அமெரிக்காவுக்கு எதிரான நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரவுப் பந்தை வேண்டுமென்றே சேதப்படுத்தியதாக புகார் அளிக்கப்பட்டது.அமெரிக்க அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரவுப் பந்தை வேண்டுமென்றே சேதப்படுத்தியதாக முன்னாள் அமெரிக்க வேகப் பந்துவீச்சாளர் ரஷ்டி தெரான் புகார் அளித்திருக்கிறார்.

2024 டி20 உலகக் கோப்பை தொடரில் குரூப் "ஏ" பிரிவில் பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டியில் இரு அணிகளும் 20 ஓவர்கள் முடிவில் சரிசமமாக 159 ரன்கள் எடுத்தன. இதை அடுத்து சூப்பர் ஓவர் நடந்தது. அதில் அமெரிக்க அணி ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இந்த நிலையில் போட்டிக்கு பின் முன்னாள் அமெரிக்க வீரரும், தென்னாப்பிரிக்க அணிக்காக சர்வதேச போட்டிகளில் பங்கேற்ற அனுபவம் கொண்டவருமான ரஷ்டி தெரான் சமூக ஊடகத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் போட்டியின் போது பாகிஸ்தான் பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரவுஃப் தன் நகத்தைக் கொண்டு பந்தை சேதப்படுத்தியதாகவும், அதன் மூலம் அவர் பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்ததாகவும் குற்றச்சாட்டை முன் வைத்தார்.

இந்தப் போட்டியில் அமெரிக்க அணி துடுப்பெடுத்தாடிய போது பாகிஸ்தான் அணி 12 வது ஓவருக்கு பின் பந்தை மாற்றியே ஆக வேண்டும் என நடுவர்களிடம் வாக்குவாதம் செய்தது. பின்னர் அம்பயர்கள் இரண்டாவது பந்தை எடுக்க ஒப்புக்கொண்டனர். 12வது ஓவரின் முடிவில் பந்து மாற்றப்பட்டது. அதன் பின் 14 வது ஓவரை ஹாரிஸ் ரவுஃப் வீசினார்.

அந்த ஓவரில் தான் பாகிஸ்தான் அணி முக்கிய விக்கெட்டான ஆன்ட்ரியாஸ் கவ்ஸின் விக்கெட்டை வீழ்த்தியது. அந்த ஓவரில் ஹாரிஸ் ரவுஃப் பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்தார். பொதுவாக பழைய பந்தில் தான் ரிவர்ஸ் ஸ்விங் செய்ய முடியும். அப்படி என்றால் புதிய பந்தை மாற்றி பின் எவ்வாறு ஹாரிஸ் ரவுஃப் ரிவர்ஸ் ஸ்விங் செய்தார்? என்ற கேள்வி எழுகிறது என ரஷ்டி தெரான் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தான் ஹாரிஸ் பந்தை சேதப்படுத்தியதாக ரஷ்டி தெரான் குற்றம் சுமத்தி இருக்கிறார். ஹாரிஸ் ரவுஃப் பந்து வீசும் முன் தன் நகங்களால் பந்தை சுரண்டி சேதப்படுத்தியதாகவும், அதன் மூலம் பந்து தனது வடிவத்தை இழந்து, பின்னர் ரிவர்ஸ் ஸ்விங் ஆனதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார் தெரான்.

இது குறித்து அவர் சமூக ஊடகத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் முறையிட்டு இருக்கிறார். இந்த விவகாரம் குறித்து ரசிகர்கள் சமூக ஊடகங்களில் விவாதித்து வருகிறார்கள். ஆனால், இது குறித்து வீடியோவாக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ரஷ்டி தெரான் தனது அனுமானத்தின் அடிப்படையில் இப்படி கூறுகிறாரா? அல்லது நேரில் கண்டதை வைத்து சொல்கிறாரா? என்பது தெரியவில்லை. அது குறித்து அவர் விரைவில் விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவுக்கு எதிரான நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரவுப் பந்தை வேண்டுமென்றே சேதப்படுத்தியதாக புகார் அளிக்கப்பட்டது. அமெரிக்காவுக்கு எதிரான நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரவுப் பந்தை வேண்டுமென்றே சேதப்படுத்தியதாக புகார் அளிக்கப்பட்டது. Reviewed by Madawala News on June 07, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.