருவதோடு கட்டாரில் இடம்பெற்று வரும் போர் நிறுத்தம் ஒன்றுக்கான பேச்சுவார்த்தையும் எந்த முன்னேற்றமும் இல்லாமல் நீடித்து வருகிறது.


இந்நிலையில் இஸ்ரேல் முன்னெப்போதும் அனுபவிக்காத அரசியல் தனிமைப்படுத்தலை எதிர்கொண்டிருப்பதாகவும் பாதுகாப்புச் சபையில் அமெரிக்காவின் பாதுகாப்பை இழந்திருப்பதாகவும் ஹமாஸ் தலைவர் இஸ்மைல் ஹனியே குறிப்பட்டுள்ளார்.


மறுபுறம் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் ஜெனின் நகரில் இஸ்ரேலிய படை நேற்று நடத்திய சுற்றிவளைப்புகளில் மூன்று பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா தெரிவித்துள்ளது. இதன்போது இஸ்ரேலின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதோடு மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.


முன்னதாக ஜெனின் நகரில் இஸ்ரேலிய படையின் துப்பாக்கிச் சூட்டில் 19 வயது இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். காசாவில் போர் வெடித்தது தொடக்கம் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளிலும் பதற்றம் நீடித்து வருகிறது.


மறுபுறம் வடக்கு இஸ்ரேல் மீது லெபனான் ஹிஸ்புல்லா அமைப்பு நடத்திய சரமாரி ரொக்கெட் தாக்குதல்களில் இஸ்ரேலியர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். தெற்கு லெபனானில் கடந்த செவ்வாய்க்கிழமை சுகாதார மையம் ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஏழு மருத்துவ உதவியாளர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாகவே ஹிஸ்புல்லா இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது.

காசாவில் இஸ்ரேலின் தாக்குதல் உக்கிரம்; உதவிக்கு அழைப்பு விடுப்பு  காசாவில் இஸ்ரேலின் தாக்குதல் உக்கிரம்; உதவிக்கு அழைப்பு விடுப்பு Reviewed by Madawala News on March 29, 2024 Rating: 5

அனுர குமார திஸாநாயக்க அவர்களே ஜனாதிபதி பதவிக்கு மிகப்பொருத்தமானவர் ..




அனுர குமார திஸாநாய்க்க அவர்களே ஜனாதிபதி பதவிக்கு மிகப்பொருத்தமானவர் என சங்கைக்குறிய அகுநொச்சியே குமார கஸ்ஸப தேரர் குறிப்பிட்டார்.


அனுராதபுர மாவட்ட பௌத்த பிக்குகள் கூட்டமைப்பு நடத்திய ஊடக மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டார்.


நாட்டின் தேசிய சொத்துகளை விற்பனை செய்து ஆட்சியாளர்கள் மக்களுடன் விளையாடக்கூடாது என அவர் மேலும் குறிப்பிட்டார். 

அனுர குமார திஸாநாயக்க அவர்களே ஜனாதிபதி பதவிக்கு மிகப்பொருத்தமானவர் .. அனுர குமார திஸாநாயக்க அவர்களே ஜனாதிபதி பதவிக்கு மிகப்பொருத்தமானவர் .. Reviewed by Madawala News on March 28, 2024 Rating: 5

THE BATTLE OF BADR - இன்று பத்ரு போர்க்கள நினைவு நாள்.



THE BATTLE OF BADR - இன்று பத்ரு போர்க்கள நினைவு நாள்.

(இந்தப் பதிவை வாசித்துணர உங்களுக்கு 2 நிமிடங்களும் 26 செக்கன்களும் எடுக்கும்)

அது இற்றைக்கு 1443 வருடங்களுக்கு முன்னர் மூண்ட வீரம் திளைத்த போர்க்களம்.

சத்தியத்தையும் அசத்தியத்தையும் கோடு போட்டுக்காட்டிய சரியாத சரித்திரம்.
ஆயுதம் தரித்த ஆயிரமாயிரம் எதிரிகளை வெறும் 313 பேர் வென்றுகாட்டிய அசாத்தியம்.

