வைத்தியசாலையின் வீதிகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியதால் கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் அவசர நோயாளிகள் ஹெலிகொப்டர்கள் மூலம் கொண்டு செல்லப்பட்ட சம்பவம் #இலங்கைவைத்தியசாலைக்கு செல்லும் வீதிகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும், அந்த வைத்தியசாலையிலுள்ள கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் அவசர நோயாளிகள் அனைவரும் ஹெலிகொப்டர்கள் மூலம் உடுகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக காலி மாவட்ட சமூக சுகாதார வைத்திய அதிகாரி அமில சந்திரசிறி தெரிவித்தார்.

நெலுவ வைத்தியசாலைக்கு நோயாளர் காவு வண்டிகள் செல்ல முடியாத காரணத்தினால் தாய்மார்கள் மற்றும் நோயாளிகள் ஹெலிகொப்டரில் அழைத்து வரப்படுவதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, கடும் மழையுடன் கூடிய ஜிங்கங்கை பெருக்கெடுத்துள்ளதால் தவலம பிரதேசத்தில் இருவர் காணாமல் போயுள்ளதாக காலி மாவட்ட பதில் மாவட்ட ஆணையாளர் சாமி ராஜகருணா தெரிவித்தார்.

தவலம, நெலுவ, உடுகம, ஹினிதும முதலான பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றுவதற்காக இராணுவம் மற்றும் கடற்படையின் நிவாரண சேவைக் குழுக்கள் படகுகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களுடன் அந்தப் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, நிவாரணப் பணிக்குழுவினர் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளுக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுத்தனர்.
வைத்தியசாலையின் வீதிகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியதால் கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் அவசர நோயாளிகள் ஹெலிகொப்டர்கள் மூலம் கொண்டு செல்லப்பட்ட சம்பவம் #இலங்கை வைத்தியசாலையின் வீதிகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியதால் கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் அவசர நோயாளிகள் ஹெலிகொப்டர்கள் மூலம் கொண்டு செல்லப்பட்ட சம்பவம் #இலங்கை Reviewed by Madawala News on June 02, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.