இலங்கையில் இஞ்சி விலை வானளவு உயர்ந்துள்ளதால் 1,200 கிலோ இஞ்சியை கடல் மார்க்கமாக கொண்டுவந்த சிலர் சிக்கினர். மூன்று மீன்பிடி படகுகளையும் பொலிஸார் கைபற்றினார்இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக கடத்தி வரப்பட்ட 60 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான இஞ்சி, இலந்தடியா மற்றும் மாம்புரிய கடற்கரையில் பிடிபட்டுள்ளது. மூன்று மீன்பிடி படகுகளையும் சந்தேக நபர்களையும் நுரைச்சோலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


இந்தியாவில் இருந்து வரி செலுத்தாமல் கடத்தி வரப்பட்ட 1,200 கிலோ எடையுள்ள இஞ்சி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மூன்று படகுகளும் இலந்தடியா பிரதேசத்தில் வசிக்கும் சந்தேகத்திற்கிடமான மீனவர்களுடன் சேர்ந்து கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


இலங்கையின் இஞ்சி விலை அதிகம் என்பதாலேயே இந்தியாவில் இருந்து இரகசியமாககொண்டு வந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


கடல் மார்க்கமாக இலங்கைக்கு கடத்திச் செல்லப்பட்ட இஞ்சி கைப்பற்றப்படுவது இதுவே முதல் தடவையாக இருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் இஞ்சி விலை வானளவு உயர்ந்துள்ளதால் 1,200 கிலோ இஞ்சியை கடல் மார்க்கமாக கொண்டுவந்த சிலர் சிக்கினர். மூன்று மீன்பிடி படகுகளையும் பொலிஸார் கைபற்றினார் இலங்கையில் இஞ்சி விலை வானளவு உயர்ந்துள்ளதால் 1,200 கிலோ இஞ்சியை கடல் மார்க்கமாக கொண்டுவந்த சிலர் சிக்கினர். மூன்று மீன்பிடி படகுகளையும் பொலிஸார் கைபற்றினார் Reviewed by Madawala News on June 05, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.