பித்னாக்கள் தலைவிரி கோலமாய் உலா வந்துகொண்டிருந்த காலம்.
மக்காவில் வசித்து வந்த குறைஷி காபிர்களின் அட்டகாசங்கள் அத்துமீறி எல்லை தாண்டி வளர்ந்து மதீனா வரை செல்லும் அபாயம் தோன்றி இருந்தது.

அப்போது மதீனத்து மண்ணிலே வாழ்ந்து இறை பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தூதர் முஹம்மத், காபிர்களின் அத்துமீறல்கள் அளவு கடந்து போவதை கண்டு இறைவனின் ஆணையோடு போர் புரிய முடிவு கட்டினார்கள்.

உயிரிலும் மேலான உத்தம தூதர் இமாமுல் அன்பியா ரஹமத்துல் ஆலமின் தூதர் முஹம்மத் அவர்கள் தலைமை கொடுத்து இஸ்லாம் செழிக்க வரலாற்றில் நிகழும் முதலாவது சமர். 

அப்போது ஹிஜ்ரி 2ம் ஆண்டு.

போருக்கான பெரும் படைகளோ ஆளாதிக்கமோ அற்ற சாதாரண அன்ஸாரிகளை கொண்ட சமூதாயத்திலிருந்து ஆயிரக்கணக்கான எதிரிகளை வீழ்த்துவதற்கு வியூகம் வகுப்பது அத்தனை சுலபமானதல்ல.

ஆனால் அல்லாஹ்வின் தூதர் இறை நெறிக்கு ஓர் ஆபத்து என்ற போது தங்கள் இன்னுயிர்களைத் தியாகம் செய்யவும் தயங்காத தோழர்களை ஒன்றுகூட்டி
படைபலம் சேர்த்தார்.

இறை மார்க்கத்தை மேலோங்கச் செய்யும் அறப்போராட்டத்தில் களம்காண நெஞ்சுரம் கொண்ட நபியின் நேசத்தோழர்களும் அன்சாரிகளும் அணிவகுத்து சேர்ந்தனர். அல்லாஹ் துணையிருந்தான்.

எதிர்முகாமில் காபிர்களின் பல்லாயிரம் குதிரைப்படைகளும், ஒட்டகங்களும் மின்னும் வாள்களும் கவசங்களும் தயார்படுத்தப்பட,

எழுபது ஒட்டகங்களையும் வெறும் இரண்டு குதிரைகளையும் மிகக் குறைந்த ஆயுத வசதிகளையும் கொண்ட 313 முஸ்லிம்கள், ஆயுதம் தாங்கிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட குறைஷிகளை எதிர்ப்பதற்கு கம்பீர புன்முறுவலோடு தைரியமாய் தயாரானார்கள்.

அல்லாஹ்வின் தூதர் படைக்கு தலைமை கொடுத்தார்.

ரமழான் மாதம் பிறை பதினேழு; போருக்கு தேதி குறிக்கப்படுகிறது.

சத்தியம் வென்றாக வேண்டும். 
இனி இஸ்லாம் நிலைகொள்ள வேண்டுமாயின் இந்தப்போரில் வென்றே ஆக வேண்டும்.

விடிந்தால் சமர். விடிய விடிய சத்தியத்தூதர் இறைவனிடம் இறைஞ்சி மன்றாடினார்.

“இறைவா! எங்களுக்கு துணை புரிவதாக நீ அளித்த வாக்கை நிறைவேற்று. சத்தியத்திற்காகப் போராடும் இந்தச் சிறுகுழு இன்று அழிந்து விட்டால் இனி உலகில் உன்னை வணங்கிட எவரும் இருக்க மாட்டார்கள்’ என உருக்கமாக பிரார்த்தனை செய்தார்கள்.

அபூபக்கர் (ரழி) நபியை நெருங்கி , “அல்லாஹ்வின் உதவி நமக்கு நிச்சயம் உண்டு; கலங்காதீர்கள்’ என்று கட்டியணைத்து கண்ணீர் மல்க ஆறுதல் கூறினார்.

