கல்லறைக்கு பெண்ணொருவரை அழைத்து சென்று பெற்றோல் ஊற்றி எரித்து படுகொலை செய்த இளைஞன்.கல்லறைக்கு பெண்ணொருவரை அழைத்து சென்ற இளைஞன் , பெண் மீது பெற்றோல் ஊற்றி எரித்து படுகொலை செய்துள்ள சம்பவம் சனிக்கிழமை (01) இடம்பெற்றுள்ளது .

சாவகச்சேரி - மட்டுவில் பகுதியை சேர்ந்த 45 வயதுடைய இரத்தினவடிவேல் பவானி எனும் பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார் .

யாழ்ப்பாணம் கொஞ்சேஞ்சிமாதா சேமக்காலைக்கு குறித்த பெண்ணை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்ற இளைஞன் , பெண்ணுடன் கல்லறை ஒன்றின் மீது அமர்ந்து பேசிக்கொண்டு இருந்துள்ளனர் .

திடீரென இருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்ட போது , இளைஞன் மறைத்து வைத்திருந்த பெற்றோல் போத்தலை எடுத்து பெண்ணின் மீது ஊற்றி தீ வைத்துள்ளார்.

அதனை அவதானித்த அயலவர்கள் ஓடி சென்று தீயினை அனைத்து , பெண்ணை நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்த்துள்ளனர் .

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பெண் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சந்தேக நபரை கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

எம்.றொசாந்த்
கல்லறைக்கு பெண்ணொருவரை அழைத்து சென்று பெற்றோல் ஊற்றி எரித்து படுகொலை செய்த இளைஞன். கல்லறைக்கு பெண்ணொருவரை அழைத்து சென்று பெற்றோல் ஊற்றி எரித்து படுகொலை செய்த இளைஞன். Reviewed by Madawala News on June 02, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.