இரு பாடசாலை மாணவர்கள் அடித்துக் கொண்டதில் ஒரு மாணவன் பரிதாபமாக பலிபாடசாலை மாணவர்கள் இருவருக்கு இடையில் நேற்று மாலை (05) ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்த மாணவன் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.


ஹம்பாந்தோட்டை, பெத்தேவெல பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


ஹம்பாந்தோட்டை நகரிலுள்ள பாடசாலையொன்றில் 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் இவர், நேற்று மேலதிக வகுப்பில் கலந்துகொள்வதற்காக சிப்பிக்குளம் பகுதிக்கு சென்றுள்ளார்.


இதன்போது ஹம்பாந்தோட்டையில் உள்ள மற்றுமொரு பாடசாலையைச் சேர்ந்த மாணவர் ஒருவர் குறித்த மேலதிக வகுப்புக்கு அருகில் சென்று 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவனை தாக்கியுள்ளார்.


இரு மாணவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறே மோதலுக்குக் காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.


இந்நிலையில், மாணவனின் மரணம் தொடர்பில் 17 வயதுடைய பாடசாலை மாணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இரு பாடசாலை மாணவர்கள் அடித்துக் கொண்டதில் ஒரு மாணவன் பரிதாபமாக பலி இரு பாடசாலை மாணவர்கள் அடித்துக் கொண்டதில் ஒரு மாணவன் பரிதாபமாக பலி Reviewed by Madawala News on June 06, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.