VIDEO >> தனது டிராக்டரை 3000 அமெரிக்க டாலர்களுக்கு விற்று உலகக் கிண்ணம் பார்க்க சென்ற பாகிஸ்தான் ரசிகர் மனமுடைந்தார்



டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் நேற்று நடைபெற்ற 19வது லீக் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் மோதின.

இப்போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து இந்தியாவை 119 என்ற குறைந்த எண்ணிக்கையிலான ஓட்டங்களில் 
ஆட்டுமிழக்க செய்தது.

பதிலுக்கு துடிப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணியின் ஆரம்ப துடுப்பாட்டம் நன்றாக இருந்தாலும் 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 113 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.


நியூயோர்க் Nassau County ஸ்டேடியத்தில் நடந்த இந்த போட்டியை காண ஏராளமான பார்வையாளர்கள் குவிந்தனர்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ரசிகர்கள் போட்டியை காண ஆர்வமாக வந்திருந்த நிலையில் மனமுடைந்த பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் அந்த அணியின் தோல்வி தொடர்பில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

அவர் தனது டிராக்டரை 3000 அமெரிக்க டாலர்களுக்கு விற்று குறிப்பிட்ட போட்டியை காண டிக்கெட் எடுத்து வந்துள்ளார்.

"3000 USD மதிப்பிலான டிக்கெட்டுக்காக எனது டிராக்டரை விற்றுவிட்டேன். இந்தியாவின் ஸ்கோரைப் பார்த்தபோது, ​​​​இந்த போட்டியில் நாங்கள் தோற்கப் போகிறோம் என்று நாங்கள் நினைக்கவே இல்லை 

இது வெல்லக் கூடிய ஓட்ட எண்ணிக்கை என்று நாங்கள் நினைத்தோம். ஆட்டம் எங்கள் கையில் இருந்தது, ஆனால் பாபர் அசாம் வெளியேறிய பிறகு, மக்கள் மனமுடைந்து போனார்கள். உங்கள் அனைவரையும் (இந்திய ரசிகர்கள்) வாழ்த்துகிறேன்” என்று கூறியுள்ளார்.
VIDEO >> தனது டிராக்டரை 3000 அமெரிக்க டாலர்களுக்கு விற்று உலகக் கிண்ணம் பார்க்க சென்ற பாகிஸ்தான் ரசிகர் மனமுடைந்தார் VIDEO >> தனது டிராக்டரை 3000 அமெரிக்க டாலர்களுக்கு விற்று உலகக் கிண்ணம் பார்க்க சென்ற பாகிஸ்தான் ரசிகர் மனமுடைந்தார் Reviewed by Madawala News on June 10, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.