இன்னும் 40 தொகுதிகள் இருந்தால், காங்கிரஸ் கூட்டணியும் ஆட்சி அமைக்கலாம் என்ற நிலை உருவானதால், பிராதமராக பதவியேற்க மோடிக்கு உள்ள சவால்கள்2024 இந்திய மக்களவைத் தேர்தல் முடிவுகளால் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.கடந்த முறை 300-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக தனித்து வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.இந்த முறையும் பாஜக தனித்து 300+ இடங்களிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி 400-க்கும் மேற்பட்ட இடங்களிலும் வெற்றி பெறும் என்று பெரும்பாலான வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்திருந்தன.ஆனால், தற்போது பாஜக தனது கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்துதான் பெரும்பான்மை தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.இந்த முறை பாஜக தன் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து 292 இடங்களிலும் காங்கிரஸ் கூட்டணி 234 இடங்களிலும் பிற கட்சிகள் 17 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

சென்ற தேர்தலில் கடந்த 2019 ஆம் ஆண்டு
வெறும் 52 தொகுதிகளை மட்டுமே பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி, தற்போது தனித்து 99 தொகுதிகளை வென்றுள்ளது. கூட்டணி கட்சிகளுடன் 234 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது.

இதனால் கடந்த முறை எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தையே பெற முடியாத காங்கிரஸ் கட்சி இந்தத் தேர்தலில் தன்னுடைய பலத்தைக் காட்டியிருக்கிறது. பாஜகவுக்கு எதிரான கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கியதும் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 272 தொகுதிகள் தேவை என்ற நிலையில், பாஜக கூட்டணி அதை பெற்றிருந்தாலும் காங்கிரஸ் கூட்டணியும் இன்னும் 40 தொகுதிகள் இருந்தால் ஆட்சி அமைக்கலாம்.


இதுவே மத்தியில் ஆட்சி அமைப்பதில் பாஜக கூட்டணிக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிகாரில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், ஆந்திரத்தில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, மகாராஷ்டிரத்தில் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனை ஆகிய கட்சிகள் மத்தியில் ஆட்சி அதிகாரம் யாருக்கு என்ற முடிவை கையில் வைத்திருக்கின்றன.

இந்த கட்சிகள் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கும் பட்சத்தில் மத்தியில் இந்தியா கூட்டணியும் ஆட்சி அமைக்க வாய்ப்பு ஏற்படும்.பாஜக தரப்பில் அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரும் இந்த கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகின.

இந்த கட்சிகள் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கும் பட்சத்தில் மத்தியில் இந்தியா கூட்டணியும் ஆட்சி அமைக்க வாய்ப்பு ஏற்படும்.

பாஜக தரப்பில் அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரும் இந்த கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகின.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி காங்கிரஸ் கட்சி கூட்டணி 235 தொகுதிகளில் வென்றுள்ளது. ஜனநாயகத்தை முன்வைத்து பிரசாரம் செய்த ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரசாருக்கு இது வெற்றிதான்.எனவே, மக்களின் மனமாற்றத்தை எதிரொலிக்கும் இந்த தேர்தல் முடிவுகளை வைத்தும் மேற்குறிப்பிட்ட இந்த கூட்டணி கட்சிகள் முடிவெடுக்கலாம் என்பதால் அது இந்தியா கூட்டணிக்கு ஒரு வாய்ப்பு.ஒருவேளை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்தால்கூட வரும் நாட்களில் பாஜக அரசு அஞ்சியே இருக்க வேண்டிய சூழலும் உள்ளது. இந்தக் கட்சிகள் பாஜக கூட்டணியில் இருந்து பின்வாங்கும்பட்சத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படலாம்.அடுத்த ஐந்தாண்டுகளுக்கு கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைத்துக் கொண்டு செல்வது என்பது மோடி, அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்களுக்கு சற்று சவாலாகவே இருக்கும்.1998 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி ஆட்சி அமைத்து பின்னர் 1999 ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அதிமுக கட்சி தனது ஆதரவை வாபஸ் பெற்றதால் வாஜ்பாயி தலைமையிலான பாஜக அரசு கவிழ்ந்தது. அப்போதைய பாஜக அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது ஒரு வாக்கு வித்தியாசத்தில் பாஜக ஆட்சியை இழந்தது குறிப்பிடத்தக்கது
இன்னும் 40 தொகுதிகள் இருந்தால், காங்கிரஸ் கூட்டணியும் ஆட்சி அமைக்கலாம் என்ற நிலை உருவானதால், பிராதமராக பதவியேற்க மோடிக்கு உள்ள சவால்கள் இன்னும் 40 தொகுதிகள் இருந்தால், காங்கிரஸ் கூட்டணியும்  ஆட்சி அமைக்கலாம் என்ற நிலை உருவானதால், பிராதமராக பதவியேற்க மோடிக்கு உள்ள சவால்கள்  Reviewed by Madawala News on June 05, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.