இலங்கைக்கு சுற்றுலா வந்த இந்திய ஆணும் பெண்ணும் கடலில் நீராடும் போது நீரில் மூழ்கி உயிரிழப்புகிரிந்த கடற்கரையில் நீராடச் சென்ற வெளிநாட்டு பெண்ணும் ஆண் ஒருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.


குறித்த பெண்ணும் குறித்த நபரும் நீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


உயிரிழந்துள்ளவர்கள்  35 வயதுடைய ஒருவரும் 33 வயதுடைய ஒருவரும் ஆவார் - இரண்டு பேரும் இந்திய பிரஜைகள் என   பொலிஸார் தெரிவித்தனர்.


உயிரிழந்த இருவரும் கணவன்-மனைவி என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதுடன், குடும்ப உறுப்பினர்களுடன் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.


சடலங்கள் தெபரவெவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கிரிந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இலங்கைக்கு சுற்றுலா வந்த இந்திய ஆணும் பெண்ணும் கடலில் நீராடும் போது நீரில் மூழ்கி உயிரிழப்பு  இலங்கைக்கு  சுற்றுலா வந்த இந்திய ஆணும் பெண்ணும் கடலில் நீராடும் போது நீரில் மூழ்கி உயிரிழப்பு Reviewed by Madawala News on June 05, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.