குடும்ப தகராறு தொடர்பாக முறைப்பாடு செய்வதற்காகப் பொலிஸ் நிலையத்துக்குச் சென்ற,கணவனும் மனைவியும் அங்கிருந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிளின் பணப்பையை திருடி கைதாகினர்.குடும்ப தகராறு தொடர்பாக முறைப்பாடு செய்வதற்காகப் பொலிஸ் நிலையத்துக்குச் சென்ற தம்பதியினர் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் பணப்பையை திருடிய சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


வாதுவ குரே மாவத்தையில் வசிக்கும் கணவன், மனைவி இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


இவர்கள் இருவரும் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்யவதற்காக வாதுவ பொலிஸ் நிலையத்தின் முறைப்பாடுகள் பிரிவிற்கு சென்றுள்ளனர்.இதன்போது, இருவரும் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் மேசையிலிருந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் பணப்பையை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மேலும், சந்தேகநபர்கள் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குடும்ப தகராறு தொடர்பாக முறைப்பாடு செய்வதற்காகப் பொலிஸ் நிலையத்துக்குச் சென்ற,கணவனும் மனைவியும் அங்கிருந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிளின் பணப்பையை திருடி கைதாகினர். குடும்ப தகராறு தொடர்பாக முறைப்பாடு செய்வதற்காகப் பொலிஸ் நிலையத்துக்குச் சென்ற,கணவனும் மனைவியும் அங்கிருந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிளின் பணப்பையை திருடி கைதாகினர். Reviewed by Madawala News on June 07, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.