குடியை கெடுத்த குடி | வீட்டில் நடந்த மது விருந்து - மனைவியை வன்புணர்வு செய்த நண்பன் பொலிஸாரால் கைது 20 வயதுடைய  பெண்ணொருவ​ரை, கணவனின் நண்பர் ஒருவர்  வன்புணர்வு செய்துள்ள சம்பவம், மொனராகலையில் இடம்பெற்றுள்ளது.


 கரடுகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிடகும்புர தெல்கொல்ல பிரதேசத்தில் வசிக்கும் ​பெண்ணே இவ்வாறு கடந்த 07 ஆம் திகதி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.


துஷ்பிரயோகம் செய்யப்பட்ட பெண், அவரது கணவன், கணவனின் சகோதரர் மற்றும் கணவனின் தாய் ஆகியோர் ஒரே வீட்டில் வசிக்கின்றனர்.


கணவனின் தாய் அருகில் உள்ள வீடொன்றில் நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்த நிலையில், அவரது மனைவி சுகவீனம் காரணமாக உறங்கிக் கொண்டிருந்துள்ளார்.


அப்போது கணவர் தனது சகோதரர் மற்றும் மூன்று நண்பர்களுடன் வீட்டில் மது அருந்தியுள்ளார்.


  மது அருந்தியவர்கள் சிறிது நேரம் வீட்டை விட்டு வெளியேறிவிட்டனர். அவர்களுடன் கணவனும் சென்றுவிட்டார். நண்பர்களில் ஒருவர் மட்டும் வீட்டில் நின்றுவிட்டார். அப்போது, ​​அந்த பெண் உறங்கிக்கொண்டிருந்த அறைக்கு வந்து பலாத்காரம் செய்துள்ளார்.


எனினும், கடந்த 9 ஆம் திகதின்று வீட்டுக்கு திரும்பிவந்த அந்த சந்தேகநபர்,   நடந்த சம்பவத்தை யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.


எனினும், தனக்கு நேர்ந்த சம்பவம் தொடர்பில், கணவரிடம் தெரிவித்ததையடுத்து, இருவரும் கடந்த (09) கரடுகலை பொலிஸாரிடம் சென்று முறைப்பாடு செய்துள்ளனர்.


சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களில் ஒருவரான பஹலபிட்டிய ரப்பர்வத்தை நாகல பிபில பிரதேசத்தை சேர்ந்த 32 வயதானவரை கைது செய்துள்ளனர்.

குடியை கெடுத்த குடி | வீட்டில் நடந்த மது விருந்து - மனைவியை வன்புணர்வு செய்த நண்பன் பொலிஸாரால் கைது குடியை கெடுத்த குடி |   வீட்டில் நடந்த மது விருந்து -  மனைவியை வன்புணர்வு செய்த நண்பன் பொலிஸாரால் கைது Reviewed by Madawala News on June 10, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.