இறைவன் பதிலளித்தான்;
“நீங்கள் உங்கள் இரட்சகனிடம் உங்களை இரட்சிக்கத் தேடிய போது அணி அணியாக உங்களோடு இணைந்து அடுத்து வரக்கூடியவர்களாக மலக்குகளில் ஆயிரம் பேர்களைக் கொண்டு நிச்சயமாக நான் உங்களுக்கு உதவி செய்வேன் என்று அவன் உங்களுக்கு பதிலளித்தான்.” (அல்குர்ஆன் 08:09)

அதிகாலை சஹர் நேரம் நோன்பு நோற்றவர்களாக இறைகொள்கையை நெஞ்சத்தில் ஏந்தியவர்களாக ஈமானியப் படையணி புறப்பட்டது.

போர்க்களம் அழைக்கிறது.
பெருங்கொடையாளனின் அருள்மழை பொழிகிறது.
ஈமானியப் படைமுகாம் வீறு கொள்கிறது.
பாதங்கள் உறுதியாகின.

எதிரிகளின் முகாம் சேறு நிறைந்த சகதியாகிறது.

அன்றைய போர் முறைப்படி எல்லோரும் ஒரே நேரத்தில் புகுவதில்லை. ஆரம்பத்தில் சிலர் மோதிக்கொண்டு, யுத்த வெறியை ஏற்படுத்திக் கொள்வர். 
அந்த வகையில் காபிர்கள் சார்பாக மூவர் வந்தனர். முஸ்லிம்கள் சார்பாக நபியவர்கள் அலி (ரலி), உபைதா (ரலி), ஹம்ஸா (ரலி) ஆகிய மூவரையும் அனுப்பினார்கள். 

இவர்கள் மூவரும் காபிர்களில் இருந்து வந்த மூவருடன் போரிட்டு ரத்தம் பீரிட்டு பாய அவர்களின் தலைகளை நிலத்தில் உருட்டினர்.

போர் உக்கிரம் கொண்டது. நிலைமை மாற துவங்குகிறது.
குறைஷிகளின் வாள் வீச்சுக்கள் உயர்கிறது. 
ஈமானியப் படையணி பின்வாங்குகிறது. 
14 நபித்தோழர்கள் ஸஹீதாகுகிறார்கள். 

அல்லாஹ்வின் தூதர் நிலைகுலைந்து நிற்கிறார்கள்.
தோல்வியின் ரேகைகள் மெல்ல படர்கின்றன.

இறைவா துணைபுரியாயோ என்று வல்லோனை கெஞ்சுகிறார் படைத்தலைவர் தூதர் முஹம்மத்.

வல்ல நாயன் துணைபுரிந்தான். எதிரிகளின் எண்ணிக்கைகளை குறைவாக காட்டியும், வானவர்களையும் இறக்கியும் வைத்தான் இறைவன். 

ஈமானியப்படை முன்நகர்ந்து எதிரிகளின் பிணக்குவியல்களை கணக்கிட நேரமின்றி சமராடி வெற்றி கண்டது. 
எதிரிகள் புறமுதுகு காட்டி ஓடினார்கள். 

சுஜூதுகள் வீண்போகவில்லை.
சுஹதாக்கள் சூழ ஈமானியம் வெற்றியை சுவைத்தது.
சத்தியம் ஓங்கியது. அசத்தியம் அழிந்தே போனது.
மன்றாட்டம் பயனற்றுப்கோகவில்லை.
மன்னிப்பாளன் வல்லோன் கைவிடவில்லை.

மக்காவில் நபி தொழுதபோது ஒட்டக குடலை கழுத்தில் போட்டு சத்திய தூதரை இழிவுபடுத்திய அபுஜஹீலும் அவன் கூட்டமும் வேரறுந்த மரங்களாக மாண்டு போனார்கள்.

இரக்க நாயன் ஆயத்துக்களை இறக்கி வைத்தான்.
“பத்ரில் நடந்த யுத்தத்தில் நீங்கள் எண்ணிக்கையிலும், ஆயுத பலத்திலும் மிகக் குறைந்தவர்களாயிருந்த சமயத்தில் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்தான். ஆகவே, நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ்வுக்கு பயந்து நடந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 03:123)

உலகத்தின் மதிப்பீடுகளுக்கு அப்பால் பத்ரு களம் மகத்தான வெற்றியையும் மறக்காத பாடத்தையும் சொல்லித்தருகிறது.

