கண்டி பதியுதீன் மஃமூத் மகளிர் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி.கண்டி பதியுதீன் மஃமூத் மகளிர் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி கண்டி போகம்பர விளையாட்டு மைதானத்தில் அதிபர் நதீரா இஸ்மாயீல் தலைமையில் கடந்த 2ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் தேசிய கெடட் குழுவின் முதல் தர அலுவலக உத்தியோகத்தர் லெப்டினல் கேணல் எம். டப்லியூ, டி. எம். குமாரி பண்டார அவர்கள் கலந்து கொண்டனர்.


கண்டி கல்வி வலய தமிழ் மொழி பிரிவுக்கான உதவிப் பணிப்பாளர் நூருல் அமீன், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஹிதாயத் சத்தார், டாக்டர் ஷாபி சஹாப்தீன், பாடசாலை அபிவிருத்திக் குழுவின் செயலாளர் கமால் ஹஸன், கண்டி முன்னாள் மாநகர சபை உறுப்பினர் மாத்தலி மரைக்கார், முன்னாள் யடிநுவர பிரதேச சபை உறுப்பினர் வஸீர் முக்தார், கண்டி மஸ்ஜித் சம்மேலனத்தின் தலைவர் அஹம்ட் சித்தீக், கண்டி முஸ்லிம் வர்த்தக சங்கத்தின் செயலாளர் முஜீபுர் ரஹ்மான், RPSL சமூக அமைப்பின் உப தலைவர் ஸைப் ஹனிபா, கண்டி வைத்தியசாலை நலன்புரி சங்கத்தின் உறுப்பினர் ரிஸ்வி, முன்னாள் பாடசாலை அபிவிருத்திக் குழு செயலாளர் அல்ரஷீட் அஹமட்  உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


ஆயிஷா, பாத்திமா, ஆமீனா , கதீஜா ஆகிய நான்கு இல்லங்களுக்கிடையே நடைபெற்ற இல்ல விளையாட்டுப் போட்டில் கதீஜா இல்லம் 427 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தையும், ஆமீனா இல்லம் 377 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தையும், ஆயிஷா இல்லம் 272 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தையும், பாத்திமா இல்லம் 270 புள்ளிகளைப் பெற்று நான்காம் இடத்தையும் பெற்றுக் கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.


இல்ல மாணவிகளின் இறுதிப் போட்டியாக சுவட்டு நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. இதில் போது பெரு எண்ணிக்கையிலான பெற்றோர்கள், ஆசிரியர்கள் எனக் கலந்து கொண்டனர்.


கண்டி பதியுதீன் மஃமூத் மகளிர் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி.  கண்டி பதியுதீன் மஃமூத் மகளிர் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி. Reviewed by Madawala News on June 04, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.