வெள்ளம் பார்க்க சென்றவர் பரிதாபமாக உயிரிழப்பு.


புலத்சிங்கள பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தைப் பார்ப்பதற்காக நேற்று (03)

மாலை படகில் சென்றவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

படகு ஒன்றில் 20 பேர் கொண்ட குழு ஒன்று சென்ற போது, குறித்த படகு உயர் மின்கம்பியில் மோதியதில் மின்சாரம் தாக்கியதில் புலத்சிங்கள திவலகட பிரதேசத்தைச் சேர்ந்த லொகு சின்ஹாரச்சிகே தமித் குமார என்ற இளைஞன் உயிரிழந்துள்ளார்.


ஏனையோர் உயிர் தப்பியதாக புலத்சிங்கள பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


குறித்த குழுவினர் பயணித்த படகை உயிரிழந்த இளைஞன் ஓட்டிச் சென்றதுடன், துடுப்பை ஏந்திய போது, உயர்நிலை மின்கம்பியில் மோதி வெள்ளத்தில் விழுந்துள்ளார்.


படகில் இருந்தவர்களும் மின்சாரம் தாக்கி படகிற்குள் விழுந்ததாகவும், ஆனால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லையென்றும் பொலிஸார் கூறுகின்றனர்.

வெள்ளம் பார்க்க சென்றவர் பரிதாபமாக உயிரிழப்பு. வெள்ளம் பார்க்க சென்றவர் பரிதாபமாக உயிரிழப்பு. Reviewed by Madawala News on June 04, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.