பெரும்பான்மை மக்கள் கூட்டம் ஒரு விடயத்தை சரி என்பதால் அது சத்தியமாகிவிடாது. அவர்கள் ஒரு விடயத்தை பிழை என்றால் அது அசத்தியமாகிவிடாது. சத்திய வாதிகள் சிறுபான்மையினராய் இருந்தாலும் இறைவன் அவர்களுடன்தான் இருப்பான்.

றமழான் கரீம்!!

-சல்மான் லாபீர்.

(படம் - பத்ரு போர் நிகழ்ந்த போர்க்களத்தின் தற்போதைய தோற்றம்)
THE BATTLE OF BADR - இன்று பத்ரு போர்க்கள நினைவு நாள். THE BATTLE OF BADR - இன்று பத்ரு போர்க்கள நினைவு நாள். Reviewed by Madawala News on March 28, 2024 Rating: 5

ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்ய தீர்மானம்



இஸ்லாமிய மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு வழக்கு விசாரணையின் பின்  சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ள ஞானசார தேரரை பிணையில் எடுக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக திங்கட்கிழமை மேன்முறையீடு செய்யப்பட உள்ள நிலையில் அவர்க்கு பிணை கோரப்பட உள்ளதாக மாகல்கந்தே சுதந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.

ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்ய தீர்மானம் ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்ய தீர்மானம் Reviewed by Madawala News on March 28, 2024 Rating: 5

காப்புறுதி இழப்பீடு பெற, தன் விடுதி அறைக்கதவு உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டதாக பொய் முறைப்பாடு செய்த பிரித்தானிய பிரஜை.



பொய் முறைப்பாடு செய்த பிரித்தானிய பிரஜை தொடர்பில் அலவத்துகொட பிரதேசத்தில் இருந்து செய்தி ஒன்று பதிவாகியுள்ளது.

பிரித்தானிய சந்தேக நபர் அலவத்துகொடையில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்தார்.

இவர்கள் தங்கியிருந்த அறையின் கதவுகள் உடைக்கப்பட்டு அங்கிருந்த சுமார் 5 இலட்சம் ரூபா பெறுமதியான பணம் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதாவது 90,000 ரூபாய் பணம் ,
இரண்டு கைக்கடிகாரங்கள்,
கேமரா ஆகியவை திருடப்பட்டுள்ளதாக அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்த போது, ​​சந்தேகத்திற்குரிய வெளிநாட்டவர் விசாரணைகள் தேவையற்றது எனவும், காப்புறுதி இழப்பீடு பெறுவதற்கு தனக்கு police report ஒன்று கிடைத்தால் போதுமானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு சந்தேகநபரின் வாக்குமூலத்தில் சந்தேகமடைந்த பொலிஸார், மேலதிக விசாரணைகளின் போது, ​​அறையின் கதவுகள் உள்ளே இருந்து உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்துள்ளனர்.

இதன்படி, தற்போது சந்தேகத்திற்கிடமான வெளிநாட்டவர் பொலிஸாரைத் தவிர்த்துவிட்டு அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அலவத்துகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
காப்புறுதி இழப்பீடு பெற, தன் விடுதி அறைக்கதவு உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டதாக பொய் முறைப்பாடு செய்த பிரித்தானிய பிரஜை. காப்புறுதி இழப்பீடு பெற, தன் விடுதி அறைக்கதவு உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டதாக பொய் முறைப்பாடு செய்த பிரித்தானிய பிரஜை. Reviewed by Madawala News on March 28, 2024 Rating: 5

வீடு ஒன்றினுள் தூ*க்கிலிட்ட நிலையில் இளம் யுவதி ஒருவர் சடலமாக மீட்பு



வவுனியா, சமனங்குளம் பகுதியில் இருந்து 23 வயது யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக சிதம்பரபுரம் பொலிஸார் இன்று (28) தெரிவித்தனர்.

