கிணற்றிலிருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் மீட்பு யாழ்ப்பாணம், புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் ஆலய கிணற்றிலிருந்து இளம் பெண் ஒருவரின்  சடலம்  செவ்வாய்க்கிழமை (05 ) மீட்கப்பட்டுள்ளது.


புங்குடுதீவு , மடத்துவெளி எட்டாம் வட்டாரத்தை சேர்ந்த 27 வயதுடைய சிவகுகானந்தன் சிந்துயா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


குறித்த பெண்ணின் சடலம்  உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


எம்.றொசாந்த் 

கிணற்றிலிருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் மீட்பு  கிணற்றிலிருந்து இளம் பெண் ஒருவரின்  சடலம்   மீட்பு Reviewed by Madawala News on June 05, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.