அவசரமாக பைபாஸ் சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டியுள்ள பேருவளை முகம்மது ரியால் (முன்னாள் முஅத்தின்) அவர்களுக்கு எம்மால் முடியுமான நிதி உதவிகளை செய்வோம்.அஸ்ஸலாமு அலைக்கும்,

பேருவளை மஹகொடை ஸாவியா வீதியைச் சேர்ந்த முகம்மது ரியால் (60) (முன்னாள் முஅத்தின்) அவர்கள் நீண்ட காலமாக இருதய நோயினால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறார். இவருக்கு அவசரமாக 💔 பைபாஸ் சத்திர சிகிச்சை மேற்கொள்ளுமாறு வைத்தியர்கள் 🩺 ஆலோசனை வழங்கி சில வருடங்களாகின்றன. அரச வைத்தியசாலைகளில் 🗓️ சில வருடங்கள் தாண்டியும் இவருடைய பைபாஸ் சத்திர சிகிச்சைக்கான ஏற்பாடுகள் இதுவரை செய்து கொடுக்கப்படவில்லை.
தற்பொழுது காலதாமதமின்றி உடனடியாக 🚨 சத்திர சிகிச்சை செய்து கொள்ளுமாறு வைத்தியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அரச வைத்தியசாலைகளில் தனது சத்திர சிகிச்சையினை மேற்கொள்வதற்காக பல வருடங்கள் காத்திருந்தும் கைகூடாத நிலையில் தற்பொழுது வேறு வழியின்றி நவலோக்க 🏥 தனியார் வைத்தியசாலையில் சத்திர சிகிச்சையினை மேற்கொள்வதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

தனியார் வைத்தியசாலையில் இவருடைய பைபாஸ் சத்திர சிகிச்சைக்காக 16 இலட்சங்கள் 💰 செலவாகும் என உத்தேசிக்கப்பட்டுள்ளது. இருதய நோயாளியாக இருந்த போதும் அன்றாடம் கூலித் தொழில் செய்து உழைத்து வரும் முகமது ரியாலினாலோ அல்லது அவரது வறிய குடும்பத்தினராலோ இப்பாரிய தொகையினை சுமந்து கொள்ள முடியாத நிலையில் நல்லுள்ளம் படைத்த நன்கொடையாளிகளிடமிருந்து இதற்கான நிதியினை 💰 திரட்டிக் கொள்வதற்கு முஹம்மது ரியால் திட்டமிட்டுள்ளார்.


"சிறுதுளி பெருவெள்ளம்" என்பதை மறந்து விடாதீர்கள். எம்மால் முடியுமான தொகையினை ரியால் அவர்களின் பைபாஸ் சத்திர சிகிச்சைக்காக வழங்குவோம். உயிர் காக்கும் இம்மனிதாபிமான பணியில் எம்மாலான நிதியுதவிகளை வழங்குவதோடு 🤝 மட்டுமல்லாது இப்பதிவினை எமது குடும்பத்தினர், நண்பர்கள் மத்தியிலும் பகிர்ந்து கொள்வோம் 🙏

இறைவன் என்னையும், உங்களையும் இது போன்ற கொடிய நோய்களிலிருந்து பாதுகாப்பானாக 🤲 ஆமீன்.

ஜஸாக்குமுல்லாஹு ஹைரா 💞

Bank Account Details (Son):
M. R. M Rifas
Bank : Commercial Bank
Beruwala Branch
Acc no: 8220904239

Contact Number:
M. R. M Rifas 📞 0777295007

தகவல்:
ரூமி ஹாரிஸ்.
சமூக செயற்பாட்டாளர்.
பேருவளை.
📞 071 666 6699 / 076 781 0699

2024/06/06


அவசரமாக பைபாஸ் சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டியுள்ள பேருவளை முகம்மது ரியால் (முன்னாள் முஅத்தின்) அவர்களுக்கு எம்மால் முடியுமான நிதி உதவிகளை செய்வோம். அவசரமாக பைபாஸ் சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டியுள்ள பேருவளை முகம்மது ரியால் (முன்னாள் முஅத்தின்) அவர்களுக்கு எம்மால் முடியுமான நிதி உதவிகளை செய்வோம். Reviewed by Madawala News on June 06, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.