வவுனியா, சமனங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இளம் யுவதி ஒருவர் தூக்கிட்ட நிலையில் காணப்படுவதாக சிதம்பரபுரம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற பொலிஸார் குறித்த யுவதியின் சடலத்தை மீட்டுள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் ஆசிகுளம், சிதம்பரநகர் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஜெகநாதன் கவிப்பிரியா என்பவராவார். சம்பவம் தொடர்பில் சிதம்பரபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
வீடு ஒன்றினுள் தூ*க்கிலிட்ட நிலையில் இளம் யுவதி ஒருவர் சடலமாக மீட்பு வீடு ஒன்றினுள்  தூ*க்கிலிட்ட நிலையில் இளம் யுவதி ஒருவர் சடலமாக மீட்பு Reviewed by Madawala News on March 28, 2024 Rating: 5

மோதலை தடுக்க சென்றவர்களை சிறையில் அடைக்கும் புதுமையான நாடு இது



மோதலை தடுக்க சென்றவர்களை சிறையில் அடைக்கும் புதுமையான நாடு இது என ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார். 


இஸ்லாத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட ஞானசார தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இந்த கடூழியச் சிறைத்தண்டனை விதித்துள்ள நிலையில் நீதிமன்ற வளாகத்தில் கருத்து வெளியிட்டுள்ள அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மோதலை தடுக்க சென்றவர்களை சிறையில் அடைக்கும் புதுமையான நாடு இது மோதலை தடுக்க சென்றவர்களை சிறையில் அடைக்கும் புதுமையான நாடு இது Reviewed by Madawala News on March 28, 2024 Rating: 5

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் ஏற்பட்ட பாரிய தீப்பரவல்



கொழும்பு கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேல்ஸ் குமார மாவத்தையில் உள்ள டயர் கடை ஒன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.


தீயை கட்டுப்படுத்தும் பணியில் கொழும்பு தீயணைப்பு பிரிவின் ஐந்து தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் ஏற்பட்ட பாரிய தீப்பரவல் கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் ஏற்பட்ட பாரிய தீப்பரவல் Reviewed by Madawala News on March 28, 2024 Rating: 5

இனிமேல் சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு உடனடியாக பாடசாலைகளில் உயர்தரக் கல்விக்கான வகுப்புகள் ஆரம்பமாகும் ; கல்வி அமைச்சர்



கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்ததும் உடனடியாகவே, மாணவர்களுக்கு உயர்தர கல்வி வகுப்பை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.


கண்டியில் நேற்று (27) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்படுவதற்கு முன்னதாக க.பொ.த. உயர்தரக் கல்விக்கான வகுப்புகளை ஆரம்பிப்பதன் மூலம், பாடசாலைகளில் உயர்தரக் கல்விக்காக தோற்றும் 2 மாணவக் குழுக்கள் ஒன்றாக இணைக்கப்படுவர்.

இது எந்தப் பிரச்சினையையும் ஏற்படுத்தாது.

அதற்கான இட முகாமைத்துவமும் அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களினால் ஒழுங்கு செய்யப்படும்.

தற்போது கல்வியில், முன்னேற்றம் மற்றும் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியுள்ளது.

அதற்காக தேவையான மாற்றங்களும் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக, அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் குறிப்பிட்டுள்ளார்


இனிமேல் சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு உடனடியாக பாடசாலைகளில் உயர்தரக் கல்விக்கான வகுப்புகள் ஆரம்பமாகும் ; கல்வி அமைச்சர் இனிமேல் சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு உடனடியாக பாடசாலைகளில் உயர்தரக் கல்விக்கான வகுப்புகள் ஆரம்பமாகும் ; கல்வி அமைச்சர் Reviewed by Madawala News on March 28, 2024 Rating: 5

பெண் ஒருவருடன் லாட்ஜ் இல் தங்கி இருந்த தேரர் பொலிஸாரால் கைது.



 தியத்தலாவ பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் பெண் ஒருவருடன் இருந்த தேரர்  ஒருவர் தியத்தலாவ பொலிஸ் குழுவினால் விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் பொரலந்தவில் உள்ள ஒரு விகாரையில்  வசிக்கும் நாற்பத்தாறு வயதான தேரர் ஆவார்.

