வாக்குகள் விபரம் இணைப்பு > இந்திய தேர்தல் - தமிழ்நாட்டு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தோல்வியை நோக்கி ... இந்திய நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் நாட்டு பா.ஜ.க தலைவர்  அண்ணாமலை கோயம்புத்தூரில் போட்டியிட்ட நிலையில் இதுவரை வெளிவந்த தகவல்களின் படி அவர்  பின்னடைவை சந்தித்துள்ளார். 

ஏழுக்கட்டங்களாக நடைபெற்று வந்த மக்களவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கையானது இன்று காலை 8 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது.

தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை வெளியிட்டு வரும் நிலையில், தமிழகத்தில் திமுக முன்னிலையில் இருக்கிறது.

அண்ணாமலை பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்ற பின்னர் நடைபெறும் முதல் பெரிய தேர்தலான இந்த லோக்சபா தேர்தல் பிரதமரை தேர்வு செய்யும் தேர்தலாகும்.

அண்ணாமலைக்கு செல்வாக்குள்ள பகுதியாக கருதப்படும் கொங்கு மண்டலத்திலேயே பாஜக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.

திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் முன்னிலையில் இருக்கிறார்.

அதற்கு அடுத்தபடியாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இரண்டாம் இடத்திலும் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் மூன்றாம் இடத்திலும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

இதுவரை வெளியான வாக்கு விபரம் >>


வாக்குகள் விபரம் இணைப்பு > இந்திய தேர்தல் - தமிழ்நாட்டு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தோல்வியை நோக்கி ... வாக்குகள் விபரம் இணைப்பு >  இந்திய தேர்தல் - தமிழ்நாட்டு பா.ஜ.க தலைவர்  அண்ணாமலை தோல்வியை நோக்கி ... Reviewed by Madawala News on June 04, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.