தையல் நிறுவன உரிமையாளரை தாக்கிய சம்பவம்- முன்னாள் மாநகரசபை உறுப்பினர் பிணையில் விடுதலைபெரியநீலாவண நிருபர்
(வாஹிட் முகம்மது ஜெஸீல்)

பெரியநிலாவணை பொலீஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனைப் பிரதேசத்தில் அமைந்துள்ள பிரபல தையல் நிறுவனம் ஒன்றில் அத்துமீறி நிறுவன உரிமையாளரை தாக்கிய சம்பவம் தொடர்பில் தலைமறைவாகியிருந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் மாநகரசபை உறுப்பினர் ஏ.ஆர்.அமீர் என்பவர் 09.06.2024 நேற்று பெரியநீலாவணை பொலீஸாரால் கைது செய்யப்பட்டு கல்முனை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் அப்துல் ரஷீட் முஹம்மது கலீல் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது மேற்படி பிணை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2ந் திகதி தையல் நிறுவனம் ஒன்றில் அத்துமீறி கடமையில் இருந்த உரிமையாளரை தாக்குதல் நடாத்திவிட்டு மேற்படி சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளார்.

தாக்குதலுக்குள்ளான தையல் நிறுவன உரிமையாளர் கல்முனை ஆதார வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு கடந்த 7ந் திகதி வெள்ளிக்கிழமை சிகிச்சையின்பின் வீடு திரும்பி நிலையில் தலைமறைவாகியிருந்த குறித்த சந்தேக நபரை பெரியநீலாவணைப் பொலீஸார் நேற்று 9ந் திகதி கைது செய்துள்ளனர்.

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பெரியநீலாவணை பொலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தையல் நிறுவன உரிமையாளரை தாக்கிய சம்பவம்- முன்னாள் மாநகரசபை உறுப்பினர் பிணையில் விடுதலை தையல் நிறுவன உரிமையாளரை தாக்கிய சம்பவம்- முன்னாள் மாநகரசபை உறுப்பினர் பிணையில் விடுதலை Reviewed by Madawala News on June 10, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.