அந்தப் பெண் அதே பகுதியில் வசிக்கும் நாற்பது வயது திருமணமான பெண்.


நபர் ஒருவர் பெண் ஒருவர் மாற்றுப் பெயருடன் லாட்ஜ் ஒன்றிற்கு வந்துள்ளதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து இந்த சுற்றிவளைப்பு நடத்தப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெண் ஒருவருடன் லாட்ஜ் இல் தங்கி இருந்த தேரர் பொலிஸாரால் கைது. பெண் ஒருவருடன் லாட்ஜ் இல் தங்கி இருந்த தேரர் பொலிஸாரால் கைது. Reviewed by Madawala News on March 28, 2024 Rating: 5

இலங்கையர் ஒருவரின் குறைந்தபட்ச அடிப்படைத் தேவைக்கு மாதாந்தம் 17,014 ரூபாய் அவசியம் என தொகைமதிப்பு - புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவிப்பு /



2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான வறுமைக்கோடு தொடர்பான புதிய அட்டவணையை தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.


அதற்கமைய, இலங்கையர் ஒருவரின் குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக மாதாந்தம் 17,014 ரூபாய் அவசியம் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.


தேசிய மட்டத்தில் இந்த தொகை அறிவிக்கப்பட்டிருந்தாலும், மாவட்டங்கள் தோறும் இந்த தொகையில் மாற்றம் ஏற்படுகின்றது.


கொழும்பு மாவட்டத்தில் தனிநபரின் மாதாந்த செலவு 18,350 ரூபாவாக காணப்படுகின்றது.


இதற்கமைய, இலங்கையிலுள்ள 25 மாவட்டங்களில் அதிக செலவீனத்தைக் கொண்ட மாவட்டமாக கொழும்பு மாவட்டம் அமைந்துள்ளது.


குறைந்த செலவீனத்தைக் கொண்ட மாவட்டமாக மொனராகலை மாவட்டம் பதிவாகியுள்ளது.


மொனராகலை மாவட்டத்தில் தமது அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு, ஒருவருக்கு மாதாந்தம் 16,268 ரூபாய் தேவைப்படுவதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.


அத்துடன், நான்கு பேர் கொண்ட குடும்பமொன்றுக்கு தங்களது அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக மாதாந்தம் 68,560 ரூபாய் தேவைப்படுவதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையர் ஒருவரின் குறைந்தபட்ச அடிப்படைத் தேவைக்கு மாதாந்தம் 17,014 ரூபாய் அவசியம் என தொகைமதிப்பு - புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவிப்பு / இலங்கையர் ஒருவரின் குறைந்தபட்ச அடிப்படைத் தேவைக்கு மாதாந்தம் 17,014 ரூபாய் அவசியம் என தொகைமதிப்பு - புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவிப்பு / Reviewed by Madawala News on March 28, 2024 Rating: 5

மட்டக்களப்பு RDHS வரலாற்றில் முதல்தடவையாக திறந்தவெளியில் இப்தார்.



மட்டக்களப்பு RDHS வரலாற்றில் முதல்தடவையாக திறந்தவெளியில்
நேற்றைய தினம் இப்தார் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது மட்டக்களப்பு RDHS.

பசியையும் தாகத்தையும் உணர்பவனே ஏழைகளுக்கு மனமார உதவுவான். நல்லிணக்கம் நாவினால் மட்டும் வந்துவிடாது அது உணர்வோடு ஒன்றிணைந்து செயலோடு வெளிப்படவேண்டும் என்பதனையும்
வலியுறுத்தி, முகநூல் பக்கத்தில் பதிவொன்றையும் இட்டு தனது மகிழ்சியையும் வெளிப்படுத்தியுள்ளார்
Dr. Sukunan Gunasingam RDHS, Batticaloa

இன, மத, பிரதேச வேறுபாடு களைந்து மனிதநேயம் மலரட்டும் என்பதாக அமைந்திருத்தது அவரது பதிவு.


