ஆடுகளத்தில் கொஞ்சம் ஈரப்பதம் காணப்பட்டது - மேலும் அது இரண்டு வேகத்தில் காணப்பட்டது ; பாபர் அஸாம்நேற்று வியாழன் அன்று டல்லாஸ் கிராண்ட் ப்ரேரி ஸ்டேடியத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான டி20 உலகக் கோப்பை போட்டியில் கடந்த சீசனில் இறுதி போட்டிக்கு சென்று இருந்த பாகிஸ்தாஸ் அணி அமெரிக்காவிடம் தோல்வியடைந்துள்ளது அறிந்ததே 

அமெரிக்காவின் இந்த வெற்றி கிரிக்கெட் உலகை திகைக்க செய்துள்ளது. பாக்கிஸ்தான் செட் செய்த 160 ரன்களை சேஸ் செய்த அமெரிக்கா சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது.

தோல்விக்கு பின் பேசிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் “நாங்கள் முதல் ஆறு ஓவர்களில் பவர் பிளேவில் நல்ல முறையில் விளையாடவில்லை.  தொடர்ந்து விக்கெட்டுகளை விழும் பொழுது  பின்னடைவில்தான் இருப்போம் . ஒரு துடுப்பாட்ட வீரராக   முன்னேறி பார்ட்னர்ஷிப்பை உருவாக்க வேண்டும். மேலும் முதல் ஆறு ஓவர் பந்துவீச்சில் சிறப்பாகவும் செயல்படவில்லை.

 'பவர் பிளே முடிவதற்குள் 3 விக்கெட்களை இழந்தோம். இதுதான் தோல்விக்கு முக்கிய காரணம். அதன்பிறகு, பெரிய பார்ட்னர்ஷிப்பை அமைத்திருக்க வேண்டும். ஆனால், அதனை செய்ய முடியவில்லை.

 இரண்டாவது காரணம் பந்துவீசும்போது, மிடில் ஓவர்களில், ஸ்பின்னர்களால் விக்கெட்டை எடுக்க முடியவில்லை. நாங்கள் எங்கள் பந்துவீச்சை மேம்படுத்த வேண்டும் இதுவும் தோல்விக்கு முக்கிய காரணம்'' எனக் கூறினார்.

அமெரிக்க அணிக்கு அனைத்து பாராட்டுகளும் சேர வேண்டும். அவர்கள் எங்களை விட மூன்று துறைகளிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டார்கள். ஆடுகளத்தில் கொஞ்சம் ஈரப்பதம் மற்றும்  இரண்டு வேகத்தில் காணப்பட்டது / நீங்கள் இங்கு விளையாடும் பொழுது ஒரு நிபுணராக ஆடுகளத்தை மதிப்பீடு செய்வது மிகவும் முக்கியம்” என்று கூறியிருக்கிறார்.

அவர் நம்பிக்கையுடன் தனது பேச்சை முடித்தார், எதிர்கால போட்டிகளில் அணி வலுவான மறுபிரவேசம் செய்ய விரும்புகிறது என்று தெரிவித்தார்

ஆடுகளத்தில் கொஞ்சம் ஈரப்பதம் காணப்பட்டது - மேலும் அது இரண்டு வேகத்தில் காணப்பட்டது ; பாபர் அஸாம் ஆடுகளத்தில் கொஞ்சம் ஈரப்பதம் காணப்பட்டது - மேலும் அது  இரண்டு வேகத்தில் காணப்பட்டது ; பாபர் அஸாம் Reviewed by Madawala News on June 07, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.