போதை ஒழிப்பு தொடர்பில் தவறாளர்களுக்கான மத ரீதியான ஆலோசனை விழிப்புணர்வு நிகழ்வுஹஸ்பர் ஏ.எச்_

திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் போதை ஒழிப்பு தொடர்பில் விழிப்புணர்வு நிகழ்வொன்று இன்று (11) பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது.

தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டுதளுக்கிணங்க இடம் பெற்ற குறித்த நிகழ்வினை கந்தளாய் நீதிமன்ற சமுதாயம் சார் சீர்திருத்த பிரிவு மற்றும் பிரதேச செயலகம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.

நீதிமன்றத்தால் போதை பொருள் பாவனைக்கு உட்படுத்தப்பட்ட தவறாளர்கள்(கட்டளையாளர்கள்) களுக்கான மத ரீதியான விழிப்புணர்வு தொடர்பில் மௌலவிக்களால் விழிப்புணர்வூட்டப்பட்டது.

போதை பாவனை ஊடாக ஏற்படும் பாதக விளைவுகள் குடும்ப வன்முறைகள் தொடர்பிலும் உளவள ஆலோசனை தொடர்பிலான தெளிவூட்டல்களை பெண்கள் அபிவிருத்தி உதவியாளரும் உளலவளத் துனை ஆலோசகருமான நஸ்ரின் திலானி விரிவாக விழிப்புணர்வூட்டினார். இஸ்லாம் மார்க்கம் சொல்லும் விடயங்களை மத ரீதியான தெளிவுபடுத்தல்களை மௌலவி உரையாற்றினார்.

இதில் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜீப்,சமுர்த்தி தலைமை முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சித்திக், சமுதாயம்சார் சீர்திருத்த உத்தியோகத்தர் B.ஹம்சபாலன், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.பி.எம்.பஸ்மி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.போதை ஒழிப்பு தொடர்பில் தவறாளர்களுக்கான மத ரீதியான ஆலோசனை விழிப்புணர்வு நிகழ்வு போதை ஒழிப்பு தொடர்பில் தவறாளர்களுக்கான மத ரீதியான ஆலோசனை விழிப்புணர்வு நிகழ்வு Reviewed by Madawala News on June 11, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.