மட்டக்களப்பு RDHS வரலாற்றில் முதல்தடவையாக திறந்தவெளியில் இப்தார். மட்டக்களப்பு RDHS வரலாற்றில் முதல்தடவையாக திறந்தவெளியில் இப்தார். Reviewed by Madawala News on March 28, 2024 Rating: 5

நாட்டின் சில பிரதேசங்களில் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படும் அதேவேளை பல பிரதேசங்களில் மழை பெய்ய வாய்ப்பு .



மேல்,வடமேல் மற்றும்  வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் காலி  மாவட்டங்களிலும்  இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படும். 


மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 


சப்ரகமுவ, மேல் மற்றும் தென்  மாகாணங்களின் சில இடங்களில் 75 mm இலும் கூடிய ஓரளவு  பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 


கிழக்கு  மாகாணத்தில் இடைக்கிடையே  மழை பெய்யக்கூடும். 


மத்திய,சப்ரகமுவ மற்றும் ஊவா  மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களின் சில இடங்களிலும்  காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும். 


பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக் கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு  கேட்டுக்கொள்ளப் படுகின்றனர்.  


கடல் பிராந்தியங்களில் 

****************************


மட்டக்களப்பு  தொடக்கம் ஹம்பாந்தோட்டை  ஊடாக காலி வரையான கரையோரத்திற்குஅப்பால் உள்ள கடல் பிராந்தியங்களில் இடைக்கிடையே  மழை பெய்யக்கூடும். 


மன்னார்  தொடக்கம் புத்தளம்,  கொழும்பு ஊடாக காலி வரையான  கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் பிற்பகல்  அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 


கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 - 30 km வேகத்தில் கிழக்குத்  திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும். 


நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும். 


மொஹமட் சாலிஹீன்,  

சிரேஸ்ட  வானிலை அதிகாரி.

நாட்டின் சில பிரதேசங்களில் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படும் அதேவேளை பல பிரதேசங்களில் மழை பெய்ய வாய்ப்பு . நாட்டின் சில பிரதேசங்களில் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படும் அதேவேளை பல பிரதேசங்களில் மழை பெய்ய வாய்ப்பு . Reviewed by Madawala News on March 28, 2024 Rating: 5

ஞானசார தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் நான்கு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.



ஞானசார தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் நான்கு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்துள்ளது.


இஸ்லாத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட ஞானசார தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இந்த கடூழியச் சிறைத்தண்டனை விதித்துள்ளது.


ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபாண்டிகே, 100,000 ரூபாய் அபராதமும் விதித்தார்
ஞானசார தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் நான்கு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஞானசார தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் நான்கு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. Reviewed by Madawala News on March 28, 2024 Rating: 5

ஜனாஸா அறிவித்தல் - கஹட்டோவிட்ட மௌலவி அபூபக்கர் அவர்கள் காலமானார்.



ஜனாஸா அறிவித்தல்

பலாந்தையை பிறப்பிடமாகவும் கஹட்டோவிட்டாவை வசிப்பிடமாகவும் கொண்ட மௌலவி அபூபக்கர் அவர்கள் காலமானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

இவர் முன்னால் மஊனதுர்ரஹ்மான் குர்ஆன் மத்ரஸா பரிசோதகரும் மாபோலை ஜோஜ்மாவத்தை தாருர்ரஹ்மா அகதியா பாடசாலை அதிபரும்

அன்னார் சித்தி பாத்திமா அவர்களின் அன்புக்கனவரும்,அக்மல்,அஹ்ஸன் (மௌலவி) ,அஷ்கர்,அர்சத், அஸ்மா,அஸ்கா ஆகியோரின் அன்பு தந்தையும்

பாத்திமா ரிஸானா, பாத்திமா பஹீமா ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

தகவல்
மகன் அக்மல் 
777 640 749
ஜனாஸா அறிவித்தல் - கஹட்டோவிட்ட மௌலவி அபூபக்கர் அவர்கள் காலமானார். ஜனாஸா அறிவித்தல் - கஹட்டோவிட்ட மௌலவி அபூபக்கர் அவர்கள் காலமானார். Reviewed by Madawala News on March 28, 2024 Rating: 5
Powered by Blogger.