பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே உள்ளது.ஹஸ்பர் ஏ.எச்_
அரசியல் ஆட்சி அமைப்பின் படி சட்டப்படி 112 நாட்களில் புதிய ஜனாதிபதி கதிரையில் அமர வேண்டும் எனவும் ஜனாதிபதிக்கே பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடாத்த அதிகாரமிருக்கிறது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன் தெரிவித்தார்.

திருகோணமலை சாஹிராக் கல்லூரிக்கு இன்று (09) விஜயம் செய்து அப்பாடசாலையில் உயர்தரம் எழுதிய 70 மாணவிகளின் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகவில்லை இது தொடர்பில் அதிபர், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் ,மற்றும் பெற்றார்கள் மாணவர்களுடனான கலந்துரையாடலின் பின்பே ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார்.இதன் போது மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் முன்னால் பிரதியமைச்சருமான அப்துல்லா மஹ்ரூப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் தெரிவிக்கையில்

சாஹிராக் கல்லூரி மாணவர்கள் எழுதிய அதே மண்டபத்தில் அதே உடை அணிந்து வேறு பாடசாலையின் முஸ்லிம் மாணவிகள் பத்து பேர் எழுதியிருந்தனர் அவர்களுக்கு பெறுபேறுகள் வெளியாகின ஆனால் சாஹிரா கல்லூரி மாணவிகளில் மாத்திரம் கண்வைத்து இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வது அநீதியாகும் கடந்த பத்து வருடங்களாக இந்த கல்லூரியில் மருத்துவத் துறை பொறியியல் துறைகளுக்கு அதிகமான மாணவர்கள் தெரிவாகுவது வழக்கம் எனவே பரீட்சை பெறுபேறுகள் வெளியாக வேண்டும் இல்லாது போனால் பாராளுமன்றிலும் வெளியிலும் நீதிமன்றம் சென்றும் நீதியை இம் மாணவர்களுக்கு பெற்றுக் கொடுப்போம். தேசிய வேட்பாளர் தொடர்பிலும் உயர்பீட முடிவின் பிரகாரம் யாருக்கு ஆதரவு வழங்கலாம் என முடிவுகளை தேர்தலின் போது அவ்வப்போது கட்சி முடிவுகளை வைத்து தீர்மானங்களை எடுப்போம் எந்த தேர்தலாயினும் சரி சில மாவட்டங்களில் தனித்தும் சில இடங்களில் இணைந்தும் போட்டியிடுவோம் என மேலும் தெரிவித்தார்.
--
Hasfar A Haleem BSW (Hons)
Journalist


பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே உள்ளது. பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே உள்ளது. Reviewed by Madawala News on June 09, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.