கடைசியாக உள்ள இரண்டு போட்டிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும் - எமது தவறுகள் தொடர்பில் ஆராய உள்ளோம் ; பாபர் அசாம்T20 உலகக் கோப்பை நேற்றைய போட்டியில் இந்தியாவிடம் பாகிஸ்தான் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, தனது அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தததே எமது தோல்விக்கு காரணம் என்று பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், ஒப்புக்கொண்டார்.

அத்துடன் இன்னிங்ஸின் இரண்டாவது பாதியில் அதிக டாட் பந்துக்களை விளையாடியது எமது தோல்விக்கு காரணம் என்றும் ஒப்புக்கொண்டார்.

"நாங்கள் நன்றாக பந்துவீசினோம். பேட்டிங்கில், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தோம் எனவும்
ஆடுகளம் ஓரளவு நன்றாகவே இருந்தது. பந்து வீச்சு கொஞ்சம் மெதுவாக இருந்தது, சில பந்துகள் கூடுதல் பவுன்ஸ் காணப்பட்டது.

மேலும் கடைசி இரண்டு போட்டிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும்.

எங்கள் தவறுகள் தொடர்பில் ஆராய்ந்து கலந்துரையாட வேண்டும். கடைசி இரண்டு போட்டிகளை எதிர்நோக்குகிறோம் என
அவர் மேலும் தெரிவித்தார்.


இந்த போட்டியை வென்ற பிறகு, இந்தியா இரண்டு போட்டிகளில் இரண்டு வெற்றிகள் மற்றும் 4 புள்ளிகளுடன் குரூப் A பிரிவில் முதலிடத்தில் உள்ளது.

அமெரிக்கா மற்றும் இந்தியாவிடம் விளையாடிய இரண்டு ஆட்டங்களிலும் பாகிஸ்தான் தோல்வியடைந்து நான்காவது இடத்தில் உள்ளது. பாகிஸ்தானின் Super 8 வாய்ப்புகள் மிக குறைவாகவே காணப்படுகின்றன.


கடைசியாக உள்ள இரண்டு போட்டிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும் - எமது தவறுகள் தொடர்பில் ஆராய உள்ளோம் ; பாபர் அசாம் கடைசியாக உள்ள இரண்டு போட்டிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும் - எமது தவறுகள் தொடர்பில் ஆராய உள்ளோம் ; பாபர் அசாம் Reviewed by Madawala News on June 10, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.