கண்டி பிரதேசத்தில் காணாமல் போய் தேடப்பட்டு வந்த பாடசாலை மாணவி இறுதியில் சடலமாக மீட்புகண்டி - ரெலுகேஸ் இல 2 கெல்லாபோக்க மடுல்கலையில் காணாமல் போன ஹரிவதனி என்ற மாணவி நேற்று காலை குறித்த தோட்டப்பகுதயிலிருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.


குறித்த மாணவி கடந்த வெள்ளிக்கிழமை முதல் காணாமல் போயிருந்த நிலையில் பொலிஸில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.


இந்த நிலையில், குறித்த மாணவி தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.


சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்ட போது மாணவியை யாரும் கடத்தவில்லை என தெரியவந்துள்ளது.


உயிரிழந்த மாணவியின் சடலம் பிரேத பரிசேதனைக்காக கண்டி போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது
கண்டி பிரதேசத்தில் காணாமல் போய் தேடப்பட்டு வந்த பாடசாலை மாணவி இறுதியில் சடலமாக மீட்பு கண்டி பிரதேசத்தில் காணாமல் போய் தேடப்பட்டு வந்த பாடசாலை மாணவி இறுதியில் சடலமாக மீட்பு Reviewed by Madawala News on June 10, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.