சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வரும் அப்துல் ரஹ்மான் என்ற இந்த நபர் பற்றிய தகவல்கள் கிடைத்தால் அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள்.சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி அவரை படுகொலைச் செய்தார் என்றக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் வவுனியா வைத்தியசாலையில் ​அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தப்பியோடிய சிறைச்சாலை கைதி ஒருவர் தொடர்பில் தலைமன்னார் பொலிஸார், பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

இவர், தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 9 வயது சிறுமியை பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்ட்டு மன்னார் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர், தப்பிச்சென்றுவிட்டார்.

திருகோணமலை குச்சவெளி பிரதேசத்தைச் சேர்ந்த அப்துல் ரஹ்மான் என்பவரே இவ்வாறு தப்பிச்சென்றுள்ளார்.

புகைப்படத்தில் காணப்படும் இந்த நபர் தொடர்பில் தகவல்கள் கிடைத்தால் 0718591364 அல்லது 0718591370 ஆகிய இலக்கங்களுடன் தொடர்புகொண்டு அறிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வரும் அப்துல் ரஹ்மான் என்ற இந்த நபர் பற்றிய தகவல்கள் கிடைத்தால் அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள். சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வரும் அப்துல் ரஹ்மான் என்ற இந்த நபர் பற்றிய தகவல்கள் கிடைத்தால் அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள். Reviewed by Madawala News on June 02, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.